மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா இது தான் ஆலிங்கனம்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
FILM: MR. BHARAT SINGER: SPB SJ MUSIC: ILAIYARAAJAA LYRICS: VAALI
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே வண்ணப் புறாவே வா கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
எங்கேயோ ஐஸ் ஆச்சு சிலு சிலுப்பாச்சு இங்க தான் சூடாச்சு எரியுது மூச்சு லல்லல்லால லல்லல்லால லல்லல்லால லா.. என்னவோ ஆயாச்சு இனி என்ன பேச்சு பழம் தான் பழுத்தாச்சு பசி எடுத்தாச்சு என்ன வேணும் ராசா நீ கேட்டாத் தாரேன் ஒண்ணு ஒண்ணா நான் தானே எடுத்துக்கப் போறேன் நீ கன்னத்த கிள்ள என்னத்தச் சொல்ல நான்
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன் காதல் செய்ய கத்துத் தரணூம் முன்னுக்கு வந்தேன் நீ வாடை புடிக்கும் மல்லிகப் பூவோ வண்ணப் புறாவோ நான் கை தொட்டதும் தொட்டேன் சம்மதப் பட்டேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன் காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
பெட்டியில் பாலோடு புட்டிகளும் இருக்கு வெண்ணையே தடவாத ரொட்டிகளும் இருக்கு ம்ம்... ஹ ஹ ஹா ஹ ம்ம் ம்ம்... ஒண்ணுமே வேணாமே உன்ன விட எனக்கு உள்ளது எல்லாமே உன்னிடத்தில் இருக்கு மத்தவங்க பாக்காட்டி கொடுப்பேன் நானே ஹ..இப்போ இங்க ஆள் எது ரகசியம் தானே நான் வெள்ளரிப் பிஞ்சு மெல்லவே கொஞ்சு வா
காத்திருக்கேன் கதவ திறந்து உள்ளுக்கு வாடி ஹஹ்ஹ..காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன்
உள்ள தான் பாரேன்மா ஊட்டி மலைச் சாரல் உள்ளத்தில் பாயாதோ ஊசி மழைத் தூறல் அஹஹாஹ அஹஹாஹ அஹஹாஹாஹ என்னவோ ஏதேதோ இன்பம் பொறந்தாச்சு சொல்லவே தெரியாம என்ன மறந்தாச்சு இன்னும் இன்னும் ஆனந்தம் தன்னால் புரியும் சின்னப் பொண்ணு நான் தானே எனக்கென்னத் தெரியும் நான் உள்ளத சொல்வேன் சொன்னதச் செய்வேன் வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன் காதல் செய்ய கத்துத் தரணும் முன்னுக்கு வந்தேன் நான் வாடை புடிக்கும் மல்லிகப் பூவே வண்ணப் புறாவே வா கை தொட்டதும் தொட்டு சம்மதப் பட்டு வா
காத்திருந்தேன் கதவ திறந்தேன் உள்ளுக்கு வந்தேன் ஹஹ்ஹ.. காதல் செய்ய கத்துக் கொடுப்பேன் முன்னுக்கு வாடி
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என் தேகம் உன் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என் தேகம் உன் தேசம் எந்நாளும் சந்தோஷம் -என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
மென் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள் மண் தொட்டதால் இன்று செவ்வானம் போல் ஆச்சு விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீயே பெண்ணே விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீயே பெண்ணே என் சொர்க்கம் நீ பெண்ணே சூடிய பூச்சரம் வானவில் தானோ
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா என் தேகம் உன் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஆராதனை நேரம் ஆலாபனை ராகம் அலைபாயுதே தாகம் அனல் ஆகுதே மோகம் என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு மன்மதக் கோயிலில் பால் அபிஷேகம்
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் எந்நாளும் சந்தோஷம் என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா...ஓ
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா ஹோ..ஹோ...விழிகளில் தாபம் படமெடுத்தாடும் விழிகளில் தாபம் படமெடுத்தாடும் ஹோ... ஓ... ஹோ... ஓ... வேளையில் நான் வர சீறுது சிணுங்குது ஏன்
நான் கட்டில்மேலே கண்டேன் வெண்ணிலா எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன் கதை முடிக்க நந்நாளைப் பார்த்திருந்தேன் காலமெல்லாம் கண்ணா நான் காத்திருந்தேன் கதை முடிக்க நந்நாளைப் பார்த்திருந்தேன் அது புரியாததா நான் அறியாததா அது புரியாததா நான் அறியாததா உன்னுள்ளம் என்னென்று தெரியாததா
எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம் எங்கே உன் தேன் கிண்ணம் இந்தா என் பூ முத்தம்...தம்.. தம்.. தம். நான் கட்டில் மேலே காணும் வெண்ணிலா உனை கட்டிக் கொண்டு பேசும் பெண்ணிலா
ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க ஓரிடத்தில் நில்லாமல் நான் மிதக்க வானகத்தில் எங்கேயோ நான் பறக்க ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒரு உயிர் வாழ்ந்திட இரு உடல் வேண்டுமா ஒன்றான பின்னாலே இரண்டாகுமா அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை அம்மாடி உன் ஆசை பொல்லாத பேராசை
நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா..ஆ... எனை கட்டிகொண்டு பேசும் பெண்ணிலா
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உடலோ அடடா தங்கச் சுரங்கம் உலகம் மயங்கும் காதல் அரங்கம் உடலோ அடடா தங்கச் சுரங்கம் உலகம் மயங்கும் காதல் அரங்கம் தாவும் கரங்கள் தேடும் சுகங்கள் தாவும் கரங்கள் தேடும் சுகங்கள் எதுவரை என்றாலும் இன்னும் இன்னும் கொஞ்சம் என்பேனே
