Tuesday, June 28, 2016

NEE VARUVAAI ENA NAAN IRUNDHEN - SUJATHA



படம்: சுஜாதா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
குரல்: கல்யாணி மேனன்
பாடல்: கண்ணதாசன்

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

அடி தேவி உந்தன் தோழி ஒரு தூதானாள் இன்று
இரவெங்கே உறவெங்கே உனைக் காண்பேனோ என்றும்

அமுத நதியில் என்னை தினமும் நனையவிட்டு
இதழை  மறைத்துக் கொண்ட இளமை அழகுச் சிட்டு
தனிமை மயக்கம் தனை விரைவில் தணிப்பதற்கு
வாராயோ...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

ஒரு மேடை ஒரு தோகை அது ஆடாதோ கண்ணே
குழல் மேகம் தரும் ராகம் அது நாடாதோ என்னை

சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல
வாராயோ...

நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நானறியேன்

No comments:

Post a Comment