Tuesday, May 31, 2016

EZHUTHUGIRAL ORU PUDHUKAVITHAI - SARANALAYAM



படம்: சரணாலயம் (1983)
இசை: எம்.எஸ்.வி
பாடல்: வாலி
குரல்: மலேசியா வாசுதேவன்

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
தஞ்சை கோயில் ரதம் போல நடை அழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
கட்டழகுப்  பெட்டகமோ கண் நிறைந்த சித்திரமோ
கால காலம் இங்கு எனக்காக

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

வானம் வளைக்காத கடற்கரையோ
இது வண்டு துளைக்காத பழக்குலையோ
இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ
கண்ணன் வந்து துயிலாத ஆலிலையோ
புத்தம் புது புத்தகமோ
புன்னகைக்கும் ரத்தினமோ
தேவ தேவி இவள் எனக்காக

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ
ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ
பஞ்சணையில் கை அணைக்க
பையப் பைய மெய் அணைக்க
தாவி தாவி வரும் கலைமானோ

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது

எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை

Monday, May 30, 2016

MANMADHA LEELAI MAYAKKUDHU AALAI - MANMADHA LEELAI



படம்: மன்மத லீலை
குரல்:எஸ்.பி.பி.
இசை: எம்.எஸ்.வி.
பாடல்: கண்ணதாசன்


மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை

மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை

மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு திரண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள்
நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு

மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை


சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத்  துடிப்பு
ஆ ஆஹா ஆஹா ஹே ஹே ஹே..
சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத்  துடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்து கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு


எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்

எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திரக்  கிண்ணத்தில் பேதமில்லை
உன் சிந்தையிலே தான் பேதமடா
ஆ ஆஹா ஆஹா ஹே ஹே ஹே
சு சு சு ஆ ஆஹா ஆஹா..

ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மதன் வாரிசு வந்துவிட்டான்

மன்மத லீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை

Manmatha Leelai (English: Cupid's play) is a 1976 Tamil-language film starring Kamal Haasan in the lead role, Madhu. The film directed by Kailasam Balachander also has Halam (Rekha) as Madhu's wife. A number of actresses debuted through this film, including Jayaprada as Kannagi, Y. Vijaya as Miss. Wrong Number, Hema Choudhary as Madhavi, among others. M. R. Radha's son Radha Ravi also made his Tamil debut in the film.[1] The film was dubbed into Telugu as Manmadha Leela. Though the film was criticised for its bold content when it released, it has received cult status with passing years [2] and is considered a trendsetter.[3]This film was dubbed in hindi in 1977 as Meethi Meethi Baatein.

Plot[edit]

The film explores the life journey of a womaniser (Kamal Hassan) and his affairs with various women, including those who are married. The main conflict is between Kamal Hassan's character Madhu and his wife Rekha. Balachander's genius lies in objectifying married women of the city whilst creating a loving wife who's torn between accepting her husband and living a separated life after having discovered the travails of her own father.

Cast[edit]

Music[edit]

Tamil[4]
  1. Manaivi Amaivathellam — KJ Yesudas
  2. Naathamenum — Vani Jayaram
  3. Nizhal Kandavan — SPB
  4. Manmadha — SPB
Hindi
  1. "Hello Hello My Dear" - YesudasVani Jairam
  2. "Dil Diwana Bada Mastana" - S P Balasubramaniam
  3. "Kal Koi Menka Aaj Koi Urvashi" - S P Balasubramaniam
  4. "Khush Hai Na O Sajni" - YesudasVani Jairam

Reception[edit]

Even though it stirred up controversies, when it was released, later it became a cult classic.[2] Controversies arose during the release, only because of the reason that Balachander was at least 10 years ahead of the film-makers who were making movies during those periods and tended to say whatever he wanted to say through his movies in a bold and straightforward manner. Kamal Haasan about the film said "it was an interesting subject. For that period it was unusual, a breaking down of the fidelity stereotypes".[5]The movie was a huge box office success. In 2012, Balachander's daughter Pushpa Kandasamy planned to make a modern-day version of the film.[3] Shanthanu Bhagyaraj too was toying with the idea of remaking the film.[6]

https://en.wikipedia.org/wiki/Manmadha_Leelai

    THENRALUKKU ENRUM VAYADHU - PAYANAM



    படம்: பயணம்
    குரல்: பாலு
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்: கண்ணதாசன்
    வருடம்: 1976

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
    செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?
    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
    செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

    வெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என்னாள்  திருநாளோ?
    மின்னல் மேனி மேகக் குழலாள் தன்னை அறிவாளோ?
    வெள்ளித்  தேரில் உள்ள சிலைக்கு என்னால் திருநாளோ?
    மின்னல் மேனி மேகக் குழலாள் தன்னை அறிவாளோ?
    பால் வண்ணப்  பூமுல்லை பார்த்தால் போதாதோ?
    பாலைவனத்தில் காவிரி ஆறு பைரவி பாடாதோ?

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
    செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

    கம்பன் வந்தால் காவியம் பாட கற்பனை ஒரு கோடி
    கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லையடி
    தத்தித் தாவும் சித்திர முத்துச் சிப்பியில் விளையாடி
    தழுவப்  போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

    பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
    பன்னீர் சொம்பு முன்னால் நின்று வாவென்றது
    பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
    பன்னீர் சொம்பு முன்னால் நின்று வாவென்றது
    எத்தனை சொல்லி இத்தனை அழகை  நான் பாடுவேன்
    இன்பத்  தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளித்  தருகின்றேன்.