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
கலைகள் பயிலும் மாலைப் பொழுது விடியும் வரையில் நீயும் தழுவு கலைகள் பயிலும் மாலைப் பொழுது விடியும் வரையில் நீயும் தழுவு ஆடை களைந்து ஆசை கலந்து ஆடை களைந்து ஆசை கலந்து அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன இன்னும் சொல்வேனோ
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
நி த மா ச ரி தா காதல் கனி நீ கனி நீ பதமா காமம் தணி நீ நி த மா ச ரி தா காதல் கனி நீ கனி நீ பதமா காமம் தணி நீ பாடும் சுரமோ தேடும் சுகமோ பாடும் சுரமோ தேடும் சுகமோ எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம் என்னைத் தந்தேனே
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை
உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
சித்தாடைக்குள் மத்தாப்பூ பூத்து ஆசை என்னைக்கொல்ல கொத்துமல்லி வித்தாரம் சொல்லி மாமன் நெஞ்சைக் கிள்ள அத்தை மகன் முத்தாட வந்தால் போகும் வெக்கம் மெல்ல குத்தம் இல்லா தக்காளி கன்னம் நூறு முத்தம் அள்ள அருகில் இருக்கு அரிசி முறுக்கு ரசிச்சி ரசிச்சி புடிச்சி நொறுக்கு பால் நிலாவிலே ஏத்தம் போட்டு தான் ஏறு பூட்டலாம் வா..மானே ராக்கு ராக்கைய்யா போட்டு தாக்கைய்யா நோட்டம் போட்டைய்யா ஹொய்..ஹொய்...வாட்டம் போக்கைய்யா காட்டுலே கம்பங்க்காட்டுலே
தென்றல் வந்து கொண்டாட தானே பூக்கள் உண்டாகுது முன்னும் பின்னும் முந்தானை ஆடி மோக பண்பாடுது கண்கள் ரெண்டில் மின்சாரம் பாய தேகம் திண்டாடுது அச்சம் மிச்சம் இல்லாமல் போனால் மேனி என்னாவது அஹ்ஹ்...சரக்கு ரயிலே உருக்கும் வெயிலே திருட்டு சொகத்த எறக்கு மயிலே வான வீதியில் கோலம் போட்டு தான் வாழ்ந்து காட்டலாம் வா மாமா
அம்மாடி ஆத்தாடி உன்னால தான் நேத்து ராத்திரி எம்மா தூக்கம் போச்சுடி யம்மா
ஆ நேத்து ராத்திரி எம்மா தூக்கம் போச்சுடி ஹ் யம்மா
அச்சாரத்தை போடு கச்சேரிய கேளு சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு அச்சாரத்தை போடு கச்சேரிய கேளு சின்ன உடல் சிலுக்கு சில்லுன்னு தான் இருக்கு சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு கண்டேனடி காஷ்மீர் ரோஜா வந்தேனடி காபுல் ராஜா என்பேரு தான் அப்துல் காஜா என்கிட்ட தான் அன்பே ஆஜா அஞ்சு விரல் பட்டவுடன் அஞ்சுகத்தை தொட்டவுடன் ஆனந்தம் வாரே வா .
FILM: ANDHA ORU NIMIDAM SINGERS: SPB SJ MUSIC: ILAIYARAAJA
அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் உருகியதே ஆடை உருவியதே நீரும் சூடு ஏற
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
தேகம் மரத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
முத்தங்கள் முன்னூறு நீ தந்து முன்னேறு
அய்யோ முன்னூறு தாங்காது தந்தாலும் தகராறு
இவள் வசம் புது ரசம் இவள் வசம் புது ரசம்
இதழ் ரசம் இலவசம் நீ குடி
ஓ .. புதுரசம் அழைக்குது
பழரசம் கொதிக்குது பாரடி
நானிங்கு நானில்லை நீ இன்னும் ஆணில்லை
ஆடை காண வில்லை
அலைகளில் மிதக்குது நிலவொன்று குளிக்குது கை கொடு
குளிக்கின்ற நிலவுக்கு முதுகினில் அரிக்குது கை தொடு
தேகம் மறத்துடிச்சே நீச்சல் மறந்திருச்சே
கூச்சம் ஆகி போச்சே
வழி ஒண்ணும் தெரியல வயசுக்கு வரவில்ல நானடி
குளிப்பது நீயடி குளிர்வது எனக்கடி ஏனடி
ஆணுக்கு ஆவேசம் ஹ ஹ வந்தாலே சந்தோசம்
உன்பாடு உல்லாசம் எம்பாடு படு மோசம்
வெயிலுக்கு நிழல்கொடு வெயிலுக்கு நிழல் கொடு
மயிலுக்கு உடை கொடு மாமனே
அய்யய்யோ இருக்குற வேட்டிய கொடுத்துட்டு
தவிப்பது பாவமே
பஞ்சாங்கம் பாக்காதே என் அங்கம் தாங்காதே
நீரில் ஈரம் இல்லை
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம் தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
இருவர் ஒருவர் இனிதானே உறவினில் இணைவோமே பருவம் கனிந்த புதுத்தேனே பழகிக் களிப்போமே உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே இனிக்கும் இதழில் அமுதம் பருக பருக சுகமே ஆனந்தம் உல்லாசம் வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே கொடியும் படர்ந்துவரும் கண்ணா படரும் கிளை நீயே சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா ஆனந்தம் உல்லாசம் வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம் தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும் அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம் இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ... முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி
மானும் உண்டு கெண்டை மீனும் உண்டு ரெண்டும் கொண்ட கண்ணில் வண்டும் உண்டு விழுந்தேன் உனக்குள் நானே நானே கனிந்தேன் கலந்தேன் நானே நானே கண்ணாலே நீ என்னை களவாடிக் கொண்டாயோ நெஞ்சத்தில் நீ என்றும் நிலையாக நின்றாயோ இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ...ஓ...
முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும் அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம் இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ
முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி
ஆசை பட்டு பட்டு தோளை தொட்டு தோளை தொட்டு வெட்கம் நாளும் விட்டு இனிமேல் இனிமேல் காலை மாலை கொடுத்தே அனுப்பு ஓலை ஓலை தலைவாசல் தாண்டாமல் தனியாக நின்றேனே அலையாத உள்ளத்தை துணையாக தந்தேனே இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ...
முத்து மணி முத்துமணி சின்னஞ்சிறு கண்ணுமணி தாவணி ஆடும் ஓர் லாவணி பாடும் அருந்ததி பார்க்கும் ஆவணி மாதம் இது தினமும் தினமும் புதிதாய் தொடராதோ..ஓ..
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன் நாளொரு தேகமும் மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம் தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
FILM : AARIRO AARAARO SINGER SPB SJ MUSIC ; K. BAGYARAJ LYRICS: VAALI
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான் உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான் ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன் தினம் ஆராரோ ஆரிரோ நான் பாடுவேன் இப்பவும் எப்பவும் சீராட்டுவேன் உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
உச்சி வெய்யில் வேளை நீ நடக்க பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க முக்குளிக்க நானும் ஏங்கறேன் முத்தெடுக்க நேரம் பார்க்குறேன் கொஞ்சம் பொறு இரவாகட்டும் வெக்கமது விலகி ஓடட்டும் எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன் மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன்
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
பள்ளியறை பாட்டை நீ படிக்க பக்க மேளம் போல நான் இருக்க தட்டுறப்ப தாளம் திறந்திருக்க தட்ட தட்ட மோகம் வளர்ந்திருக்க கொஞ்சுறப்போ தேகம் நோகுமா கொஞ்சம் கொஞ்சம் காயம் ஆகுமா காயத்துக்கு களிம்பு பூசவா ஆறும்வரை விசிறி வீசவா அம்மம்மா அம்மம்மா ரொம்ப வேகம் என்னம்மா பண்ண நான் இன்ப தாகம்
உன் கண்ணுக்கொரு நிலவா என்னை படைச்சான் உன் நெஞ்சுக்கொரு உறவா என்னை படைச்சான் ஒரு தாயாட்டம் உன்னை நான் தாலாட்டுவேன் தினம் ஆராரோ ஆரிராரோ நான் பாடுவேன் இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்
என் கண்ணுக்கொரு நிலவா உன்னை படைச்சான் என் நெஞ்சுக்கொரு உறவா உன்னை படைச்சான்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு
நேரம் வந்தாச்சு நானும் நட்டாச்சு காதல் கொடி சூடும் உண்டாச்சு மூடும் உண்டாச்சு கையப் பிடி 1'O clock, 2'O clock கண் முழிச்சு பின்னாடி 3'O clock, 4'O clock கை பிடிச்சு 5'O clock, 6'O Clock ராத்திரிக்கு அம்மாடி 7'O clock, 8'O clock கிக்கிருக்கு வேளைதோறும் லீலை வேறு என்ன வேலை பள்ளிக்கூட பாடமென்ன சொல்ல வேண்டும்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ய்யாஆ ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம்
ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ரம்பம்பம் ஆரம்பம் பம்பம்பம் பேரின்பம் ழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ஏழு எட்டு நாட்களாச்சு கண்ணே உன் மீது ஏக்கம் கொண்டு தூங்கவில்லை கண்ணே ராகு காலம் ஓடிப் போச்சு ராஜ யோகம் கூடிப் போச்சு
தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
லவ் லவ் லவ்
தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல்காதல்
ஆஹா தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்
ஆ தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
அழைக்குதே உன்னைப் பூச்சூட
மயக்கமேனடி பூங்குயிலே
தவிக்கிறேனடி நான் கூட
விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது
ஏக்கம் ஏதோ கேட்கும்
ம்...ம் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ ஆடல் பாடல் கூடல்
ஆ.. தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்
மழைக்கு ஏங்கிய மாந்தளிரே
உனக்கு நான் சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்
அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
போதும் போதும் ஊடல்
ஆ... தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்
நம்மூரு டூரிங்குலே நல்ல படம் வந்திருக்கு
நாம ரெண்டு பேரும் போவோம் ராத்திரிக்கு
முடிஞ்சு வர்ர நேரத்துலே முட்ட தோச வாங்கித்தாறேன்
வாடியம்மா நீயும் அந்த கொட்டகைக்கு
நா வர மாட்டேன் வந்த நீ விட மாட்டே
நா வர மாட்டேன் வந்த நீ விட மாட்டே
அணச்சு புடிச்சு நடிக்கும் படத்த ரசிச்சு மொறச்சு பாக்கும்போது
ஒனக்கும் அந்த நெனப்பு வந்தா என்னத்த செய்வேன்
பட்டுல சேல கழுத்துல ரத்தின மால
நான் கட்டிக்க தாறேன்
ஒன்ன இப்ப தொட்டுக்கப்போறேன்
இந்த ரத்தின வாயிலே கிட்டத்துல வந்து
முத்தத்த தாயேன்
பொள்ளாச்சி ஊருக்குள்ளே பொருட்காட்சி நடக்குதைய்யா
போய்யிட்டு வந்தா என்ன ரயிலுல
அந்த ஊரு சந்தையிலே அல்வாவும் விக்குமைய்யா
எல்லாமும் வாங்கிக்கொடு கையிலே
துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
துட்டுக்கு நானு கண்ணு எங்கிட்டு போவேன்
இரும்புபோல ஒடம்பு இருக்கு கரும்புபோல மனசு இருக்கு
காலம் நேரம் சேரும்போது வாங்கித்தாறேன்
FILM : MOZHI SINGER: SPB MUSIC: VIDYA SAGAR LYRICS: VAIRAMUTHU
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன்
