Friday, September 30, 2016

OH VAANAMBAADI UNNAI NAADI - SAADHANAI - SPB SJ


 FILM: SAADHANAI
SINGERS: SPB SJ
MUSIC: IR
LYRICS: VAIRAMUTHTHU

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ அ ஆஅ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆ

ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

போகமே என் யோகமே என் காதல் ராகமே
கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே
பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே
பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே
மண்ணில் சொர்கம் வந்ததே
மார்பில் சாய்ந்து கொண்டதே
சிந்தாத முத்துக்கள் செவ்வாயில் சிந்தக்கண்டேன்.. ஓ

வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

மன்னவன் கண் மூடினால் என் வானில் ராத்திரி
மங்கையே உன் பார்வைதான் என் வானில் வைகறை
இன்பம் என்னும் வேதனை இன்று பார்க்கிறேன்
நானும் கொஞ்சம் சோதனை போட்டுப் பார்க்கிறேன்
காற்று வந்து  தீண்டுமோ கற்பு என்ன ஆகுமோ
பூங்காற்றும் தீண்டாமல் நீ என்னை கட்டிக்கொள்வாய்..ஓ

வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்

ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி

MAASARU PONNE VARUGA - DHEVAR MAGAN

படம்: தேவர் மகன்
இசை: இளையராஜா
குரல்: மின்மினி, ஸ்வர்ணலதா குழுவினர்
பாடல்: வாலி

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன்  தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென நீல விழியும்
பிறைனுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியென தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
உனதாணை தனை ஏற்று பணியாற்றுதே
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
திரிசூலம் கரமேந்தும்  மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எமையே
பாவம் விலகும் வினை அகலும் உனை துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும் சூலி என ஆதி என
அடியவர் தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன்  தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென நீல விழியும்
பிறைனுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியென தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

SOLAM VIDHAIKAIYILE SOLLIPUTTU - 16 VAYADHINILE - IR

சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சு காத்து கெடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி..ஹோய்

ஹே ஹே ஹே ஹே
தந்தனனனன்னா தானே தனா தந்தனா தனனா
தந்தனனனன்னா தானே தனா தந்தனா தனனா
தந்தனா தந்த தந்தனா

மானே என் மல்லிகையே மருத மரிக்கொழுந்தே
தேனே திணைக்கருதே திருநாளு தேரழகே
உன்ன நெனைக்கயிலே என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி

சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சு காத்து கெடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்குமப்  பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி..ஹோய்

மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப்  பிடிக்க
நாளும் ஒண்ணு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி

ORU RAAGAM PAADALODU - AANANDHA RAAGAM - KJY

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
நிஜம் நிழலாகிப்போனதே
ஓ..நெஞ்சமே பூங்காற்றிலே பதில் கொடு
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

எங்கே சென்றபோதும் மனம் போல வாழ்க வாழ்க
ஏழை நெஞ்சின் பாடல் உனை சேர வேண்டும் வாழ்க
ஏழை எந்தன் பேராம் சோகம் எந்தன் ஊராம்
ஊரை பார்த்து போகிறேன் அனாதயாகப் போகிறேன்
என் உள்ளம் என்றும் உன்னை பாடுமே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

காலம் செய்த கோலம் கனவாகிப்போன சிந்தம்
பாவம் என்ன செய்தேன் பனியாகிப்போன பந்தம்
பாசம் வைத்த நெஞ்சம் கானும் யாவும் துன்பம்
ஊமை நெஞ்சில் ஆசைகள் ஓடம் போல ஆடுதே
வராத சோகம் வந்து சேர்ந்ததே

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
நிஜம் நிழலாகிப்போனதே
ஓ..நெஞ்சமே பூங்காற்றிலே பதில் கொடு

ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ

I WANT TO TELL YOU SOMETHING - ANANDH - SPB

I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
I WANT TO TELL U SOMETHING
ITS A LOVE STORY ITS A TRU STORY
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE

பூ ஒன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது
பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது
பூ ஒன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது
பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது
புதிய பூபாளம் கேட்டது பூவும் கண்கொண்டு பார்த்தது
இனிய தேவார பாடலும் இணைந்து காற்றோடு பாடுது
தான் அறியாத பொழுதினில் பூவும் வழி மாறிப்போனது

I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE HEYY
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
ITS A LOVE STORY ITS A TRU STORY
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE

நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான்
ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான்
நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான்
ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான்
எனது மனம் இன்று தனிமையில்
உனது உறவென்னும் இனிமையில்
புதிய சங்கீதம் படிக்குதே
வெளியில் சொல்லாமல் துடிக்குதே
நான் அறியாத உணர்வுகள்
நீ எனதென்று உணர்த்துதே

I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE HEYY
I WANT TO TELL U SOMETHING
ITS A LOVE STORY ITS A TRU STORY
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE
I WANT TO TELL U SOMETHING
WAIT A MINUTE

AADI MAASA KAATHADIKKA - PAAYUM PULI - SPB SJ

ஹேய்ய் யே யே ஏய்
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச யம்மா
ஓ...ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச அம்மா
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
................
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
அக்கா பெத்த சொக்கா பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு
ஹெய் திக்க தின்னதின்ன தைத
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்குற
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே
ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி யெப்போ
அ அ அ ஆ
ஹான்..... ஊத வேணும் பீப்பி.. பீப்பி... பீப்பி..
டும்.. டும் ...டும்... டும்.. பீப்பி.. பீப்பி.. பீப்பி...
கண்ணாலம் கச்சேரி யெப்போ
நேரங்காலம் நல்லாருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லா..ருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
சதக்க்... சக்குனக்க... னக்க.... னக்கஜன
ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே லேய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா

VAANENGUM THANGA VINMEENGAL - MOONDRAAM PIRAI - SPB SJ

தனனனனன் தனனனன்னன நனனன்னன தனன்னனனனா

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
பபபப்பபப....கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
கரையின் மீது அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து கோலம் போடுதே
லலலலல் லலலலல் லலல்லலல்ல லலல்லல

வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி

தததூத்டு தகு த்டுதூதததூத்டு தகு த்டுதூ
தததூத்டு தகு த்டுதூதததூத்டு தகு த்டுதூ
தது தது தூஉ தா தா தா தாஅ தஹ்ததா

ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
ரோஜா ஒன்று இன்று அலையில் ஆடலாம்
அவள் பாதம் பட்ட மண்ணை ஏலம் போடலாம்
உன்னைப்  பார்த்தால் கரையேறும் மீன்கள்
உள்ளங்கைகள் ரோஜா தீவுகள்
லலலல் லலலலல் லலலலல் லலல் லலல்லா

KANDU PIDI NEEDHAAN - ULLE VELIYE - SPB SJ

கண்டுபிடி நீதான் கூடு கட்டி வச்ச தேன்தான்
கண்டுபிடி நீதான் கூடு கட்டி வச்ச தேன் தான்
நான் சொன்னா புரியுதா ஜாடை பண்ணா தெரியுதா
உன்ன பாத்து புலம்புது..... ஒரு பாட்டுதான் கெளம்புது
கண்டுபிடி நீதான் கூடு கட்டி வச்ச தேன் தான்

உன்னப்போல ஆளு தேடும் இந்த தோளு
ஒட்டிக்கிட்டா நேசம் விடுமா........ வா வா
ஊசிக்கேத்த நூலு ஒண்ணாச்சேரும் நாளு
மாட்டிக்கிட்டே நீதான் வசமா
அத்திப்பழம் நான் தர கொத்தும்கிளி நீ ஆனா
மத்ததெல்லாம் போகப்போக புரியும்
அடி... நான் அரைக்கும் சந்தனமே...ஹா
நான் படிக்கும் மந்திரமே
என்னே மேலே தாங்கிக்க என்ன வேணும் வாங்கிக்க

கண்டுகிட்டேன் நான்தான் கூடு கட்டி வச்ச தேன்தான்
கண்டுபிடி நீதான்...ஹும்ம்... கூடு கட்டி வச்ச தேன் தான்

சுட்டு வச்ச தோச புட்டு தின்ன ஆச..சீய்
சும்மா நின்னு பாத்தா சுகமா... வா வா
மச்சான் கொண்ட மோகம்..ஹையோ
நூறு மைல் வேகம்...அப்பா
கொஞ்சம் பொறு தாரேன் பதமா..ஹே ஹே
பொங்கி வரும் ஆசய பொத்தி வைக்க கூடாது..ஹா
பொத்துகிட்டுப் பாயும் வெளியே
ஐயே... உன்ன இங்கே யார் தடுக்க
காத்திருக்கேன் போர் தொடுக்க
என்ன மேலே தாங்கிக்க..ஹா.... என்ன வேணும் வாங்கிக்க

