Thursday, April 30, 2020

ILAMAI NAATIYA SALAI - KALYANAMAM KALYANAM



படம்: கல்யாணமாம் கல்யாணம்
பாடல்: கண்ணதாசன்
இசை: விஜயபாஸ்கர்
குரல்: எஸ்.ஜானகி, TMS 


இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை
மலர்கள் யாவும் மன்மதக் கோலம்
மனதில் ஆனந்த ராகம்

இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை

நீல நிற சேலையில் வானம்
பச்சை நிற சேலையில் பூமி
நீல நிற சேலையில் வானம்
பச்சை நிற சேலையில் பூமி
நதிகளின் வண்ணம் நடமிடும் அன்னம்
நாடக மோகங்கள் தாலாட்டும் தேன் கிண்ணம்

இளமை நாட்டிய சாலை
இயற்கை பூமகள் சோலை

ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்து போலே
ஆடிப் பாடும் நாத்துப் போலே
காலை பாத்து மெல்ல மெல்ல வாம்மா

ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா

வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறிவந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்து

வைகை நதி பெருகி வர
வண்ண மணல் ஊர்ந்து வர
ஊறிவந்த தண்ணியிலே
ஒட்டி வந்த கட்டி முத்து
நாலு பக்கம் கண்ணிருக்கு அவளுக்கு
அந்த ரகசியத்தில் இடமிருக்கு அவனுக்கு

ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா

பூ மரத்தை குலுக்கிவிட்டு
பூமியெல்லாம் மணக்கவிட்டு
மாமனுக்கு தேன் கொடுக்க
மானைப் போல ஓடி வந்தா
தேன் குடத்தை சுமந்து வந்த செல்லக்கா
நீ ஏன் கொடுத்தாய் இந்த ஆசை சொல்லக்கா

ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா
அங்கே ஆசை வச்சு ஓடி வந்தா பாமா
ஆடி மாத காத்து போலே
ஆடிப் பாடும் நாத்துப் போலே
காலை பாத்து மெல்ல மெல்ல வாம்மா

http://www.dinamalarnellai.com/web/news/14559

அண்மையில் மறைந்த திரை உலக ஜாம்பவானான பஞ்சு அருணாசலத்திற்கு பெற்றோர் இட்ட பெயர், அருணாசலம். காரைக்குடியில் பள்ளிப்படிப்பின் போது, அவர் அருணாசலம் என்றுதான் அழைக்கப்பட்டார். ஆனால் அது அவர் தாத்தாவின் பெயர் என்பதால்,  திருவையாறு பஞ்சநதசுவாமி ஞாபகமாக பஞ்சநதம் என்று பெயர் வைத்து, ‘பஞ்சு’, ‘பஞ்சு’ என்று வீட்டில் அழைத்தார்கள். திரை உலகிற்கு வாய்ப்புத் தேடி வந்த பின், பஞ்சுவையும் அருணாசலத்தையும் இணைத்து, தன்னை பஞ்சு அருணாசலம் என்று அழைத்துக்கொண்டார், பஞ்சு அருணாசலம்!
சென்னையில் பஞ்சுவின் ஒரு சிற்றப்பா, மிகப்பெரிய தயாரிப்பாளரான ஏ.எல். சீனிவாசன். இன்னொரு சிற்றப்பா, பிரபல பாடலாசிரியர் கண்ணதாசன். ஐம்பதுகளின் இறுதி ஆண்டுகளில் கண்ணதாசன்  நடத்திக்கொண்டிருந்த ‘தென்றல்’ பத்திரிகையில்  சேர்ந்தார் பஞ்சு. அதன் பிறகு, கண்ணதாசன் தானே தயாரித்துக் கொண்டிருந்த ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திற்கு அவர் பாடல்கள் புனைந்தபோது, அவர் சொல்லச் சொல்ல வரிகளை எழுதும் உதவியாளராக இணைந்தார் பஞ்சு. அது அப்படியொன்றும் மிக எளிதான வேலை இல்லை. கவிஞர் வரிகளை கடகடவென்று கூறும் போது அவற்றை சட்டென்று பிடித்துக்கொண்டு மளமளவென்று எழுதவேண்டும். கையெழுத்தும் மணிமணியாக எல்லோருக்கும் புரியும்படி இருக்க வேண்டும்.
இலக்கியத்தின் மீதும், கவிதைகள் மீதும், சிறுகதைகள், நாவல்கள் படிப்பதிலும்,  பஞ்சு அருணாசலத்திற்கு   இயற்கையாக நாட்டம் இருந்தது. சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், காண்டேகர் போன்றவர்கள் எழுதிய நாவல்களின் மொழிபெயர்ப்புகளைத் தேடிப் பிடித்து படிப்பார். கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டு, படி எடுத்துக்கொடுக்கும் போது, பாடல்களின் அமைப்பும் அவருக்குப் புரிந்தது. அவை திரைக்கதையில் சேரும் விதமும் விளங்கியது. சினிமாவிற்கு திரைக்கதை அமைக்கும் பாணியும் புரிந்தது. கண்ணதாசனின் உதவியாளராக இருக்கும் போதே, பஞ்சுவின் அதிர்ஷ்டத்திற்கு அச்சாரமாக சில பாடல் வாய்ப்புகள் வந்தன. ‘சாரதா’ படத்திற்காக, கே.வி.மகாதேவன் இசையில் பஞ்சு 1961ல் எழுதிய  ‘மணமகளே மருமகளே வா வா’,  அந்தக் காலத்தின்  வெற்றிப் பாடல் மட்டும் அல்ல, இன்றைக்கும் திருமண மண்டபங்களில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். 
ஜி.கே. வெங்கடேஷ் இசையில், ‘நானும் மனிதன்தான்’ (1964) என்ற படத்தில், ‘காற்று வரும் காலம் ஒன்று’ என்று பஞ்சு எழுதினார். இன்று வரை, பி.பி.ஸ்ரீநிவாஸ், எஸ்.ஜானகி பாடிய மிக இனிமையான பாடல்களில் ஒன்றாக இந்த பாடல் உள்ளது. ஹிட்ச்காக்கின் ‘வர்டிகோ’ படக்கதையை மகாபலிபுரத்து சிற்பங்களின் சரித்திரத்துடன் பிசைந்து, ‘கலங்கரை விளக்கம்’ என்ற குழப்பகரமான எம்.ஜி.ஆர். படம் 1965ல் வந்தது. அதில் இடம்பெற்ற பஞ்சுவின், ‘பொன்னெழில் பூத்தது புது வானில்’ என்ற பாடலின் இனிமையைக் குறித்து இன்று வரை எந்தக் குழப்பமும் இல்லை. இலக்கிய மணம், இனிமையான இசையிலும் குரல்களிலும் பெருகி ஓடும் போது யாருக்குத்தான் இன்பம் ஏற்படாது?
அதே ஆண்டான 1965ல் வெளிவந்த ‘கன்னித்தாய்’ படத்தில், எல்லாப் பாடல்களையும் பஞ்சு எழுதினார்.  சில பலித்தன...ஆனால் படத்தின் டைட்டிலில் பாடலாசிரியரின் பெயர் இல்லை. ‘தாயாக மாறவா தாலாட்டுப் பாடவா’ (‘ஏழைப்பங்காளன்’), ‘பூப்போல  பூப்போல பிறக்கும்’ (‘நானும் ஒரு பெண்’) முதலிய சிறப்பான பாடல்களை பஞ்சு எழுதியிருந்தார். ஆனால், பாடல்கள் புனைவதை விட்டுவிட்டு, கதை, வசனம் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இத்தனைக்கும், இளம் பருவத்தில் கேட்ட திரைப்பாடல்கள்தான், அவரை திரைத்துறைக்கு ஈர்க்க ஒரு காரணமாக இருந்தன. தான் பாடல் எழுதுவதைப் பின் தள்ளியதற்கு காரணம், கண்ணதாசனின் திறமை  மீது ஏற்பட்ட பிரமிப்புத்தான் என்று கூறுவார் பஞ்சு. 
அது உண்மையாக இருந்தாலும், தனக்குத் திரை உலகில் இடம் கொடுத்த கண்ணதாசனோடு போட்டிப்போட வேண்டுமா என்ற உணர்வும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், வாலி பிரகாசமாக வரத்தொடங்கியதும், கண்ணதாசனின் மகிமை குறையாமல் இருந்தாலும், அவருடைய வாய்ப்புகள் குறையத்தொடங்கி விட்டன.
பஞ்சு அருணாசலம் கதை, வசனகர்த்தாவாக தன்னை இனம் காட்டிக் கொள்ள எடுத்த முயற்சிகள், முதலில் அவ்வளவு எளிதாக ஈடேறவில்லை. பதினைந்து படங்கள் பாதியில் நின்றுபோய், அவருக்கு ‘பாதிக்கதை பஞ்சு’ என்றொரு பெயர் கூட வந்தது! 
பல ஆண்டுகளுக்குப் பின், 1974ல் ‘கல்யாணமாம் கல்யாணம்’ என்று பஞ்சு மேளம் கொட்ட ஆரம்பித்தார். அதன் பிறகு,  வானம் பிய்த்துக்கொண்டு வாய்ப்புகளைக் கொட்டியது. 
‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தில் நாட்டுப்புறக்குடுமிக்கும் (ஜெய்சங்கர்), நாகரிகக் கொண்டைக்கும் முடிச்சுப் போட்டு வேடிக்கைப் பார்த்த பஞ்சு, ‘உங்கள் விருப்ப’த்தில், ஜெய்சங்கரையும் தேங்காய் சீனிவாசனையும் காதல் கிளினிக் திறக்க வைத்தார். 
‘உன்னைத்தான் தம்பி’ (1974) என்ற படத்தில், ஊரை ஏய்த்து காசு பார்க்க நினைக்கும் இரு நண்பர்களில் ஒருவர் (ஜெய்சங்கர்) திருந்தும் போது ஏற்படும் விளைவுகளைச் சொன்னார். ‘ஊழல் வளர்ந்ததென்ன, ஊரை ஏய்த்துப் பிழைத்ததென்ன, வீட்டை வளர்த்ததென்ன, நாட்டை கெடுத்ததென்ன’ என்ற கண்ணதாசனின் வரிகள் காலத்தைப் பிரதிபலித்தன.
‘தொட்டதெல்லாம் பொன்னாகும்’ என்ற படத்தில், ‘மிஸ்ஸியம்மா’ கதையை  ‘உல்டா’ செய்தார் பஞ்சு. ‘மிஸ்ஸியம்மா’வில், திருமணம் ஆகாதவர்கள், கணவன் – மனைவி என்ற பொய்யைச் சொல்லி வேலையில் சேர்கிறார்கள். பஞ்சுவின் கதையில், திருமணமானவர்கள் தொடர்பில்லாதவர்களைப்போல வேலை பார்க்கிறார்கள்! 
‘மயங்குகிறாள் ஒரு மாது’ படத்தில், கல்லூரி நாட்களில் தவறு செய்துவிட்டு திருந்தும் ஒரு பெண்ணின்  நிம்மதியான குடும்ப வாழ்க்கையைக் கெடுக்க வருகிறான், பழைய கதையை அறிந்த ஒரு கயவன். ‘சம்சாரம் என்பது வீணை’ என்ற வெற்றிப்பாடல் இடம்பெறும் இந்த படம் நல்ல தொழில்நுட்ப அம்சங்களுடன் விளங்கியது. கதாசிரியர் பஞ்சுவுடனான இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் சிறந்த, நெடுங்கால கூட்டணிக்கு இந்த படம் அச்சாரமாக விளங்குகிறது. இப்படி அமைந்த இன்னொரு  சிறந்த படம், ‘காலங்களில் அவள் வசந்தம்’.
கதை, வசனகர்த்தாவாக பஞ்சு அருணாசலம் தடம் பதிக்கத்தொடங்கிய படங்களுக்கு பெரும்பாலும் விஜயபாஸ்கர் இசை அமைத்திருந்தார். பாடல்களும் சிறப்பாக அமைந்து, படங்களின் வெற்றிக்குத் துணை புரிந்தன. 
இந்த வகையில், தான் நெருக்கமாக அறிந்த ஜி.கே. வெங்கடேஷிடம் இசை உதவியாளராக இருந்த இளையராஜாவை, பஞ்சு அருணாசலம் ‘அன்னக்கிளி’யில் அறிமுகம் செய்ய நேர்ந்தது. இளையராஜாவின் நாட்டுப்புற மெட்டுக்களை மையமாக வைத்து கதை எழுதிய பஞ்சு, ‘அன்னக்கிளி’யின் வாயிலாக தமிழ்த் திரை இசையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்துவிட்டார். பாடலாசிரியராகவும் பஞ்சு மீண்டும் வெற்றிக்கொடி நாட்டினார்.
இளையராஜாவின் அறிமுகம் பஞ்சுவிற்கும் ஒரு புதிய தெம்பை ஊட்டியது. ஏனென்றால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் ஆரம்பகாலமாகவும் அது விளங்கியது. ரஜினியை வைத்து யதார்த்தமும் சோகமும் நிரம்பிய, ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ என்ற படத்தை எழுதித் தயாரித்தார் பஞ்சு. கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்த வெற்றிப்படமான ‘கல்யாணராம’னும் பஞ்சுவின் உருவாக்கம்தான். இத்தகைய படங்களின் வாயிலாக பஞ்சுவின் பி.ஏ.ஆர்ட் புரொடக்ஷ்ன்ஸ் ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனமாக முன்னணிக்கு வந்தது.
பஞ்சு அருணாசலத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு மாறுபட்ட கதை அமைப்புகள் கொண்ட பல படங்கள் கிடைத்தன. ‘புவனா ஒரு கேள்விக் குறி’, கதாநாயக நடிகனான சிவகுமாரை வில்லனாகவும், வில்லனாக நடித்து வந்த ரஜினியை ஹீரோவாகவும் சித்தரித்தது. 
‘காயத்ரி’ மாறுபட்ட திகில் படமாக அமைந்தது. பஞ்சு எழுதித் தயாரித்த ‘எங்கேயோ கேட்ட குரல்’, ரஜினிகாந்த்தை யதார்த்தமான வேடத்தில் வித்தியாசமான கதை அமைப்பில் காட்டியது.  பஞ்சுவிற்குள் இருந்த உயிரோட்டமான பாடல் இயற்றும் திறமை மீண்டும் வெளிக்கிளம்பியது. ‘விழியிலே மலர்ந்தது’, ‘ராஜா என்பார் மந்திரி என்பார்’  (‘பு. ஒரு. கேள்விக்குறி’), ‘குயிலே கவிக்குயிலே’, ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ (‘கவிக்குயில்’), ‘வாழ்வே மாயமா’ (‘காயத்ரி’), ‘இதோ இதோ என்  நெஞ்சிலே’ (‘வட்டத்துக்குள் சதுரம்’), ‘பருவமே புதிய பாடல் பாடு’ (‘நெஞ்சத்தை கிள்ளாதே’) என்று பஞ்சுவின் பாடல் வரிகள் நாடெங்கும் ஒலித்தன.
நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் மறைவிற்குப் பிறகு, ஏ.வி.எம். நிறுவனம் மீண்டும் தலைநிமிர்ந்தபோது, ‘முரட்டுக் காளை’, ‘சகலகலாவல்லவன்’, ‘பாயும் புலி’, ‘தூங்காதே தம்பி தூங்காதே’ போன்ற வெகுஜன படங்களின் வெற்றிக்கும் பஞ்சுவின் கதை, வசனம் வழி வகுத்தது. எத்தனையோ வித்தியாசமான கதைகளைக் கையாண்ட பஞ்சு, மசாலா படங்களுக்கான சரியான கலைவையையும் கைவசப் படுத்தியிருந்தார்! 
பட இயக்குநர்கள் திட்டம் இல்லாமல் ஏகமாக காசையும் பிலிமையும் வீணடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டைக் கூறி, தானே இயக்குநராகி சில படங்கள் எடுத்தார் பஞ்சு. அவை ‘விலகியோடிய மேகங்கள்’. ஆனால் மீண்டும் அவர்  தயாரிப்பாளராக களம் இறங்கிய போது, அவர் சொன்ன காரணத்தாலேயே கையை சுட்டுக்கொண்டார். படவுலகில் தொடர்ந்து நாற்பது வருடங்களுக்கு மேல்  இயங்கியவர் மறைந்துவிட்டார். அவருடைய நான்கு மக்களில், சுப்பு திரை உலகில் பலவாறு சஞ்சரிப்பவர். தந்தையின் பி.ஏ.ஆர்ட்ஸை மீண்டும் நிமிர வைக்கவேண்டும் என்பது அவரது லட்சியம். ‘ஆகா வந்திருச்சு, ஆசையில் ஓடி வந்தேன்’ என்ற பல்லவியை நாம் மீண்டும் கேட்கக்கூடும்.  

