உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ.. உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ.. உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ .. ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்
தரைமேல் பிறக்க வைத்தான்..
கட்டிய மனைவி தொட்டிலில் பிள்ளை உறவை கொடுத்தவர் அங்கே அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல் தான் எங்கள் வீடு முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் இதுதான் எங்கள் வாழ்க்கை இதுதான் எங்கள் வாழ்க்கை
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்
கடல் நீர் நடுவே பயணம் போனால் குடி நீர் தருபவர் யாரோ தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ஊரார் நினைப்பது சுலபம்
தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான்
படம்: ஒரு குடும்பத்தின் கதை
பாடல்: வாலி
இசை: சங்கர் கணேஷ்
குரல்: K.J.யேசுதாஸ், B.S. சசிரேகா.
மலைச்சாரலில் இளம்பூங்குயில் - அதன்
மார்பினில் ஒரு ஆண் குயில்
அது நானல்லவா.. துணை நீயல்லவா
அன்பு கீதம் நாம் பாடும் நாள் அல்லவா
ஈரேழு ஜன்மத்தின் பந்தம் இது - ஒரு
இழை கூட பிரியாத சொந்தம் இது
தெய்வீகம் பெண்ணாக நேர் வந்தது - எந்தன்
திருவீதி வழி தேடி தேர் வந்தது
தொடும் உறவானது தொடர் கதையானது
இந்த நாதம் கலையாத இசையானது
(மலை...)
பனி தூங்கும் மலரே உன் மடி என்பது - இரு
கனி தூங்கும் தேன் திராக்ஷை கொடி என்பது
நினைத்தாலும் அணைத்தாலும் கொதிக்கின்றது - அதில்
நான் தேடும் இன்பங்கள் உதிக்கின்றது
விழி சிரிக்கின்றது கவி படிக்கின்றது
திருமேனி தாளாமல் நடிக்கின்றது
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலைநிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா ?...
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை !...
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான் ?...
ஒருத்தருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
படம்: தாய் மூகாம்பிகை இசை: இளையராஜா குரல்: இளையராஜா பாடல்: வாலி (ஆதி சங்கரரின் சௌந்தர்ய லஹரியில் வரும் முதல் ஸ்லோகம் இது) சிவ சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல ஸ்பந்திதுமபி
அத ஸ்த்வாம் ஆராத்யாம் ஹரிஹர விரிஞ்சாதிபிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்ய: ப்ரபவதி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
ஷண்மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும் பூங்கழலே மலை மாமகளே
தொழும் பூங்கழலே மலை மாமகளே
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல தோத்திரங்கள் தர்ம சாத்திரங்கள்
பணிந்தேத்துவதுன் மணி நேத்திரங்கள்
பணிந்தேத்துவதுன் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ ...
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜனனி ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ.. இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் சொன்னது:
டைரக்டர் கே. ஷங்கர் என்னிடம் ”தாய்மூகாம்பிகை” படத்திற்கென ஒரு சிச்சுவேஷன் சொல்லியிருந்தார். அந்த சமயங்களில் இரவு இரண்டு மணிவரை எனக்கு கம்போஸிங் இருக்கும். மீண்டும் காலையில் ரெக்கார்டிங் இருக்கும்.இவர்களுக்கு கம்போஸிங்கிற்காக எனக்கு நேரம் ஒதுக்க இயலாமல் இருந்தது.அந்த சமயத்தில் நான் ‘நார்த் உஸ்மான் ரோட்டில்’ ஒரு வாடகை வீட்டில் இருந்தேன்.
அடுத்த நாள் பூஜை..! பாட்டு இன்னும் தயாராகவில்லையே என்று டைரக்டர் பதறத் துவங்கிவிட்டிருந்தார். நான் அவரிடம் ‘பதறத் தேவையில்லை. இரவு வீட்டிற்கு வாருங்கள்.. அங்கேயே கம்போஸிங் வைத்துக்கொள்ளலாம்’ என்று கூறினேன்.
‘ஆதிசங்கரர் மூகாம்பிகையை பிரதிஷ்டை செய்கிறார். அவர் தியானத்தில் சர்வ சக்திகளும் ஐக்கியமாக அவருக்குக் காட்சியளிப்பதைப் போன்ற’ காட்சி என்று எனக்கு முதலிலேயே சிச்சுவேஷனைச் சொல்லியிருந்தனர். இரவு அனைவரும் வந்துவிட்டனர். நான் குளித்துவிட்டு, பூஜை அறையைக் கடந்தபோது ஆதிசங்கரரின் படம் என் கண்களில் பட்டது. நான் நின்று, ”குருவே..! நீங்க என் பாட்டுல வர்றீங்க..” என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். என் பக்தி அவ்வளவுதான்.
