பாடல்: பாரதிதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: பி.சுசீலா
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ!
(பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1 : 95)
பகிர்ந்து உதவியதற்கு நன்றிகள் பல👍
ReplyDeletevazhga tamizh !! valarha bharadham !!
ReplyDeleteதமிழ் எங்கள் பிறவிக்குத்தாய்
ReplyDeleteஆம் நம் உயிருக்கு தாய்
DeleteVazhga Thamizh
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமிகவும் அழகாக எழுதி அமைக்கப் பட்டுள்ளது
ReplyDeleteநன்றி
Enna ragam pls
ReplyDeleteBehag ragam.
ReplyDeleteஇனியசொற்கள் காதுக்குமட்டுமா நெஞ்சுக்கும் இனிமை தரும் .
ReplyDeleteமிகவும் அழகான பாடல்
ReplyDeleteEmail pushchair song
ReplyDeletePudicha
ReplyDeleteதமிழ் எங்கள் இனத்தை காக்கும்
ReplyDeleteஅருமருந்நு
மிகவும் அருமையான வரிகள்
ReplyDeleteSuper
ReplyDeleteதமிழ் எங்கள் உயர்வுக்கு வான் 👌
ReplyDeleteஇதற்கு மேல் வேறென்ன உவமைச் சொல்வது...
அருமை
ReplyDeleteEvery tamilan should sing this song
ReplyDelete