- வாமனன் 

Wednesday, April 29, 2020

GANGA YAMUNA SARASWATHI - DEIVEEGA RAGANGAL





படம்: தெய்வீக ராகங்கள்
பாடல்: கண்ணதாசன்
இசை:  MSV
குரல்: வாணி ஜெயராம்

கங்கா யமுனா சரஸ்வதி..

கங்கா யமுனா சரஸ்வதி..
நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில்  விழும்முன்
புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி

ஆயிரம் கவிதைகள் பாடி - என்
அங்கங்களில் விளையாடி
தேய்கின்ற பிறையென மாற்றி
கற்பு தீபத்தை அணைத்தாய் நீரூற்றி
இல்லறம் என்றது நல்லறம் என்றிவள்
எண்ணியிருந்தது கண்ணியமற்றது
என்றாயே என் மன்னவா
இன்னொரு பெண்ணிடம் ஆசை வளர்த்தவன்
நல்லவன் போலொரு நாடகம் இட்டவன்
என் வாழ்வில் நீயல்லவா…என் வாழ்வில் நீயல்லவா

கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி

தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி
தாமரைப்பூவினை நாடி சொன்ன சத்திய வார்த்தைகள் கோடி
காமனைப்போல் உறவாடி இன்று கலங்க வைத்தாயே வாடி
ரம்பை திலோத்தமை ஊர்வசி என்றெனை நம்பவும் வைத்தனை
நன்றி இழந்தனை என் வாழ்வு சோகமன்றோ
நல்ல குலத்தினில் வந்து பிறந்தவள்
உன்னை நினைத்தவள் தன்னை மறந்தவள்
தெய்வீக ராகமன்றோ…தெய்வீக ராகமன்றோ

கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி

ஆலிலை மேகலைப்பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு
ஆலிலை மேகலைப்பாட்டு நான் ஆனந்தமடைந்தேன் கேட்டு
காலத்தில் அருந்திய விருந்து பின் கசந்ததுவோ சுகம் மறந்து
சொர்க்கம் இருப்பதை கண்டுபிடித்திட பக்கம் இருந்தொரு
பாடம் உரைத்தனை அப்போது அறிவில்லையே
அந்த சுகத்தினை நெஞ்சு நினைத்தது
வந்த இடத்தினில் கண்டுபிடித்தது
இப்போதும் விடவில்லையே…இப்போதும் விடவில்லையே

கங்கா யமுனா சரஸ்வதி நீங்கள் குளித்த மூன்று நதி
கடலினில் விழும்முன் புனிதத்தை இழந்தது
காரணம் உங்கள் தீய மதி

http://www.dinamalarnellai.com/web/news/26542

சிரிப்பு நடிகர்கள் வந்தார்கள் போனார்கள்; சிரித்துக்கொண்டே இருந்தார் ஏ.வீரப்பன்!