மெளனம் பேசும் போது சப்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம்பிறையின் முன்னே நிலவைத் தேட மாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி ஹோ
கண்ணில் கடல் கொண்ட கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப் பார்வை வேண்டாம்
ஓரப் பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
படம்: தேவி ஸ்ரீதேவி
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
பாடல்: வைரமுத்து
லாலல லாலா... லாலல லாலா
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க
ஆ..ஹாஹாஹா ... ஆ..ஹாஹா
காதலின் பந்திகளில் கனவே உணவு
கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது
சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி
கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி
ஆயிரம் ஜென்மம்
கூடிய பந்தம்
தேவியின் நெஞ்சம்
தாமரை மஞ்சம்
நாளொரு பூ மலரும்
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க
காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்
காதலை ஆதரித்தே மலர்கள் வணங்கும்
கீதங்கள் பாடும் குயில் இளம்பூக்களில் ஆடை கட்டும்
வாழ்கின்ற காலம் மட்டும் எந்தன் தோள்களில் கூடு கட்டும்
நீயொரு பாதி
நீ மறு பாதி
பாதியில் பாதி
சேர்வது நீதி
ஓடுது காதல் நதி
வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
தன்னலமற்றது தாயின் நெஞ்சம் தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
மண்ணுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
கருணையில் தாயும் கடவுளும் ஒன்று
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகளில்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஊரோரம் கம்மாக்கர வேறாரும் பாக்கவில்ல ஊரோரம் கம்மாக்கர ஒ ஹோ வேறாரும் பாக்கவில்ல ஹோ மாந்தோப்பு பக்கத்தில பொண்ணிருக்கா வெக்கத்தில கூட்டாஞ்சோரு ஆக்கித்தரவா ஒன்னோட கூட சேந்து பாட்டுச்சொல்லாவா வா வா ஊரோரம் கம்மாக்கர ஒ ஹோ வேறாரும் பாக்கவில்ல
வையக்கர ஓரத்துல பையப்பைய என்ன தொட்டு மையலுக்கு பாய விரிச்ச மை போட்டு மையலுக்கு பாய விரிச்ச ஹோய் வையக்கர ஓரத்துல பையப்பைய என்ன தொட்டு மையலுக்கு பாய விரிச்ச மை போட்டு மையலுக்கு பாய விரிச்ச வெயிலுக்கு தாகமின்னு நிழலுக்கு வந்த என்ன செயிலுக்குள் அடச்சு வச்ச கண்ணால செயிலுக்குள் அடச்சு வச்ச அம்மாடி சொக்குப்பொடி போட பாக்குற ஆத்தாடி எக்குதப்பா ஏதோ கேக்குற மாமோய்
Naan malarodu thaniyaaga yen ingu nindren ( Tujhe Pyar Karte Hain Karte rahenge)
நான் மலரோடு தனியாக…………………..
What a beautiful imagination from Kannadasan:
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
Movie Name:Iru vallavargal
Song Name:Naan malarodu
Singer:T.M.Soundarajan,P.Susheela
Music Diector:Veda
Lyricist:Kannadasan
Directed by K. V. Srinivasan
Produced by R. Sundaram
Written by K. Devarajan
Screenplay by K. Devarajan
Starring
Jaishankar
R. S. Manohar
L. Vijayalakshmi
Thangavelu
S. A. Ashokan
Music by Vedha
Cinematography S. S. Laal
Edited by L. Balu
Production
company Modern Theatres
Distributed by Modern Theatres
Release dates 1966
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக் கண்டார்
உன் வலைகொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக்காண ஓடோடி வந்தேன்
Please See also this…
Though Veda’s songs are inherited from Hindi movies, the melody did not vanish and it only added the fans for such tunes…
Tujhe Pyar Karte Hain Karte
Singers: Mohammed Rafi,&Suman Kalyanpur
Music:Shankar Jaikishan
Lyrics :Hasrat Jaipuri
Movie :April Fool (1964)
Actors:Biswajeet, Saira Banu
Lyrics / Video of Song : Tujhe Pyar Karte Hain Karte
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
tera naam le le ke jeete rahenge
tera naam le le ke marte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
tujhe bhool jaaun ye mumkin nahin hai
kahin bhi rahoon mera dil to yahin hain
tujhe bhool jaaun ye mumkin nahin hai
kahin bhi rahoon mera dil to yahin hain
ghate chaand lekin mujhe gham na hoga
tera pyaar dil se kabhi kam na hoga
guzarne ko ye din guzarte rahenge
ke dil ban ke di me dhadakte rahenge
tera naam le le ke jeete rahenge
tera naam le le ke marte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
haseen phool ki zindgaani bhi kyaa hai
abhi hans raha tha abhi ro raha hai
haseen phool ki zindgaani bhi kyaa hai
abhi hans raha tha abhi ro raha hai
jo guzre khushi me wahi zindagi hai
nahin to ye duniya badi besuri hai
teri dhun me bante sanwarte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
tera naam le le ke jeete rahenge
tera naam le le ke marte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
agar mar gaya rooh aaya karegi
tujhe dekh kar geet gaaya karegi
agar mar gaya rooh aaya karegi
tujhe dekh kar geet gaaya karegi
mujhe dekhkar tum na aansoo bahaana
bas itni guzaarish hai tum muskuraana
tere pyaar me rang bharte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
tera naam le le ke jeete rahenge
tera naam le le ke marte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