கண்டுகிட்டேன் நான்தான் கூடு கட்டி வச்ச தேன்தான்
கண்டுகிட்டேன் நான்தான் கூடு கட்டி வச்ச தேன்தான்
நீ சொன்னா புரிஞ்சுது ஜாடை பண்ணா தெரிஞ்சுது
உன்ன பாத்து புலம்புது ஒரு பாட்டுதான் கெளம்புது
கண்டுகிட்டேன் நான்தான் கூடு கட்டி வச்ச தேன்தான்

KALLATHANAMAAGA KANNAM VAITHA - ULLE VELIYE - MANO KSC

கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே
சொல்லி தர வேணும் தொட்டு தொட்டு நாயகனே
உள்ளே இருக்கு ..ஹோ..உந்தன் நினைவு...ஹோஹோ
ஒரு மெத்தை இட்டு பக்கம் வரணும்

கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே

கூடு விட்டு கூடு பாயவா
ஆடி விட்டு மீதி கூறவா
பாடி விட்டு நீயும் கூடவா
கோடி சுகம் நானும் கூறவா
இன்ப ஜுரம் தான் ஏறுதே
எல்லை வரம்பை மீறுதே
என்னை மறந்தேன் இன்பமருந்தேன்
உள்ளத்தில் எண்ணத்தில் தித்தித்தை போடுதே

கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலியே
கிள்ளித் தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே
உள்ளே இருக்கு ..ஹோ..உந்தன் நினைவு...ஹோஹோ
இந்த தத்தைக்கிளி முத்தம் தரணும்

கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே
சொல்லி தர வேணும் தொட்டு தொட்டு நாயகனே

பூத்திருந்து பூவும் வாடுதே
பாத்திருந்து மோகம் கூடுதே
காத்திருந்து நேரம் போனதே
காமனுக்கும் மோகம் ஆனதே
கண்ட கனவா காதலா
காதல் தலைவா காவலா
என்னை மறந்தேன் இன்பமருந்தேன்
உள்ளத்தில் எண்ணத்தில் தித்தித்தை போடுதே

கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே
கிள்ளித் தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே
உள்ளே இருக்கு ..ஹோ..உந்தன் நினைவு...ஹோஹோ
இந்த தத்தைக்கிளி முத்தம் தரணும்

கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே
கிள்ளித் தர வேணும் உள்ளம் என்னும் தாமரையே

PANI VIZHUM MAALAIYIL - MEERA - SPB -ASHA


FILM : MEERA
MUSIC: IR
பனி விழும் மாலையில்
ல ல லா ல லா
பழமுதிர் சோலையில்
ல ல லா ல லா
பாடாதோ கோகிலம்
ஹ ஹ லா ல லா லா லா
காதல் பூபாளம்
கேட்கும் எந்நாளும் ஹோ ஹோ
ரு ரு ரு ரூ ரூ ரூ
ர ப பா ப பா
ஹ ஹ ஹ ஹா ஹ ஹா

உனைச்சுற்றி மனம் வந்தது
சலிகாமல் தினம் வந்தது
கிடைத்தது அதற்க்கொரு அடைக்கலம்
ர ப ரப்ப ரா பா ராபா
தர ர ரூ தர ரூ ரூ
எனக்கென்று புதுத் தத்துவம்
படைக்கின்ற தமிழ் புத்தகம்
ய ய் அய ய யயய யயய் யயய்ய
இடை எனும் கடையிலே கிடைக்குமோ ஹோ

பனி விழும் மாலையில்
வ வ வா வூ வாஆ
பழமுதிர் சோலையில்
ஹஹஹ ஹஹஹ்
ஹ ஹ ஹ ஹஹஹ்
பாடாதோ கோகிலம்
அஹஹஹ ஹா ஹா ஹ
காதல் பூபாளம்
கேட்கும் என்னாளும் ஹோ ஹோ
ஹ ஹ ஹஹஹஹ
ருருருர்ரு தருருருருரரூ
அயயய் யா யா யா யாஅ