ஒவ்வொரு காலத்திலும் சினிமாவில் சில சிரிப்பு நடிகர்களின் காட்டிலே மழை பெய்வது வழக்கம். ஒரு காலகட்டத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் கொடி கட்டிப்பறந்தார். பிறகு ஏ.கருணாநிதியும் தங்கவேலுவும் சந்திரபாபுவும் வலம் வந்தார்கள்.

எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு,  தலைமை பீடத்தில் அமர்ந்தார் நாகேஷ். அரசியல் அதிர்வேட்டுகளை ஹாஸ்யம் ஆக்கினார் சோ. தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், விவேக், வடிவேலு என்று காலத்திற்கு காலம், முன்னணி சிரிப்பு நடிகர்கள் மாறுபட்டார்கள்.

இப்படி ஊர்வலம்போன நகைச்சுவை நட்சத்திரங்களுக்கு இடையே, நாகேஷ் காலம் தொடங்கி நாற்பது வருடங்களுக்கு மேல் காமெடி ‘டிராக்’ எழுதி பல சிரிப்பு நடிகர்களுக்கு அஸ்திவாரமாக இருந்தவர் ஒரே ஒருவர் -- ஏ.வீரப்பன்.

நாடகத்துறையில் புடம்போடப்பட்ட நடிகரான வீரப்பன், யதார்த்தமான, அளவான நடிப்பை காட்டக்கூடியவர். சிரிப்பு நடிகராகவும் சில படங்களில் கவனத்தைக் கவர்ந்தவர் (உதாரணமாக, யார் நீ).

பொதுவாக, இரட்டை அர்த்தம், ஆபாசம் என்பதையெல்லாம் தவிர்த்து, பல படங்களில் வீரப்பன் நகைச்சுவை காட்சிகள் எழுதினார். சிரிப்புடன் சிந்தனையைத் தூண்டக்கூடியவர் என்ற பெயர் அவருக்கு வந்தது. சின்ன கலைவாணர் என்றுகூட ஒரு சிலர் புகழ்ந்தார்கள்.

'ஞான பீடம்' வென்ற ஜெயகாந்தன் முதல், ஞானம் என்ன விலை என்றுகேட்கும் பாமரன் வரை பலரையும் கவர்ந்த வீரப்பன், பள்ளியில் ஆனா ஆவன்னா கூட படிக்காதவர்!

தஞ்சை மாவட்டத்தில் ஆவணம் என்ற கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.  பிறந்த தேதி 28.6.1934. ‘நான் வளர்ந்த காலத்திலே கிராமத்தில ஒன்றுமே இல்லை’ என்பார் வீரப்பன். பள்ளிக்குப் போகவேண்டிய கஷ்டமெல்லாம் அவருக்கு ஏற்படவில்லை.

ராமநாத தேவர் என்ற ஊர்க்காரர், ஒரு நாள் கிராமபோன் கருவி வாங்கிக்கொண்டு வந்தார். 'மீரா' படத்திற்காக எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடலின் இனிய சுரங்கள், கிராமபோன் கூம்பிலிருந்து ஆவணம் கிராமத்தின் காற்றில் கலந்தன. ஊர்க்காரர்களுக்கு அதிசயமாக இருந்தது.

வயற்காட்டின் ஓரம் ஒரு சின்ன குடிசை அமைக்கப்பட்டு அதில் அமர்ந்து பயிரைக் காத்துக்கொண்டிருந்தார் வீரப்பன். அப்போது கிராமபோன் இசைத்தட்டில் கேட்ட சுப்புலட்சுமியின் பாட்டு அவர் தொண்டையிலிருந்து வெளிப்படத் தொடங்கியது.

சின்னப் பையன்களின் குரலினிமையுடன் பாடலின் இயல்பான இனிமையும் சேர்ந்திருந்தது. அந்த வழியாக பைக்கில் சென்ற ஒருவர்  வாகனத்தை நிறுத்திவிட்டுப் பாடலைக் கேட்டிருக்கிறார். வீரப்பனின் பாடல் நின்றவுடன், ‘இன்னொரு முறை பாடப்பா’ என்று கேட்டார் பைக்கானந்தர்! இரண்டாவது முறை பாடலைக் கேட்டுவிட்டு அவர் வெறுமனே செல்லவில்லை.

பையனின் முகவரியைக் கேட்டுக்கொண்டு, மாரியம்மன் கோயிலுக்கு எதிரே இருந்த வீட்டுக்குப் போனார். நல்லா பாடற புள்ளைக்கு சங்கீதம் கத்துக்கொடுக்கச் சொல்லிவிட்டுச் சென்றார்!
வயக்காட்டைப் பார்த்துக்கொள்வதும் ஆடுமாடுகளை மேய்ப்பதுமாக இருந்த வீரப்பன், மாயவரம் ராஜகோபால் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். அதைப் பின்னாளில், ‘சாதாரணப் பாட்டு’  கத்துக்கிட்டேன் என்பார் வீரப்பன்.

புதுக்கோட்டையில் டி.கே.கிருஷ்ணசாமி, சின்னஞ்சிறார்களை வைத்து சக்தி நாடக சபை தொடங்கிய நேரம் அது. ராமாயண நாடகத்தில் ராமராகப் பாடி நடிக்கக்கூடிய பையனைத் தேடிக்கொண்டிருந்தார். புதுக்கோட்டையிலிருந்து ஆவணம் 25  மைல் தூரம். ஆனால் வயக்காட்டோரம் அழகாகப்பாடும் ஆவணம் பையனைப் பற்றிய செய்தி புதுக்கோட்டைக்குப் பரவிவிட்டது!

