திரைப்படம் :கிழக்கே ஒரு காதல் பாட்டு
பாடியவர்கள் : எஸ் பி பி சித்ரா
இசை: வித்யாசாகர்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
பெண்மகள் தங்க மேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்
பெண்மை ஒன்றுதான் தெய்வீஹம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
எத்தனை இரவு கனவு வந்தது
இன்று கண்டது பொய் இல்லை
பந்தி வைக்கவே ஆசை உள்ளது
பரம்பரை நாணம் விடவில்லை
கட்டிலில் மெத்தையில் இன்பமென்ற சொந்தம்
சேவல்கள் கூவியும் விலகிடாத பந்தம்
மரம் மீது பறவை ஆவோமா
சிறகோடு வானம் போவோமா
நீல வானில் பாடல் பாடி நிலவை தேடி போவோம்
கோடை காலம் போன பின்பு மீண்டும் மண்ணில் சேர்வோம்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
காதல் என்னுமோர் புதிய பள்ளியில் உந்தன் மாணவி ஆனேனே
காமன் என்பவன் நமது பள்ளியில் பாடம் கேட்கிறான் பெண்மானே
நீரிலே நீர்த்துளி சங்கமிக்கும் வேளை
ஆயிரம் பூவிடும் பெண்மை என்ற சாலை
நான் என்ற வார்த்தை முடியட்டுமே
நாம் என்ற வார்த்தை தொடங்கட்டுமே
மாரிகாலம் போன பின்பு பூமி எங்கும் பூக்கள்
எந்தன் வாழ்வில் காண வேண்டும் ஈரமான நாட்கள்
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
பெண்மகள் தங்க மேனி சந்தனம்
தந்தேன் உந்தன் சீதனம்
பெண்மை ஒன்றுதான் தெய்வீஹம்
ஆ ஆ ஆ ஹா
ராகம் தாளம் இருவரின் தேகம் ஆகும்
இது ஒரு காமன் கீதம் இன்ப மயம்
No comments:
Post a Comment