Thursday, August 11, 2016

MAALAIYIL VARUM MEGANGAL - AVAL YETRIYA DHEEPANGAL - SPB SJ


 FILM: AVAL YETRIYA DHEEPANGAL
MUSIC: DR.BHANUMATHI RAMAKRISHNA
SINGERS: SPB SJ

 மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்

காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்

அழகான தோரணங்கள் வான்மின்னலோ
அலங்கார தீபங்கள் தான் விண்மீன்களோ
அழகான தோரணங்கள் வான்மின்னலோ
அலங்கார தீபங்கள் தான் விண்மீன்களோ
இந்திரன் சபை திருமண அறை
மாலை மணம் மையலை தரும்
எங்கெங்கும் மலர்மாரி பொழிகின்றது

மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்

மண மேளம் கார்முகிலின் இடி ஓசையோ
பாடும் இன்ப நாதஸ்வரம் குயிலோசையோ
மண மேளம் கார்முகிலின் இடி ஓசையோ
பாடும் இன்ப நாதஸ்வரம் குயிலோசையோ
மஞ்சளின் மணம் என் மனதில் வரும்
குங்கும நிறம் என் மார்பினில் விழும்
பேரின்ப சொர்க்கத்தில் நாம் வாழ்கிறோம்

காதல் எனும் பூந்தென்றல் தேரை கண்ணில் நான் கண்டேன்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
மாலையில் வரும் மேகங்கள் போலே ஆடும் உள்ளங்கள்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்
வான்வெளியில் நாம் ஒன்றினில் ஒன்றாய் வரவும் நான் கண்டேன்
அதில் வளரும் சுக நினைவில் நான் தேடும் இன்பங்கள்

KAADHAL SILAIGAL KAAVIYA KALAIGAL - AVAL YETRIYA DHEEPANGAL - SPB




FILM: AVAL YETRIYA DHEEPANGAL
MUSIC: BHANUMATHI RAMAKRISHNA
SINGER: SPB
LYRICS: KANNADAASAN

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம் இங்கே
அழியாத நினைவுச்சின்னம்
காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம் இங்கே
அழியாத நினைவுச்சின்னம்

எங்கோ பிறந்தோம் வாலிபம் மலர்ந்தோம்
இங்கே சேர்ந்திருந்தோம்
ஏற்றிய தீபம் காற்றடித்தாலும்
நெஞ்சில் வாழ்ந்திருப்போம்
என்றும் நிலையாய் சேர்ந்திருப்போம்

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம் இங்கே
அழியாத நினைவுச்சின்னம்

ஆசை பிரிவு ஆயிரம் நிகழும்
பாசம் தொடர்கதையே
வாசனை மாறும் பூவும் வாடும்
மீண்டும் தோன்றுவதே
என்றும் வேண்டும் வரமும் இதே

காதல் சிலைகள் காவிய கலைகள்
காலம் காணும் வண்ணம் இங்கே
அழியாத நினைவுச்சின்னம்







VILAKKETRI VAITHAAL VERENNA KANNE - KARPOORA DHEEPAM - SPB SJ



FILM: KARPOORA DHEEPAM
MUSIC: GANGAI AMARAN
SINGERS: SPB SJ

விளக்கேற்றி வைத்தால் வேரென்ன கண்ணே
விவரம் புரியாததா
விளக்கேற்றி வைத்தால் வேரென்ன கண்ணே
விவரம் புரியாததா
ஒரு கோபம் என்ன சிறு தாபமென்ன
புது மாப்பிள்ளை போல் கூப்பிடுறேன்
கூட வா கூடவா

விளக்கேற்றி வைத்தால் வேரென்ன கண்ணா
நான்தான் அறியாததா
இதில் கோபம் என்ன சிறு தாபமென்ன
நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்
ஓடவா உருகவா
விளக்கேற்றி வைத்தால் வேரென்ன கண்ணே
விவரம் புரியாததா

ஆடை மேலாடை கலைய
நல்ல வாடை பூவாடை விளைய
ஓடை நீரோடை இருக்க
அதில் ஓடம் பொன்னோடம் மிதக்க
விடியும் பொழுதில் கரையோரம் ஒதுங்கும்
இருட்டில் மீண்டும் விளையாட தொடங்கும்
முதலும் முடிவும் இதில் இன்றுமில்லை என்றுமில்லை

விளக்கேற்றி வைத்தால் வேரென்ன கண்ணா
நான்தான் அறியாததா

போதும் பூமேனி நோகும்
வந்து மோத ஏதேதோ ஆகும்
நாணம் கூடாதே மானே
மதன் பாணம் பாயாதோ தானே
பிறந்தேன் வளர்ந்தேன் உனக்காக நானே
பிழிந்தால் வழிந்தாய் குறையாத தேனே
வளைந்தேன் நெளிந்தேன் எனை மீண்டும் மீண்டும் தூண்ட தூண்ட