அம்மா அப்பாவிடம் சொல்லிக்கூப்பிட்டா, ‘‘நாங்க நாடகம், சினிமாவுக்கெல்லாம் பையனை அனுப்பமாட்டோம்’’ என்று,  வள்ளியம்மைக்கும் சேர்த்து கூறிவிட்டார் அரியகுட்டித்தேவர்.
ஆனால், ‘நாலு பையங்கள்ள ஒருத்தன் இதுல இருக்கட்டுமே’’ என்று மாமா ராமநாத தேவரும் பழனியப்பச் செட்டியாரும் சிபாரிசு செய்தது பலன் அளித்தது.

சக்தி நாடக சபையின் முதல் நாடகத்தில் கதாநாயகன் ராமன் வேடம் வீரப்பனுக்கு கிடைத்தது.    வீரப்பன் பாடக்கேட்டு பிரதான வேடத்திற்கு சிபாரிசு செய்தவர்கள் நாடக சபையில் அப்போது இருந்த எஸ்.வி.சுப்பையாவும் எம்.என்.நம்பியாரும். பாட்டும் நடிப்பும் மட்டும் இல்லை, தமிழும் பேச்சும் வீரப்பனுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது.  அதற்கு வாத்தியார் எஸ். ஏ. கண்ணன்.

சிவாஜி என்று பிறகு புகழ் பெற்ற வி.சி.கணேசனும் சக்தி நாடக சபையில் வந்து சேர்ந்தார். கணேசனின் நடிப்பு வீரப்பனுக்கு முன் மாதிரியாக அமைந்தது.  'பராசக்தி' படத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த போது, ‘என் தங்கை’ நாடகத்தில் சிவாஜி நடித்த வேடத்தில் வீரப்பன் நடித்தார். படப்பிடிப்பு இல்லாத நாளில்  நாடகம் பார்கக வந்த கணேசன், வீரப்பன் நடிப்பை பாராட்டினார்.
சென்னை ஒற்றை வாடை அரங்கில் சக்தி நாடக சபை 1947 ஆகஸ்டில் நாடகம் போட்ட போது, எம்.ஜி.ஆர் வந்து நாடகம் பார்த்தார். வீரப்பனுக்கு பாதாம் அல்வா வாங்கிக்கொடுத்து, அதை சாப்பிட்டுவிட்டு பாடச்சொன்னார். பாதாம் அல்வா குரலை இனிமையாக ஒலிக்கச் செய்ததை கண்டுகொண்டார் வீரப்பன்.

சக்தி நாடக சபையில் பத்து வருடம் இருந்த பிறகு, 1954ல் எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் குழுவில் சேர்ந்தார் வீரப்பன். சேவா ஸ்டேஜுக்கு நாடகம் எழுதிய பி.எஸ்.ராமையா, தி. ஜானகிராமன் போன்ற இலக்கியவாதிகளின் தொடர்பு வீரப்பனுக்கு கிடைத்தது. தான் எழுதிய வசனங்களில் நடிகர்கள் கூட்டிக்குறைத்துப் பேசுவதை ஜானகிராமன் விரும்பமாட்டார். ஆனால் காட்சிக்கு ஏற்ப பேசிய வீரப்பனுக்கு மட்டும் அந்த விஷயத்தில் சலுகை அளித்திருந்தார் ஜானகிராமன்!
சேவா ஸ்டேஜ் கல்கத்தாவில் நாடகம் நடிக்கச் சென்ற போது, வங்காளி மொழி நாடகம் பார்க்க வீரப்பன் சென்றார். ஒரு நாடகம் 514வது நாளாக நடந்துகொண்டிருந்ததைப் பார்த்து அதிசயித்தார். திருப்தி மித்ரா என்ற பெண்மணி சிரித்துக்கொண்டே அழுத காட்சி வீரப்பனை அழவைத்தது. அப்படி ஒரு நடிப்பாற்றல் திருப்திக்கு.

அதே போல் கப் அண்ட் சாஸரில் ஒரு நடிகர் காபி குடித்த காட்சி. காபியில் மிதந்துகொண்டிருந்த எறும்பை ஸ்பூனில் எடுத்துபோட்டுவிட்டுக் காபியைக் குடித்தார் நடிகர். இதை 514வது தடவையாக இன்று செய்கிறார், இனியும் வரவிருக்கும் நாட்களிலும் செய்வார் என்று, கூட வந்த நண்பர் வீரப்பனிடம் தெரிவித்தார். பிறகு கல்கத்தாவிலிருந்து வீரப்பனுக்கு கடிதம் போட்ட அந்த நண்பர், அந்த நாடகம் ஆயிரமாவது முறையைக் கடந்து கொண்டிருக்கிறது என்றார்.
இதுபோன்ற அனுபவங்கள், வீரப்பனிடம் கலையின் மீது ஒரு அர்ப்பண உணர்வை வளர்த்துவிட்டன. ‘‘சாகும் வரை என் உழைப்பை கலைக்காகவும் கலையின் மூலம் மக்களைத் திருத்துவதற்காகவும் செலவிடுவது என்று நான் அந்த வங்காளி நாடகத்தைப் பார்த்து முடிவுசெய்துவிட்டேன்,’’  என்பார் வீரப்பன்.

‘மல்லியம் மங்கலம்’, ‘நாலு வேலி நிலம்’ முதலிய சேவா ஸ்டேஜ் நாடகங்கள் திரைவடிவம் பெற்றபோது, நாடகத்தில் ஏற்ற அதே வேடங்களை திரையிலும் செய்தார் வீரப்பன். 'நாலு வேலி நில'த்தில் நல்லவன் போல் நடித்துக் கெடுக்கும் அவருடைய வேடம் அமர்க்களமாக இருந்தது. இன்றும் டி.வி.டி.யில் மக்கள் பார்த்து ரசிக்கலாம்.

