படம் : நீ ஒரு மகராணி
இசை: சங்கர் கணேஷ்
குரல் : எஸ்.பி.பி., சுசீலா
பாடல் : வாலி
அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ
(அவன்)
மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ
(அவள்)
Tiruchendurai Ramamurthy Sankar writes:
சங்கர்-கணேஷ்
தேவர் - கவிஞர் இணைந்து வழங்கிய ஜோடி. வேதா அளவிற்கு தூற்றப்படாவிட்டாலும் சற்றே அலட்சியமாகக் கருதப்பட்ட இரட்டையர்கள். எம்.எஸ்.வி -இளையராஜா காலங்களுக்கு நடுவில் சிக்கினாலும் தமிழ்சினிமாவில் சங்கர்-கணேஷின் பங்கு 72-83 வரை முக்கியமானது. நண்பர் சரவணன் சொல்வதுபோல் இளையராஜா படம் பந்தாவாக சாந்தி, ஆனந்தில் வெளியாகும்போது இவர்களின் படங்கள் ஓரமாக காமதேனு, சித்ரா, ஓடியன், பாரகன் தியெட்டரில் சிக்கிவிட்டது விதி.
நீ ஒரு மகராணி (1976) காதலியாக நடிக்கவந்து மனைவியாக மாற வேண்டிய கி.மு காலத்துக் கதை. சுஜாதா, மாமனாராக தேங்காய் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு 1000ரூபாய்க்கு நடித்திருப்பார்கள். பட்டணத்தில் பூதம் படத்தில் டிரிம்மாக வந்து மனதைக் கொள்ளை கொண்ட அண்ணன் ஜெய் , பட்டணத்தைத் தொலத்திருப்பார். 11 மணி குர்லா லோக்கலில் வரும் குஜ்ஜு ஸ்டாக் ப்ரோக்கர்போல் சில காட்சிகளில் சஃபாரி என்ற கொடூரமான உடை வேறு. டைரக்டர் சொர்ணமும், திமுக ஆதரவு படங்களில் அமிர்தமும் ஜெய்யைக் கவிழ்த்தார்கள்.
மூன்று பாடல்கள். யேசுதாஸ்-சுசீலாவின் ," நீ ஒரு மகராணி". சுசீலாவின் " பல்லாண்டு காலம்" ( கணேஷின் ஹம்மிங்குடன்) RDB யின் ஆந்தி பட "தும் ஆகயே "பாட்டை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு கம்போஸ் செய்திருப்பார்கள். ( பாடல் காட்சியில் கிதார் வைத்துக்கொண்டு கணேஷ் வருவார்)
ஆனால் அந்த மூன்றாவது பாடல் , திரையில் பல்க்கான ஜெய் , சில்க்கான ஶ்ரீப்ரியாவுடன் ! SPB-PS இன் அடுத்த மாக்னம் ஓபஸ். எம்.எஸ்.வி சாயலில் அவசரமாக ஓடும் டியூன். கொஞ்சும் எஸ்.பி.பி. கூட வரும் வயலின் போல் சுசீலா.
இரண்டு சரணங்களும் வேறு அமைப்பில். டியூன் ரோலர் கோஸ்டரில். இதயவீணை படத்தில் வரும் பொன் அந்தி மாலைப் பொழுது ( அதுவும் சங்கர்-கணேஷ்! ) போல சரணத்தின் 6 வரிகளுக்கும் 3 ட்யூன். ஹாரிஸ் ஜெயராஜ் இதை வைத்து ஒரு படமே செய்திருப்பார்.
சங்கர்-கணேஷ் என்றால் ஆடு வரும்போது டொடொங்-டொங், டொடொங்-டொங், மட்டுமல்ல; இது போன்ற அமர்க்களங்களும் உண்டு....கீபோர்ட் வாசிக்கும் என் மகனுக்கு வாசிக்க மிகவும் பிடித்த பாடல்.
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1244145172283873/
No comments:
Post a Comment