tujhe pyaar karte hain karte rahenge
ke dil banke dil me dhadakte rahenge
MOVIE : PATTINA PRAVESAM
SINGER: SPB
MUSIC: MSV
LYRICS: KANNADAASAN
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயிலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா தெய்வம் கல்லிலா ஒரு தோகையின் சொல்லிலா பொன்னிலா பொட்டிலா புன்னகை மொட்டிலா அவள் காட்டும் அன்பிலா இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா தீதிலா காதலா ஊடலா கூடலா அவள் மீட்டும் பண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா வாழ்க்கை வழியிலா ஒரு மங்கையின் ஒளியிலா ஊரிலா நாட்டிலா ஆனந்தம் வீட்டிலா அவள் நெஞ்சின் ஏட்டிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா சொந்தம் இருளிலா ஒரு பூவையின் அருளிலா எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டதேன் அதைச் சொல்வாய் வெண்ணிலா
வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா நீயில்லாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா
MOVIE : PAGALIL ORU IRAVU
MUSIC: ILAIYARAAJAA
SINGER: SPB
LYRICS: KANNADAASAN
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம் பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம் பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புதுச்சீர் கொண்டுவா பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
மெதுவாகத் தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே அழகு ரதம் அசைகிறது ஊர்வலமாய் வருகிறது வா பண்பாடு மாறாத தென்பாங்குப் பூவே காலமெல்லாம் தேனிலவு தான்
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம் பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புதுச்சீர் கொண்டுவா
சிந்தாத மணிமாலை உன் புன்னகை உன் புன்னகை செவ்வான விண்மீன்கள் உன் கண்களே உன் கண்களே சிறிய இடை கொடியளக்க அழகு நடை மணி ஒலிக்க வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு தான்
பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம் பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம் பொழுதுகள் கோடி புதுமைகள் தேடி வா வெண்ணிலா ஒரு தேர் கொண்டு வா செந்தேன் நிலா புதுச்சீர் கொண்டுவா பொன்னாரம் பூவாரம் கண்ணோரம் ஸ்ருங்காரம்
மோக வீணை என்று உன்னை நானும் மீட்டிப் பாடிடவா பாரிஜாத மாலை போல மார்பில் உன்னைச் சூடிடவா தோகை நீயே மேடை நானே மதன் வீசிடும் கணை பாயுது மலர் மேனியும் கொதிப்பாகுது குளிர் ஓடை நீயே வா வா
கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிபாட விழிக்கென்ன நாணம் இளங்காற்று தீண்டாத சோலை இளங்காற்று தீண்டாத சோலை மண்ணில் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்டப் பூவே கடலோடு நதிக்கென்ன கோபம் காதல் கவிபாட விழிக்கென்ன நாணம்
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல்.... சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா ஆஆஆஆ
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில் காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
ஊடல்... சிறு... மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்
காதல் விளையாட்டில்
கண்ணீர் மாலை சூடலாமா
MOVIE : ANNI EN DHEIVAM
MUSIC: GUNA SINGH
SINGERS: SPB B.S.SASIREKHA
மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்
நடந்ததை நினைக்கையில் மனசுக்குள் இனிக்கிது சும்மா
அடிக்கடி அதை எண்ணி தவிக்குது மனம் இது காரணமென்னம்மா
இதுதானே பருவ காலம் இது ரதி தேவன் கொடுத்த தாகம்
முல்லை பூமலர் உன் நெஞ்சம்
என்றும் அதுதான் என் மஞ்சம்
எந்தன் நெஞ்சிலும் ஓர் எண்ணம்
அங்கே மின்னும் உன் வண்ணம்
கண்ணா நானும் உன்னை சேரும்
நன்னாள் வேண்டும் என் மன்னா
கங்கை வெள்ளம் பொங்கும் நேரம்
இன்பம் வேண்டும் என் கண்ணா
இன்பம் வேண்டும் என் கண்ணா
மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்
முத்துக்கள் தெளிக்கிற வண்ணச்சிரிப்பு
மோகத்தை கொடுக்குது உந்தன் அழைப்பு
தொட்டதும் வந்தது வெட்கம் எனக்கு
சொர்கத்தை காட்டுது உந்தன் அணைப்பு
ஏதோ ஒரு தாகம் தினம் வந்தாடுது
எங்கோ என்னை கைதந்து கொண்டோடுது
அது தானே தேவன் லீலை இனி என்னாளும் இன்ப மாலை
மாலை நேரம் தேவன் போட்ட கோலம் என்னம்மா
மாறன் வந்து நெஞ்சில் போட்ட தாளம் என்னம்மா
அதுதானே இன்ப ராகம் இனி என்னாளும் இன்பமாகும்
MOVIE : SAAMANDHIPPOO
SINGERS: SPB JENCI
MUSIC: MVD
மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
தேனோடை இதில் ஏன் ஆடை வெறும் நூலாடை இனி நான் ஆடை நூலாடை இது மேலாடை வரும் பூமேடை அதில் நீ ஆடை
தேனோடை இதில் ஏன் ஆடை வெரும் நூலாடை இனி நான் ஆடை நூலாடை இது மேலாடை வரும் பூமேடை அதில் நீ ஆடை தழுவிட வரவோ லலலலல்லல்லா குளிர் அதில் விடுமோ இருவர் இன்று ஒருவர் என்று நாம் ஆவோமே
மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
தாங்காது என நான் தள்ள என்னை நீ அள்ள சுகம் தான் என்ன போதாது என நான் சொல்ல அடி நீ துள்ள வரும் நாள் என்ன
தாங்காது..ஹோய்... என நான் தள்ள என்னை நீ அள்ள சுகம் தான் என்ன போதாது என நான் சொல்ல அடி நீ துள்ள வரும் நாள் என்ன விரல்களின் நகங்கள்....தரரரா.. எழுதின இடங்கள் அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போது
மாலை வேளை ரதி மாறன் பூஜை அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
ஏன்டா கிறுக்குப் பயலே
சந்தையில மாடு கன்னு தான் வாங்குவாக..