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
    செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?

    தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

    Sunday, May 29, 2016

    THIRUMALIN THIRUMARBIL - THIRISOOLAM



    படம்: திரிசூலம் 
    இசை:எம்.எஸ்.வி.
    குரல்: இயேசுதாஸ், வாணி ஜெய்ராம் 
    பாடல்: கண்ணதாசன் 

    திருமார்பில் முகம் புதைத்த காதல்
    _________________________________
    வீரப்பன் காட்டிற்குள் கடத்திச் சென்ற நடிகர் ராஜ்குமார் மற்றும் காஞ்சனா , ஜெய்மாலா ஆகியோர் நடித்த " சங்கர் குரு " என்ற கன்னட திரைப்படம் 1978 ல் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதனைத் தமிழில் ரீ மேக் செய்ய எண்ணினார் இயக்குனர் கே. விஜயன்.
    பெரிய பட்ஜெட்டில் தயாரான படத்திற்கு " திரிசூலம் " என பெயரிடப்பட்டது. இதில் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் தோன்ற கே.ஆர். விஜயா, ஸ்ரீபிரியா, ரீனா, புஸ்பலதா, நம்பியார், தேங்காய் சீனிவாசன், ஜெய்கணேஷ், வீ.கே. ராமசாமி மற்றும் பலர் நடித்தனர்.
    இந்தத் திரைப்படம் 1979 ம் வருடம் திரைக்கு வந்தது. திரையிடப்பட்டதில் இருந்து இருநூறு நாட்களுக்கு மேல் ஓடி வசூலில் மிகப் பெரிய சாதனை படைத்தது. அந்த கால கட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த சனத்தொகை 47 மில்லியன்களாக இருந்தபோது திரிசூலம் படத்திற்கு 30 மில்லியன் டிக்கட்டுகள் விற்கப்பட்டிருந்தன என்பது ஒரு வரலாற்றுச் சாதனைதான். அதேவேளை வசூலில் முதன்முதலாக ஐந்து கோடிகளைக் கடந்த தென்னிந்திய திரைப்படமாகவும் இது திகழ்கிறது.
    கண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ். விஸ்வநாதனின் இசையில் அனைத்தும் மிகப் பிரபலமாய் அமைந்தன. ரீ.எம். சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே. ஜேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் பாடிய இப்படத்தின் எல்லாப் பாடல்களுமே செவிக்கு இனிமை சேர்த்தன.
    ஜேசுதாஸ், வாணி ஆகியோர் பாடும் இப்பாடல் பசுமையான சூழலில் படமாக்கப்பட்டுள்ளது. சிவாஜியோடு மலையாள சினிமாவின் அழகு நாயகி ரீனா இதில் தோன்றுகிறார்.


    திருமாலின் திரு மார்பில் ஸ்ரீதேவி முகமே
    தீபங்கள் ஆராதனை ஊரெங்கும் பூ வாசனை

    மலை மகள் சீராட்ட கலை மகள் பாராட்ட
    செங்கனிச் சுவையோடு கதை பேசும் மன்றம்
    கண்டேன் இங்கே கண் முன்னமே
    சேர்ந்து பாடுங்கள்
    தேடுங்கள் சுகங்களை
    பொன்மணித் தேரல்லவா

    திருமாலின். . . .

    புது மலர் தாலாட்டு தழுவிடும் பூங்காற்று
    மன்மதன் ரதிதேவி விளையாடும் கோலம்
    நானும் நீயும் அவ்வண்ணமே
    மாலை ராகத்தின் ஆனந்த மயக்கமே
    மங்கலத் தேன் சிந்தவா

    திருமாலின். . .

    பாலெனும் நீரோடை படகுகள் பொன்னாடை
    பஞ்சணை சுகம் காட்டும் பனி மேடை வண்ணம்
    ஆடல் பாடல் என் எண்ணமே
    நேரம் காலங்கள் ஏன் இந்த இடத்திலே
    சித்திரப் பூச்சூட்டவா

    திருமாலின். . .

    INNUM PAARTHU KONDIRUNDHAAL - VALLAVAN ORUVAN


    படம்: வல்லவன் ஒருவன்
    குரல்: பி.சுசீலா & டி.எம்.சௌந்தராஜன்
    இசை : வேதா
    பாடல்: கண்ணதாசன்

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
    நான் கேட்டதை தருவாய் இன்றாவது

    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
    இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
    நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    மாலைக்கு மாலை காதலர் பேசும்
    வார்த்தைகள் பேசிட வேண்டும்
    பேசிடும் போதே…கைகளினாலே
    வேடிக்கை செய்யவும் வேண்டும்
    அதில் ஆடி வரும்…இன்பம் ஓடி வரும்

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
    நான் கேட்டதை தருவாய் இன்றாவது
    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது

    காட்டுப் புறாக்கள் கூட்டுக்குள் பாடும்
    பாட்டுக்கு யார் துணை வேண்டும்
    தோட்டத்து பூவை மார்புக்கு மேலே
    சூடிட யார் சொல்ல வேண்டும்
    இங்கு யாருமில்லை…இனி நேரமில்லை

    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
    இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
    நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது
    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது

    செண்பகப் பூவில் வண்டு விழுந்து
    தேன் குடித்தாடுதல் போலே
    சேர்ப்பதை சேர்த்து…பார்ப்பதை பார்த்து
    வாழ்ந்திட துடிப்பதனாலே
    இனி பிரிவதில்லை…உன்னை விடுவதில்லை