'பணத்தோட்ட'த்தில் நடிக்க வீரப்பனை எம்.ஜி.ஆர். அழைத்தார். வீரப்பன் நாகேஷையும் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். பின்னர் இருவருக்குமான சிரிப்புப் பகுதியை சிருஷ்டித்தார். வெறும் கோமாளித்தனமான இந்த ‘ஸ்லாப்ஸ்டிக்’ காமெடி, வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி, நாகேஷுக்கு எம்.ஜி.ஆருடனான ஒரு நீண்ட அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தது.
'படகோட்டி'யில் வீரப்பனும் நாகேஷும் நடித்த ஒரு காட்சியில் அவர்கள் இருவரும் படகில் இருந்தார்கள். நாகேஷ் தண்ணீரில் விழுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
அவர் விழுந்தவுடனே, ‘அடுத்த  தலைவர் நான்தான்’ என்று வீரப்பன் ஒரு நொடியில் ஒரு சிரிப்பு  வெடியைக் கொளுத்திப்போட்டார் (படத்தில், ‘நடமாடும் வலைவீசுவோர் சங்க’த்திற்கு நாகேஷ் தலைவர், வீரப்பன் செயலாளர்).

கரையிலிருந்து படப்பிடிப்பை கவனித்துக்கொண்டிருந்த  எம்.ஜி.ஆர், வீரப்பன் சொன்னதைக் கேட்டு சத்தமாக சிரித்தார். கரைக்குப் படகு வந்தவுடன், ‘வீரப்பா, நாட்டில நடக்கற விஷயத்தை ஒரு டயலாக்கில சொல்லிட்டியே’ என்று கூறி, ஐயாயிரம் ரூபாய் கட்டை வீரப்பனுக்குப் பரிசாகக் கொடுத்தார்!

‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ செல்லும் பஸ்ஸில் கயவர்களிடமிருந்து தப்பி வரும் ஒரு பெண் (கல்பனா),  ஏறுவதாக கதை அமைத்து, வசனம் எழுதினார் வீரப்பன். படம் வெற்றி அடைந்து, ‘பாம்பே டூ கோவா’ என்று இந்தியிலும்  சக்கை போடு போட்டது.

அதே போல், ‘சாது மிரண்டால்’ படத்திற்கு கதை வசனம் எழுதினார் வீரப்பன். வங்கிக் காஷியராக இருக்கும் சாதுவான பசுபதி (டி.ஆர். ராமசந்திரன்), பால்ய நண்பனும்  கொள்ளைக் காரனுமான நரசிம்மனை (ஓ.ஏ.கே. தேவர்) சந்திக்கும்போது விபரீதங்கள் நடக்கின்றன என்பது கதை. இந்தப் படமும் அதன் இந்திப் பதிப்பான 'சாது அவுர் சை'த்தானும் வெற்றி அடைந்தன.

ஆனால் இரண்டு படங்களின் வெற்றிக்கான பலன்கள் வீரப்பனுக்கு கிடைக்கவில்லை. ஏனென்றால், தான் கதை, வசனம் எழுதியிருந்தாலும் தன்னுடைய பெயரை வீரப்பன்  போட்டுக் கொள்ளவில்லை!
மக்களுக்குத் தேவைப்படக்கூடிய கருத்துக்களை  ஹாஸ்யமாக எப்படி அமைக்கலாம் என்ற சிந்தனையில் எப்பொழுதும் இருந்த வீரப்பனுக்கு, கடவுளைப் பற்றி எல்லாம் நினைக்க நேரம் இல்லை. ஆனால் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவை குறித்து 'ருத்ரதாண்டவம்' என்ற நாடகத்தில் அவர் எழுதினார். அது திரைப்படமாகவும் வந்தது. அதில் தேச ஒருமைப்பாடடின் அவசியத்தை மசால் வடையை முன் வைத்து அவர் எல்லோருக்கும் புரியும்படி சொன்னது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் இடையேயான வீரப்பனின் வாழைப்பழக் காமெடி, 'கரகாட்டக்கார'னில் அமைந்தது. ஒரு வாழைப்பழத்தை தான் சாப்பிட்டு விட்டு,  இரண்டு வாழைப்பழங்களுக்கு கணக்குச் சொல்லும் செந்திலின் ஏமாற்றுவேலை, பரவலாக ரசிக்கப்பட்டது. கங்கை அமரன் இயக்கிய படங்களில் உடன் இருந்து உதவினார் வீரப்பன்.

மதர்லேண்ட் பிக்சர்ஸ் எடுத்த ‘நான் பாடும் பாடல்’, ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதய கீதம்’, ‘இதயக்கோயில்’ முதலிய படங்களில் கவுண்டமணிக்காக எழுதினார் வீரப்பன். ஆனால், இந்தத் தலையா அந்த தலையா என்று கவுண்டமணி பேசுவதும் செந்திலை உதைப்பதும் வீரப்பனின் கற்பனை அல்ல... கவுண்டமணியின் சொந்த சரக்கு.

‘கோயில் புறா’வில், தானும் உசிலை மணியும் பங்குபெற்ற ஒரு அருமையான ஹாஸ்ய பகுதியை உருவாக்கினார் வீரப்பன். 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில் வீரப்பனை  ஒரு நல்ல பாத்திரத்தில் கே.பாலசந்தர் மிளிர வைத்தார்.

சிவாஜி நடித்த 'ரோஜாவின் ராஜா'விற்கு கதை, வசனம் எழுதிய வீரப்பன், 'தெய்வீக ராகங்கள்' என்ற படத்தை தானே திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவும் செய்தார்.

காசு சேர்க்கும் பழக்கம் இல்லாதவர் வீரப்பன். சினிமா உலக பந்தாக்கள் சிறுதும் இல்லாத எளிமையான மனிதராக வாழ்ந்தார். அறுபத்தி ஐந்து வயதில் அவருக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டது. அப்பொழுதும் அவரிடம் வந்து சினிமாக்காரர்கள் காமெடி டிராக் எழுதிக்கொண்டுபோனார்கள். தொடர்ந்து சினிமாவிற்காக உழைத்து கொண்டிருந்த வீரப்பனின் உழைப்புக்கு ஏற்ற கவுரவத்தையோ சன்மானத்தையோ திரை உலகத்தினர் அவருக்குத் தரவேயில்லை. அதைப் பற்றி வீரப்பனும் கவலைப்படவேயில்லை!

வீரப்பன் 30.8.2005ல் மறைந்த போது, அவரைப்போலவே பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து சிரிப்பு நடிகராக வளர்ந்த பி.ஆர்.துரை, வீரப்பனுக்கு அஞ்சலி கூட்டம் நடத்தினார். அதில் வீரப்பனின் இளமைக்கால நண்பரான ஜெயகாந்தன், அவருடைய உன்னதமான பண்புகளைப் பாராடடிப்பேசினார். ஏ.வீரப்பன், தன் செயலாலும் சிந்தனையாலும் உழைப்பாலும் ஏ.ஒன்.வீரப்பன்தான்.

