Thursday, March 17, 2016

ABIRAAMIYE UMAAMAHESHWARI - YAAR - SPB



MOVIE : YAAR
MUSIC : V.S. NARASIMAN
LYRICS : VAALI
SINGER : SPB

abiraamiyE umaamahEshwari
sivakaamiyE kalaajadaadhari
abiraamiyE umaamahEshwari
sivakaamiyE kalaajadaadhari
saamavEdham Odhum neelagaNdan
vaamabaagam vaazhum eeshwari
kaamakOdi peedam aaLugindra
naamam kOdi pOtrum shankari
dheivasakthi maanilaththil vaazha
varuga varuga vandhu varamaruLE

abiraamiyE umaamahEshwari
sivakaamiyE kalaajadaadhari

poongaatru thaalaattum maangaattil
neengaadha aangaari neeyE
paambOdu vEmbaadum vErkkaatil
aruLaatchi purigindra thaayE
naangu vEdham panjabhoodham aaru kaalangaL
yEzhulOgam ettuthikkum yEththum paadhangaL
dhEvar thammOdu moovarum idaividaadhu
paNiyum karuNaikkadalE
paavam mElOngumO dharumam keezhaagumO
bhoomi thadumaaravE pEigal nadamaadumO
vinaiyil viLaiyum pagaiyum thuyarum podipada
abiraamiyE umaamahEshwari
sivakaamiyE kalaajadaadhari

kaanjinagar vaazhum kaamaatchchiyE
kaiyil kiLi Endhum meenaatchchiyE
Eazhu unagu unadhu arasaatchchiyE
Enna nadandhaalum nee saatchchiyE
Moodanukkum vaazhvaLiththa thaayE
Moolamaana aadhisakthi neeyE
Mahishaasuram seidhu vinai theerththavaL
murugEsanin kaiyyil vEl sErththavaL
abiraamibattarkku nool ththandhavaL
sambandhan azumbOdhu paal thandhavaL
vENdum varam thara dhEvi thirumugam
meeNdum malarndhidumO
eena iruLidai gyaana oLi vara
pozhudhu pularndhidumO
bhatrakaaLi varugha rudhra kaaLi varugha
simhamEni varugha seetramOdu varugha
sooli neeli ammaa thaayE jagam nee

திரைபடம் : யார்
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமண்யம்
இசை : வி.எஸ். நரசிம்மன்
வரிகள் : வாலி

அபிராமியே உமாமஹேஷ்வரி
சிவகாமியே கலாஜடாதரி
அபிராமியே உமாமஹேஷ்வரி
சிவகாமியே கலாஜடாதரி
சாமவேதம் ஓதும் நீலகண்டன்
வாமபாகம் வாழும் ஈஷ்வரி
காமகோடி பீடம் ஆளுகின்ற
நாமம் கோடி போற்றும் ஷங்கரி
தீயசக்தி பூந்தலத்தில் மாய
தெய்வ சக்தி மாநிலத்தில் வாழ
வருக வருக வந்து வரமருளே

அபிராமியே உமாமஹேஷ்வரி
சிவகாமியே கலாஜடாதரி

பூங்காற்று தாலாட்டும் மாங்காட்டில்
நீங்காத ஓங்காரி நீயே
பாம்போடு வேம்பாடும் வேற்காட்டில்
அருளாட்சி புரிகின்ற தாயே
நான்கு வேதம் பஞ்சபூதம் ஆறுகாலங்கள்
ஏழுலோகம் எட்டுதிக்கும் ஏத்தும் பாதங்கள்
தேவர் தம்மோடு மூவரும் இடைவிடாது
பணியும் கருணைக்கடலே
பாவம் மேலோங்குமோ தருமம் கீழாகுமோ
பூமி தடுமாறவே பேய்கள் நடமாடுமோ
வினையில் விளையும் பகையும் துயரும் பொடிபட
வருக வருக வந்து வரமருளே

அபிராமியே உமாமஹேஷ்வரி
சிவகாமியே கலாஜடாதரி

காஞ்சிநகர் வாழும் காமாட்சியே
கையில் கிளி ஏந்தும் மீனாட்சியே
ஏழு உலகுனது அரசாட்சியே
என்ன நடந்தாலும் நீ சாட்சியே
மூடனுக்கும் வாழ்வளித்த தாயே
மூலமான ஆதிசக்தி நீயே
மஹிஷாசுரன்  செய்த வினை தீர்த்தவள்
முருகேசனின் கையில் வேல் சேர்த்தவள்
அபிராமிபட்டர்க்கு நூல் தந்தவள்
சம்பந்தன் அழும்போது பால் தந்தவள்
வேண்டும் வரம் தர தேவி திருமுகம்
மீண்டும் மலர்ந்திடுமோ
ஈன இருளிடை ஞானஒளி வர
பொழுது புலர்ந்திடுமோ
பத்ரகாளி வருக ருத்ரகாளி வருக
சிம்மமேனி வருக சீற்றமோடு வருக
சூலி நீலி அம்மா தாயே ஜனனி..












No comments:

Post a Comment