Friday, September 30, 2016

KAATRU POOVAI PAARTHU KOORAADHO - I LOVE INDIA - SPB MINMINI

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ I LOVE YOU

மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU

பாவையின் மனத்தில் மேலே நீ புகைப்படத்தைப்போலே
இருப்பவன் மெல்ல சிரிப்பவன்
பூமணி உதட்டின் மீது தேன் படைத்து வைக்கும்போது
எடுப்பவன் பின்பு கொடுப்பவன்
கண் விழிக்கும் அர்த்த ராத்திரி கொம்பு தேனும் ஊறலாம்
கேள்வி கேட்க யாரும் இல்லயே காவல் நீயும் மீறலாம்
மாறன் போடும் பூச்சரம் மார்பின் மீது பாயலாம்
தோகை அன்பு காதலன் தோள்கள் மீது சாயலாம்
பூவாகி காயாகும் ஆசை அரும்புகள்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ I LOVE YOU
மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU

வானிலை அறிக்கைப்போல் நீ விளக்கம் சொன்னதாலே
மழை வரும் விதை துளிர் விடும்
வான் முஹில் கருத்த நேரம் நீர் நிலத்தில் வந்து சேரும்
சுபதினம் இன்று சுகம் வரும்
மேகம் வந்து மண்ணிலாடிடும் மாதம் இந்த கார்த்திகை
மோஹம் வந்து உன்னைக்கூடிடும் மங்கை அந்த மேனகை
வண்ண வண்ண காட்சிகள் கண்ணில் எங்கும் தோன்றுதே
கன்னி கொண்ட கோலங்கள் காதல் நெஞ்சை தூண்டுதே
நூறாண்டு ஆனாலும் வாழும் பருவங்கள்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ I LOVE YOU
மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU

No comments:

Post a Comment