மதனியுமா வாங்குவாக?
உங்க அண்ணனுக்கு எவன்டா
பொண்ணு கொடுப்பான்?
அவன் வேல வெட்டி இல்லாம
கட்சி கட்சின்னு சுத்திகிட்டிருக்கான்..
டேய்.. ஆச்சியப் புடிக்கிறேன்..ஆச்சியப் புடிக்கிறேன்னு
காரைக்குடி பக்கம் போயி சொல்லிடப் போறான்டா..
போட்டு அடிச்சுப் புடுவாக..
அட நீங்க ஒன்னுன்னே ..
எங்க அண்ணனுக்கு என்ன கொறச்சல்?
சொத்துபத்து எக்கச்சக்கம்
நஞ்ச புஞ்ச நாலு பக்கம்
சொத்துபத்து எக்கச்சக்கம்
நஞ்ச புஞ்ச நாலு பக்கம்
ஏலமலக் காடுகள் உண்டு
வீடுகள் உண்டு எல்லாமுண்டு
தேர்தலிலே அண்ணன் நின்னா
ஜெயிக்கறது எங்க கட்சி
அண்ணன் ஜெயிச்சா மந்திரியடா
ஆட்சி எங்க கையிலடா
படம்: இரு நிலவுகள்
இசை: ராஜன் நாகேந்திரா
குரல்: எஸ்.பி.பி
பாடல்: வாலி
ஆனந்தம் அது என்னடா
ஹே... ஹே.... தரத் தரத் தர....
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
அம்மாடி தமாஷா ஆடடா
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
காதல் வித்தை நாள் முழுக்க காணடா
மைபோட்ட மலர் மங்கை கண்ணிலே
தனை மறந்தாட நீரும் தேவையா
பருகத்தானே போதை கள்ளிலே
மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
உறுதியான நூறு வயது காளையே
நூறாண்டு அனுபவங்கள் தேவையே
எதிர் உள்ளது முன்னேற்றமே செல்லடா
மனங்கொண்டது பலித்திடுமே காணடா
மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா.. ஹ
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா
FILM : NEEYAA
SINGERS: SPB VJ
MUSIC: SHANKAR GANESH
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே
அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று நதி மீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணா
என் மன்னனே
ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா
இங்கே விண்மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
நாம் வெறும் கோயில் ஆகாமல் காக்க
இங்கே விண்மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
நாம் வெறும் கோயில் ஆகாமல் காக்க
உந்தன் கண்மீன்கள் என் மீது விளையாடட்டும்
அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
தேர் கொண்டுவா
கண்ணன் வந்து கீதம் சொன்னால் நானாடுவேன்
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
அந்த மணிச்சங்கின் ஒலி கேட்டு நானாடுவேன்
இந்த மழை மேகம் உன் மீது ஆடும்
அந்த மணிச்சங்கின் ஒலி கேட்டு நானாடுவேன்
இந்த மழை மேகம் உன் மீது ஆடும்
வண்ணப்படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்
இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்
புது வெள்ளமே
ஒரே சொர்க்கம் எந்தன் பக்கம் வேறில்லையே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே
FILM : NAANE VARUVEN
SINGERS: SPB CHITHRA
MUSIC: SHANKAR GANESH
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே பூவில் ஒன்றே தென்றல்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
இன்று நடமாட நீ வேண்டும் கண்ணா
அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான்
இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணா
என் மன்னனே
ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணா
ஒரு ஒளி வந்து விழியாகி அழைக்கின்றதே
அது வழி காட்டும் விளக்காகும் கண்ணா
ஒரு கனவாகி சுகம் சேர்க்கும் துணை யாரது
இது கனவல்ல நிஜமாகும் கண்ணா
என் கண்களில்
இங்கும் அங்கும் மாயம் செய்யும் நீ யார் கண்ணே
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
இன்று புது வானில் மழை மேகம் தவழ்கின்றது
அது புதிதல்ல புதிதல்ல கண்ணே
இன்று புது வானில் மழை மேகம் தவழ்கின்றது
அது புதிதல்ல புதிதல்ல கண்ணே
அன்று உன் தோளில் கொடி போல உறவாடினேன்
அது புரிந்தாலே சுகம் கோடி கண்ணே
என் கண்மணி
ஒரே பாடல் ஒன்றே ராகம்
வாராய் கண்ணே
ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
வாராய் கண்ணே
FILM : NENJIL AADUM POO ONDRU SINGERS: SPB VJ MUSIC: IR
மருத மஞ்சக் கிழங்கே எம் மேலதான் வாசம் உம் மேலதான் நேசம் மச்சான் ஒன்ன நெஞ்சோடதான் வச்சாள் இந்த பச்சக்கிளி மருத மஞ்சக் கிழங்கே எம் மேலதான் வாசம் உம் மேலதான் நேசம் மச்சான் ஒன்ன நெஞ்சோடதான் வச்சாள் இந்த பச்சக்கிளி மருத மஞ்சக் கிழங்கே
கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க மூடாதே முந்தானையை போட்டு ஹோய் முத்தாடும் வித்தைகளை காட்டு முடியாதய்யா இப்ப படியாதய்யா ஒரு பூ மால நீ போட காலம் நேரம் பாரு