தடுக்கின்ற அணைக்கட்டுகள்
நமக்கென்றும் படிக்கட்டுகள்
கரைகளை கடந்திடும் நதிகள் நாம்
ந ந நா நனனன் ந கா நனன் நானன்ன
நர ந கா நர ந காஆ
இருக்கின்ற உயிர் மொத்தமும்
உனக்கென்று தரச் சம்மதம்
ந ந ந ந நஹ் ந ந ந நஹ ந ந
பிரிவுகள் அறிந்திடாப் பிறவிகள்

பனி விழும் மாலையில்
உ ஊ ஊ ஊ ஊஊஉ
பழமுதிர் சோலையில்
ல ல லா ல லா
பாடாதோ கோகிலம்
அ அ ஆஅ ஆ ஆ ஆஅ ஆ
காதல் பூபாளம்
கேட்கும் எந்நாளும் ஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆஅ ஆ ஹஹஹ்
ஆஅ ஆ ஆ ஆ ஆ ஹஹஹஹ ஹஹஹ்

VADIYAMMA PONMAGALE - PAALOOTI VALARTHA KILI - SPB PS

எட்டு வகை திருமகளும் ஒட்டு மொத்தமாக
அரண்மனையில் குடி புகுந்தாள்
தெற்கு முகமாக நின்று வலது கால் எடுத்து வைத்து
ஸ்ரீதேவி மனை புகுந்தாள்
யூ ஆர் வெல்கம்.... வெல்கம்

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா வா.......
 
வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா வா......


ரதியோடு கூந்தல் மதியோடுலாவ
வடிவேலன் தேவி வருக
பதினாரு ஆண்டு ரதி தேவியாக
மணிமாலை சூடி வருக
தொட்டிலுக்குள் என்னை இட்டு
அன்னை தாலாட்டினாள்
கட்டிலுக்குள் உன்னை வைத்து
உன்னுடன் சீராட்டினாள்

வாடியம்மா..ஆஹூ
பொன்மகளே...ஹே ஹேய்
வந்த இடம் ..ஹே ஹேய்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா வா......
நல்ல இடம் ஹே
வா வா வா வா வா
 
மணி மேடைப்போட்டு வலியோடு நானும்
கிளிபோல பெற்ற மகளே
மஹராஜன் வீடும் நம் வீடுதானே
இனி என்ன வாழ்வில் கவலே(லை)
அத்தையம்மா.....கொஞ்சம் நில்லு
பெண்ணோடு நான் கொஞ்சட்டும்
அந்தி வரை நீயும் வந்தால்
வேரென்ன நான் சொல்லட்டும்

வாடியம்மா பொன்மகளே
வந்த இடம் நல்ல இடம்
ராணி மகள் ராணியடி
வா வா வா வா வா.......

VEL MURUGANUKKU MOTTA ONNU - PUYAL PAADUM PAATTU - MVD

நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த
நடனம் ஆடினார்

நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த
நடனம் ஆடினார்

நடனம் ஆடினார் வெகு நாகரீகமாகவே
கனக சபையில் ஆனந்த
நடனம் ஆடினார்

வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்
வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்
காப்பி அடிச்சா அவன் பாத்துக்குறுவான்
பாஸு பண்ணுன்னா வேல வாங்கித்தருவான்
இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் அரோகரா
அட...வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்

பக்தி ரொம்ப முத்துச்சுன்னா பட்டை அடிப்போம்
பாசத்துல பொண்ணுங்கள வட்டம் அடிப்போம்
பக்தி ரொம்ப முத்துச்சுன்னா பட்டை அடிப்போம்
பாசத்துல பொண்ணுங்கள வட்டம் அடிப்போம்
கையால மட்டும்தான் தொட்டுக்குவோம்
கன்னத்துல தந்தாலும் ஒத்துக்குவோம்
கையால மட்டும்தான் தொட்டுக்குவோம்
கன்னத்துல தந்தாலும் ஒத்துக்குவோம்
மச்சி உன் தங்கச்சி எப்போதும் என் கச்(ட்)சி
ஆத்தாடி அம்மாளு ராவெல்லாம் நம்மாளு
அம்மாளுக்கும் நம்மாளுக்கும் ஆச வந்தா பூச பண்ணு

வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்
அட...வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்

நல்ல குடிமக்கள் எல்லாம் மில்லி அடிப்போம்
நாட்டு பற்றை காட்டிக்கொள்ள பட்டை அடிப்போம்
நல்ல குடிமக்கள் எல்லாம் மில்லி அடிப்போம்
நாட்டு பற்றை காட்டிக்கொள்ள பட்டை அடிப்போம்
என்னோட கைத்தாளம் போடுங்க டோய்
என்னோட கைத்தாளம் போடுங்க டோய்
பாட்டுக்கு பின்பாட்டு பாடுங்க டோய்
காலேஜு பொண்ணுங்க ஹயோ ஹயோ ஹய்யோ
டீனேஜு கண்ணுங்க
கச்சேரி கேளுங்க டிஸ்கோவும் ஆடுங்க
இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் அரோகரா

அட...வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்
வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்
நம்ம..வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்
காப்பி அடிச்சா அவன் பாத்துக்குறுவான்
பாஸு பண்ணுன்னா வேல வாங்கித்தருவான்
இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கும் எல்லோருக்கும் அரோகரா
அட...வேல் முருகனுக்கு மொட்டை ஒண்ணு போடப்போறேன் டோய்

KAATRU POOVAI PAARTHU KOORAADHO - I LOVE INDIA - SPB MINMINI

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ I LOVE YOU

மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU

பாவையின் மனத்தில் மேலே நீ புகைப்படத்தைப்போலே
இருப்பவன் மெல்ல சிரிப்பவன்
பூமணி உதட்டின் மீது தேன் படைத்து வைக்கும்போது
எடுப்பவன் பின்பு கொடுப்பவன்
கண் விழிக்கும் அர்த்த ராத்திரி கொம்பு தேனும் ஊறலாம்
கேள்வி கேட்க யாரும் இல்லயே காவல் நீயும் மீறலாம்
மாறன் போடும் பூச்சரம் மார்பின் மீது பாயலாம்
தோகை அன்பு காதலன் தோள்கள் மீது சாயலாம்
பூவாகி காயாகும் ஆசை அரும்புகள்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ I LOVE YOU
மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU

வானிலை அறிக்கைப்போல் நீ விளக்கம் சொன்னதாலே
மழை வரும் விதை துளிர் விடும்
வான் முஹில் கருத்த நேரம் நீர் நிலத்தில் வந்து சேரும்
சுபதினம் இன்று சுகம் வரும்
மேகம் வந்து மண்ணிலாடிடும் மாதம் இந்த கார்த்திகை
மோஹம் வந்து உன்னைக்கூடிடும் மங்கை அந்த மேனகை
வண்ண வண்ண காட்சிகள் கண்ணில் எங்கும் தோன்றுதே
கன்னி கொண்ட கோலங்கள் காதல் நெஞ்சை தூண்டுதே
நூறாண்டு ஆனாலும் வாழும் பருவங்கள்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU
நேற்று பார்த்த பார்வை போதாதோ I LOVE YOU
நெஞ்சம் மௌன கீதம் பாடாதோ I LOVE YOU
மல்லிகை முல்லையைக் கிள்ளிடு
கிள்ளும் மன்னவன் என்னவன் என்று
மெல்லினம் வல்லினம் சொல்லிடு
காதல் பல்லவி பல்லவிக்கென்று
ஆசை ஊஞ்சல் ஆட வா வா வா வா
அழைக்கும் இனிய பருவம்

காற்று பூவை பார்த்து கூறாதோ I LOVE YOU
நாணல் நீரைப் பார்த்துக் கேட்காதோ I LOVE YOU

THIRUTHERIL VARUM SILAIYO - NAAN VAAZHA VAIPPEN - SPB PS




 FILM : NAAN VAAZHAVAIPPEN
MUSIC: ILAIYARAAJAA
SINGERS: SPB PS

திருத்தேரில் வரும் சிலையோ
சிலைபூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலைமலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
திருத்தேரில் வரும் சிலையோ

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனிபோல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழிக்கணையோ தரும் சுகம் சுகம்
மணமேடை வரும் கிளியோ

