Thursday, May 12, 2016

ANGEY VARUVADHU YAARO - NETRU INDRU NAALAI - SPB SJ


திரைப்படம் : நேற்று இன்று நாளை
பாடியவர்கள் : எஸ் பி பி எஸ் ஜானகி
இசை : எம் எஸ் விஸ்வநாதன்
வரிகள் அவினாசி மணி

அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ
கோடிக் கனவுகள் ஆடி வருகுது கோயில் சிலையொன்று ஓடி வருகுது
பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப் பாதி தேடி வருகுது
வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ

பேசிப் பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ
பேசிப் பார்ப்பதால் அந்த ஆசை தீருமோ
இதழ் ஓசை கேட்பதால் வேறு பாஷை வேண்டுமோ
ஆ..நேரம் இந்த நேரம் போனால் நெஞ்சம் ஆறுமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப் பாதி தேடி வருகுது

வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
வசந்தத்தின் தேரோ

கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
கட்டில் தேடுது இதழ் காயம் ஆனது
நீ தொட்டால் ஆறுது என் தூக்கம் போனது
தேவை இன்னும் தேவை என்று தேடிப் பார்க்குமோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது பாதியைப் பாதி தேடி வருகுது
வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ

வாங்கிக் கொடுக்கவோ உன்னைத் தாங்கி களிக்கவோ
வாங்கிக் கொடுக்கவோ உன்னைத் தாங்கி களிக்கவோ
மணி வாயும் சிவக்கவோ அதில் நியாயம் படிக்கவோ
ஏதோ இன்பம் ஏதோ இன்பம் இன்னும் பார்க்கவோ
பாடும் கவிதையின் ஏடு வருகுது
பாதியைப் பாதி தேடி வருகுது
வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ

அங்கே வருவது யாரோ அது வசந்தத்தின் தேரோ
அங்கே வருவது யாரோ அது வள்ளலின் தேரோ
வள்ளலின் தேரோ


No comments:

Post a Comment