உள்ளே சென்றால் வாலி சார், டைரக்டர், தபலா கன்னையா அண்ணன், என அனைவரும் வந்தமர்ந்திருந்தனர். மீண்டும் சிச்சுவேஷனைச் சொன்னார்கள்.வாலி சாரும் கேட்டுக்கொண்டார். கேட்டவுடன் கம்போஸிங் துவக்கினேன்.முழுவதும் முடித்துவிட்டேன். டைரக்டருக்கும் பிடித்துவிட்டது. வாலி பாடலை எழுதத் துவங்கிவிட்டிருந்தார். பல்லவி எழுதி முடித்தார். அனைவரும் காபி சாப்பிடக் கலைந்தனர். நானும் எழுந்தேன். வெளியே வந்து யோசித்தால், ”ஆதிசங்கரர் யார்..? எல்லாவற்றையும் துறந்தவர் அல்லவா? அந்தத் துறவறம் இந்தப் பாடலில் தெரிகிறதா? எல்லாவற்றையும் விட்டுவிட்டுப்போன அந்த Detachment தெரிகிறதா? Tune சரியாக இருக்கிறது. ஒரு ராகத்தில் சிறப்பாய் இருக்கிறது. ஆனால் இந்தப் பாடல் ஆதி சங்கரர் பாடுவது போலவே இல்லையே..? ஒரு சங்கீத வித்வான் பாடுவதுபோலல்லவா இருக்கிறது. திருப்தியாக இல்லையே..!” என்று எனக்குத் தோன்றியது.
நான் மறுபடியும் சென்று, ‘சார்.. ஓ.கே. பண்ணிட்டீங்க. ஆனால் நான் வேறொன்று செய்து தருகிறேன்’ என்றேன். அதற்குள் பாடகர் யேசுதாஸை பாடலைப் பாடவைப்பதற்காக யோசித்துக்கொண்டிருந்தனர். மறுபடியும் உட்கார்ந்தோம்.உட்கார்ந்து துவக்கினால்… ’தரரா.. தரரா… (ஜனனி ஜனனி பாடலின் மெட்டைப் பாடிக்காட்டுகிறார்) என்று முடித்தேன். வாலி சார், ‘ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ; ஜகத்தாரணி நீ பரிபூரணி நீ” என்று எழுதினார்.
பாடலை முழுவதும் பாடி முடித்தால், கதாசிரியர், அஸிஸ்டண்ட் டைரக்டர்ஸ் அனைவரின் கண்களும் கலங்கியிருந்தன. ‘பாடல் ரொம்பப் பிரமாதமாக வந்திருக்கிறது சார்..!’ என்றார்கள். அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
கம்போஸிங் முடிந்து .. அனைவரும் கலைந்து சென்றனர். நான் எழுந்தேன்.‘குருவே.. என் Tune’ல் நீங்கள் வந்தீர்கள் என்று எப்படி நான் அறிந்துகொள்வது.?’ என்று மனதுக்குள் நினைத்தேன். அப்போது அங்கு ஓடிக்கொண்டிருந்த மின்விசிறியின் காற்றில் மிதந்துவந்த காகிதம் ஒன்று என் கையில் அமர்ந்தது.அதை விரித்தால், ‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’ என்று இருந்தது. பாடத்துவங்கினேன்.
‘பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..
பஜகோவிந்தம்.. பஜகோவிந்தம்..’
’ஜனனி ஜனனி’ பாடல்.. ‘பஜகோவிந்தம்’ Meter'ல் அமைந்திருந்தது. ‘அடடே.. குருவே...!! இப்படித்தான் என் பாடலில் வந்தீர்களா..?’ என்று எனக்குச் சொல்லமுடியாத சந்தோஷம்.
அடுத்த நாள் ரெக்கார்டிங். யேசுதாஸ் ஊரில் இல்லை. டைரக்டர், ’யேசுதாஸ் பாடினால்தான் நன்றாக இருக்கும்’ என்று கூறினார். நான் டைரக்டரிடம், ‘நான் பாடுகிறேன். ரெக்கார்டிங் செய்துவிடுவோம். அதன்பின்னர் யேசுதாஸ் வந்தவுடன் அவரைப் பாடவைத்து மிக்ஸ் செய்துகொள்ளலாம்’ என்று கூறினேன். அந்த இடத்தில் வேறு வழியில்லாததால் நானே பாடிவிட்டேன்.
பாதிக் கண்ணாலே சேதி சொன்னாளே பித்த நாடி சத்தமாச்சு
மோகம் தாங்காம தேகம் தூங்காம மொட்ட மாடி கெட்டுப்போச்சு
சூடும் உண்டாச்சு மூடும் வந்தாச்சு ஜோடி நான் சேரத்தான்
காதல் சங்கதி கூறும் சுந்தரி
மாலை சூட வேளை கூட போதை ஏற ஆசை தீர ஹோய்
(பாக்கு..)
நாடு பூராவும் தேடிப் பார்த்தாலும் நம்மாளு போல ஏது
மாமன் நானாக பாவம் தானாக வாசல் தேடி வந்த மாது
ஆளப் பார்த்தாச்சு மாலை போட்டாச்சு ஜோடி சேர்ந்தாச்சம்மா
பாலைக் காச்சுடா பாயைப் போடுடா
வாசம் வீசும் ரோசாப் பூவை வாங்கி வந்து தூவு தூவு ஹேய்
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்
தோம்த.... தோம்த.... தோம்த.... தகதின
தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின
தோம்த.... தோம்த.... தோம்த.... தோம்த....தகதின தோம்....