    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இந்த பார்வைக்குத் தானா பெண்ணானது
    நான் கேட்டதை தருவாய் இன்றாவது
    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது
    இந்த கேள்விக்குத் தானா பெண்ணானது
    நெஞ்சக் கோட்டையை திறப்பாய் இன்றாவது
    இன்னும் பார்த்து கொண்டிருந்தால் என்னாவது
    இன்னும் கேட்டுக்கொண்டிருந்தால் என்னாவது

    POTTADHU MOLACHUDHADI KANNAMMA - NAVARATRI

    http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Navarathiri/Pottathu%20Mulachithadi%20-%20TamilWire.com.mp3

    படம்: நவராத்திரி 
    இசை: கே.வி.மகாதேவன் 
    குரல்: டி.எம்.எஸ்.
    பாடல்: கண்ணதாசன் 


    போட்டது மொளச்சுதடி கண்ணம்மா கைநிறைய
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா 


    போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா
    போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

    நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
    சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே
    நாத்து வந்து சிரிக்குதடி காலத்திலே
    சோத்துப் பானை கொதிக்குதடி நேரத்திலே நேரத்திலே

    போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா



    மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
    மண்ண நம்பி உழுது வச்சி மழைய நம்பி வெதெ வெதெச்சி
    வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா
    வயல நம்பி வாழ்ந்திருந்தா கண்ணம்மா ஒரு
    பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா ஒரு
    பயல நம்பத் தேவையில்லே சின்னம்மா

    போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா

    ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும்
    ஆட்டம் போடும் மனிதருக்கும் ஆரவாரம் செய்பவர்க்கும்
    கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா
    கோட்டை கட்டி வாழ்பவர்க்கும் கண்ணம்மா இந்த
    மூட்டையில் தான் உயிரிருக்கு சின்னம்மா நெல்லு
    மூட்டையில் தான் உயிரிருக்கு சின்னம்மா


    போட்டது மொளச்சுதடி கண்ணம்மா
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா கைநிறைய
    கேட்டது கெடைச்சுதடி சின்னம்மா





    Saturday, May 28, 2016

    IRAVU VARUM PAGALUM VARUM - IRAVUM PAGALUM


    படம்: இரவும் பகலும்.
    குரல்: டி.எம். சௌந்தரராஜன்
    இசை : டி.ஆர்.பாப்பா
    பாடல்: ஆலங்குடி சோமு

    இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
    உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் [2]


    பெருமை வரும் சிறுமை வரும் 
    பிறவி ஒன்று தான் பிறவி ஒன்று தான் [2]
    வறுமை வரும் செழுமை வரும்
    வாழ்க்கை ஒன்று தான் வாழ்க்கை ஒன்று தான்

    இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
    உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

    இளமை வரும் முதுமை வரும் 
    உடலும் ஒன்று தான் உடலும் ஒன்று தான் [2]
    தனிமை வரும் துணையும் வரும்
    பயணம் ஒன்று தான் பயணம் ஒன்று தான்

    இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
    உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்

    விழி இரண்டு இருந்த போதும் 
    பார்வை ஒன்று தான் பார்வை ஒன்றுதான் [2]
    வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான்
    வழிபடவும் வரம் தரவும் தெய்வம் ஒன்று தான்





    Thursday, May 26, 2016

    MAYILADUM THOPPIL - CHINNA PASANGA NAANGA



    படம்: சின்னப் பசங்க நாங்க
    இசை: இளையராஜா
    குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
    பாடல்: வாலி


    மயிலாடும் தோப்பில் மானாடக்  கண்டேன்
    மானாடும் போது மனமாடக் கண்டேன்
    மானானது யாரோ மகராணியே நீயோ
    மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ

    மயிலாடும் தோப்பில் மானாடக்  கண்டேன்
    மானாடும் போது மனமாடக் கண்டேன்

    வெல்வெட்டுக்  கன்னம் தொட்டு
    வைக்கின்ற முத்தம் எல்லாம்
    கல்வெட்டுப்  போலே நிற்கும்
    கண்ணே நம் காலம் எல்லாம்
    நேசித்து  நெஞ்சில் வைத்து நீண்ட காலம்
    யாசித்த  பெண்ணுக்கு இன்று ராஜ யோகம்
    யோசித்து  ஒவ்வொன்றாக காதல் பாடம்
    வாசித்து  அர்த்தம் சொல்லும் வேளையாகும்
    மைவிழியோரம் ஐவகை பானம்
    மன்மதன் போடும்  மங்கல நேரம்
    பொன்மாலைப்  பொழிதினிலே..

    மயிலாடும் தோப்பில் மானாடக்  கண்டேன்
    மானானது யாரோ மகராஜனே நீயோ


    உள்ளத்தின் உண்டியலில்
    உன் ஆசை எண்ணங்களே
    சேமித்து  வைத்த கன்னி
    சிந்தித்தாள் உன்னை எண்ணி
    சேமித்த அன்புத்தேனை நானும் வாங்க
    சாமத்தில் செவ்வந்திப்பூ நாளும் ஏங்க
    பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம்
    போகட்டும் வெட்கமின்று காத தூரம்
    மீதங்களின்றி மோகங்கள் கூட
    மோகங்கள் நூறு ராகங்கள் பாட
    சங்கீத மயக்கத்திலே..