தாலாட்டு கேட்கின்ற மழலை இது
தண்டோடு தாமரை ஆடுது
சம்பங்கி பூக்களின் வாசம் இது
சங்கீத பொன்மழை தூவுது
ராகங்களில் மோஹனம்
மேகங்களின் நாடகம்
உன் கண்கள் எழுதிய காவியம்
என் இதய மேடைதனில் அரங்கேற்றம்

மணமேடை வரும் கிளியோ
கிளி தேடுவது கனியோ
கனிபோல் மொழியோ
மொழி மயக்கம் பிறக்கும் விழியோ
விழிக்கணையோ தரும் சுகம் சுகம்
திருத்தேரில் வரும் சிலையோ

செந்தூரக் கோவிலின் மேளம் இது
சிருங்கார சங்கீதம் பாடுது
சில்லென்ற தென்றலின் சாரம் இது
தேனூறும் செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பாத்திருக்கும் திருக்கோலம்

திருத்தேரில் வரும் சிலையோ
சிலைபூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
கலைமலரோ மணியோ நிலவோ
நிலவொளியோ எனும் சுகம் தரும்
மணமேடை வரும் கிளியோ

SOLAI ILANGUYIL YAARAI ENNI ENNI - KAAVALUKKU GETTIIKKAARAN - MANO KSC

ஸஸஸஸஸ நிஸ
ஸஸஸஸஸ நிஸ
ரிரிரிரிரி ஸ ரி
ரிரிரிரிரி ஸ ரி
கக ரி ரீஸஸ
கக ரி ரீஸஸ
ஸஸஸஸஸ நிஸ
ரிரிரிரிரி ஸ ரி
ஸ ரி க க ரி ரீ ஸஸ சா
ஹும்ம் ஹும்ம் ஹும்ம் ஹும்ம்

சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ

சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ

காதலில் வானத்து சந்திரனோ
வாலிப தேசத்துச் சூரியனோ
காதலில் வானத்து சந்திரனோ
வாலிப தேசத்துச் சூரியனோ
தோளில் தாவிடும் தாரகையே
வானத்தில் ஏறிடும் தாமாரையே
இசையே மீட்டிடு எனையே
கனலே மூட்டிடு தினமே
பூமகளே உனைத் தேடுகிறேன்
பூவில் வண்டென கூடிடத்தானே

சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ

பாலோடு தேனூரும் பாத்திரம்
நாள்தோறும் நான் அள்ள மாத்திரம்
பாலோடு தேனூரும் பாத்திரம்
நாள்தோறும் நான் அள்ள மாத்திரம்
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே
வாலிபம் போகுது வா முல்லையே
நான் என்றும் நீ என்றும் வேறில்லையே
வாலிபம் போகுது வா முல்லையே
உயிரே காதலின் சுடரே
கிளியே பாடிடும் கவியே
ஆயிரம் பூமழைத் தூவிடுதே
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் சொல்ல

சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ
வானவில்லில் ஒரு மாலை கட்டி வந்து
யாரென்று தேடுதோ.... ஆஹா.....யாரென்று தேடுதோ
ஏதேதோ சங்கீதம் எண்ண எண்ண சந்தோஷம்
நான் பாடவோ உனைத்தான் தீண்டவோ
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ
சோலை இளைங்குயில் யாரை எண்ணி எண்ணி
ராகங்கள் பாடுதோ.... ஆஹா....... ராகங்கள் பாடுதோ

YAARODU YAARO NEE ENDHA OORO - SALANGAIYIL ORU SANGEEDHAM - SPB

ஆ...ஆ நிச நிச நிச நி த நி
த நி ச த ச நி
தகஜம் தகஜம் ச நி ச ச நி ச
தகஜம் தகஜம் க ம ப ச ச ச

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே
உன் மௌனம் கூட ராகங்கள்தானா
தேவி என் தேவி சொல்வாயோ
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலை மீட்டும் வீணை நீர்வீழ்ச்சிதானே
நான் மீட்டும் வீணை உன் மேனி மானே
உனக்காகத்தானே ஆலாபனை
என் பாடல் உந்தன் ஆராதனை
மலர்கள் பிறந்தபோது அதில்
பிறந்து வளர்ந்த மாது
பருவம் அடைந்த கனவு
இவள் சலங்கை அணிந்த நிலவு
இதய வீட்டின் தீபம்....இவளன்றோ

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இளையவளே
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ச த ச நி ச