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு
பூ என்று முள்ளைக் கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா
உனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
ஒருவன் இதயம் உருகும் நிலையை
அறியா குழந்தை நீ வாழ்க
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்
உறங்கா மனதை நீ காண்க
கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா
சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்
மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்
மறந்தா இருக்கும் பொன் வீணை
மடிமேல் தவழ்ந்தே வரும் நாள்வரை நான்
மறவேன் மறவேன் உன் ஆணை
நீ இல்லையேல் இங்கு நானில்லையே
எந்தன் ராகங்கள் தூங்காது
அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா
சின்னப்புறா ஒன்று எண்ணக் கனாவினில்
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது
நினைவில் உலவும் நிழல் மேகம்
நூறாண்டுகள் நீ வாழ்கவே
நூறாண்டுகள் நீ வாழ்கவே
இயக்கம்: B R பந்துலு நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதி தோற்றம்தானோ
ராணி உந்தன் மேனி என்ன
ராஜவீதி தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
கேள்வி கேட்ட மன்னன் மேனி
தேவன் கோவில் தோற்றம்தானோ
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
வெண்பட்டு மேனியில்
கண்படும் வேளையில்
மூடுது மேலாடை
கண்படும் வேளையில்
கைபடுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ சதிராட்டம்
இலைகளில் ஆடும் கனியாட்டம்
கண்ணோட்டம்
என் தோட்டம்
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
தென்மலை மேகங்கள்
பொன்வலை போட்டன
கூந்தலில் நீராட
மின்னலில் மேனியும்
பின்னலில் கூந்தலும்
மிதப்பது யாராட
புது மழை போலே நீரோட
அதிசய நதியில் நானாட
நீ ஆட
ஆஹா தேனோட
மாணிக்கத் தேரில் மரகதக் கலசம்
மின்னுவதென்ன
என்ன
மன்னன் முகம் கனவில் வந்தது
மஞ்சள் நதி உடலில் வந்தது
FILM : YAARUKKU YAAR KAAVAL
MUSIC: K J JOY
LYRICS: VAALI
SINGERS: SPB VJ
பொண்டாட்டி நீ தொட்டாலென்ன புருஷனின் கை பட்டாலென்ன நாளாச்சு நீயும் நானும் காதல் விளையாடி
பொண்டாட்டி நீ தொட்டாலென்ன புருஷனின் கை பட்டாலென்ன நாளாச்சு நீயும் நானும் காதல் விளையாடி தொட்டாலும் நான்தானே தொட்டில் போடணும் தோளோடு ரெண்ட வச்சு பாட்டுப்பாடணும் அட்டைப்போலே ஒட்டாதே அங்கே இங்கே கட்டாதே வேண்டாம் சாமி காதல் விளையாட்டு
பொண்டாட்டிதான் இல்லேங்கலே போதுமைய்யா அன்புத்தொல்லே பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி
ஆசைகள் தூங்காமல் அன்பே உன்னை எழுப்ப அள்ளாமல் கொள்ளாமல் ஏன் உறக்கம் ஆசைகள் தூங்காமல் அன்பே உன்னை எழுப்ப அள்ளாமல் கொள்ளாமல் ஏன் உறக்கம் கட்டி முத்தங்கள் கட்டில் சத்தங்கள் இன்ப வர்கங்கள் என்ன தர்க்கங்கள்
பொண்டாட்டி நீ தொட்டாலென்ன புருஷனின் கை பட்டாலென்ன நாளாச்சு நீயும் நானும் காதல் விளையாடி
பூமாலை மாங்கல்யம் சூடிக்கொண்ட பிறகு நான் பார்த்த இன்பங்கள் ஓர் இரவு பூமாலை மாங்கல்யம் சூடிக்கொண்ட பிறகு நான் பார்த்த இன்பங்கள் ஓர் இரவு அந்த இன்பங்கள் கானல் நீராக வந்த துன்பங்கள் ஒன்று நூறாக
பொண்டாட்டிதான் இல்லேங்கலே போதுமைய்யா அன்புத்தொல்லே பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி
ஏர் கால்கள் பாயாமல் நஞ்சை நிலம் எதற்கு எழுத்தாணி பதியாமல் ஏடெதற்கு ஏர் கால்கள் பாயாமல் நஞ்சை நிலம் எதற்கு எழுத்தாணி பதியாமல் ஏடெதற்கு என்ன சொன்னாலும் புத்தி மாறாதோ காமன் பாணங்கள் என்னைக்கொல்லாதோ
பொண்டாட்டிதான் இல்லேங்கலே போதுமைய்யா அன்புத்தொல்லே பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி பொண்டாட்டிதான் இல்லேங்கலே போதுமைய்யா அன்புத்தொல்லே பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி பட்டேனே நீயும் நானும் காதல் விளையாடி
படம்: வருஷம் 16 இசை: இளையராஜா குரல்: KJ ஜேசுதாஸ் பாடல்: வாலி பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் நாந்தான் அதன் ராகம் தாளமும் கேட்பேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் (பழமுதிர்..)
