Showing posts with label MUTHULINGAM. Show all posts
Showing posts with label MUTHULINGAM. Show all posts

Monday, September 12, 2016

PANIYUM NAANE MALARUM NEEYE - PANIMALAR



படம்: பனிமலர்
குரல் : எஸ்.பி.பி. , ஜென்சி
இசை: சங்கர் கனேஷ்
பாடல்: முத்துலிங்கம்


பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச் சந்தங்கள் சிந்தட்டும்


பனியும் நீயே மலரும் நானே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச்  சந்தங்கள் சிந்தட்டும்



சித்திரச் சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
ஹே கற்பனைத் தேரில் அற்புத வானில்
சொர்க்கமும் போய்  வருவோம் வருவோம் வருவோம்


மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப்  போல இன்பம் பொங்கட்டும்
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம்  தரும் உன் வார்த்தை தாலாட்டு
சந்தனம் பூப்போல் சங்கதி சேர்க்க
காவியம் பல தோன்றும் தோன்றும் தோன்றும்

பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச்  சந்தங்கள் சிந்தட்டும்

Tuesday, April 26, 2016

MUGAM SENTHAMARAI - VEDIKKAI MANIDHARGAL



படம்: வேடிக்கை மனிதர்கள்
இசை: சங்கர் கணேஷ்
குரல்: எஸ்.ஜானகி
பாடல்: முத்துலிங்கம்


முகம் செந்தாமரை என்றானே
இதழ் ரோஜாவெனச்  சொன்னானே
முகம் தாமரை மலரா
இதழ் ரோஜா நிறமா
அடியே நீயே சொல்லு


மானாட்டம் விழியென்றான்
மயிலாட்டம் ஒயிலென்றான்
மானா மயிலா நானா அறியேனே
மான் கூட்டம் என்னாட்டம் பேசுமோ
பெண்ணாட்டம் மயிலாடுமோ
முல்லைக்கொடியே முத்துக்கிளியே
இந்த சந்தேகம் தீருங்களேன்



இனி ஒரு முறை
அவன் வரும்வரை
மனம் தவிப்பதை
உடல் கொதிப்பதை
யாரிடம் போய் நான் சொல்வது
அவன் மீண்டும் வருவானா
மலர்மேனி தொடுவானா
அவன் கூட மனம் ஓட
அவன் பார்வை விழி தேட
உறங்காமல் பொழுதோடுது


அவன் என்னைத்  தாலாட்ட
 நான் கொஞ்சிப்  பாராட்ட
புதுநாள் திருநாள் சுபநாள் வர வேண்டும்
அவன் மார்பில் பொன்னூஞ்சல் ஆடுவேன்
ஆனந்த நீராடுவேன்
இன்ப நினைவும் இந்த சுகமும்
இனி என்றென்றும் நிலையாகுமே