Tuesday, November 8, 2016

PAARTHTHEN SIRITHTHEN EDUTHTHEN KODUTHTHEN - SAAMI SONNA SARITHAAN - SPB SWARNALATHA


FILM : SAAMI SONNA SARITHAAN
SINGERS: SPB SWARNALATHA
MUSIC : DEVA

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக
என் வீட்டு தோட்டத்து ரோஸா
உன் பாட்டை பாடுது வா வா
பௌர்ணமியோ புது மார்கழியோ
பாட வந்தேன் இவள் தேவதையோ

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக

காலங்கள் கறைந்து விழ மோகங்கள் நிறைந்து எழ
கனவுகளில் மனம் முழுதும் காவியம் பாட
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஏடெந்தன் இளைய உடல் எழுதுங்கள் புதிய மடல்
எழுதையிலே ரசித்திருக்கும் ஏந்திழை தேகம்
வளர்ந்தது வாலிப கனவுகளே வழிந்தது ஆசையின் நினைவுகளே
வளர்பிறையே தொடர் கதையே வா இனி நீ இன்றி நான் இல்லையே

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பூ வாழை மாவிலையும் பொன் மஞ்சள் தோரணமும்
ஆடி வரும் நேரம் எது தேடிய மாது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹாஹா...தனியறையில் ஆனந்தம் புது முறையில்
அனுபவிப்போம் அதை வளர்ப்போம் ஆயிரம் ஆண்டு
பலப்பல பிறவியின் பயனல்லவா
இணைத்தது ஆண்டவன் செயலல்லவா
இரு உடலில் ஒரு உயிரே இது ஒரு அதிசய கணக்கலாவா

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியாக
என் வீட்டு தோட்டத்து ரோஸா
உன் பாட்டை பாடுது வா வா
பௌர்ணமியோ புது மார்கழியோ
பாட வந்தேன் இவள் தேவதையோ

பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன்
என் ஜன்னல் வழியாக
எந்தன் ஜன்னல் வழியா..............................க








Friday, November 4, 2016

MAATIKKONDAAYAA MANAMAALAI PODAVAA - APPA AMMA - SPB SJ


FILM : APPA AMMA
MUSIC: SHYAM
LYRICS: AALANGUDI SOMU
SINGERS: SPB SJ

மாட்டிக்கொண்டாயா...
மணமாலை போடவா....
பூமேனி பொன்னூஞ்சல் என்னை தாங்காதோ

மாட்டிக்கொண்டாயா மணமாலை போடவா
பூமேனி பொன்னூஞ்சல் உன்னை தாங்காதோ
மாட்டிக்கொண்டாயா மணமாலை போடவா
பூமேனி பொன்னூஞ்சல் என்னை தாங்காதோ

பக்கம் வர வெட்கப்பட்டால் நடக்குமா
ஆஹா...பருவத்தின் நாடகம் கசக்குமா
பகலென்ன இரவென்ன நமக்குள்ளே ..ஆஹா
தாலாட்டு நீ இன்று மாப்புள்ளே ஹே ஹே
ஆஹா ஹா ஹா ஹா ஹே ஹே லலலல் லா லா

ஏக்கம் வரும் தூக்கம் கெடும் லவ் மீ யூ
சேலை தொடும் வேளை வரும் ஐ லவ் யூ
ஏக்கம் வரும் தூக்கம் கெடும்  யூ...
சேலை தொடும் வேளை வரும் ஐ ஐ
பொருங்க ...கடும் குளிருங்க
போதுங்க...இன்னும் வேணுங்க
புதுசுங்க...இள மனசுங்க
பயமுங்க...அது சுகமுங்க
அழகிய பதுமை அவசர நிலமை
அறிவேனையா......

மாட்டிக்கொண்டாயா மணமாலை போடவா
ஹெ ஹெ ல ல ல ல ல ஹா ஹா ஹா
ஹே ஹே ஹே லா லா ல ஹா ஹா ஹா

காளை மனம் நாளை வரை தாங்காது
நொ நொ நொ நொ
பாவை மனம் தேவைகளை சொல்லாது
ஹ ஹ ஹ ஹ
காளை மனம் நாளை வரை
நொ நொ நொ நொ
பாவை மனம் தேவைகளை
நெருக்கமா...அது நடக்குமா
நடுக்கமா...கொடி பொருக்குமா
கொடுக்கவா.....நான் தடுக்கவா
முடிக்கவா...அதை ரசிக்கவா
இயற்கையின் மடியில் இளமையின் பிடியில்
இளைப்பாறவா

மாட்டிக்கொண்டாயா மணமாலை போடவா
பூமேனி பொன்னூஞ்சல் உன்னை தாங்காதோ
மாட்டிக்கொண்டாயா மணமாலை போடவா
பூமேனி பொன்னூஞ்சல் என்னை தாங்காதோ
ஹெ ஹெ ல ல ல ல ல ஹா ஹா ஹா
ஹே ஹே ஹே லா லா ல ஹா ஹா ஹா






ANDHIMALLI SENDAADA ANDHI VIZHI VANDAADA - NAAN NANDRI SOLVEN - SPB PS


 FILM : NAAN NANDRI SOLVEN
MUSIC: SHYAM
SINGERS: SPB PS
LYRICS: PULAMAI PITHTHAN

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா  ஆ ஆ ஆ ஆ

பன்னீர் ஆறு பாயட்டும் அங்கே அன்னம் ஆடட்டும்
இங்கே உந்தன் ராஜசபையில் எங்கே அந்த மாய கலைகள்
முல்லை பூத்த காடொன்று முன்னால் தேனின் கூடொன்று
கண்டால் அந்த பாதை சிறிது உண்டால் தோன்றும் போதை பெரிது
மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
செவ்வந்தி கொத்தாட சிந்தாமல் முத்தாட
ஜாடை தந்தாயோ

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலட்ட வா ஹா ஹா

நிலா நீந்தும் வானத்தில் உலா வந்த மேகத்தில்
கண்ணே மாலை மஞ்சம் இடவோ
கையால் ரேகை போட வரவோ
ஒரே ராகம் பாடுங்கள் ஒரே தாளம் போடுங்கள்
தொட்டால் ராஜ போதை தருமோ
சொன்னால் மேனி வாடி விடுமோ
வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
கையோடு கையாக கல்யாண பெண்ணாக வந்தேன் இப்போதே

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே
அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலட்ட வா ஹா ஹா






Tuesday, November 1, 2016

EN RAGANGAL - MUDHAL IRAVU



படம்: முதல் இரவு
இசை: இளையராஜா
குரல்: எஸ்.ஜானகி
பாடல்: கண்ணதாசன்

என் ராகங்கள் இன்று
எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள்
சம காலங்கள் (என்)

பூஜைக்கேற்ற பூவெல்லாம்
எந்தன் கோலங்கள்
இலைகளே பேசுங்களேன்
என் எண்ணங்களை
மின்னல்களை தேராக்குவேன்
கல்யாண ஊர்வலம் கொண்டாட (என்)

மாலை சூடும் நேரங்கள்
மஞ்சள் வானங்கள்
காதல் மகள் ராதை தந்தாள்
என் மாங்கல்யம்
கண்ணன் தரும் பொன்னூஞ்சலில்
அம்மாடி அம்மாடி நான் ஆட (என்)

அச்சம் நாணம் வெட்கங்கள்
இன்றே ஓடுங்கள்
அத்தானிடம் பேசுங்களேன்
என் ஆசைகளை
கட்டில் வரும் தொட்டில் வரும்
கண்ணான பிள்ளைக்குத் தாலாட்ட (என்)