தூரத்தில் போகின்ற மேகங்களே தூறல்கள் போடுங்கள் பூமியிலே வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களேன் ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே (பழமுதிர்..)
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்த்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட (பழமுதிர்..)
கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளமேனி உன் வசமோ
(கண்ணாலே)
உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ
படம்: தேவர் மகன்
இசை: இளையராஜா
குரல்: மின்மினி, ஸ்வர்ணலதா குழுவினர்
பாடல்: வாலி
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென நீல விழியும்
பிறைனுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியென தமிழ் மறை தொழும்
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
உனதாணை தனை ஏற்று பணியாற்றுதே
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
திரிசூலம் கரமேந்தும் மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எமையே
பாவம் விலகும் வினை அகலும் உனை துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும் சூலி என ஆதி என
அடியவர் தொழும்
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென நீல விழியும்
பிறைனுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியென தமிழ் மறை தொழும்
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
ஹேய்ய் யே யே ஏய்
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச யம்மா
ஓ...ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச அம்மா
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
................
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
அக்கா பெத்த சொக்கா பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு
ஹெய் திக்க தின்னதின்ன தைத
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்குற
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே
ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி யெப்போ
அ அ அ ஆ
ஹான்..... ஊத வேணும் பீப்பி.. பீப்பி... பீப்பி..
டும்.. டும் ...டும்... டும்.. பீப்பி.. பீப்பி.. பீப்பி...
கண்ணாலம் கச்சேரி யெப்போ
நேரங்காலம் நல்லாருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லா..ருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
சதக்க்... சக்குனக்க... னக்க.... னக்கஜன
ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே லேய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
கொண்ட வச்ச சேவல் வந்தா
கொக்கரிச்சு கொஞ்ச வந்தா
கொகொக்கோ... கொக்க்கோ
முட்ட வெக்கும் பெட்ட கோழி
முட்டாதையா மயக்கத்த கொடுக்குற
ஆடி மாசம்... யெ... யெ.... யே...
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
ஹேய்... ஹேய்.... ஹேய்
அட நீ தான் ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்ப்ப்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே... மாங்குயிலே
அடி.... நானே ஆண்குயிலே
குயிலே ..குயிலே... யே.... யே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
ஆவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும்போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச் சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
ஒரு சித்திரத்தில் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில் நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொரு நாளும் தலைவன் கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில் கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில் பெண் மயங்கும்
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்லச் சொல்ல நாணம்
மெல்ல மெல்ல என்னை மறப்பதென்ன
ஒரு தங்கச் சிலை என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம் என்று நீ இருந்தாய்
இத்தனை காலம் இருந்தேன் இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும் இந்த இனிமை இல்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
அன்று மறு நாள் ஒரு வார்த்தையில் விருந்து வைத்தாய்
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
வெண்ணையை அள்ளி உண்டு
வேங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற
கன்னிகை ராதையாக
தேடி வந்தாய்
குயில் இசையும்
குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது
இன்று வந்த சொந்தமா
கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாய் இருந்து
மாறாத அன்பு கொண்டு
மாலையிட்டாய்.
குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே
இன்று வந்த சொந்தமா....
இன்று வந்த சொந்தமா என்ற சித்ராங்கி திரைப்படப் பாடல் 2 ஹிந்தி பாடல்களின் கலவை.. மிக அழகாக இரண்டையும் இணைத்திருப்பார் வேதா.. பல்லவி 'யே நயி நயி' என்ற பாக்கட் மார் படத்துப் பாடலில் இருந்தும், சரணங்களை 'நா தும் ஹமே ஜானோ ' என்ற பாத் ஏக் ராத் கி என்ற படத்துப் பாடலில் இருந்தும் எடுத்து இணைத்திருப்பார்.. இரண்டும் தேவ் ஆனந்த் படங்கள்.. https://www.youtube.com/watch?v=6jVdfGM6Kss
முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இந்தியாவிலேயே தன மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.
ஒரு நாள் ப்ரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
அந்நாளில் வெங்கடாசலம் என்பவரதுவீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வ ழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர் சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.
50களில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீராம். அவர் மூலம் சிங்களப் படத் தயாரிப்பாளர்களான ஜெயமனே சகோதரர்களின் அறிமுகம் வேதாவிற்கு கிடைத்தது. "மாறும் விதி என்ற சிங்களப் படத்திற்கு வேதா இசை அமைத்தார். அந்தப் படம் வேதாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பின்னர் ஜெயமனே சகோதரர்கள் தயாரித்த பத்து படங்களுக்கு வரிசையாக வேதான் இசை அமைப்பாளர். இதில் ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழா கண்டது.
