படம்: டாக்சி டிரைவர்
இசை: எம்.எஸ்.வி
குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
பாடல்: கண்ணதாசன்
சுகமான சிந்தனையில்
இதமான உறவோடு
சொர்கங்கள் வருகின்றன
மனம்போல மாங்கல்யம்
இனி வேறு எது வேண்டும்
மாலைகள் மணக்கின்றன
மண மாலைகள் மணக்கின்றன
அழகான திருமேனி
விளையாடும் மைதானம்
இனி எந்தன் மார்பல்லவோ
அதைப் போன்ற மணிமேடை
உலகெங்கும் கிடையாது
இது எந்தன் சுகமல்லவோ
மைதீட்டும் நயனங்கள்
மழைமேக நடனங்கள்
விளையாடும் இடமல்லவோ
மலர்மஞ்சம் நமதல்லவோ
ஆகாயம் நீ பார்க்க
உன் சாயல் நான் பார்க்க
ஆனந்தம் விளையாடுது
அமுதான குளிர்காலம்
அதற்கேற்ற சுக ராகம்
அதையெண்ணி மனம் பாடுது
இரண்டாக இல்லாமல்
ஒன்றாகச் சில நேரம்
இருக்கின்ற நிலையல்லவோ
இது இன்பத்தின் கலையல்லவோ
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1230649383633452/
No comments:
Post a Comment