    மயிலாடும் தோப்பில் மானாடக்  கண்டேன்
    மானாடும் போது மனமாடக் கண்டேன்
    மானானது யாரோ மகராஜனே நீயோ
    மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ

    மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்
    மானாடும் போது மனமாடக் கண்டேன்

    Wednesday, May 25, 2016

    MALLIGAI POOVAZHAGIL PAADUM ILAM - ANNAI VAYAL - SPB SJ


     film : annai vayal
    singers : SPB SJ
    music: sirpi
    lyrics: pazhani bharathi

     மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்
    நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
    ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை
    உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே
    மல்லிகைப்பூ அழகில்

    தேவி பாதையாவும் திருக்கோயிலாக மாறும்
    பார்வை ஏற்றும் தீபம்
    உந்தன் வார்த்தை வேதமாகும்
    கண்கள் எழுதும் நாளும் புது காதல் ஓவியம்
    பெண்ணின் மௌனம் கூசும்
    அதில் வண்ணம் ஆயிரம்
    கொஞ்சும் மணிச்சந்தம் அது உந்தன் மொழியே
    எந்தன் மனசிற்பம் என கொண்டேன் உன்னையே
    தவித்திடும் தனிமையில் குளித்திடும் மழையினிலே

    ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை
    உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே
    மல்லிகைப்பூ அழகில்

    உந்தன் அழகை பேசும் தென்றல் பூவின் வாசம் வீசும்
    மூங்கில் தோளில் சாயும் தென்றல் ராகமாய் வாழும்
    கலையும் கூந்தல் கோலம் சொல்லும் மோகப்பூங்கதை
    ஆசை சிறகை தேடும் ஒரு காதல் தேவதை
    சொந்தம் இது சொர்கம் என வந்தது அருகே
    சிந்தும் மகரந்தம் இனி எந்தன் வழியே
    நனைந்திடும் தளிர்களை அணைத்திடும் புது ஒளியே

    ஆசை மணி ஓசையில் பூக்கும் நிலா கனவுகளை
    உன்னிடத்தில் பேசவந்தேன் பார்வையிலே பார்வையிலே
    மல்லிகை பூவழகில் பாடும் இளம் பறவைகளில்
    நானும் உன்னை தேடி வந்தேன் பூங்குயிலே பூங்குயிலே
    ஆசை மணி ஓசையிலே

    Tuesday, May 24, 2016

    MOUNAMANA NERAM - SALANGAI OLI



    படம்: சலங்கை ஒலி
    குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
    எஸ்.ஜானகி
    இசை: இளையராஜா
    பாடல்: வைரமுத்து

    மௌனமான நேரம்…

    மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
    மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    ஏனென்று கேளுங்கள்…

    இது மௌனமான நேரம்
    இளமனதில் என்ன பாரம்..

    இளமைச்  சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
    புலம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
    குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த்துளி
    குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த்துளி
    கூதலான மார்கழி நீளமான ராத்திரி
    நீயும்  வந்து ஆதரி…

    மௌனமான நேரம்
    இளமனதில் என்ன பாரம்














    இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
    கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
    பாதை தேடியே பாதம் போகுமோ
    பாதை தேடியே பாதம் போகுமோ
    காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
    தனிமையோடு பேசுமோ…

    மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம் -இது
    மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
    ஏனென்று கேளுங்கள்…

    இது மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம்

    AAPATHTHUKKU THENGA PAALU - SABAASH BAABU - SPB


     film : sabaash baabu
    singer: SPB
    Lyrics and music : TR

     யம்மாலே யம்மாலே என் ஆசை உம்மேலே
    யம்மாலே யம்மாலே என் ஆசை உம்மேலே

    ஆப்பத்துக்கு தேங்கா பாலு அய்யாவுக்கு நீதான் ஆளு
    ஐசாலா ஏ ஐசாலா
    மல்லிகைப்பூ இட்டிலியே மாமனும் தான் பட்டினியே
    மையாலா விழி மையாலா
    ஒரப்பு சட்டினியே வா உன் உதட்ட உரசிக்க தா..ஏய்
    ஒரப்பு சட்டினியே வா..வா..வா
    உன் உதட்ட உரசிக்க தா..தா..தா
    கிச்சலி சம்பாச் சோறு என் நெத்திலி கருவாடு
    கிச்சலி சம்பாச் சோறு என் நெத்திலி கருவாடு
    உருளைக்கிழங்கு குருமா உன்னைப்போல வருமா
    உன் உடம்ப இதமா தாம்மா

    ஆப்பத்துக்கு தேங்காய் பாலு அய்யாவுக்கு நீதான் ஆளு
    ஐசாலா....என் ஐசாலா.. ஹ..ஹ ஹா

    இடையை பார்த்துதான் ஐலேசா
    என் இதயம் துடிக்குது அது லேசா
    நடையை பார்த்துதான் ஐலேசா
    நாடி நரம்பு துடிக்குது அது லேசா
    உதட்டப்பார்த்து தான் ஐலேசா
    என் உதிரம் கொதிக்குது ஹஹ அது லேசா
    உதட்டப்பார்த்து தான் ஐலேசா
    என் உதிரம் கொதிக்குது ஹஹ அது லேசா
    ஹரஹர ஹர சம்போ சம்போ
    ஒனப்பாத்தா உள்ளுக்குள்ளே வம்போ வம்போ
    ஹரஹர ஹர சம்போ சம்போ
    ஒனப்பாத்தா உள்ளுக்குள்ளே வம்போ வம்போ

