Wednesday, May 18, 2016

AADAL PAADAL KAADHAL - VEETUKU VEEDU VASARPADI




படம்: வீட்டுக்கு வீடு வாசற்படி
இசை: ராஜன் நாகேந்திரா
குரல்: எஸ்.ஜானகி
பாடல்: கண்ணதாசன்

ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம்
இந்தக்  கொண்டாட்டம்  எப்போதும் உண்டாகட்டும்


பகலினில் ஒருவகை நண்பன்
இரவினில் ஒருவகை இன்பம்
மடியிலே பூங்கொடியென
சாயும் தெய்வ பந்தம்

இலக்கியம் போலொரு குடும்பம்
இலக்கணம் போலொரு கணவன்
அதுவரை நம் ரகசியம்
கனவில் தோன்றும் சொர்க்கம்


ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது


திருமணம் ஆனதும் எனது
உடலும் உடைமையும் உனது
அரசன் நீ  உன் அடிமை நான்
எல்லாம் உந்தன் ஆணை

கங்கையும் யமுனையும் சங்கம்
சரஸ்வதி வருவாள் அங்கும்
உறவிலே பூங்குழந்தைகள்
ஆணும் பெண்ணும் தங்கம்


ஆடல் பாடல் காதல் என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல் செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம் இன்று வெள்ளோட்டம்
இந்தக்  கொண்டாட்டம்  எப்போதும் உண்டாகட்டும்


Rajan & Nagendra were brothers and were prolific composers in Kannada films. Rajan (born 1933) and Nagendrappa (1935- 2000) were born into a musically rich family. Even as children they astounded many trained musicians with their prodigious mastery- Nagendra would create magic on the Jalatharangam, while Rajan’s adroit playing of the violin was legendary. Nagendra made his debut as a singer in B.Vittalacharya’s Srinivasa Kalyana in 1951, and soon the brothers jointly composed music for their first film Sowbhagyalakshmi, followed by Chanchalakumari. From 1952 to 1992, they have adorned over 375 films in Kannada, Telugu, Tamil and Singhalese with their scintillating songs. Nagendra was a talented singer too, though he did not adequately exploit his singing prowess...

MORE AT:
http://ragasinfilmmusic.blogspot.in/2011/10/aadal-paadal-kadhal-enbadhu-veetukku.html

No comments:

Post a Comment