காலம் யாவும் கவிதைகள் சொல்லி கைகளில் ஆடி வாழ்ந்திடுவேன்
காணும் யாவும் இனிமைகள் சொல்ல
கண்ணொடு கண்ணாய் சேர்ந்திருப்பேன்
நல்வரம் வேண்டும் நன்மைகள் வேண்டும்
நல்மனதோடு கேட்கிறேன்
என் உள்ளம் உன் இல்லம்
இன்பம் எங்கெங்கும்
ததம்தம்தம் ததம்தம்
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம் தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
இருவர் ஒருவர் இனிதானே உறவினில் இணைவோமே பருவம் கனிந்த புதுத்தேனே பழகிக் களிப்போமே உனக்கும் எனக்கும் பொருத்தம் வளர வளர சுகமே இனிக்கும் இதழில் அமுதம் பருக பருக சுகமே ஆனந்தம் உல்லாசம் வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
குளிரும் வாட்டுதடி பெண்ணே விலகி ஓடாதே கொடியும் படர்ந்துவரும் கண்ணா படரும் கிளை நீயே சிரித்து சிரித்து மயக்கும் புதுமைப் பதுமையே வா அழைத்து அணைத்து வளைத்து ரசிக்கும் ரசிகனே வா ஆனந்தம் உல்லாசம் வா எந்தன் பக்கத்தில் ஐ லவ் யூ ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
காவிரியே கவிக்குயிலே கண்மணியே வா வா மனம் தாவுதடி தவிக்குதடி தளிர்க்கொடியே வா வா பூங்காற்று தாலாட்ட தாளாத மோகம் தீராத மோகங்கள் தீராமல் தீரும்
ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட் ஓ மை லவ்...யுவர் மை ஸ்வீட் ஹார்ட்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில் பாடிடும் எண்ணங்களே இந்தப் பாவையின் உள்ளத்திலே பூவிதழ் தேன் குலுங்க சிந்தும் புன்னகை நான் மயங்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சணை நொந்தது காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன் நாளொரு தேகமும் மோகமும் தாபமும்
வாலிபம் தந்த சுகம் இளம் வயதினில் வந்த சுகம் தோள்களை நீயணைக்க வண்ணத் தாமரை நான் சிரிக்க ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ காவியமோ கண் வரைந்த ஓவியமோ எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பூக்காரி (1973) , மு.க.முத்துவின் மாக்னம் ஹோப்லஸ் படங்களில் ஒன்று. பிள்ளையோ பிள்ளையில் (1972) அறிமுகமான மு.க.முத்து , எம்.ஜி.ஆர் விக்குடன் தமிழ் சினிமாவிற்கு சொல்லொணாத் துன்பங்கள் கொடுக்கத் துவங்கியிருந்தார். ஒரு புறம் கலைஞர் கண்ணொளித் திட்டம் வழங்கிக்கொண்டிருக்கும்போது மறுபுறம் இந்தக் கொடுமை நிகழ்ந்துகொண்டிருந்தது. எமர்ஜென்சியினால் இந்தியாவிற்கு ஏற்பட்ட ஒரே நன்மை மு.க.முத்துவின் திரைக்காவியங்கள் வருவது நின்றது. பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், பூக்காரி, அணையாவிளக்கு, இங்கேயும் மனிதர்கள் என்று அடித்த புயல் நின்றது. மறுமுறை அவர் இராம.நாராயணனின் , வீரன் வேலுத்தம்பி, SA ராஜ்குமார் இடையில் படத்தில் " சுருளு மீசைக்காரனடி" என்று பந்தா தம்பி ராம்கியைப் புகழ்ந்து பாடும்போது தமிழ்சினிமா அவரை இனிதே மறந்திருந்தது.
