Showing posts with label VAIRAMUTHU. Show all posts
Showing posts with label VAIRAMUTHU. Show all posts

Friday, August 28, 2020

AAGAAYA SURIYANAI - SAMURAI



படம்: சாமுராய் 
பாடல்: வைரமுத்து 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் 
குரல்: ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி 

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட 
கொடி நான் என் எண்ணம் எதுவோ???

கிளி தான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் 
கிளி தான் உனை கொஞ்சும் எண்ணமோ???

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட 
கொடியே உன் எண்ணம் என்னவோ???
சகியே எனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் 
கிளியே எனை கொல்லும் எண்ணமோ???

(இசை)
காதல் பந்தியில் நாமே உணவு தான் 
உண்ணும் பொருளே உன்னை 
உண்ணும் விந்தை இங்கே தான்
காதல் பார்வையில் பூமி வேறு தான் 
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் 
மாறுதல் இங்கே தான்
உன் குளிருக்கு இதமாய் 
என்னை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம்தான் 
உன் வியர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன் 
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோரா போரா மலை சென்றாலும் 
துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது உன்
உள்ளங்கையில் ரேகைக்குள்ளே 
ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து நீ பூவை கிழிக்கிறாய் 
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி

ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட 
கொடியே உன் எண்ணம் என்னவோ???
சகியே எனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளியே எனை கொல்லும் எண்ணமோ???
 

Monday, July 3, 2017

SUDUM NILAVU - THAMBI



படம்: தம்பி
இசை: வித்யாசாகர்
குரல்: ஹரிணி, உன்னிகிருஷ்ணன்
பாடல்: வைரமுத்து

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா?
காதலித்துப்பார்.. காதலித்துப்பார்!!


இமையடித்தாலும் இதயம் வலிக்கும்
வலிகளில் கூட வாசனை இருக்கும்
நரம்புக்கு நடுவே நதிகள் நகரும்
நதியிருந்தாலும் நாவே உலரும்

தப்பு எல்லாம் கடிதமாகும்
தவறு எல்லாம் புனிதமாகும்
பச்சைத்தண்ணீர் வெப்பமாகும்
எச்சில் பண்டம் அமுதமாகும் 
நான்கு உதடு பேசும் வார்த்தை முத்தமாகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்..

மழைத்துளி நமக்கு சமுத்திரமாகும்
சமுத்திரம் எல்லாம் துளியாய்ப்போகும்
சத்தியக்காதல் என்னவும் செய்யும்
சந்திர ஒளியை ஆடையாய் நெய்யும்

தொட்ட பாகம் மோக்ஷமாகும்
மற்ற பாகம் காய்ச்சலாகும்
தெய்வம் தேய்ந்து மிருகமாகும்
மிருகம் தூங்கி தெய்வமாகும்
தேடல் ஒன்றே வாழ்க்கை என்று தெரிந்து போகும்

சுடும் நிலவு சுடாத சூரியன்
ஓடும் நிமிஷம் உறையும் வருஷம்
எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா?
காதலித்துப்பார்.. காதலித்துப்பார்!!

Tuesday, May 16, 2017

ORU KUNGUMA CHENKAMALAM - ARADHANAI



படம்: ஆராதனை
இசை: இளையராஜா
குரல்: SPB ஜானகி
பாடல்: வைரமுத்து

ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்


திருவாய் மலர்வாய் கருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
காயைப்  புசிக்கும் கனியாவாய்
பூவைக்கு நாங்கள்  பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக் கொய்ய வேண்டும்
மின்னலிலே ஒரு கயிறு எடு
மேகங்களால்  ஒரு  தூளியிடு
கதிரோ தளிரோ இள மகளது திருமுகம்


முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப்  பார்த்தால் முழு வெள்ளை
மடியில் தவழும் மகன் பிள்ளை
நீயேந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்  நீ சாய்ந்திருக்க
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்

Friday, February 24, 2017

ORU NADHI - SAMURAI

 
 
படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
குரல்: நித்யஸ்ரீ, துஷாரா
பாடல்: வைரமுத்து

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு...

ஒரு நதி ஒரு பௌர்ணமி ஓர் ஓடம்..
ஒரு புதையல் பொற்குவியல் மலைவாசல்..

