Showing posts with label GANGAI AMARAN. Show all posts
Showing posts with label GANGAI AMARAN. Show all posts

Friday, September 4, 2020

VIDHAITHA VIDHAI - ETHANAI KONAM ETHANAI PARVAI


படம்: எத்தனை கோணம் எத்தனை பார்வை 
பாடல்: கங்கை அமரன் 
இசை: இளையராஜா 
குரல்: தீபன் சக்ரவர்த்தி, பி. எஸ். சசிரேகா



விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது 

ஆசை அலை 
தினமும் எழுந்து
ஆடிவரும் மனது 

காலங்கள் செய்கின்ற கோலங்கள் புதிது
நாளொன்றும் உள்ளத்தின் எண்ணங்கள் புதிது
பாதை இரண்டு பயணம் இரண்டு
பாதை இரண்டு பயணம் இரண்டு
போனால் என்ன மனம்தானே ஒன்று
போகும் பாதை அது சேரும் இன்று
வேறென்ன நாம் சொல்வது


ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….


பூவாக பிஞ்சாகக் காயாகும் நினைவு
பூந்தென்றல் காற்றோடு வந்தாடும் கனவு
நாளும் வரவு சேரும் உறவு
நாளும் வரவு சேரும் உறவு
மேலும் மேலும் பல காதல் கோலம்
தோன்றும் காலம் இது காதல் காலம்
ஆனந்தம்……. ஆனந்தமே…..
 
ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
விதைத்த விதை
தளிராய் எழுந்து
அரும்பி வரும் பொழுது ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
ம்ஹும் ஹும்
ஆசை அலை தினமும் எழுந்து
ஆடிவரும் மனது…….



Sunday, April 12, 2020

MAAMAN ORU NAAL - ROSAPOO RAVIKKAI KAARI



படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
பாடல்: கங்கை அமரன்
இசை: இளையராஜா
குரல்: SPB, SP சைலஜா


மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனை பண்ணி பாத்தேனம்மா
அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா

மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
என் மாமன் ஒரு நாள் மல்லியப்பூ கொடுத்தான்
அடி ஆத்தி இது எதுக்கு
நான் யோசனை பண்ணி பாத்தேனம்மா
அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
வாசத்திலே மதி மறந்து
வாங்கிகிட்டு நான் வச்சிக்கிட்டேன் நான்
மல்லியப்பூ வசம் என் மாமன் மேல வீசும் (மாமன் )


மாங்கா தோப்போரம்  நான் மறுநா(ள்) போனேனா
தேங்கா பூவாட்டம் நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனா
அடி ஆத்தாடி  என்னோரமா என் மாமன் வந்தான் அங்கே

ஏய் என் மாமன் வந்தான் அங்கே  ஒரு மாங்கா தந்தான் திங்க
என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
ஆசையிலே என்ன மறந்து
வாங்கிட்டு நான்  தின்னுபுட்டேன் நான்

மாம (ன்) தந்த மாங்கா நல்ல மல்கோவாதாங்க (மாமன்)


கம்மா கரையோரம் நான் குளிச்சிக் கிட்டிருந்தேனா
சேலை துணி எல்லாம் நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனா
அடி அம்மாடி என்னோரமா
என் மாமன் தானே  வந்தான்
புது சேலை தானே தந்தான்

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ளன்னான் பச்சை புள்ளன்னான்
சேலையிலே என்ன மறந்து
வாங்கிக்கிட்டு நான் கட்டிக்கிட்டேன் நான்

மாமந்தந்த சேலை அந்த மல்லியப்பூ போல (மாமன்)

ஒரு நா(ள் ) தனியா தான் நான் வீட்டில இருந்தேனா
மெதுவா வந்தானாம் நான் வரவா என்றானா
அடி ஆத்தாடி என்னோரமா
புது பாய போட்டான் அங்கே
புது விதமா பாத்தான் இங்கே

என்னத்தை சொன்னான் ஏது சொன்னான்
சின்னபுள்ள நான் பச்சை புள்ளை நான்
ஒன்னுமறியா கன்னி பொண்ணு நான்
மதி மயங்கி படுத்துக்கிட்டேன் 

Saturday, January 21, 2017

KAAMAATCHIYE MEENAATCHIYE - YETHO MOGAM - SPB VJ - GANGAI AMARAN


FILM : YETHO MOGAM
MUSIC: GANGAI AMARAN
LYRICS: GANGAI AMARAN
SINGERS: SPB VJ

காமாக்ஷியே மீனாஷியே என் காதல் உன் சாட்சியே
கண் பாரம்மா என் தேவியே என் நெஞ்சில் உன் ஆட்சியே
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே
என் கல்யாண மேடைக்கு நீ வேணுமே

காமாக்ஷியே மீனாஷியே என் காதல் உன் சாட்சியே
கண் பாரம்மா என் தேவியே என்  நெஞ்சில் உன் ஆட்சியே

நீனும் நானும் சேரும்போது நேரம் ஏது காலம் ஏது
நீனும் நானும் சேரும்போது நேரம் ஏது காலம் ஏது
ஆனந்தம் தீராதது ஆசைகள் மாறாதது
நாம் காண்கின்ற இன்பங்கள் காணாதது
எண்ணங்களில் வந்தாடுதே ஏதேதோ மோகங்கள்
என் நெஞ்சினில் பந்தாடுதே உன் காதல் வேகங்கள்
என் பொன்னாரமே நான் உன்னோரமே
நீ எந்நாளும் தாராயோ முத்தாரமே

காமாக்ஷியே மீனாஷியே என் காதல் உன் சாட்சியே

மாலை வேளை பாவை கண்டு தோளில் சேரும் காலம் இன்று
மாலை வேளை பாவை கண்டு தோளில் சேரும் காலம் இன்று
பாடுங்கள் பூபாளமே ராகங்கள் தேனாகுமே
உன் பொன்னோடம் நான் தானே எந்நாளுமே
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே
என் கல்யாண மேடைக்கு நீ வேணுமே

காமாக்ஷியே மீனாஷியே என் காதல் உன் சாட்சியே
கண் பாரம்மா என் தேவியே என் நெஞ்சில் உன் ஆட்சியே
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே..ஹா
நான் கண் மூடினால் அதில் உன் தோற்றமே ஹும்ம் ம்ம்
என் கல்யாண மேடைக்கு நீ வேணுமே..ஹா ஹா

காமாக்ஷியே மீனாஷியே என் காதல் உன் சாட்சியே
கண்பாரையா உன் தேவியே என்  நெஞ்சில் உன் ஆட்சியே




Thursday, July 7, 2016

SIRU PON MANI ASAIYUM ADHIL - KALLUKKUL EERAM - IR SJ


FILM: KALLUKKUL EERAM
SINGERS: ILAIYARAAJAA SJ
MUSIC: IR
LYRICS: GANGAI AMARAN

 சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

நதியும் முழு மதியும்
இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும்
இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்