Monday, May 30, 2016

THENRALUKKU ENRUM VAYADHU - PAYANAM

படம்: பயணம்
குரல்: பாலு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
வருடம்: 1976

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?
தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

வெள்ளித் தேரில் உள்ள சிலைக்கு என்னாள்  திருநாளோ?
மின்னல் மேனி மேகக் குழலாள் தன்னை அறிவாளோ?
வெள்ளித்  தேரில் உள்ள சிலைக்கு என்னால் திருநாளோ?
மின்னல் மேனி மேகக் குழலாள் தன்னை அறிவாளோ?
பால் வண்ணப்  பூமுல்லை பார்த்தால் போதாதோ?
பாலைவனத்தில் காவிரி ஆறு பைரவி பாடாதோ?

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

கம்பன் வந்தால் காவியம் பாட கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லையடி
தத்தித் தாவும் சித்திர முத்துச் சிப்பியில் விளையாடி
தழுவப்  போகும் தலைவன் யாரோ காதல் உறவாடி

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
பன்னீர் சொம்பு முன்னால் நின்று வாவென்றது
பட்டுச் சேலை கட்டும் சோலை வாடுது கண்பட்டு
பன்னீர் சொம்பு முன்னால் நின்று வாவென்றது
எத்தனை சொல்லி இத்தனை அழகை  நான் பாடுவேன்
இன்பத்  தமிழில் உள்ளதையெல்லாம் அள்ளித்  தருகின்றேன்.

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?
செவ்வானத்தின் வண்ண நிலாவும் சின்னவள்தான் அன்றோ?

தென்றலுக்கு என்றும் வயது பதினாறே அன்றோ?

No comments:

Post a Comment