இசை : வி. குமார்
பாடியவர்கள் : எஸ் பி பி வாணி ஜெயராம்
வரிகள் :
ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
நாளாக நாளாக ஆளாக ஆளாகநாணங்கள் கொண்டாடி நின்றாள்
ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
நாளாக நாளாக ஆளாக ஆளாக
நாணங்கள் கொண்டாடி நின்றாள்
முத்துமொழி மானே முக்கனியின் தேனே
முத்திரையும் நானே தந்தேனே
காதல் கலை தரும் நயம் எது எது என உனை
கேட்கும் பருவம் கனிய
காமன் ரதி பெரும் லயம் இது இது என மனம்
காலம் முழுதும் பயில
உன் பூங்கரம் கொஞ்ச என் போதைகள் மிஞ்ச
உன் பூங்கரம் கொஞ்ச என் போதைகள் மிஞ்ச
வண்ணமலர் மாலை வஞ்சி மகள் தோளை
பின்னுகின்ற வேளை வாராதோ
ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
வானின் முகில் தரும் மழை விழும் நிலம் குளிர் பெறும்
கோடை வெம்மை தணிய
வாழை மடல் எனும் உடல் மதன் விடும் கணை சுட
ஆசை நதியில் நனைய
கை நாடுது கிள்ள என் நாணங்கள் தள்ள
கை நாடுது கிள்ள என் நாணங்கள் தள்ள
தொட்ட சுகம் பாதி மற்ற சுகம் மீதி
கட்டிலிடும் தேதி வாராதோ
ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
நாளாக நாளாக ஆளாக ஆளாக
நாணங்கள் கொண்டாடி நின்றாள்
ராஜாத்தி ராஜாத்தி ரோஜாப்பூ ரோஜாப்பூ
பன்னீரில் நீராட வந்தாள்
rajathi rajathi rojapoo rojapoo - mangala nayagi
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=bnS1do7BVB0
ReplyDelete