படம்: சரணாலயம் (1983)
இசை: எம்.எஸ்.வி
பாடல்: வாலி
குரல்: மலேசியா வாசுதேவன்
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
தஞ்சை கோயில் ரதம் போல நடை அழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
கட்டழகுப் பெட்டகமோ கண் நிறைந்த சித்திரமோ
கால காலம் இங்கு எனக்காக
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
வானம் வளைக்காத கடற்கரையோ
இது வண்டு துளைக்காத பழக்குலையோ
இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ
கண்ணன் வந்து துயிலாத ஆலிலையோ
புத்தம் புது புத்தகமோ
புன்னகைக்கும் ரத்தினமோ
தேவ தேவி இவள் எனக்காக
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ
ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ
பஞ்சணையில் கை அணைக்க
பையப் பைய மெய் அணைக்க
தாவி தாவி வரும் கலைமானோ
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை