Wednesday, May 11, 2016

ADA ENNADA POLLAADHA VAAZHKKAI - THAPPUTHTHAALANGAL - SPB


படம் : தப்புத்தாளங்கள்
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர் : எஸ் பி பி
வரிகள் கண்ணதாசன்

அட என்னடா பொல்லாத வாழ்க்க
ஹா என்னடா பொல்லத வாழ்க்க
யாரை நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா
இதுக்கு போயி அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போயி அலட்டிக்கலாமா
அட என்னடா பொல்லாத வாழ்க்க
என்னடா பொல்லாத வாழ்க்க

காடாறு மாதம் அப்பா நாடாறு மாதம் அப்பா
ராஜாக்கள் கதை இது தான்ப்பா
நம்ப நிலை தேவலையப்பா
முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு
இல்லே ஓடுற வரைக்கும் ஓடு
இதுக்கு போயி அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போயி அலட்டிக்கலாமா
என்னடா பொல்லாத வாழ்க்க
அட என்னடா பொல்லாத வாழ்க்க

படிக்க ஆச வச்சேன் முடியல ஹாஹான்
உழைச்சு பார்த்துப்புட்டேன் விடியலே
படிக்க ஆசை வச்சேன் முடியல ஹாஹான்
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
பொழைக்க வேற வழி தெரியலே
நடந்தேன் நான் நெனச்ச வழியிலே
இதுக்கு காரணம் தான் யாரு
படைச்ச சாமியப்போய் கேளு

இதுக்கு போயி அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போயி அலட்டிக்கலாமா
என்னடா பொல்லாத வாழ்க்க
அட என்னடா பொல்லாத வாழ்க்க

நான் செய்றேன் தப்புத்தண்டா
வேற வழி ஏதும் உண்டா
ஊருக்குள்ள யோக்யனக் கண்டா
ஓடிப்போயி என்னிடம் கொண்டா
கெடச்சா கெடைக்கிற வரைக்கும் பாரு
பிடிச்சா திருட்டுப்பட்டம் நூறு

இதுக்கு போயி அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போயி அலட்டிக்கலாமா
என்னடா பொல்லாத வாழ்க்க
அட என்னடா பொல்லாத வாழ்க்க
யாரை நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா
இதுக்கு போயி அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போயி அலட்டிக்கலாமா








No comments:

Post a Comment