மயிலாடக்கண்டு மழை வந்ததென்ன
ரயில் பாதை எல்லாம் ரதம் வந்ததென்ன
பூக்காடு எல்லாம் உந்தன் நிழல்
மூங்கில்கள் எல்லாம் புல்லாங்குழல்
உறங்கி கிடந்த ராஹம் இன்று
உன்னை நினைந்து பாடும்
கலைந்துபோன மேகம் இன்று
வானில் வந்து கூடும்
பழகும் இதயம் உன்னைப் பிறியுமோ

யாரோடு யாரோ நீ எந்த ஊரோ இனியவளே
உன் மௌனம் கூட ராகங்கள்தானா
தேவி என் தேவி சொல்வாயோ
யாரோடு யாரோ நீ எந்த ஊரோ

DHEVAN THIRUCHCHABAI MALAR ITHU - AVAR ENAKKE SONDHAM - KJY



FILM: AVAR ENAKKE SONDHAM
LYRICS: KANNADAASAN
MUSIC: ILAIYARAAJAA
SINGER: KJY

தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிக்கின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகைக்கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராஹம்

விண்மீனை உன் கண்களில் பார்கிறேன்
பொன்மானை உன் சாயலில் காண்கிறேன்
என்றும் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தேவியே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே

தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிக்கின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகைக்கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராஹம்

கண்ணே மணியே பொன்னெழில் ராணியே
அன்பே அமுதே அருந்தவ செல்வியே
கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
கவி பாடி வா கதை சொல்லி வா
நம் வாழ்விலே இன்பம் விரைகவே

தேவன் திருச்சபை மலர் இது
வேதம் ஒலிக்கின்ற மணி இது
எங்கெல்லாம் உன் புன்னகைக்கோலம்
அங்கெல்லாம் என் மெல்லிசை ராஹம்

YAAR YAARU ENNANNUDHAAN SOLRENDAA - MUTHU ENGAL SOTHU - BSS PS SJ

யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா நான் சொன்னா ஏத்துக்கோடா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா

ஆயி அப்பன் ஏதும் இல்லா நாய் இதுதான்
ஆள கண்டா ஊளயிடும் நரி இதுதான்
மூக்க பாரு முழியப்பாரு செங்கொரங்கு
செங்கொரங்கு கூட ஒரு பெண் கொரங்கு
பொண்ணு இவ யாரு பொங்குறவ
ஒரு பூனையைப்போல் திருடி திருடி திங்குறவ
இந்த புள்ள போல கணக்குபுள்ள இவரபோல கண்டதில்ல
கை புடுச்சு கால் புடிச்சு வாழுரதில் காக்கை தான்
 
 யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா நான் சொன்னா ஏத்துக்கோடா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
 
வண்டியுடன் பூட்டிடாத மாடு இது
வந்த இடம் சொந்தமின்னு மேயுறது
கட்டிப்போட ஆள் இல்லாத கழுதை இது
காளயோடு சேர்ந்துகிட்டு ஒதைக்கிறது
 பொதி சுமந்தா நல்ல புத்தி வரும்
அந்த புத்தி இந்த கழுதைகும்தான் எப்போ வரும்
மானம் இல்லே ஈனம் இல்லே சூடு இல்லே சொரணை இல்லே
நாலும் கெட நாய்களுக்கு வாய் மட்டும் நீளுது

யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா
நல்லா பாத்துக்கோடா கண்ணா நான் சொன்னா ஏத்துக்கோடா
யார் யாரு என்னன்னுதான் சொல்ரேண்டா கண்ணா
நாய் யாரு நரி யாரு புரியாதோ சொன்னா

ADI PADAGOTTUM PATTAMMAA - CHINNAVAR - MVD KSC

அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா
மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தைய்யா
பட படவென கத கதயென கதைக்கிறியா
இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது
வவ்வாலு மீனும்தான் கெடைக்காம போகாது
அரே ஹொய்னா ஹோ ஓய் ஹோய்னா

மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தைய்யா
பட படவென கத கதயென கதைக்கிறயா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

