Showing posts with label KA.MU.SHERIFF. Show all posts
Showing posts with label KA.MU.SHERIFF. Show all posts

Monday, May 2, 2016

VAAZHNDHAALUM ESUM - NAAN PETRA SELVAM


படம்: நான் பெற்ற செல்வம்
இசை: ஜி.இராமநாதன்  
குரல்: டி.எம். சௌந்தரராஜன் 
பாடல்: கா.மு.ஷெரீப்  

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..
வையகம் இதுதானடா …..

வையகம் இதுதானடா …..
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வையகம் இதுதானடா …..


வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்

வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்

இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும் (வாழ்ந்தாலும்)

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாலே யாவும் மறைத்திட நினைக்கும்

குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே பகைமையை வளர்க்கும் (வாழ்ந்தாலும்)