Friday, June 24, 2016

KANNAAL PESUM PENNE ENAI MANNIPPAAYAA - MOZHI - SPB

 FILM : MOZHI 
SINGER: SPB
MUSIC: VIDYA SAGAR
LYRICS: VAIRAMUTHU

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன்
மெளனம் பேசும் போது சப்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம்பிறையின் முன்னே நிலவைத் தேட மாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry
Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி ஹோ
கண்ணில் கடல் கொண்ட  கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப் பார்வை வேண்டாம்
ஓரப் பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry
Oh I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

No comments:

Post a Comment