மருத மஞ்சக் கிழங்கே உம் மேலதான் வாசம் எம் மேலதான் நேசம் மச்சான் என்ன நெஞ்சோடதான் வச்சாள் இந்த பச்சக்கிளி மருத மஞ்சக் கிழங்கே
தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க தானாக தள்ளாடுது தேகம் தாளத்த விட்டோடுமா ராகம் விலகாதடி விட்டுப் பிரியாதடி இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்
மருத மஞ்சக் கிழங்கே எம் மேலதான் வாசம் உம் மேலதான் நேசம் மச்சான் ஒன்ன நெஞ்சோடதான் வச்சாள் இந்த பச்சக்கிளி
மருத மஞ்சக் கிழங்கே உம் மேலதான் வாசம் எம் மேலதான் நேசம் மச்சான் என்ன நெஞ்சோடதான் வச்சாள் இந்த பச்சக்கிளி மருத மஞ்சக் கிழங்கே
அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே
அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே
அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே
அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே
அட மச்சான் என்னை முந்தானை பாய் விரிக்க சொல்லாதே
அட மாமா இந்த மத்தியான வேளையிலே துள்ளாதே
அந்த பொல்லாத்தனம் இப்போ கூடாதய்யா
அந்த யோகாசனம் இப்போ ஆகாதய்யா
இதில் ஒனக்கொரு மயக்கமும் எனக்கொரு கிறக்கமும் ஏன்
அட பூ வாங்கி வந்தாலே புரிஞ்சுதய்யா ஆசை
அதை பின்னாடி வச்சாலே ஏறுதய்யா போதை
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அட உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே
அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே
அடி பொண்ணே டக்கர் பண்ணாதே டாவடிக்க வந்தாலே
அடி கண்ணே தப்பா எண்ணாதே வாய்சிவக்க தந்தாலே
ஒரே போரானது அந்த காலேஜ் தான்
ரொம்ப ஜோரானது இந்த டீன்ஏஜ் தான்
இன்ப சரித்திரம் படித்திட பரிட்சையை முடித்திட வா
அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
அட ராஜா உங்க செங்கோலின் ஆணையிங்கு செல்லாதே
யுவராணி உந்தன் சிங்காரப் பூவிழியால் கொல்லாதே
காதல் விளையாட்டிலே கிருஷ்ணபிரபு அல்லவா
ராஜலீலை செய்ய ராதா நீ அல்லவா
இடம் கொடுத்ததும் அடுத்ததை நடத்திட துடிப்பது ஏன்
அடி நான் வாங்கி வந்தேன்டி நாலு முழப்பூவு
அதை பின்னாடி வைப்பேன்டி வாசனைய பாரு
மணக்க மணக்க மயக்க மயக்க
இழுத்து அணைச்சா இனிக்க இனிக்க
அடி உம்பாடு எம்பாடு கொண்டாட்டம் கும்மாளமே
பூக்காரி (1973) , மு.க.முத்துவின் மாக்னம் ஹோப்லஸ் படங்களில் ஒன்று. பிள்ளையோ பிள்ளையில் (1972) அறிமுகமான மு.க.முத்து , எம்.ஜி.ஆர் விக்குடன் தமிழ் சினிமாவிற்கு சொல்லொணாத் துன்பங்கள் கொடுக்கத் துவங்கியிருந்தார். ஒரு புறம் கலைஞர் கண்ணொளித் திட்டம் வழங்கிக்கொண்டிருக்கும்போது மறுபுறம் இந்தக் கொடுமை நிகழ்ந்துகொண்டிருந்தது. எமர்ஜென்சியினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரே நன்மை மு.க.முத்துவின் திரைக்காவியங்கள் வருவது நின்றது. பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையாவிளக்கு, இங்கேயும் மனிதர்கள் என்று அடித்த புயல் நின்றது. மறுமுறை அவர் இராம.நாராயணனின் , வீரன் வேலுத்தம்பி, SA ராஜ்குமார் இடையில் படத்தில் " சுருளு மீசைக்காரனடி" என்று பந்தா தம்பி ராம்கியைப் புகழ்ந்து பாடும்போது தமிழ்சினிமா அவரை இனிதே மறந்திருந்தது.
வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு புரியாத புதிர். ஜெயலலிதா, மூர்த்தி, ஶ்ரீகாந்த்துடன் அறிமுகமாகி, மன்னிப்பு போன்ற படங்களில் சுமாராக நடித்தும் , பெண் சரத்பாபு போல்( பல படங்களில் நடித்தும் ) யாதொரு தடத்தையும் விட்டுச்செல்லாதவர். 70 களில் பிரபலமான பிரமீளா, ஜெயசித்ரா, மஞ்சுளா போன்றவர்களைவிட நல்ல தோற்றத்தையும், நடிப்பையும் , நடனத்தையும், கொண்டிருந்தும், அவர் கண்ணில் தென்படாத ஒன்று ......கான்ஃபிடென்ஸ். இதயக்கனியில் ப்ரப்பிரம்மமாக நிற்கும் ராதா சலூஜாவின் கண்களில் தென்படும் கான்ஃபிடென்ஸ் கூட " தொட்ட இடம் எல்லாம்" பாட்டில் நிர்மலாவிடம் இருக்காது. அவர் எம்.எல்.சி பதவி பெறாததற்கு இது காரணமில்லை எனினும்.
அமிர்தம், கிருஷ்ணன்-பஞ்சு போன்ற கழக விசுவாசிகள் கைவண்ணத்தில் உருவான பூக்காரி....மஞ்சுளா பூக்காரி! இந்தப் படத்திற்கு " கைவண்டி இழுக்கும் அப்பாவையும், சினிமாப் பைத்திய தங்கையும் காப்பாற்றும் இளைஞன்" என்று பெயர் வைத்திருந்தாலும். வித்தியாசம் இருந்திருக்காது. பின்னாளில் டார்லிங் டார்லிங் டார்லிங் பாட்டில் ஶ்ரீதேவியுடன் வந்த கன்னட அம்பரீஷ், வில்லன்! அதேபோல் ஜெயசித்ரா பின்னாளில் சினிமா பைத்தியம் படத்திலும் நடித்தது ஒரு பைத்தியக்கார சிறப்பு.