    ஆப்பத்துக்கு தேங்கா பாலு அய்யாவுக்கு நீதான் ஆளு
    ஐசாலா ஏ ஐசாலா

    யம்மா யம்மா லேசா லேசா
    யம்மா யம்மா லேசா லேசா

    துடுப்பு போடத்தான் படகோடும்
    உன் இடுப்ப பார்த்துதான் மனசாடும்
    கடலைப் பார்த்தாலே அலையடிக்கும் உன்
    உடலைப் பார்த்தாலே புல்லரிக்கும்
    வலையைப் போட்டாலே மீன் மாட்டும்
    விழி மீனே வலைப் போட்டா என்னாகும்
    வலையைப் போட்டாலே மீன் மாட்டும்
    விழி மீனே வலைப் போட்டா என்னாகும்
    காரத்தோடு மணம் நிறைந்த கரம் மசாலா
    என் கச்சேரிக்கு நீதானடி ஏத்த தபேலா
    ததிகினத்தோம்
    காரத்தோடு மணம் நிறைந்த கரம் மசாலா
    என் கச்சேரிக்கு நீதானடி ஏத்த தபேலா

    ஆப்பத்துக்கு தேங்கா பாலு அய்யாவுக்கு நீதான் ஆளு
    ஐசாலா ஏ ஐசாலா
    மல்லிகைப்பூ இட்டிலியே மாமனும் தான் பட்டினியே
    மையாலா விழி மையாலா
    ஒரப்பு சட்டினியே வா உன் உதட்ட உரசிக்க தா..ஏய்
    ஒரப்பு சட்டினியே வா..வா..வா
    உன் உதட்ட உரசிக்க தா..தா..தா
    கிச்சலி சம்பாச் சோறு என் நெத்திலி கருவாடு
    கிச்சலி சம்பாச் சோறு என் நெத்திலி கருவாடு
    உருளைக்கிழங்கு குருமா உன்னைப்போல வருமா
    உன் உடம்ப இதமா தாம்மா

    ஆப்பத்துக்கு தேங்காய் பாலு அய்யாவுக்கு நீதான் ஆளு
    ஐசாலா....என் ஐசாலா.. ஐசாலா.. ஐசாலா..

    THENDRALE THENDRALE NEE ENNAI NAADI VAA - SAAVI - SPB SJ


    film : saavi
    music : gangai amaran
    singers: SPB SJ
    lyrics: vaali 

    தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
    வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
    மயக்கும் விளைந்திடும் மாலையில்
    மலர்கள் விரிந்திடும் சோலையில்
    தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
    வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா

    வானம்பாடிகள் போலவே கானம் பாடிய நாட்களே
    ஓடும் மேகங்கள் போலவே ஓடி போனது காற்றிலே
    பிரிந்த பின் கூடினால் பேசவும் தோன்றுமோ
    பார்வைகள் யாவுமே வார்த்தைகள் ஆகுமோ
    நேற்று வாடிய தாமரை மீண்டும் பூத்திடுமோ

    தென்றலே தென்றலே தேனிசை பாடிவா
    சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா

    ராஜமாளிகை வாசமும் ராகமாலிகை பாடலும்
    காட்சி மாறிய காரணம் கால தேவனின் நாடகம்
    வேறோரு பாடலை சேர்ந்தது ராகமே
    ஆயினும் என் மனம் வாழ்த்துக்கள் கூறுமே
    கானல் நீரில் மான்களின் தாகம் தீர்ந்திடுமோ

    தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா
    வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா
    மயக்கும் விளைந்திடும் மாலையில்
    மலர்கள் விரிந்திடும் சோலையில்
    தென்றலே தென்றலே தேனிசை பாடிவா
    சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா


    VUTTAALAKKADI PATTAANA KODI - MY DEAR MARTHANDAN - SPB


     film : my dear marththaaNdan
    singer : spb gangai amaran chorus
    music: ilaiyaraajaa

    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே
    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே
    சிட்டா நிக்குது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
    சிட்டா நிக்குது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
    சுத்தா சுத்துது வெச்சா பத்துது யம்மா சொக்குது இப்போது
    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

    ஒத்த வழி பாதையிலே அத்தமகன் போகையிலே
    புத்தம் புது ஜாடையிலே பொண்ணுவரா ஓடையிலே
    ஒத்த வழி பாதையிலே அத்தமகன் போகையிலே
    புத்தம் புது ஜாடையிலே பொண்ணுவரா ஓடையிலே
    வெத்தலை மடிச்சு கொடுத்தா அவ கட்டிலில் இணைஞ்சு படுத்தா
    வைக்கிற முத்தமும் தடுத்தா என் நெஞ்சில நிம்மதி கெடுத்தா
    சிக்காத இடையே உன் சிங்கார நடையே
    என்னை முள்ளா குத்துது பின்னால் சுத்துது சும்மா நிக்குறியே

    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே
    ஹே..உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தர்றேன் சும்மா நிக்குறியே

    கெட்டதடி என் மனசு கிள்ளூதடி உன் வயசு
    மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு

    கெட்டதடி என் மனசு கிள்ளுதடி உன் வயசு
    மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு
    கெட்டதடி என் மனசு கிள்ளுதடி உன் வயசு
    மெத்தையில பூ விரிச்சு தொட்டு கொள்ள நாள் குறிச்சு
    மின்னுது மின்னுது இடுப்பு அந்த மேட்டுல எத்தனை மடிப்பு
    சிக்குது சிக்குது உடுப்பு உள்ள பத்துது பத்துது அடுப்பு
    மேலாக்கு நழுவ என் மேலாக தழுவ
    அடி யம்மா சங்கதி சொன்ன நிம்மதி சும்மா நிக்குறயே

