Sunday, May 15, 2016

VANNAM INDHA VANJIYIN VANNAM - PREMAPAASAM - SPB SJ


film :prema paasam
singers : spb sj
music : gangai amaran

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நீ வேண்டிய வண்ணம்
நான் வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம் வண்ணம் வண்ணம் வண்ணம்

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
நான் வேண்டிய வண்ணம்
நீ  வழங்கிட இன்னும்
ஓராயிரம் ஆயிரம் வண்ணம்
வண்ணம் வண்ணம் வண்ணம் வண்ணம்

கருநீல திராட்ச்சைகள்தானோ கண்ணே உன் கண்களின் வண்ணம்
கார்கால மேகங்கள்தானோ கலையாத கூந்தலின் வண்ணம்
விழிமீது ஒவ்வொரு நாளும் அன்பே உன் கற்பனை வண்ணம்
நீதானே நெஞ்சில் இருந்து நீங்காத காவிய வண்ணம்
மங்கை என்னும் தங்க கிண்ணம் மெல்ல நடக்க
முன்னும் பின்னும் வண்ணங்களை வாரி இறைக்க
அம்மம்மவோ வந்தான் அள்ளி எடுக்க
அள்ளிக்கொண்ட பின்னும் இன்னும் மிச்சம் இருக்க
வண்ணம் வண்ணம் வண்ணம் வண்ணம்

வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நான் விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்

அதிகாலை சூரியன் போலே சிவப்போ உன் தேனிதழ் வண்ணம்
அடடா என் கைவசம் கண்டேன் அழகான தேவதை வண்ணம்
பிரியாமல் ராத்திரி நேரம் மடிமீது துஞ்சிய வண்ணம்
உறவாட ஏங்குது இங்கே உனக்காக தோகையின் வண்ணம்
அஞ்சி அஞ்சி பின்னும் நடை தென்றல் வண்ணமோ
மண்ணில் வந்து தத்திச்செல்லும் மின்னல் வண்ணமோ
மன்னன் கொண்ட உள்ளம் என்ன முல்லை வண்ணமோ
மெல்ல பொங்கும் பாலைப்போல வெள்ளை வண்ணமோ

வண்ணம் வண்ணம் வண்ணம் வண்ணம்
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்




No comments:

Post a Comment