வேதாவிற்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பு, ஜூபிலி ஃபிலிம்ஸின் "மர்ம வீரன்". இதுவும் நடிகர் ஸ்ரீராமின் உதவியால் வந்த வாய்ப்பு ஆகும். இப்படத்தில் ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றன. சந்திரபாபுவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அடுத்து எஸ் எஸ் ராஜேந்திரன், பண்டரிபாய், டி ஆர் ராமச்சந்திரன், பாலாஜி, எஸ் வி ரங்காராவ், தேவிகா ஆகியோர் நடித்த அன்பு எங்கே படத்திற்கு இசை அமைத்தார் வேதா. இதில் சிங்கள பைலா பாணியில் இவர் இசையமைத்த "டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. இதே படத்தில் கவ்வாலி பாணியில் "நயா தௌர்" என்ற படத்தில் இடம் பெற்ற பிரபல ஹிந்திப் பாடலான "ரேஷ்மி சல்வார் குர்தா ஜாலி கா" என்ற பாடலின் மெட்டில் "அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா" என்ற பாடலும் பெருத்த வரவேற்பை பெற்றது.
அடுத்து நடிகர் ஸ்ரீராம் ஜெமினி சாவித்திரி இவர்களை வைத்து தயாரித்த "மணமாலை" படத்திற்கு இசையமைத்தார் வேதா. இப்படத்தின் P B ஸ்ரீனிவாஸ் குரலில் "நெஞ்சம் அலைமோதவே, கண்ணும் குளமாகவே கொஞ்சும் கண்ணைப் பிரிந்தே போகிறாள், ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்போகிறாள்" என்ற பாடல் மிகவும் பிரபலம்.
அடுத்து "மின்னல் வீரன்" என்ற படம். ஏ எல் நாராயணன் கதை வசனம் எழுதி நான்கு பாடல்களையும் எழுதியிருந்தார். சில தோல்விப் படங்களின் பாடல்களும் காணாது போய்விடுவதுபோல் இப்படத்தின் பாடல்களும் காணாது போயின. "கனியே, கண்ணான செல்வமே, தாலேலோ" என்று P B ஸ்ரீனிவாஸ் பாடிய பாடலும் அது போல காணாது ,போய்விட்டது. "காலையிலே வலைஎடுத்து கால் வாயிற்று கஞ்சிக்காக நாள் நாள் முழுதும் பாடுபடும் தொழிலாளி" என்ற பாடலும் அவ்வாறேதான். கரைமேல் பிறக்க வைத்தான் என்பது போல் இதுவும் ஒரு மீனவப் பாடல்தான். இன்னொரு பாடல் "கண்ணோடு கண்ணினை நோக்கின்" என்ற ஜெயலக்ஷ்மி (ராதா) பாடும் பாடல். சுத்தமான கரகரப்பிரியா இராகத்தில் அமைந்தது. ஏ எல் நாராயணின் இலக்கிய மணம் மிக்க வரிகளுக்கு ஏற்றதொரு இசையை வழங்கியிருந்தார் வேதா
(நான் இவ்வளவு விரிவாக எழுதவற்கு காரணம், வேதா என்றாலே ஹிந்திப் பட மெட்டுக்களை காப்பி அடிப்பவர் என்ற ஒரு கருத்து நிலவுவதுதான். அவர் தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தால்தான் அவ்வாறு செய்ய நேர்ந்தது - குறிப்பாக மாடர்ன் தியேட்டார்ஸ் சுந்தரம். வேதா அனைத்து இசை வடிவங்களிலும் தேர்ச்சி பெற்றவர்.)
வேதாவின் CLASSICAL பரிமாணத்தை காட்ட வந்த படம் பார்த்திபன் கனவு. கல்கி அவர்களின் சரித்திர நவீனத்திற்கு உயிரோட்டம் அளிப்பதுபோல் அமைந்தது வேதாவின் இசை. "கண்ணாலே நான் கண்ட கணமே (மருதகாசி), பழகும் தமிழே பார்த்திபன் மகனே (கவியரசர்) இதயவானின் உதய நிலவே (விந்தன்), போன்ற மனதை மயக்கும் மெல்லிசைப் பாடல்கள் , பின்பு அந்தி மயங்குதடி என்று கல்யாணி ராகத்தில் பாரம்பரிய இசை (எம் எல் வசந்தகுமாரி) என்று ஒரு இசை விருந்தே படைத்திருப்பார் வேதா. அந்தி மயங்குதடியில் இராகத்தின் விலாசங்களைக் காட்ட சிதார் சதிராடும். இதய வானின் பாடலில் வயலின்களின் மேற்கத்திய தாக்கத்தை நாம் உணரலாம். இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.
1963ல் வேதாவிற்கு மாடர்ன் தியேட்டர்ஸின் அறிமுகம்அறிமுகம் கிடைத்தது. மனோரமா கதாநாயகியாக நடித்த கொஞ்சும் குமரி என்ற படத்திற்கு இசையமைத்தார். ஏசுதாஸ் முதல் முதலில் பாடிய படம் இதுதான், "ஆசை வந்த பின்னே, அருகில் வந்த கண்ணே" என்ற பாடலை பாடினர் (எஸ் பாலசந்தர் இசையில் பொம்மை படத்தில் இவர் பாடிய நீயும் பொம்மை 1964 ஆம் வெளி வந்தது)
அடுத்து இவர் இசை அமைத்த படம் "பாசமும் நேசமும்" என்ற ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த படம், ஹிந்திப் படம் அனாரி யின்யின் தழுவல் இது.