குமுதம் லைட்ஸ் ஆனில் எம்.எஸ்.வி பற்றி சொல்லும்போது " எம்ஜியாருக்கும் வேண்டியவர், சிவாஜிக்கும் வேண்டியவர், கலைஞருக்கும் வேண்டியவர் என்றால் கோடம்பாக்கத்தில் எம்.எஸ்.விதான்" என்று எழுதியிருப்பார் ரா.கி.ர. அதே 1973 ல் பூக்காரியும், உலகம் சுற்றும் வாலிபனும், பொன்னூஞ்சலும் !
முத்துப்பல் சிரிப்பென்னவோ ( TMS-PS) , முப்பது பைசா மூணு முழம் ( LRE) மற்ற பாடல்கள்.
இந்தப்பாடல் TMS-SJ வின் டூயட்டில் நீல நிறம் ( என் அண்ணன்) மிகச்சிறந்த இரண்டாவது பாடல். ஆனால் இந்தப்பாடல் , கிலோமீட்டர் கணக்கில் முதல் பாடல். பஞ்சு அருணாசலத்தின் வரிகள். கண்ணை மூடிக்கொண்டு கேட்கவேண்டிய பாடல்களிலும் தலையாயது இதுவே. அபாரமான வயலின், ஹம்மிங்!
" விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும்" என்று அந்தக்காட்சியில் நடிகர்கள் இருவரிடமும் இல்லாத ஒன்றைப்பற்றி எழுத ஒரு மனோதிடம் வேண்டும்.
TMS குரலின் ஒரு சேர வெளிப்படும் ஒரு கம்பீரமும் காதலின் மென்மையும் , ஜானகியின் குரலில் வெளிப்படும் நாணமும் இந்தப்பாடலை மறக்கமுடியாத பாடல் ஆக்கியுள்ளது.
படம் : நீ ஒரு மகராணி
இசை: சங்கர் கணேஷ்
குரல் : எஸ்.பி.பி., சுசீலா
பாடல் : வாலி
அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ
(அவன்)
மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ
(அவள்)
Tiruchendurai Ramamurthy Sankar writes:
சங்கர்-கணேஷ்
தேவர் - கவிஞர் இணைந்து வழங்கிய ஜோடி. வேதா அளவிற்கு தூற்றப்படாவிட்டாலும் சற்றே அலட்சியமாகக் கருதப்பட்ட இரட்டையர்கள். எம்.எஸ்.வி -இளையராஜா காலங்களுக்கு நடுவில் சிக்கினாலும் தமிழ்சினிமாவில் சங்கர்-கணேஷின் பங்கு 72-83 வரை முக்கியமானது. நண்பர் சரவணன் சொல்வதுபோல் இளையராஜா படம் பந்தாவாக சாந்தி, ஆனந்தில் வெளியாகும்போது இவர்களின் படங்கள் ஓரமாக காமதேனு, சித்ரா, ஓடியன், பாரகன் தியெட்டரில் சிக்கிவிட்டது விதி.
நீ ஒரு மகராணி (1976) காதலியாக நடிக்கவந்து மனைவியாக மாற வேண்டிய கி.மு காலத்துக் கதை. சுஜாதா, மாமனாராக தேங்காய் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு 1000ரூபாய்க்கு நடித்திருப்பார்கள். பட்டணத்தில் பூதம் படத்தில் டிரிம்மாக வந்து மனதைக் கொள்ளை கொண்ட அண்ணன் ஜெய் , பட்டணத்தைத் தொலத்திருப்பார். 11 மணி குர்லா லோக்கலில் வரும் குஜ்ஜு ஸ்டாக் ப்ரோக்கர்போல் சில காட்சிகளில் சஃபாரி என்ற கொடூரமான உடை வேறு. டைரக்டர் சொர்ணமும், திமுக ஆதரவு படங்களில் அமிர்தமும் ஜெய்யைக் கவிழ்த்தார்கள்.
மூன்று பாடல்கள். யேசுதாஸ்-சுசீலாவின் ," நீ ஒரு மகராணி". சுசீலாவின் " பல்லாண்டு காலம்" ( கணேஷின் ஹம்மிங்குடன்) RDB யின் ஆந்தி பட "தும் ஆகயே "பாட்டை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு கம்போஸ் செய்திருப்பார்கள். ( பாடல் காட்சியில் கிதார் வைத்துக்கொண்டு கணேஷ் வருவார்)
ஆனால் அந்த மூன்றாவது பாடல் , திரையில் பல்க்கான ஜெய் , சில்க்கான ஶ்ரீப்ரியாவுடன் ! SPB-PS இன் அடுத்த மாக்னம் ஓபஸ். எம்.எஸ்.வி சாயலில் அவசரமாக ஓடும் டியூன். கொஞ்சும் எஸ்.பி.பி. கூட வரும் வயலின் போல் சுசீலா.
இரண்டு சரணங்களும் வேறு அமைப்பில். டியூன் ரோலர் கோஸ்டரில். இதயவீணை படத்தில் வரும் பொன் அந்தி மாலைப் பொழுது ( அதுவும் சங்கர்-கணேஷ்! ) போல சரணத்தின் 6 வரிகளுக்கும் 3 ட்யூன். ஹாரிஸ் ஜெயராஜ் இதை வைத்து ஒரு படமே செய்திருப்பார்.