திரைப்படம் : ஒரு இந்திய கனவு
பாடியவர்கள் : எஸ் பி பி வாணி ஜெயராம்
இசை : எம் எஸ் வி
அனாமிகா அனாமிகா அனாமிகா
என் பேரே எனக்கு மறந்துபோன இந்த வனாந்தரத்தில்
என்னை பெயர் சொல்லி அழைத்தது யார்
நீயா நீயா
என்னை ஒரு மின்னல்கீற்று என்றல்லவா நினைத்திருந்தேன்
நீ எப்படி அதில் நிரந்தர பாய் முடைந்தாய்
எனது யாத்திரையில் எல்லா மனிதர்களும்
எல்லை கற்களாய் இருக்க
நீ மட்டும் எனக்கு பாதை ஆகினாய்...எப்படி
பருவ காலங்களால் புஷ்பிக்காத என் தோட்டம்
உன் பார்வைகளால் புஷ்பித்ததே
தீ விழுந்தாலும் உருகாத என் நெஞ்சில்
ஒரு பூ விழுந்தபோது உருகியதேன்
இந்த காதல் மேகம்தான் மனம் என்னும் எரிமலையில்
மழை சிந்தி மழை சிந்தி
அதில் உல்லாச வனங்களை உற்பத்தி செய்யும் ..ம்ம்
இதய ரோஜாச்செடியில் இந்த ஒற்றை பூ பூத்துவிட்டால்
அத்தனை முட்களும் உதிர்ந்து போகின்றன
வாலிபம் ஏந்திபார்க்கும் திருவோடும் இதுதான்
வாலிபம் சூடிப்பார்க்கும் கிரீடமும் இதுதான்
முதலில் சப்தங்களுக்கு அர்த்தம் சரியாய் விளங்கவில்லை
இப்போதோ மௌனத்திற்கும்கூட உரை எழுத முடிகிறது
என் கண்கள் உன்னிடம் காதல் பிச்சை கேட்கும் அமுதசுரபிகள்
அமுத சுரபிகள் பட்டினி கிடக்கலாமா
உன் பார்வையை பிச்சை இடு
ம்ம் பிச்சை இடு
great find.. thanks shri.
ReplyDelete