படம்: இன்று நீ நாளை நான்
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பி.
பாடல்: கங்கை அமரன்
லல்லலா லாலல்லா
லாலல்லா லல்ல லல்ல லா.
ஓ .. அது.. அப்படி நட ராசா
அது அது அது..
காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின் சாலையிலே
காலு வலி தெரியாம நானும்
பாட்டு பாடிகிட்டு வாரேன்
மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணத் தேடிகிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாரேன்
காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின் சாலையிலே
காலு வலி தெரியாம நானும்
பாட்டு பாடிகிட்டு வாரேன்
ஏன்டா பழனியப்பா.. எரும மாடு மாதிரி
வளர்ந்திருக்கிறியே உனக்கெப்ப கண்ணாலம் ?
எனக்கா பாட்டி,,
விக்கும் வெலவாசியில
ஏதுமில்ல ஓசியிலே
விக்கும் வெலவாசியில.. ஆமா
ஏதுமில்ல ஓசியிலே
வேல மட்டும் நல்லாச் செய்வேன்
வேண்டிய மட்டும் நல்லாத் திம்பேன்..
சம்பளத்துக்கேத்தபடி சம்சாரத்த தேடிக்கணும்
சம்பளமில்ல.. கிம்பளமில்ல
பொஞ்சாதியும் தேவையில்ல..
காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின் சாலையிலே
காலு வலி தெரியாம நானும்..
பாட்டு பாடி...
அண்ணே அண்ணே ... அண்ணே அண்ணே
என்னண்ணே... கேட்டு மூடிட்டீங்க
டேய் கேட்டுத் தான்டா மூடினேன்..கேனப் பயலே
கேக்காம மூடினாத் தான்டா தப்பு..
பேசாம வண்டிய ஓரமா நிறுத்திபுட்டு
ரயிலு வருது ..அத வேடிக்க பார்த்துட்டு போ ..
ஆமாமா அதுல ஏதாவது
பொண்ணு வருதான்னு பார்க்கறேன்..
மூக்குமுழி நல்லாருக்கும்
முத்து முத்தா பல்லிருக்கும்
மூக்குமுழி நல்லாருக்கும்
முத்து முத்தா பல்லிருக்கும்
பேச்சும் கூட அல்வாத் துண்டா
அன்பாருந்தா நல்லாருக்கும்
குத்தமேதும் இல்லாம
நித்தம் குறை சொல்லாம
கண்ணுக்கழகா பொண்ணு கெடச்சா
நிச்சயமும் பண்ணிடுவேன்..
காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின் சாலையிலே
தனன தனன தன்ன தானா தன்ன
தனன தனன தன்ன...
அண்ணே அண்ணே ... அண்ணே அண்ணே
மோ..மோ...மூ..மோ
டேய் பழனியப்பா.. வண்டிய நிறுத்துடா..வண்டிய நிறுத்து
எங்க இந்தப் பக்கம்?
சந்தைக்கு போறேன்னே..
சந்தைக்குப் போயி?
எங்க அண்ணனுக்கு பொண்ணு பார்க்கப் போறேன்..
ஏன்டா கிறுக்குப் பயலே
சந்தையில மாடு கன்னு தான் வாங்குவாக..
மதனியுமா வாங்குவாக?
உங்க அண்ணனுக்கு எவன்டா
பொண்ணு கொடுப்பான்?
அவன் வேல வெட்டி இல்லாம
கட்சி கட்சின்னு சுத்திகிட்டிருக்கான்..
டேய்.. ஆச்சியப் புடிக்கிறேன்..ஆச்சியப் புடிக்கிறேன்னு
காரைக்குடி பக்கம் போயி சொல்லிடப் போறான்டா..
போட்டு அடிச்சுப் புடுவாக..
அட நீங்க ஒன்னுன்னே ..
எங்க அண்ணனுக்கு என்ன கொறச்சல்?
சொத்துபத்து எக்கச்சக்கம்
நஞ்ச புஞ்ச நாலு பக்கம்
சொத்துபத்து எக்கச்சக்கம்
நஞ்ச புஞ்ச நாலு பக்கம்
ஏலமலக் காடுகள் உண்டு
வீடுகள் உண்டு எல்லாமுண்டு
தேர்தலிலே அண்ணன் நின்னா
ஜெயிக்கறது எங்க கட்சி
அண்ணன் ஜெயிச்சா மந்திரியடா
ஆட்சி எங்க கையிலடா
காங்கேயம் காளைகளே ஓடுங்கடா
கவர்ன்மெண்டின் சாலையிலே
காலு வலி தெரியாம நானும்
பாட்டு பாடிகிட்டு வாரேன்
மருதண்ணனுக்கு கல்யாணம் பண்ண
பொண்ணத் தேடிகிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாரேன்.. ஆமா
பொண்ணத் தேடிகிட்டு போறேன்
உனக்கு என்ன வேணும் கேளு தாரேன்...
No comments:
Post a Comment