அடுத்து வீராங்கனை, சித்ராங்கி படங்களுக்கு இசையமைத்தார். வீராங்கனையில் ஜேசுதாசிற்கு மூன்று பாடல்கள்.இதில் "நீலவண்ணக் கண்களிரண்டில்" என்ற பாடல் இன்றும் பிரபலம். சித்ராங்கி படத்தில் "நெஞ்சினிலே நினைவு முகம்" "இன்று வந்த சொந்தமா" போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பாடல்கள் பிரபலமானாலும் படங்கள் வெற்றியடைந்தால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும். சில படங்கள் வெற்றி பெறாததால் இவர் மாடர்ன் தியேட்டர்சுக்கு ஹிந்திப் படங்களின் ரீமேக்குக்கு போய்விட்டார். இவர் ஹிநதிப் பாடல்களைத் தழுவி மெட்டமைத்தாலும் பாடல்வரிகள் ஏனோ தானோ என்று இல்லாமல் பார்த்துக் கொண்டார். இவரது பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர்கள் எழுதியதாகவே இருந்தது,உதாரணம் கண்ணதாசன். (நூறு முறை பிறந்தாலும்).
இந்த ஹிந்திப் பாடல் வரிசைப் படங்கள் வருமுன் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படம் அம்மா எங்கே (1964) அதில் "பாப்பா பாப்பாபாப்பா கதை கேளு" என்று காக்கா நரியின் கதையை அழகான ஆங்கில மெட்டில் நமக்கு அளித்திருந்தார் வேதா
அடுத்து சரசா பி ஏ என்றொரு படம். P B ஸ்ரீனிவாசின் குரலில் "இரவின் மடியில் உலகம் உறங்கும்" என்று நிமதியின்மையை மௌனமாகப் பொழியும் பாடல். பானுமதி பாடும் "மனதில் மனதை வைத்த பினாலே" என்ற பாடல்பாடல் எடுத்த எடுப்பிலேயே மனத்தைக் கவர்ந்துகவர்ந்து விடுகிறது.
வல்லவன் வரிசை: ஹிந்தியில் வந்த உஸ்தாத் படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸில் வல்லவன் வரிசை என்றானது.
"நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து ஒரு நாளும் போவதில்லை"
"சௌ பார் ஜனம் லேங்கே, சௌ பார் ஃபனா ஹோங்கே" என்ற வரிகளை தமிழில் கவியரசர் இவ்வாறு எழுதினார். இந்தப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது, இந்தப் பாடல் மட்டுமல்ல, இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரு வெற்றியைப் பெற்றன. "மனம் என்னும் மேலே" "பாரடி கண்ணே கொஞ்சம்" என்ற கவ்வாலி வகைப் பாடல், "கண்டாலும் கண்டேனே உன் போலே" "நெஞ்சுக்கு நிம்மதி"ஆகிய பாடல்கள்.
அடுத்து வல்லவன் ஒருவன். "பளிங்கினால் ஒரு மாளிகை" "தொட்டு தொட்டுப் பாடவா" "காவிரிக் கரையின் தோட்டத்திலே" ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி. - வேதா கவியரசர் கூட்டணி நன்முத்துகளை அளித்தது.
அடுத்து நானே வருவேன் - இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஹிந்தியில் "ரிம் ஜிம் ரிம் ஜிம்" என்று வந்ததை கவியரசர், சிறிதும் யோசிக்காமல், இங்கும் அங்கும் என்று அதைப் போன்றே ஒலிக்குமாறு எழுதினார். ஒரு திகில் பாடலான இது பெரும் வெற்றி ,பெற்றது. இப்படத்தின் மற்ற பாடல்களும் பிரபலம். "உன் வேதனையில் என் கண்ணிரண்டும் மயங்குவதேன் கண்ணா" இசையும், பாடல் .வரிகளும் மிகவும் அற்புதம்.
அடுத்து எதிரிகள், ஜாக்கிரதை - நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
காதலித்தால் போதுமா - கொஞ்சம் நில்லடி என் கண்ணே
சி ஐ டி சங்கர் - நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - இது நீரோடு செல்கின்ற ஓடம், சிலை ,கைகள் உண்டு, கண்வழியே கண்வழியே போனது கிளியே
என்று வெற்றிப் பாடல்கள் தந்தார்.
நேரமும் தக்க சுதந்திரமும் இருந்தால் அட்டகாசமான துள்ளல் பாடல்களை தன்னாலும் அளிக்க முடியும் என்று இவர் நிரூபித்த படம் அதே கண்கள். இந்தப் படத்தில் "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வராண்டி" "லவ், லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே" என்று கலக்கல் பாடல்கள் தந்தார். இது ஒரு மர்மங்கள் நிறைந்த திகில் படம். அதற்கேற்ப "வா அருகில் வா, தா உயிரைத் தா" என்றொரு பாடலும் வடித்தார்.
