Monday, December 26, 2016

THANGA MAGAL THULLI VANDHAAL - THIRUPPAM


http://www.saavn.com/s/song/tamil/Thiruppam/Thangamagal-Allithanthal/HAc0fRtWTUU

படம்: திருப்பம்
குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
இசை: எம்.எஸ்.வி.
பாடல்: புலமைப்பித்தன்

தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்


மெய்வண்ணம் கைவண்ணம் தேடும்
உடல் மேலுக்கும் கீழுக்கும் ஆடும்
என் நெஞ்சும் உன் நெஞ்சும் கூடும்
சுகம் என்னென்று பெண்ணின்று பாடும்
சித்தரித்த பெண்ணழகு
செண்டு கட்டும் முன்னழகு
சிக்கவைக்கும் கண்ணழகும்
பொல்லாதது..


வெற்றி உன்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்


கார்கூந்தல் மாணிக்கப்பந்தல்
இது கண்ணல்ல எண்ணத்தின் வாசல்
உன் தேகம் என் காதல் நாவல்
பக்கம் ஒவ்வொன்றும் வாசிக்க ஆவல்
அச்சடித்த புத்தகத்தை
அட்டைப்பட சித்திரத்தை
இச்சைப்படி தொட்டுப்படி
இன்றாவது....


வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்



No comments:

Post a Comment