படம்: தொட்டால் சுடும்
பாடல்: கண்ணதாசன்
இசை: சங்கர் கணேஷ்
ராமன் போல தோற்றம்
காமன் போல ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ
பரந்தாமன் இங்கே இல்லை
பாஞ்சாலி மானம் காக்க
பிறர் தாரம் பார்க்கும் பேரை
அவதாரம் செய்தே தீர்க்க
ராமன் போல தோற்றம்
காமன் போல ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ
கணவன் தான் பேசும் தெய்வம்
குடும்பம் தான் கோயிலே
இலக்கணம் போல வாழும்
இவளும் ஓர் சீதையே
மனையறம் இவள் வசம்
மஞ்சள் மாலை கொண்டாள்
குறள் சொன்ன வாழ்க்கை வேதம் போல்
இவள் வாழ்கிறாள்
குறள் சொன்ன வாழ்க்கை வேதம் போல்
இவள் வாழ்கிறாள்
ராமன் போல தோற்றம்
காமன் போல ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ
புருசன் ஓர் அரசனானால்
மனைவி தான் மந்திரி
தவறுகள் நேரும் போது
திருத்துவாள் பெண்மணி
குலமகள் இவளிடம்
பொங்கும் வீரம் உண்டு
பகை கண்டு பாயும் வேங்கை போல்
இவள் வாழ்கிறாள்
பகை கண்டு பாயும் வேங்கை போல்
இவள் வாழ்கிறாள்
ராமன் போல தோற்றம்
காமன் போல ஹஹ ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ
எவரையும் காதல்கொள்ளும்
இவள் மனம் வண்டு போல்
நிதம் ஒரு வண்டு வந்து
குலவிடும் செண்டு போல்
மனிதரில் பலவிதம்
இங்கும் நாய்கள் உண்டு
இரை தேடும் காக்கை கூட்டம் போல்
இவர் வாழ்கிறார்
இரை தேடும் காக்கை கூட்டம் போல்
இவர் வாழ்கிறார்
ராமன் போல தோற்றம்
காமன் போல ஆட்டம்
ராஜ போகமோ என்றும்
லீலா வினோதமோ
பரந்தாமன் இங்கே இல்லை
பாஞ்சாலி மானம் காக்க
பிறர் தாரம் பார்க்கும் பேரை
அவதாரம் செய்தே தீர்க்க
No comments:
Post a Comment