Showing posts with label PULAMAIPPITHAN. Show all posts
Showing posts with label PULAMAIPPITHAN. Show all posts

Thursday, May 7, 2020

RADHI DEVI SANNIDHIYIL - ORU VEEDU ORU ULAGAM



படம்: ஒரு வீடு ஒரு உலகம்
பாடல்: புலமைப்பித்தன்
இசை: MSV
குரல்: TL மகராஜன், சசிரேகா

ரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை ரதிமாரன் மந்திரமோ விழிகளின் பாஷை நாள்தோறும் ஓதுவதில் எத்தனை ஆசை ஆரூரின் தேரொன்று அசைந்து ஆடி வரும் கோலம் கொண்டதென்ன தேவாரப் பாட்டு நீ பாடக் கேட்டு மயங்கி நின்றதென்ன சொல்ல திருமண மேடையில் நாதஸ்வரம் இரு மன மேடையில் நாளும் சுகம் ரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை இதழ்மணி ஓசை நீ தந்த செந்தூரம் நிலைக்க வேண்டுமென பாடிடும் தென்றல் காற்று என் காதல் தேவி பல்லாண்டு வாழி இதுவும் தென்றல் சொன்ன பாட்டு இனித்திடும் மங்கல வாழ்த்துக்களே இசைத்தன செந்தமிழ் பாட்டுக்களே ரதி தேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளில் இதழ்மணி ஓசை இதழ்மணி ஓசை

Monday, December 26, 2016

THANGA MAGAL THULLI VANDHAAL - THIRUPPAM


http://www.saavn.com/s/song/tamil/Thiruppam/Thangamagal-Allithanthal/HAc0fRtWTUU

படம்: திருப்பம்
குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி.
பாடல்: புலமைப்பித்தன்

தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்


மெய்வண்ணம் கைவண்ணம் தேடும்
உடல் மேலுக்கும் கீழுக்கும் ஆடும்
என் நெஞ்சும் உன் நெஞ்சும் கூடும்
சுகம் என்னென்று பெண்ணின்று பாடும்
சித்தரித்த பெண்ணழகு
செண்டு கட்டும் முன்னழகு
சிக்கவைக்கும் கண்ணழகும்
பொல்லாதது..


வெற்றி உன்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்


கார்கூந்தல் மாணிக்கப்பந்தல்
இது கண்ணல்ல எண்ணத்தின் வாசல்
உன் தேகம் என் காதல் நாவல்
பக்கம் ஒவ்வொன்றும் வாசிக்க ஆவல்
அச்சடித்த புத்தகத்தை
அட்டைப்பட சித்திரத்தை
இச்சைப்படி தொட்டுப்படி
இன்றாவது....


வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்



Monday, July 4, 2016

EN THALAIVI IRUKKUM IDAM THEDUNGAL - MALLIGAI MOHINI


படம்: மல்லிகை மோகினி
இசை: ஜி.கே.வெங்கடேஷ் 
குரல்: எஸ்.பி.பி.
பாடல்: புலமைப்பித்தன் 

என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் 
ஆத்மாவின் தாகங்கள் 
பாரென்று  சொல்லுங்கள் 
மேகங்களே இங்கு வாருங்களேன்

ஏழு ஜென்மமும் தொடர்ந்து வரும் சொந்தமோ 
நான்கு நாளிலே மறந்து விடும் பந்தமோ 
ஏனிந்த மாற்றங்கள் 
கேட்டிங்கு வாருங்கள் 
மேகங்களே இங்கு வாருங்களேன்

காதல் நெஞ்சினில் நினைவிழந்து போனதோ 
பார்க்கும் கண்களில் திரை விழுந்து போனதோ 
தூங்காத கண்ணிங்கே 
நான் தேடும் பெண்ணெங்கே 
மேகங்களே இங்கு வாருங்களேன்

காதல் என்பதோர் கவியெழுதி பாடினேன் 
காலம் வந்தது கதை முடிந்து போகிறேன் 
நாளைக்கு சந்திப்போம் 
ஆகாய சொர்கத்தில் 
மேகங்களே இங்கு வாருங்களேன்

Friday, April 29, 2016

NAAN ORU KOVIL NEE ORU DEIVAM - NELLIKKANI



படம்: நெல்லிக்கனி
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.பி.பி., மலேசியா வாசுதேவன்
பாடல்: புலமைப்பித்தன் 

நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம் 
உன்னைத் தேடி நான் வந்தேன் 
உன்னில் என்னை நான் கண்டேன் 
உன்னால் இங்கு வாழ்கின்றேன் 

அன்னை என்ன தந்தை என்ன 
உன்னைக் கண்ட பின்னாலே 
உயர்வென்ன தாழ்வுமென்ன
உந்தன் அன்பின் முன்னாலே
கடல் நீரும் வற்றிப்போகும் 
நமதன்பு வற்றாது 
ஒரு கோடி ஜன்மம்
எங்கள் நட்புக்குப் போறாது

சொர்க்கம் நேரில் வந்தால் கூட 
உன்னைவிட்டுப் போவேனோ 
உனக்கென்று என்னைத் தந்தேன் 
எனக்கென்று வாழ்வேனோ 
விஷமென்று நீ தந்தாலும் 
அமுதாக மாறாதோ
விழி மூடி தூங்கும் போதும்
உன் வண்ணம் தோன்றாதோ


கங்கை வேடன் தன்னை இராமன்
தோழன் என்று கொண்டானே
கர்ணன் கொண்ட தோழமைக்காக
ஆவி தன்னைத் தந்தானே
கவி வேந்தன் கம்பன் வந்து
நமைப் பாட மாட்டானோ
கதையல்ல உண்மையென்று
வரலாறு காட்டானோ