சின்னஞ்சிறு உலகம் என்றொரு படம், நாகேஷ் கதாநாயகன். "இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்" "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு" என்ற பாடல்களை அளித்தார். சினிமாவை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட "நான்கு கில்லாடிகள்" படத்தில், செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்" என்றொரு மெலடி, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி என்றொரு அமைதிப் பாடல் ஆகியவற்றை வழங்கினார்.
காப்பி அடிப்பதற்கென்றே ஒரு இசையமைப்பாளர் என்ற பெயர் வேதாவிற்கு ஏற்ப்பட்டது துர்பாக்கியமே. ஆனால் அதையும் ஒரு கடமையாக செய்து வந்தார். இவரது திறமைக்கு பார்த்திபன் கனவு ஒன்றே போதும். ஹிந்திப் படங்களின் பாடல்களை தமிழில் வெற்றிகரமாக உலவ விடுவதில் தான் வல்லவனுக்கு வல்லவன் என்று காட்டினார். "ஓராயிரம் பார்வையிலே" "நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன" பாடல்கள் இரவல் மெட்டுக்கள் போன்றா தோன்றுகின்றன?
இவர் இசையமைத்த கடைசிப் படம் "ஜஸ்டிஸ் விஸ்வநாத்" 1971.
மிக இளவயதிலேயே மரணமடைந்தார். ஆனாலும் அவர் விட்டுச்சென்ற பாடல்கள் இன்றளவும் நம் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன
தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
லவ் லவ் லவ்
தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல்காதல்
ஆஹா தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்
ஆ தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
வளர்ந்த நாள் முதல் கார்குழலும்
அழைக்குதே உன்னைப் பூச்சூட
மயக்கமேனடி பூங்குயிலே
தவிக்கிறேனடி நான் கூட
விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்
படுக்கையில் நான் புரண்டிருப்பேன்
கைகள் படாத இடந்தான் இப்போது
ஆசை விடாத சுகந்தான் அப்போது
ஏக்கம் ஏதோ கேட்கும்
ம்...ம் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆ ஆடல் பாடல் கூடல்
ஆ.. தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் காதல்
மழைக்கு ஏங்கிய மாந்தளிரே
உனக்கு நான் சிறு தூறல்தான்
வியர்த்து வாடிய மெய் சிலிர்க்க
உனக்கு நான் மலைச்சாரல்தான்
அடுத்த கட்டம் நடப்பதெப்போ
எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ
மாலையிடாமல் வசந்தம் வராது
வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது
போதும் போதும் ஊடல்
ஆ... தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஆஹா.. தில் தில் தில் தில் மனதில்
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
ஆடல் பாடல் கூடல்
படம்: இரு நிலவுகள்
இசை: ராஜன் நாகேந்திரா
குரல்: எஸ்.பி.பி
பாடல்: வாலி
ஆனந்தம் அது என்னடா
ஹே... ஹே.... தரத் தரத் தர....
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
அம்மாடி தமாஷா ஆடடா
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
காதல் வித்தை நாள் முழுக்க காணடா
மைபோட்ட மலர் மங்கை கண்ணிலே
தனை மறந்தாட நீரும் தேவையா
பருகத்தானே போதை கள்ளிலே
மயங்காதே வாழ்ந்து பார்க்க வாழடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
பிரபஞ்சமே மாயாபஜாரடா
உறுதியான நூறு வயது காளையே
நூறாண்டு அனுபவங்கள் தேவையே
எதிர் உள்ளது முன்னேற்றமே செல்லடா
மனங்கொண்டது பலித்திடுமே காணடா
மனித ஜென்மம் மகிமையான சான்ஸடா
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா.. ஹ
இது அல்லவோ ஜாக்பாட் கொண்டாடடா
படம் : நீ ஒரு மகராணி
இசை: சங்கர் கணேஷ்
குரல் : எஸ்.பி.பி., சுசீலா
பாடல் : வாலி
அவள் ஒரு பச்சைக்குழந்தை பாடும் பறவை
பருவம் பதினாறு
அவன் ஒரு ராஜகுமாரன் அழகிய மாறன்
வாழிய பல்லாண்டு
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
காதல் தெய்வங்கள் கோவில் தீபங்கள்
மேள தாளங்கள் வாழ்த்துதே
வாலைப் பருவம் கேட்டது கேள்வி
விடை தர இங்கே வந்தனள் தேவி
இளமையின் ரகசியம் எதுவென அறிந்தது நெஞ்சம்
போகப் போக புரிவது என்ன
போதையில் ஏதோ வருவது என்ன
எனக்கென்ன அதிசயம் இதுவென விளக்கிடு கொஞ்சம்
இன்பத்தில் நீயும் நானும் ஊமை இல்லையோ
மிச்சங்கள் என்னென்ன நாளை என்று கூறவில்லையோ
(அவன்)
மீனிருக்கும் கண்ணில் நான் இருக்க வேண்டும்
கண்ணே கண்ணே என்னை ஏற்றுக் கொள்வாயோ
நினைவிருக்கும் நெஞ்சில் நானிருக்க வேண்டும்
நெஞ்சே நெஞ்சே என்னை ஏந்திக் கொள்வாயோ
அச்சத்தை ஆசை வந்து வெல்லக்கூடாதோ
அம்மம்மா நாணத்தில் ஆடையிட்டு மூடக்கூடாதோ
(அவள்)
Tiruchendurai Ramamurthy Sankar writes:
சங்கர்-கணேஷ்
தேவர் - கவிஞர் இணைந்து வழங்கிய ஜோடி. வேதா அளவிற்கு தூற்றப்படாவிட்டாலும் சற்றே அலட்சியமாகக் கருதப்பட்ட இரட்டையர்கள். எம்.எஸ்.வி -இளையராஜா காலங்களுக்கு நடுவில் சிக்கினாலும் தமிழ்சினிமாவில் சங்கர்-கணேஷின் பங்கு 72-83 வரை முக்கியமானது. நண்பர் சரவணன் சொல்வதுபோல் இளையராஜா படம் பந்தாவாக சாந்தி, ஆனந்தில் வெளியாகும்போது இவர்களின் படங்கள் ஓரமாக காமதேனு, சித்ரா, ஓடியன், பாரகன் தியெட்டரில் சிக்கிவிட்டது விதி.
