https://en.wikipedia.org/wiki/Needhikku_Thalaivanangu
படம்: நீதிக்குத் தலை வணங்கு
குரல்: கே.ஜே.யேசுதாஸ் / எஸ்.வரலக்ஷ்மி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: புலமைப்பித்தன்
ஆண் குரல்: கே.ஜே.யேசுதாஸ்
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யா(ஆ)ராரோ வந்து பாராட்ட.. (இந்த)
எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும்
அன்னை வளர்ப்பதிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
தூக்க மருந்தினைப் போன்றவை
பெற்றவர் போற்றும் புகழுரைகள் -நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை
கற்றவர் கூறும் அறிவுரைகள் (இந்த)
ஆறு கரையில் அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம்
நல்ல நெறி கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை - நல்ல
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை (இந்த)
பெண் குரல்: எஸ்.வரலக்ஷ்மி
இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில்
தொட்டிலைக் கட்டி வைத்தேன்
அதில் பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன்
நான் ஆராரோ என்று தாலாட்ட
இன்னும் யாராரோ வந்து பாராட்ட.. (இந்த)
நின்று நிமிர்ந்து என் பிள்ளை நடக்கையில்
ராஜ நடை தோற்கும்
எழில் நீந்தும் உடலினை காணும் பொழுதினில்
சிற்பம் அதைக் கேட்கும்.. (இந்த)
No comments:
Post a Comment