- வாமனன் 

Wednesday, April 22, 2020

KODUTHADHELLAM KODUTHAAN - PADAGOTTI


படம்: படகோட்டி
இசை: M.S. விசுவநாதன்
குரல்: T.M. சௌந்தரராஜன்
பாடல்: வாலி
வெளியான வருடம்: 1964

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ?...
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை !...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

படைத்தவன்மேல் பழியுமில்லை
பசித்தவன் மேல் பாவமில்லை...
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்...
பலர் வாட வாட
சிலர் வாழ வாழ
ஒருபோதும் தெய்வம் பொறுத்ததில்லை !....

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்

இல்லையென்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லையென்பார்...
மடிநிறைய பொருளிருக்கும்
மனம்நிறைய இருளிருக்கும் !...
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம் !!...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான் !!!!!.....

Tuesday, April 21, 2020

ENDHA OOR ENRAVANE - KAATTU ROJA




படம்: காட்டு ரோஜா
பாடல்: கண்ணதாசன்
குரல்: PB ஸ்ரீனிவாஸ்
இசை: KV மஹாதேவன்


எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்து விட்டேன்
வேலூரைப் பார்த்துவிட்டேன்
விழியூரில் கலந்து கொண்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடி புகுந்தேன்

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்து விட்டேன்
பள்ளத்தூர்  தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்
கீழூரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா

எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும் கூட
அறிந்த ஊர் அல்லவா

https://en.wikipedia.org/wiki/Kattu_Roja

Kattu Roja

From Wikipedia, the free encyclopedia
Jump to navigationJump to search
Kattu Roja
Kattu Roja.jpg
DVD cover
Directed byA. Subba Rao
Produced byModern Theatres
Written byM. S. Solaimani
N. Padmanaban
G. Devarajan
Story byM. S. Solaimani
StarringS. S. Rajendran
Padmini
R. S. Manohar
Music byK. V. Mahadevan
CinematographyR. Sambath W. I. C. A.
Edited byL. Balu
Production
company
Distributed byModern Theatres
Release date
5 April 1963
Running time
131 Mins
CountryIndia
LanguageTamil
Kattu Roja (transl. Forest Rose) is 1963 Tamil drama film, directed by A. Subbha Rao and produced by Modern Theatres. The film script was written by M. S. Solaimani and dialogue was written by N. Padmanabam and G. Devarajan. Music was by K. V. Mahadevan.[1] The film stars S. S. RajendranPadminiM. R. Radha and R. S. Manohar in the lead roles, with V. K. RamasamyG. Varalakshmi and K. A. Thangavelu.[2]

Plot[edit]

A young, innocent man, Baskaran (S. S. Rajendran) lives alone with his elderly parents Ponnambla Mudaliar (V. K. Ramasamy), Vadivu (G. Varalakshmi) and his cousin Kuzhandai Velu (K. A. Thangavelu). The elderly couple wishes for an arranged marriage for their family friend Shanmuga Mudaliar (P. D. Sambantham) and daughter Baby (G. Sakunthala). So, Baskar and his cousin visit Neelagiri for Shanmuga Mudaliar's home. On the way, their car was struggling, so Thangavelu such as water, meantime, Baskar drives the car and has an accident. A young village girl Ponni (Padmini) saves him and she gives aid for his injured body.
Then both fall in love with each other. Meanwhile, Kuzhandai Velu reaches Shanmuga Mudaliar's home, meets him and his daughter Baby. Baby and Kuzhandai fall in love. And after searching for Baskar, finally he finds him. Then, Kuzhandai was received at home with Baskar. Baskar ever time was spelled for Kattu Roja. So, his parents and cousin decided he was mentally disturbed. In the meantime, Somu (R. S. Manohar) reached Ponni's home. Ponni's father (T. S. Muthaiah) was dying in bed, her father was to bring Ponni for his Uncle Somu's hand.
Then, there was comes to Ponnamblam house and Ponni joins for house maid. In the meantime, the household faces some problems for son shapes. Accidentally, Baskar and Ponni meet again. Since, he was disturbed for heartly. Baskar was, in the meantime, closed relationship with his Uncle Thanga Durai (M. R. Radha), wish like his sister Pushpa (Pusphalatha) gets married Baskar, So he hatches a secret plan for this. Baskar goes to the wrong pathway and becomes an alcoholic. His mother worries about her son's attitude and once Baskar tries to molest Ponni.
Then Vadivu decided to arrange a marriage of Ponni and Somu. Ponni tries to commit suicide, Baskar saved her life at a mountain edge. Somu knew Ponni's past life. Baskar is her past lover. Finally, Baskar and Ponni get married, but Thanga Durai stopped the ceremonies. Because, he told Baskar secretly married his sister Pushpa and their couple has one female child. The baby is also identified, but who is the father? In the meantime, Kuzhandi Velu says in truth the baby is Thanga Durai's child. He was spoiled Ponni's sister's (B. S. Saroja) life, so she leaves the child in Baskar's car and Baskar submits the baby to Thanga Durai. Thanga Durai was trained to baby for shows Baskar and Pushpa photograph and teach the child for father and mother identifications. Finally Thanga Durai admits his mistake and reunites with his family and Pushpa marries Somu.