நீ ஒரு மகராணி (1976) காதலியாக நடிக்கவந்து மனைவியாக மாற வேண்டிய கி.மு காலத்துக் கதை. சுஜாதா, மாமனாராக தேங்காய் 100 ரூபாய் வாங்கிக்கொண்டு 1000ரூபாய்க்கு நடித்திருப்பார்கள். பட்டணத்தில் பூதம் படத்தில் டிரிம்மாக வந்து மனதைக் கொள்ளை கொண்ட அண்ணன் ஜெய் , பட்டணத்தைத் தொலத்திருப்பார். 11 மணி குர்லா லோக்கலில் வரும் குஜ்ஜு ஸ்டாக் ப்ரோக்கர்போல் சில காட்சிகளில் சஃபாரி என்ற கொடூரமான உடை வேறு. டைரக்டர் சொர்ணமும், திமுக ஆதரவு படங்களில் அமிர்தமும் ஜெய்யைக் கவிழ்த்தார்கள்.
மூன்று பாடல்கள். யேசுதாஸ்-சுசீலாவின் ," நீ ஒரு மகராணி". சுசீலாவின் " பல்லாண்டு காலம்" ( கணேஷின் ஹம்மிங்குடன்) RDB யின் ஆந்தி பட "தும் ஆகயே "பாட்டை மனதில் நினைத்து வேண்டிக்கொண்டு கம்போஸ் செய்திருப்பார்கள். ( பாடல் காட்சியில் கிதார் வைத்துக்கொண்டு கணேஷ் வருவார்)
ஆனால் அந்த மூன்றாவது பாடல் , திரையில் பல்க்கான ஜெய் , சில்க்கான ஶ்ரீப்ரியாவுடன் ! SPB-PS இன் அடுத்த மாக்னம் ஓபஸ். எம்.எஸ்.வி சாயலில் அவசரமாக ஓடும் டியூன். கொஞ்சும் எஸ்.பி.பி. கூட வரும் வயலின் போல் சுசீலா.
இரண்டு சரணங்களும் வேறு அமைப்பில். டியூன் ரோலர் கோஸ்டரில். இதயவீணை படத்தில் வரும் பொன் அந்தி மாலைப் பொழுது ( அதுவும் சங்கர்-கணேஷ்! ) போல சரணத்தின் 6 வரிகளுக்கும் 3 ட்யூன். ஹாரிஸ் ஜெயராஜ் இதை வைத்து ஒரு படமே செய்திருப்பார்.
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
வாழை மடல் போல உடல் அழகும்
தங்கம் வார்த்த சிமிழ் போல உதடழகும்
தஞ்சை கோயில் ரதம் போல நடை அழகும்
வந்து குலவும் வேளையில் மனம் கவரும்
கட்டழகுப் பெட்டகமோ கண் நிறைந்த சித்திரமோ
கால காலம் இங்கு எனக்காக
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
வானம் வளைக்காத கடற்கரையோ
இது வண்டு துளைக்காத பழக்குலையோ
இன்னும் வாசல் திறக்காத அரண்மனையோ
கண்ணன் வந்து துயிலாத ஆலிலையோ
புத்தம் புது புத்தகமோ
புன்னகைக்கும் ரத்தினமோ
தேவ தேவி இவள் எனக்காக
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
பேசும் மணி வார்த்தை தமிழ்ச் சுவையோ
புதிர் போடும் விழி ஜாடை விடுகதையோ
நெஞ்சில் ஆசை அலை பாயும் புதுப்புனலோ
ஒரு ஆடை சுமந்தாடும் மதுக்குடமோ
பஞ்சணையில் கை அணைக்க
பையப் பைய மெய் அணைக்க
தாவி தாவி வரும் கலைமானோ
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை
இதைவிட இலக்கியம் கிடையாது
இலக்கண வரம்புகள் இதற்கேது
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை
வண்ண இரு விழியால் இந்த பூங்கோதை