வெண்ணிற ஆடை நிர்மலா ஒரு புரியாத புதிர். ஜெயலலிதா, மூர்த்தி, ஶ்ரீகாந்த்துடன் அறிமுகமாகி, மன்னிப்பு போன்ற படங்களில் சுமாராக நடித்தும் , பெண் சரத்பாபு போல்( பல படங்களில் நடித்தும் ) யாதொரு தடத்தையும் விட்டுச்செல்லாதவர். 70 களில் பிரபலமான பிரமீளா, ஜெயசித்ரா, மஞ்சுளா போன்றவர்களைவிட நல்ல தோற்றத்தையும், நடிப்பையும் , நடனத்தையும், கொண்டிருந்தும், அவர் கண்ணில் தென்படாத ஒன்று ......கான்ஃபிடென்ஸ். இதயக்கனியில் ப்ரப்பிரம்மமாக நிற்கும் ராதா சலூஜாவின் கண்களில் தென்படும் கான்ஃபிடென்ஸ் கூட " தொட்ட இடம் எல்லாம்" பாட்டில் நிர்மலாவிடம் இருக்காது. அவர் எம்.எல்.சி பதவி பெறாததற்கு இது காரணமில்லை எனினும்.
அமிர்தம், கிருஷ்ணன்-பஞ்சு போன்ற கழக விசுவாசிகள் கைவண்ணத்தில் உருவான பூக்காரி....மஞ்சுளா பூக்காரி! இந்தப் படத்திற்கு " கைவண்டி இழுக்கும் அப்பாவையும், சினிமாப் பைத்திய தங்கையும் காப்பாற்றும் இளைஞன்" என்று பெயர் வைத்திருந்தாலும். வித்தியாசம் இருந்திருக்காது. பின்னாளில் டார்லிங் டார்லிங் டார்லிங் பாட்டில் ஶ்ரீதேவியுடன் வந்த கன்னட அம்பரீஷ், வில்லன்! அதேபோல் ஜெயசித்ரா பின்னாளில் சினிமா பைத்தியம் படத்திலும் நடித்தது ஒரு பைத்தியக்கார சிறப்பு.
குமுதம் லைட்ஸ் ஆனில் எம்.எஸ்.வி பற்றி சொல்லும்போது " எம்ஜியாருக்கும் வேண்டியவர், சிவாஜிக்கும் வேண்டியவர், கலைஞருக்கும் வேண்டியவர் என்றால் கோடம்பாக்கத்தில் எம்.எஸ்.விதான்" என்று எழுதியிருப்பார் ரா.கி.ர. அதே 1973 ல் பூக்காரியும், உலகம் சுற்றும் வாலிபனும், பொன்னூஞ்சலும் !
முத்துப்பல் சிரிப்பென்னவோ ( TMS-PS) , முப்பது பைசா மூணு முழம் ( LRE) மற்ற பாடல்கள்.
இந்தப்பாடல் TMS-SJ வின் டூயட்டில் நீல நிறம் ( என் அண்ணன்) மிகச்சிறந்த இரண்டாவது பாடல். ஆனால் இந்தப்பாடல் , கிலோமீட்டர் கணக்கில் முதல் பாடல். பஞ்சு அருணாசலத்தின் வரிகள். கண்ணை மூடிக்கொண்டு கேட்கவேண்டிய பாடல்களிலும் தலையாயது இதுவே. அபாரமான வயலின், ஹம்மிங்!
" விழி ஓரங்களில் சில நேரங்களில் வரும் பாவங்களும்" என்று அந்தக்காட்சியில் நடிகர்கள் இருவரிடமும் இல்லாத ஒன்றைப்பற்றி எழுத ஒரு மனோதிடம் வேண்டும்.
TMS குரலின் ஒரு சேர வெளிப்படும் ஒரு கம்பீரமும் காதலின் மென்மையும் , ஜானகியின் குரலில் வெளிப்படும் நாணமும் இந்தப்பாடலை மறக்கமுடியாத பாடல் ஆக்கியுள்ளது.