    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே
    சிட்டா நிக்குது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
    சிட்டா நிக்குது தொட்டா சுட்டது வித்தாரக்கிளி இப்போது
    சுத்தா சுத்துது வெச்சா பத்துது யம்மா சொக்குது இப்போது
    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

    உட்டாலக்கடி பட்டான கொடி மொட்டான கிளியே
    மச்சானைதொட அச்சாரம் தற்றேன் சும்மா நிக்குறியே

    Monday, May 23, 2016

    KANNAN ORU KAIKUZHANDHAI - BATHRAKALI



    படம்: பத்ரகாளி
    இசை: இளையராஜா
    குரல்: ஜேசுதாஸ், பி. சுசீலா
    பாடல்: வாலி

    கண்ணன் ஒரு கைக்குழந்தை
    கண்கள் சொல்லும் பூங்கவிதை
    கன்னம் சிந்தும் தேனமுதைக்
    கொண்டு செல்லும்  என் மனதை
    கையிரண்டில் நான் எடுத்து
    பாடுகின்றேன் ஆராரோ
    மைவிழியே தாலேலோ
    மாதவனே தாலேலோ (கண்ணன்)

    உன் மடியில் நான் உறங்க
    கண்ணிரண்டும் தான் மயங்க
    என்ன தவம் செய்தேனோ
    என்னவென்று சொல்வேனோ
    ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
    சொந்தம் இந்த சொந்தமம்மா
    வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
    தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா


    அன்னமிடும் கைகளிலே
    ஆடிவரும் பிள்ளை இது
    உன்னருகில் நான் இருந்தால்
    ஆனந்தத்தின் எல்லை அது
    காயத்ரி மந்திரத்தை
    உச்சரிக்கும் பக்தனம்மா
    கேட்கும் வரம் கிடைக்கும் வரை
    கண்ணுறக்கம் மறந்ததம்மா

    மஞ்சள் கொண்டு நீராடி
    மைகுழலில் பூச்சூடி
    வஞ்சி மகள் வரும்போது
    ஆசை வரும் ஒரு கோடி
    கட்டழகன் கண்களுக்கு
    மையெடுத்து எழுதட்டுமா
    கண்கள் படக் கூடுமென்று
    பொட்டு ஒன்று வைக்கட்டுமா (கண்ணன்)

    THEN SINDHUDHE VAANAM - PONNUKKU THANGA MANASU



    படம்: பொண்ணுக்கு தங்க மனசு
    இசை: ஜி.கே.வெங்கடேஷ்
    குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
    பாடல்: கண்ணதாசன்

    தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
    மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

    பன்னீரில் ஆடும் செவ்வாழைக்கால்கள்
    பனிமேடை போடும் பால்வண்ண மேனி
    பனிமேடை போடும் பால்வண்ண மேனி
    கொண்டாடுதே சுகம் சுகம்…பருவங்கள் வாழ்க

    தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
    மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

    வைதேகி முன்னே ரகுவம்ச ராமன்
    விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
    விளையாட வந்தான் வேறேன்ன வேண்டும்
    சொர்க்கங்களே வரும் தரும்…சொந்தங்கள் வாழ்க

    தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
    மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க

    கண்ணோடு கண்கள் கவிபாட வேண்டும்
    கையோடு கைகள் உறவாட வேண்டும்
    கன்னங்களே இதம் பதம்…காலங்கள் வாழ்க

    தேன் சிந்துதே வானம் உனை எனை தாலாட்டுதே
    மேகங்களே தரும் ராகங்களே எந்நாளும் வாழ்க



    Sunday, May 22, 2016

    BEAUTIFUL, MARVELLOUS, EXCELLENT - MANAM ORU KURANGU



    படம்: மனம் ஒரு குரங்கு
    இசை: டி.பி.ராமசந்திரன்
    குரல்: சீர்காழி  கோவிந்தராஜன், எல்.ஆர்.ஈஸ்வரி
    பாடல்: V. சீதாராமன்


    பியூடிபுள்.. மார்வெலஸ்.. எக்செலன்ட்..


    பியூடிபுள்.. மார்வெலஸ்.. எக்செலன்ட்..
    வெரி வெரி எக்செலன்ட்
    நீ பிறந்திருக்க வேண்டியது இங்கிலேன்ட்

    பியூடிபுள்.. மார்வெலஸ்.. எக்செலன்ட்..
    வெரி வெரி எக்செலன்ட்
    நாம் பிறந்திருக்க வேண்டியது இங்கிலேன்ட்

    இளமைப் பூங்கா அள்ளித் தந்த நானும் ஒரு பெண்
    நீ தட்டிக் கழித்த பேர்களிலே நான் ஆயிரத்தில் ஒருவன்
    இன்பக் கடலில் நீந்திட வந்த படகோட்டி
    இனி என்றும் வாழ்வில் நீயே  எனக்கு வழிகாட்டி

    பியூடிபுள்.... எக்செலன்ட்..

    கல்யாணம் என்னும் செரிமனி - அது
    காதலர்க்கு தரும் கம்பெனி
    குழந்தை குட்டிகள் டூ மெனி
    பெறக்கூடாது அம்மணி
    அம்மணி...அம்மணி..