Cast[edit]

Crew[edit]

  • Director = A. Subbha Rao
  • Script = M. S. Solaimani
  • Producer = Modern Theatres
  • Music = K. V. Mahadevan
  • Art = B. Nagarajan
  • Processing = T. P. Krishnamoorthy
  • Audiography = P. S. Narasimham
  • Choreography = Heralal, Chopra and Jayaram.[3]

Soundtrack[edit]

Kattu Roja
Soundtrack album by 
Released1963
Recorded1963
GenreSareegama
Length23:17
LanguageTamil
ProducerK. V. Mahadevan
Music was composed by K. V. Mahadevan.[4] and lyrics were written by Kannadasan and Panju Arunachalam.[5] The song "Entha Oor Endravane" was a super hit (the hero was sung by drinking) voice by P. B. Srinivas.[6]
No.SongSingerLyricsLength(m:ss)
1"Yenadi Roja"P. SuseelaKannadasan2:38
2"Kathavu Thiranthatha"4:04
3"Vandondru Vanthathu"T. M. Soundararajan P. SuseelaKannadasan3:52
4"Chinna Chinna Kannakukku"T. M. Soundararajan Jamuna Rani3:11
5"Entha Oor Endravane"P. B. Srinivas3:21
6"Ennai Paaru Paaru"Jamuna Rani3:31
7"Chinna Chinna Kannanukku" (Sad)P. Suseela3:20

Monday, April 20, 2020

MANIDHAN ENBAVAN - SUMAITHAANGI



படம்: சுமைதாங்கி 
பாடல்: கண்ணதாசன் 
இசை: MSV, TKR
குரல்: PB ஸ்ரீனிவாஸ் 



மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்
வாரி வாரி வழங்கும் போது
வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னை தந்து
தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல
ஒளியை வீசலாம்

மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம்
சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம்
மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுதபோதும்
தலைவன் ஆகலாம்
மனம் மனம் அது
கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்

மனமிருந்தால் பறவை கூட்டில்
மான்கள் வாழலாம்
வழி இருந்தால் கடுகுக்குள்ளே
மலையை காணலாம்
துணிந்துவிட்டால் தலையில்
எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது
கோவில் ஆகலாம்

மனிதன் என்பவன்
தெய்வம் ஆகலாம்

Sunday, April 12, 2020

MAAMAN ORU NAAL - ROSAPOO RAVIKKAI KAARI



படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடல்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
குரல்: SPB, SP சைலஜா


மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனை பண்ணி பாத்தேனம்மா
அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா

மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனை பண்ணி பாத்தேனம்மா
அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
வாசத்திலே மதி மறந்து
வாங்கிகிட்டு நான் வச்சிக்கிட்டேன் நான்
மல்லியப்பூ வசம் என் மாமன் மேல வீசும் (மாமன் )


மாங்கா தோப்போரம்  நான் மறுநா(ள்) போனேனா
தேங்கா பூவாட்டம் நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனா
அடி ஆத்தாடி  என்னோரமா என் மாமன் வந்தான் அங்கே

ஏய் என் மாமன் வந்தான் அங்கே  ஒரு மாங்கா தந்தான் திங்க
என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
ஆசையிலே என்ன மறந்து
வாங்கிட்டு நான்  தின்னுபுட்டேன் நான்

மாம (ன்) தந்த மாங்கா நல்ல மல்கோவாதாங்க (மாமன்)


கம்மா கரையோரம் நான் குளிச்சிக் கிட்டிருந்தேனா
சேலை துணி எல்லாம் நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனா
அடி அம்மாடி என்னோரமா
என் மாமன் தானே  வந்தான்
புது சேலை தானே தந்தான்

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
சேலையிலே என்ன மறந்து
வாங்கிக்கிட்டு நான் கட்டிக்கிட்டேன் நான்

மாமந்தந்த சேலை அந்த மல்லியப்பூ போல (மாமன்)

ஒரு நா(ள் ) தனியா தான் நான் வீட்டில இருந்தேனா
மெதுவா வந்தானாம் நான் வரவா என்றானா
அடி ஆத்தாடி என்னோரமா
புது பாய போட்டான் அங்கே
புது விதமா பாத்தான் இங்கே

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ள நான் பச்சை புள்ளை நான்
ஒன்னுமறியா கன்னி பொண்ணு நான்
மதி மயங்கி படுத்துக்கிட்டேன் 

Wednesday, April 8, 2020

ANBU MALARGALIN - KANNUKU MAI EZHUDHU




படம்: கண்ணுக்கு மையெழுது
பாடல்: கா.காளிமுத்து
இசை: இளையராஜா
குரல்: எஸ்.ஜானகி
வெளியான ஆண்டு: 1986

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

கண்ணில் தெரியுது அன்பின் எல்லை
காணும் கனவுக்கு எல்லை இல்லை
மண்ணில் நிலைக்கின்ற காலம் வரை
மங்கலம் பொங்கிட என்ன குறை
கண்மணியே.....சிறு பொன்விளக்கே
முழு நிலவாய் புது மலராய்
முழு நிலவாய் புது மலராய்
உன்னில் இருந்து இவ்வையத்தில் வாழ்வேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது

அந்தியின் சந்திப்பு நித்தம் நித்தம்
அன்பு வழங்கிடும் முத்தம் முத்தம்
இந்தப்  பொழுது எனக்கினிமை
இருந்து மகிழ்வது உன் கடமை
வாழும் வரை வாழ்ந்திருப்பேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
வாழ்பவரை வாழ்த்திச் செல்வேன்
நெஞ்சம் நிறைவோடு வாழ்த்துகிறேன்

அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
சொந்தங்களே பந்தங்களே
சொந்தங்களே பந்தங்களே
சொர்க்கம் இதுவென்று
சொல்லி மகிழ்கின்ற
அன்பு மலர்களின் சோலை இது
ஆசை மனம் இட்ட கோலம் இது
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


KANNUKUL POTHI VAIPPEN - THIRUMANAM ENUM NIKAH



படம்: திருமணம் எனும் நிக்காஹ்
பாடல்: பார்வதி
இசை: கிப்ரான்
குரல்: விஜயப்ரகாஷ், சாதனா சர்கம், சாருலதா மணி, டாக்டர் ஆர்.கணேஷ்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்ல கண்ணனே வா
தி தித்த தை ஜாதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புரம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா
விசம கண்ணனே வாடா வா

சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

மழைத்தறியா உள்ளம்
பிசுபிசுப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பை காண

நீ ராதை இனம்
சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே யோசிக்கிறேன்

உன் விரலை பிடித்து
நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா


உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்

கண்ணாடி முனை போல் எண்ணங்கள் கூராய்
முன் இல்லாததை போல் எல்லாமே வேறாய்
உன்னாலே பூரிக்கிறேன்

உன் சிரிப்பு சரத்தில்
மகிழ மரத்தில்
பூ தைக்கிறேன்

கண்ணுக்குள் பொத்திவைப்பேன்
என் செல்லக்  கண்ணனே வா
தி தித்த தை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா

அடிக்கடி உனைப்பிடிக்க நான் மன்றாடிட
இடப்புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷமக்  கண்ணனே வாடா வா