Tuesday, May 17, 2016

PADHINETTU VAYADHU ILAMOTTU MANADHU - SOORIYAN - SPB SJ



FILM : SOORIYAN
MUSIC : DEVA
SINGERS : SPB SJ

பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட
கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊறாதா
சின்ன பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட

மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு
மாணிக்கத் தேரு மணிமுத்து ஆறு
போதும் போதும் நீ ஒதுங்கு
அந்த பாய போட்டுத் தான் உறங்கு
நான் விட மாட்டேன் தூண்டில போட்டேன்
காலம்  தோறும் நீ எனக்கு ஐயோ
இது கால தேவனின் கணக்கு
கூசுது உடம்பு குலுங்குது நரம்பு
நீ என்ன உரசாதே
கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு
நீ என்ன விலகாதே
ராத்திரி நமக்கு முதல் ராத்திரி
பால் பழம் கொண்ட பாத்திரம்
பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா

சும்மா நின்னா மாமன கண்டு தலையாண சிரிக்காதா
சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமர வெடிக்காதா

மாங்கனிச் சாரும் செவ்விள நீரும்
மாங்கனிச் சாரும் செவ்விள நீரும்
மேலும் கீழும் தான் இனிக்க
அத மீண்டும் மீண்டும் நீ எடுக்க
மூக்குத்தி பூவே மோக நிலாவே
தேனை வாரி நீ தெளிக்க
அதில் தாகம் தீர நான் குளிக்க
மன்மத பாணம் பாயுற நேரம் வீரத்த நெல நாட்டு ஓ
மாலையில் தொடங்கி காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
தீண்டினாள் எனைத் தூண்டினாள்
அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்

மஞ்சத் தாலி முடிஞ்ச பின்னாலே மாப்பிள்ளை நீ ஆச்சு
வெக்கம் அச்சம்  இவைகளுக்கு இன்று விடுமுறை நாள் ஆச்சு

No comments:

Post a Comment