    பியூடிபுள்.. பியூடிபுள்.
    மார்வெலஸ்.. மார்வெலஸ்..
    எக்செலன்ட்..
    வெரி வெரி எக்செலன்ட்
    நீ பிறந்திருக்க வேண்டியது இங்கிலேன்ட்

    டாக்ஸி மீட்டரைப் போல ஓடுது
    இருவர் உள்ளம்
    அதை தடுத்து நிறுத்தக் கட்டிடுவோம்
    நாம் நெஞ்சில் ஓர் ஆலயம் ..
    நெஞ்சில் ஓர் ஆலயம்...நெஞ்சில் ஓர் ஆலயம்

    வடிகட்டி உன்னை தேர்ந்தெடுத்து 
    நான் போட்டேன் பூமாலை
    இளமங்கை உனக்கு என்னை ஏனோ
    காதலிக்க நேரமில்லை..
    காதலிக்க நேரமில்லை 



    https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1177959238902467/

    Right click on the images and open in a new tab. Zoom in for clarity.



    Friday, May 20, 2016

    MANRAM VANDHA - MOUNA RAGAM




    படம்: மௌன ராகம்
    குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
    இசை: இளையராஜா
    பாடல்: வாலி

    மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
    நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு
    வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
    பூபாளமே... கூடாதென்னும்... வானம் உண்டோ சொல்..

    மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
    நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே

    தாமரை மேலே நீர்த்துளி போல்...
    தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
    நண்பர்கள் போலே வாழ்வதற்கு...
    மாலையும் மேளமும் தேவையென்ன
    சொந்தங்களே இல்லாமல் பந்த பாசம் கொள்ளாமல்
    பூவே உன் வாழ்க்கை தான் என்ன... சொல்

    மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
    நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே

    மேடையைப் போலே வாழ்க்கை அல்ல
    நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
    ஓடையைப் போலே உறவும் அல்ல
    பாதைகள் மாறியே பயணம் செல்ல
    விண்ணோடு தான் உலாவும் வெள்ளி வண்ண நிலாவும்
    என்னோடு நீ வந்தால் என்ன.... வா

    மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
    நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே
    தொட்டவுடன் சுட்டதென்ன கட்டழகு
    வட்ட நிலவோ கண்ணே என் கண்ணே
    பூபாளமே கூடாதென்னும் வானம் உண்டோ சொல்
    மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர
    நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே


    SIRIPPEN SIRIPPEN - CHINNANJIRU ULAGAM


    படம்: சின்னஞ்சிறு உலகம்
    குரல்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடல்: வாலி 

    சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
    மூச்சும் பேச்சும் உள்ளவரை
    நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
    நெஞ்சில் நினைவு நீங்கும் வரை
    சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
    மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
    நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
    நெஞ்சில் நினைவு நீங்கும் வரை
    அடி ஆயாயாயாய அக்கூ
    இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
    ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
    ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
    கடோசி மூச்சு நிக்கும் வரை
    இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
    ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
    ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
    கடோசி மூச்சு நிக்கும் வரை - என்
    கடோசி மூச்சு நிக்கும் வரை
    ஒரு பல்லவி என்பது நீயாக - அனு
    பல்லவி என்பது நானாக - மனம்
    சரணம் சரணம் என்றாக - இசை
    பாடிடுவோம் நாம் ஒன்றாக
    மலைக் காட்டுக்குள் ஊரணி நானாக - அதில்
    கவலை ஏத்தம் நீயாக - நல்ல
    நல்ல மானம் வெட்கம் வரப்பாக - நாம்
    வாழ்ந்து காட்டணும் பொறுப்பாக

    சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
    மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
    நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
    நெஞ்சில் நினைவு நீங்கும் வரை

    உன் கண்களில் பூத்தது அல்லிப்பூ - இரு
    கன்னத்தில் சேர்ந்தது ரோஜாப்பு உன்
    உள்ளத்தில் இருப்பது பூரிப்பு - இரு
    உதட்டில் இருப்பது புன்சிரிப்பு
    இது சினிமாக் காரங்க அளப்பு அதைப்
    படிச்சிட்டுத் தான் இந்த வர்ணிப்பு
    சினிமாக் காரங்க அளப்பு அதைப்
    படிச்சிட்டுத் தான் இந்த வர்ணிப்பு - சொந்த
    மூளைக்கு வேண்டும் ஒளப்பு - அது
    என்னைக்கும் நெரந்தரப் பொளப்பு

    சிரிப்பேன் சிரிப்பேன் சிரித்துக்கொண்டிருப்பேன்
    மூச்சும் பேச்சும் உள்ளவரை - உன்னை
    நினைப்பேன் நினைப்பேன் நினைத்துக்கொண்டிருப்பேன்
    நெஞ்சில் நினைவு நீங்கும் வரை
    இருப்பேன் இருப்பேன் இருந்துக்கிட்டிருப்பேன்
    ஒங்கிட்ட சிரிப்பு உள்ளவரை
    ரசிப்பேன் ரசிப்பேன் ரசிச்சிக்கிட்டிருப்பேன்
    கடோசி மூச்சு நிக்கும் வரை - என்
    கடோசி மூச்சு நிக்கும் வரை

    Wednesday, May 18, 2016

    AADAL PAADAL KAADHAL - VEETUKU VEEDU VASARPADI




    படம்: வீட்டுக்கு வீடு வாசற்படி
    இசை: ராஜன் நாகேந்திரா
    குரல்: எஸ்.ஜானகி
    பாடல்: கண்ணதாசன்

    ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
    ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
    நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம்
    இந்தக்  கொண்டாட்டம்  எப்போதும் உண்டாகட்டும்


    பகலினில் ஒருவகை நண்பன்
    இரவினில் ஒருவகை இன்பம்
    மடியிலே பூங்கொடியென
    சாயும் தெய்வ பந்தம்

