படம்: பனிமலர்
குரல் : எஸ்.பி.பி. , ஜென்சி
இசை: சங்கர் கனேஷ்
பாடல்: முத்துலிங்கம்
பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச் சந்தங்கள் சிந்தட்டும்
பனியும் நீயே மலரும் நானே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச் சந்தங்கள் சிந்தட்டும்
சித்திரச் சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்

தினம் தினம் நீ காதல் நீராடு
ஹே கற்பனைத் தேரில் அற்புத வானில்
சொர்க்கமும் போய் வருவோம் வருவோம் வருவோம்
மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப் போல இன்பம் பொங்கட்டும்
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம் தரும் உன் வார்த்தை தாலாட்டு
சந்தனம் பூப்போல் சங்கதி சேர்க்க
காவியம் பல தோன்றும் தோன்றும் தோன்றும்
பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச் சந்தங்கள் சிந்தட்டும்
No comments:
Post a Comment