பாராமல் போன பௌர்ணமி எல்லாம்
பறித்துக் கொடுக்கும் ஒருவன்
கேளாமல் போன பாடலை எல்லாம்
திரட்டிக் கொடுக்கும் ஒருவன்

நான்தானா?.... நீயில்லை..
நான்தானா?.... நீயில்லை..

வான்மழையில் நனைந்த வானவில்லை
என் மடியில் கட்டும் ஒருவன்
என் தேகக் கதவு ஜன்னல் எல்லாம்
திறந்து வைக்கும் ஒருவன்

நான்தானா?.... நீயில்லை..

என் தேடல் அது வேறு
அடப்  போடா நீயில்லை..

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு


தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..

புன்னகை செய்யும் ஒருவன்.. ஆ ஆ

தீராமல் போன ஆசைகள் எல்லாம்
தீர்க்கத் தெரிந்த ஒருவன்
போகாத எல்லை போய் வந்தாலும்
புன்னகை செய்யும் ஒருவன்..

நீதானா ?... நானில்லை..
நீதானா ?.. நான் நான்  நானில்லை..

ஒரு கற்பு கன்னிமை கருமம்  எல்லாம் 
கண்டு கொள்ளாத ஒருவன் 
நான் போதும் போதும் என்னும் வரையில் 
புதுமை செய்யும் ஒருவன்..

நீதானா ?... ஐயோ நானில்லை..

நான் தேடும் ஸ்ருங்காரம் 
இங்கு ஏனோ ஏனில்லை ...

ஒரு நதி ஒரு பௌர்ணமி
ஓர் ஓடம் என்னிடமுண்டு
ஓடக்காரன் ஓடக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு காடு சிறு மேடு
சில பூக்கள் என்னிடமுண்டு
பூக்காரன் பூக்காரன்
அட உங்களில் யாருண்டு

ஒரு புதையல் பொற்குவியல்
மலைவாசல் என்னிடமுண்டு
அலிபாபா அலிபாபா
அட உங்களில் யாருண்டு...

எங்களில் யாருண்டு...

ஹ்ம்ம்...ஹ்ம்ம்

ஒரு நதி ஒரு பௌர்ணமி

ஒரு நதி ஒரு பௌர்ணமி

ஒரு நதி.


















Friday, September 30, 2016

OH VAANAMBAADI UNNAI NAADI - SAADHANAI - SPB SJ


 FILM: SAADHANAI
SINGERS: SPB SJ
MUSIC: IR
LYRICS: VAIRAMUTHTHU

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ அ ஆஅ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆ

ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

போகமே என் யோகமே என் காதல் ராகமே
கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே
பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே
பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே
மண்ணில் சொர்கம் வந்ததே
மார்பில் சாய்ந்து கொண்டதே
சிந்தாத முத்துக்கள் செவ்வாயில் சிந்தக்கண்டேன்.. ஓ

வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

மன்னவன் கண் மூடினால் என் வானில் ராத்திரி
மங்கையே உன் பார்வைதான் என் வானில் வைகறை
இன்பம் என்னும் வேதனை இன்று பார்க்கிறேன்
நானும் கொஞ்சம் சோதனை போட்டுப் பார்க்கிறேன்
காற்று வந்து  தீண்டுமோ கற்பு என்ன ஆகுமோ
பூங்காற்றும் தீண்டாமல் நீ என்னை கட்டிக்கொள்வாய்..ஓ

வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

VAANENGUM THANGA VINMEENGAL - MOONDRAAM PIRAI - SPB SJ

தனனனனன் தனனனன்னன நனனன்னன தனன்னனனனா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
பபபப்பபப....கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
கரையின் மீது அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து கோலம் போடுதே
லலலலல் லலலலல் லலல்லலல்ல லலல்லல

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

தததூத்டு தகு த்டுதூதததூத்டு தகு த்டுதூ
தததூத்டு தகு த்டுதூதததூத்டு தகு த்டுதூ
தது தது தூஉ தா தா தா தாஅ தஹ்ததா

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
உன்னைப்  பார்த்தால் கரையேறும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்
லலலல் லலலலல் லலலலல் லலல் லலல்லா

Friday, July 15, 2016

NENJUKKUL POO MANJANGAL - SATTAI ILLADHA BAMBARAM


படம்: சாட்டை இல்லாத பம்பரம் 
இசை: இளையராஜா 
குரல்: மலேசியா வாசுதேவன், ஜானகி 
பாடல்:வைரமுத்து 

பப பாப்பா பப பாப்பா பப பாபா 

நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
சுவீட்  ஹீரோ.. ஹீரோ.. பபபபா..
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 

கோடை நிலவாகி விளையாடும் அழகே
காதல் உயிராகும் இனி நானுன்  அருகே
கையோடு பொன்மாலை
எல்லாமே உன் லீலை
நாளும் உல்லாச ராகமிட்டு
பாடும் என்னோடு ஆசைச் சிட்டு
காதல் சங்கீதம்
காதில் கள்ளூறும்
பபபபா..

பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டாளே  காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்ரீதேவி .. தேவி பபபபபபா..
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா


பாவை இரவோடை  இனி நாளும் கனவே
தோளில் கிளை  தேடும் கிளி நீ தான் அழகே
எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்
கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதிப் பூ அள்ளி மாலை கட்டு
மேலும் தொடாதே
என் தோளில் விழாதே
பபபப பா..

பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டாளே  காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்ரீதேவி .. ஹீரோ  பபபபபபா..
பப பாப்பா பப பாப்பா பபபாபா பபா
பப பாப்பா பப பாப்பா பபபாபா பாபா பாபா  



Friday, July 8, 2016

YAARADHU ENDRA MANNAVAA - KAADHAL OVIYAM - S. JANAKI

நாதம் என் ஜீவனே பாடலின் ஒரு தொகையறா


யாரது என்ற என் மன்னவா
என் முகவரி உனக்கு சொல்லவா
உன் இசையில் அமுதம் குடித்தவள்
அதை இரவில் நினைத்து துடித்தவள்
உன் கவியில் கனவு கலைந்தவள்
அதில் கற்பூரம்போல் கரைந்தவள்
உன் பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்

https://youtu.be/nGiNWhwJEdU?t=20m

@20.00

Thursday, June 30, 2016

MANASUKKUL UTKARNDHU - KALYANA AGADHIGAL



படம்: கல்யாண அகதிகள்
குரல்: ராஜ் சீதாராமன், பி.சுசீலா
இசை: வி.எஸ். நரசிம்மன்
பாடல்: வைரமுத்து

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்

காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா இது தான் ஆலிங்கனம்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்


கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளந் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணே  தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய் - என்
மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இளகாத என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்

மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்

Friday, June 24, 2016

KANNAAL PESUM PENNE ENAI MANNIPPAAYAA - MOZHI - SPB


 FILM : MOZHI 
SINGER: SPB
MUSIC: VIDYA SAGAR
LYRICS: VAIRAMUTHU

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே
குறை அழகென்று கொண்டால் வாழ்க்கையிலெங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்து கொண்டேன் இயல்பே அழகு என்பேன்
பூவை வரைந்து அதிலே மீசை வரைய மாட்டேன்
மெளனம் பேசும் போது சப்தம் கேட்க மாட்டேன்
மூன்றாம்பிறையின் முன்னே நிலவைத் தேட மாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி

Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry
Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி ஹோ
கண்ணில் கடல் கொண்ட  கண்ணில் புயல் சின்னம் ஏதோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப் பார்வை வேண்டாம்
ஓரப் பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம்
ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி

Oh I'm sorry I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry
Oh I'm sorry I'm sorry Oho I'm sorry I'm sorry I'm sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறைத் தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களைத் தீரடி
கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா

Thursday, June 23, 2016

VAALIBAM VAAZHGA VAIYAGAM VAAZHGA - DEVI SRI DEVI



படம்:  தேவி ஸ்ரீதேவி
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
பாடல்: வைரமுத்து

லாலல லாலா... லாலல லாலா

வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க

வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க

ஆ..ஹாஹாஹா ... ஆ..ஹாஹா

காதலின் பந்திகளில் கனவே உணவு
கண்களின் வெளிச்சத்திலே கவிதை எழுது
சந்திர சூரியனும் விழி சந்திக்கக் கூசுமடி
கேலிகள் செய்வதென்ன இது கேள்விப்படாத மொழி
ஆயிரம் ஜென்மம்
கூடிய பந்தம்
தேவியின் நெஞ்சம்
தாமரை மஞ்சம்
நாளொரு பூ மலரும்


வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க

காமனின் பூங்கணையில் இதயம் மயங்கும்
காதலை ஆதரித்தே மலர்கள் வணங்கும்
கீதங்கள் பாடும் குயில் இளம்பூக்களில் ஆடை கட்டும்
வாழ்கின்ற காலம் மட்டும் எந்தன் தோள்களில் கூடு கட்டும்
நீயொரு பாதி
நீ மறு பாதி
பாதியில் பாதி
சேர்வது நீதி
ஓடுது காதல் நதி

வாலிபம் வாழ்க வையகம் வாழ்க
மரங்கள் மலர்கள் பொழிக
சூரியன் போல பூமியின் மேலே
காதலும் வாழ்க

வாலிபம் வாழ்க வையகம் வாழ்க

Monday, April 25, 2016

PANIVIZHUM MALAR VANAM - NINAIVELLAAM NITHYA - SPB


திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை
சேலை மூடும் இளஞ்சோலை மாலை சூடும் மலர் மாலை
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும் ஏஹே
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குச் சிரித்துக் கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஹ ஹா ஹா
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்

காமன் கோவில் சிறைவாசம்
காலை எழுந்தால் ஹஹஹ பரிகாசம்
காமன் கோவில் சிறைவாசம் காலை எழுந்தால் பரிகாசம்
தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே ஏஹே
வியர்வையின் மழையிலே பயிராகும் பருவமே
ஆடும் இலைகளில் வழிகிற நிலவொளி இரு விழி
மழையில் நனைந்து மகிழும் வானம்பாடி

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்... ஏஹே
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம் ஏஹே
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்
பனி விழும் மலர் வனம்

ROJAAVAI THAALAATTUM THENDRAL - NINAIVELLAAM NITHYA - SPB SJ



திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி... எஸ் ஜானகி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள் ஹாஹா
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
விரல்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை
மெளனமே சம்மதம் என்று ஹ்ம்ம்ம்
தீண்டுதே மன்மத வண்டு ஹா
மெளனமே சம்மதம் என்று ஹ்ம்ம்ம்
தீண்டுதே மன்மத வண்டு
பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்

வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
வசந்தங்கள் வாழ்த்தும்பொழுது உனது கிளையில் பூவாவேன்
இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன்
பூவிலே மெத்தைகள் தைப்பேன்... ஹா
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்...ஹா
பூவிலே மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா ..ஹா

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என் ஊஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்

THOLINMELE BHAARAM ILLE - NINAIVELLAAM NITHYAA- SPB



திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து

ஏஏஏஏ ஏஏஏஏஏஏ ஏலோஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ
ஏலேலேலோ ஏலேலேலோ ஏஏஏஏஏ

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே

ஏஏஏஏ ஏஏஏஏஏஏ ஏலோஏலோ
ஏலோ ஏலோ ஏலேலேலோ ஏலேலேலோ
ஏலோ ஏலோ ஏலோ ஏலோ

லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன் மஞ்சம்
லோகத்தில் ஏது ஏகாந்தம் இனி என்றென்றும்
பேரின்பம் எங்கள் வேதாந்தம் இது பொன் மஞ்சம்
பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு
பாதையெல்லாம் மல்லியப்பூ வாசம் வந்தா யார் பொறுப்பு
நான் வானம் தொட்டு வாழும் சிட்டு
வாழ்க்கைக்கிங்கே சட்டமில்லே வானத்தின் மேல் வட்டம் இல்லே

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா

ஹே தரரத்தா ராதாராதரரத்தா தா

யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது
யாருக்கு நாளை சொந்தமோ யார் கண்டது
நாருக்கு மாலை சொந்தமோ யார் சொன்னது
தத்துவங்கள் தேவையில்லே சோகம் என்றால் என்ன விலை
தத்துவங்கள் தேவையில்லே சோகம் என்றால் என்ன விலை
நான் பாடும் பட்சி காமன் கட்சி
காற்றுக்கொரு கஷ்டம் உண்டோ கடலுக்கென்றும் நஷ்டம் உண்டோ

தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
தோளின் மேலே பாரம் இல்லே
கேள்வி கேட்க யாரும் இல்லே
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா
நீயா மாமா ஆசாமியா
அட மாமாமாமா மாமாமியா




NEEDHAANE ENDHAN PONVASANDHAM - NINAIVELLAAM NITHYAA - SPB


திரைப்படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பி
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து


நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்

பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவ குயில்கள்
உன்னாடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென
ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் ஒளிகளில்
பிறையும் பெளர்ணமியாகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்

ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் போதை நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில்
ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும்
தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும்

நீதானே எந்தன் பொன் வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
பொன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...ஆஹாஹாஹாஹாஹ

SANDHANA POOVA - ODANGAL



படம்: ஓடங்கள்
இசை: சம்பத் செல்வன்
குரல்: எஸ்.பி.பி
பாடல்: வைரமுத்து

சந்தனப் பூவச்  சம்மதம் கேட்க போறேன் போறேன்
பங்குனி மாசம் பரிசம் போட வாறேன் வாறேன்
உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே
காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே

முன்னம் அடி கொடுத்த பெண்ணே
அன்று  கன்னம் வலிக்கவில்லை கண்ணே
தாமரை மோதினால் ரணமிருக்குமா
தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா
பூவே பேசு ஒரு பார்வை வீசு
முத்தம் தந்ததால் மூச்சு சூட்டிலே
மீசை கருகி போச்சு
அன்னமே இப்படி ஆனது எப்படி பாஸாவது ?



உங்க கட்சி அது வேறு
எங்க கட்சி அது வேறு
காதலி காதலில் கட்சி ஏதடி
கண்மணி என்னுடன் ஒத்து ஊதடி
சேலை மாத்து மாலை மாற்று
பத்தே மாசத்தில் பரீட்சை எழுதி
நான் பாசு பண்ண வேணும்
நீயும் நானும் ஒன்னா சேர்ந்தா
ஜிங்கு னக்கடி ஜினக்கு னக்கடி தான்




Tuesday, April 19, 2016

KAMBAN ENGU PONAAN - JAATHI MALLI


படம் : ஜாதி மல்லி 
இசை : மரகதமணி 
குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் , சித்ரா
பாடல் : வைரமுத்து

கம்பன் எங்கு போனான் ஷெல்லி என்ன ஆனான்
நம்மைப்  பாடாமல்
லைலா செத்துப் போனாள் மஜ்னு செத்துப் போனான்
நம்மைப் பாராமல்
கண்ணீரே இல்லாத காதல் சூத்திரம்
கண்டோமே கண்டோமே நாங்கள் மாத்திரம்
இது ஒரு புது முறை இதில் என்ன வரைமுறை
வருகிற தலைமுறை வணங்கட்டும் இருவரை

கம்பன் எங்கு போனான்..

இது கையில் கட்டிய தாலி
பலர் கழுத்தில் உள்ளது போலி
இந்த குறுகிய வட்டம் இனி சரி வருமா
உங்கள் கோட்டுக்குள் மழை பெய்யுமா
அணை விட்டுத்  தாவிய வெள்ளம்
இது கட்டுக் காவலை வெல்லும்
உங்கள் விதிகளும் சதிகளும் நிரந்தரமா
இது விலங்கிட்ட சுதந்திரமா
எங்கள் பெயரை  யாரும் கேட்டால் புர்ர்ர் என்போம்
எங்களுக்குள்ளே என்ன உறவென்றால் புர்ர்ர் என்போம்
விலங்குகள் தடை இல்லை விதிகளும் தடை இல்லை
மரபுகள் தடை இல்லை மனிதரும் தடை இல்லை

கம்பன் எங்கு போனான்..

இது யுத்தம் இளமையின் யுத்தம்
இனி துச்சம் உறவுகள் துச்சம்
உங்கள் கட்டு திட்டம் சட்ட திட்டம் தள்ளி வையுங்கள்
இல்லை கடலுக்குள் தள்ளி விடுங்கள்
அட புத்தம் புதியது சந்தம்
இது முத்தம் எழுதிய பந்தம்
இனி இளையவர் எங்களுக்கு குரல் கொடுங்கள்
அட பழையவர் வழி விடுங்கள்
காதலை தடுத்தவர் கதை என்ன ஆனது புர்ர்ர் தானே
கை கொண்ட விலங்கும் நாங்கள் நினைத்தால் புர்ர்ர் தானே
நினைப்பது நடக்கணும் இது எங்கள் இலக்கணம்
இனி வரும் தலைமுறை இதை மட்டும் படிக்கணும்

கம்பன் எங்கு போனான்..