    இலக்கியம் போலொரு குடும்பம்
    இலக்கணம் போலொரு கணவன்
    அதுவரை நம் ரகசியம்
    கனவில் தோன்றும் சொர்க்கம்


    ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
    ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது


    திருமணம் ஆனதும் எனது
    உடலும் உடைமையும் உனது
    அரசன் நீ  உன் அடிமை நான்
    எல்லாம் உந்தன் ஆணை

    கங்கையும் யமுனையும் சங்கம்
    சரஸ்வதி வருவாள் அங்கும்
    உறவிலே பூங்குழந்தைகள்
    ஆணும் பெண்ணும் தங்கம்


    ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
    ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
    நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம்
    இந்தக்  கொண்டாட்டம்  எப்போதும் உண்டாகட்டும்


    Rajan & Nagendra were brothers and were prolific composers in Kannada films. Rajan (born 1933) and Nagendrappa (1935- 2000) were born into a musically rich family. Even as children they astounded many trained musicians with their prodigious mastery- Nagendra would create magic on the Jalatharangam, while Rajan’s adroit playing of the violin was legendary. Nagendra made his debut as a singer in B.Vittalacharya’s Srinivasa Kalyana in 1951, and soon the brothers jointly composed music for their first film Sowbhagyalakshmi, followed by Chanchalakumari. From 1952 to 1992, they have adorned over 375 films in Kannada, Telugu, Tamil and Singhalese with their scintillating songs. Nagendra was a talented singer too, though he did not adequately exploit his singing prowess...

    MORE AT:
    http://ragasinfilmmusic.blogspot.in/2011/10/aadal-paadal-kadhal-enbadhu-veetukku.html

    KANNULA NIKKUDHU NENJULA SOKKUDHU - SOLAIKUYIL


    solai kuyil by veenailast

    படம்: சோலைக்குயில்
    குரல்: எஸ்.பி.பி.
    இசை: எம்.எஸ்.முராரி
    பாடல்: கண்மணி சுப்பு

    கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
    அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்

    கண்ணுல நிக்குது நெஞ்சுல சொக்குது மானே
    அத நெனச்சு நெனச்சு உலகம் மறந்து போனேன்
    மைவிழி மானுக்கும் ஆசை இருக்குது பாவம் 
    சொல்லட்டும் சேதிய மூடி மறைச்சென்ன லாபம் 
    அடி  தூது போக யாரு வேணும் நான் தான் நீ தான் 


    வானம் நீல வானம்
    இப்போ எந்தன் உள்ளங்கையில தான்
    ராகம் நூறு ராகம் 
    எல்லாம் உந்தன் கண்கள் தந்தது தான்
    காதல் காட்டும் ஜாலம்
    சொல்லச்சொல்ல பொங்கும் அற்புதமே
    வாழ்வில் ஏது சோகம்
    இங்கே அந்த சொர்க்கம் வந்திடுமே
    ஒன்னும் ஒன்னும் ரெண்டா
    ஒன்னுக்குள்ள ஒன்னா நிக்கணும்
    கண்ணுக்குள்ள கண்ண வைக்கணும்
    தாகம் உண்டாகும்
    சின்னப் பொண்ணு காதைக் கிள்ளணும்
    சின்னச்சின்ன சேதி சொல்லணும்
    கன்னம் ரெண்டும் கையில் அள்ளணும்
    தேகம் தள்ளாடும்

    மாலை நேரக் காத்து
    உன்னைத் தொட்டு என்னைத் தொட்டுடுச்சு
    போதை ஏறிப் போச்சு
    மெல்ல மெல்ல உள்ளம் கெட்டுடுச்சு
    வாசம் வீசும் பூவே
    என்னை எண்ணிப் பொட்டு வைக்கிறியே
    சேரும் நேரம் பார்த்து
    வெக்கப்பட்டு தள்ளி நிக்குறியே
    சித்தாரமே வந்தா என்ன
    அத்தாரத் தான் தொட்டா என்ன
    அச்சாரம் தான் தந்தா  என்ன
    நாளும் சந்தோசம்
    பித்தானதே அன்பே பைங்கிளி
    கொத்தாமலே விட்டா எப்படி
    சித்தாடையில் என்னைக் கட்டுடி
    மேளம் தை மாசம்

    https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1235698419795215/

    MANIDHAN NINAIPADHUNDU - AVAN THAAN MANIDHAN




    படம்: அவன் தான் மனிதன் 
    குரல்: டி.எம்.சௌந்தரராஜன் 
    இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
    பாடல்: கண்ணதாசன் 

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

    தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
    தந்தை தவறு செய்தார் தாயும் இடம் கொடுத்தாள்
    வந்து பிறந்து விட்டோம் வெறும் பந்தம் வளர்த்து விட்டோம்
    மனது துடிக்கின்றது மயக்கம் வருகின்றது
    அழுது லாபம் என்ன அவன் ஆட்சி நடக்கின்றது

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

    காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
    காட்டு மனமிருந்தால் கவலை வளர்ந்து விடும்
    கூட்டைத் திறந்து விட்டால் அந்தக் குருவி பறந்து விடும்
    காலில் விலங்கு இட்டோம் கடமை என அழைத்தோம்
    நாலு விலங்குகளில் தினம் நாட்டியமாடுகின்றோம்

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று

    விதியின் ரதங்களிலே நாம் விரைந்து பயணம் செய்தால்
    மதியும் மயங்குதடா சிறு மனமும் கலங்குதடா
    கொடுக்க எதுவுமில்லை என் குழப்பம் முடிந்ததடா
    கணக்கை முடித்து விட்டேன் ஒரு கவலை முடிந்ததடா

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று