விளக்கேற்றி வைத்தால் வேரென்ன கண்ணே
விவரம் புரியாததா
விளக்கேற்றி வைத்தால் வேரென்ன கண்ணா
நான்தான் அறியாததா
இதில் கோபம் என்ன சிறு தாபமென்ன
நான் தொட்டிலுக்கும் கட்டிலுக்கும்
ஓடவா உருகவா
விளக்கேற்றி வைத்தால் வேரென்ன கண்ணே
விவரம் புரியாததா

விளக்கேற்றி வைத்தால் வேரென்ன












Saturday, August 6, 2016

EN ARUMAI KADHALIKKU - ELLORUM INNATTU MANNAR



படம்: எல்லோரும் இந்நாட்டு மன்னர்
குரல்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: டி.ஜி. லிங்கப்பா
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்


என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே - நீ
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே?


கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கண் விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே - உன்னைக்
காவல் காக்கும் தோழியரோ வெண்ணிலாவே?
கன்னத்தில் காயமென்ன வெண்ணிலாவே - உன்
காதலன் தான் கிள்ளியதோ வெண்ணிலாவே?

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கள்ளமில்லா என் இதயம் வெண்ணிலாவே - ஒரு
கள்ளியிடம் இருக்குதடி வெண்ணிலாவே - அந்த
வல்லி தனை நீயறிவாய் வெண்ணிலாவே - அதை
வாங்கி வந்து தந்து விடு வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே
கெஞ்சினால் தர மாட்டாள் வெண்ணிலாவே - நீ
கேட்காமல் பறித்து விடு வெண்ணிலாவே
அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே - இது
அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே

என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே நீ
இளையவளா மூத்தவளா
இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே
என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே

NAAN NANRI SOLVEN - KUZHANDHAIYUM DEIVAMUM



படம்:குழந்தையும் தெய்வமும்
இசை: எம்.எஸ்.வி.
குரல்: எம்.எஸ்.வி, பி.சுசீலா
பாடல்: வாலி

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச்  சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன

ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச்  சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன

ஒரு தங்கச் சிலை என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய்
இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
அன்று  மறு நாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய்

நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு

Thursday, August 4, 2016

RASIGANTHAAN ENAKKU NEE RASIGAITHAAN UNAKKU NAAN - RASIGAN - SPB SJ



FILM : RASIGAN
MUSIC: V. KUMAR
SINGERS: SPB SJ

ரசிகன் தான் எனக்கு நீ
ரசிகை தான் உனக்கு நான்
சித்திரம் வரையும் சிந்தனை கலைஞன்
அழகை பாராட்டி தல்லாட்டும் இளைஞன்
ரசிகன் தான் உனக்கு நான்
ரசிகை தான் எனக்கு நீ

மன்னவனே தமிழ் மண்ணில் வளர்ந்த
பண்பாடு உன்னோடு  வேண்டும்
பொன்மனம் போல் என் உள்ளம் இருக்க
தோற்றங்கள் வேறாக தோன்றும்
உள்ளம்போலே வண்ணம் இல்லை கண்ணா
உன்னை அன்றி நெஞ்சில் வேறு பெண்ணா
உள்ளம்போலே வண்ணம் இல்லை கண்ணா
உன்னை அன்றி நெஞ்சில் வேறு பெண்ணா
நூறு எண்ணங்கள் உண்டாகும் உன்னால்

ரசிகன் தான் உனக்கு நான்
ரசிகை தான் எனக்கு நீ

கொஞ்சம் நெருங்கு ஒரு சொர்கம் தெரியும்
கோலங்கள் நாம் போடும் பொழுது
மெல்ல தழுவு என் மேனி சிலிர்க்கும்
மேலாடை பந்தாடும் வயது
கொஞ்சம் நெருங்கு ஒரு சொர்கம் தெரியும்
கோலங்கள் நாம் போடும் பொழுது
மெல்ல தழுவு என் மேனி சிலிர்க்கும்
மேலாடை பந்தாடும் வயது
அந்த சுகம் வந்ததம்மா இன்று
அந்தப்புரம் என்று ஒன்று உண்டு
வண்டு வந்தாடதான் இந்த செண்டு

ரசிகன் தான் எனக்கு நீ
ரசிகை தான் உனக்கு நான்
ரசிகன் தான் உனக்கு நான்
ரசிகை தான் எனக்கு நீ