சிந்தாமணி ஏண்டி பந்த்தாமணி
ஏங்கி நிக்காதே நெனப்பத் தாங்கி நிக்காதே
முத்துமணி உன்னச் சுத்தும் மணி
பாடி வைக்காதே மறச்சு மூடி வைக்காதே
வெட்டுக்கிளி ஒட்டி பேசாதடி கிளி
தட்டுக்குள்ளே வட்டம் போடாதடி
ஒத்த வழி பக்கம் போகாதடி
வித்தையெல்லாம் இங்கே வேகாதடி
மொட்டான மொட்டுக்கு பட்டான சிட்டுக்கு
குளுகுளுகுளு என வருகுது பல கனவு

மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தைய்யா
பட படவென கத கதயென கதைக்கிறயா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா
மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தைய்யா
பட படவென கத கதயென கதைக்கிறயா
இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது
வவ்வாலு மீனும்தான் கெடைக்காம போகாது
அரே ஹொய்னா ஹோ ஹோய்னா

வித்தாரமா என்னச் சுத்தாதம்மா
போட்டிழுத்தாலும் வலைக்குள் மாட்டிக்கொள்ளாது
முத்தாரம்தான் கொடு அச்சாரமா
காக்க வைக்காதே துணிஞ்சு கேக்க வைக்காதே
தொட்டா என்ன விரல் பட்டா என்ன
விட்டா என்ன மனம் கெட்டா என்ன
ஒட்ட வந்த செல்லச் சிட்டா என்ன
தொட்டு கட்டிக்கொள்ள பட்டா என்ன
உன்னோட அன்புக்கு உள்ளூரும் தெம்புக்கு
கிறுகிறுகிறு என வருகுது பல நெனவு

அடி படகோட்டும் பட்டம்மா பாட்டொண்ணு கட்டம்மா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா
மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தைய்யா
பட படவென கத கதயென கதைக்கிறியா
இருந்தாலும் பொண்ணுக்கு இம்புட்டு ஆகாது
வவ்வாலு மீனும்தான் கெடைக்காம போகாது
அரே ஹொய்னா ஹோ ஓய் ஹோய்னா

அட மொரட்டாளு முத்தையா வெறும் வாய பொத்தைய்யா
பட படவென கத கதயென கதைக்கிறயா
சடுகுடுகுடு சடுகுடுகுடு புடிக்கட்டுமா

MAARAAPPOOO SELA MAYILAADUM SOLA - CHINNAVAR - MANO KSC

மாராப்பூச் சேல மயிலாடும் சோல
மச்சான பாத்து ஹோ வரையாதோ ஓல
செந்தூர பூ மேல தென்பாண்டி காத்தாட
மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட
தட்டாம தட்ட தாளம் கொட்டத் தாலி நீ கட்டு

மாராப்பூ சேல ஹோ மயிலாடும் சோல
மச்சான பாத்து ஹோ..ஹோ வரையாதோ ஓல

ஆனிப்பொண்ணு ஆளானது ஆனந்த ராகம் பாடியது
தோணிக்குள்ள பூவானது சொல்லாமத்தானா மூடியது
பாலோடும் ஓட ஹோ ஹோ ஹோ படகோட்டும் வேள
காணாத ஜாலம் ஹோ ஹோ கண் காட்டும் வேள
தாலாட்டும் பாட காலம் தேட யாவும் கை கூட

மாராப்பூ சேல மயிலாடும் சோல
மச்சான பாத்து ஹோ வரையாதோ ஓல
செந்தூர பூ மேல தென்பாண்டி காத்தாட
மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட
தட்டாம தட்ட தாளம் கொட்டத் தாலி நீ கட்டு

மாராப்பூ சேல ஹோ மயிலாடும் சோல
மச்சான பாத்து ஹோ..ஹோ வரையாதோ ஓல
மாராப்பூ சேல மயிலாடும் சோல
மச்சான பாத்து ஹோ வரையாதோ ஓல

மேனிக்குள்ள மின்னல் வெட்டு மெத்தையில் தீபம் ஏத்தியது
வாங்கிக்கொள்ள ஆசப்பட்டு வாலிப மனச மாத்தியது
தானாக ஊறும் ஓ ஹோ ஹோ ஆனந்த ஊற்று
தேனாக பாயும் ஓ ஹோ ஹோ மானே உன் பாட்டு
பூபாணம் போட காதல் கூட கன்னி பெண் தேட

மாராப்பூ சேல மயிலாடும் சோல
மச்சான பாத்து ஹோ வரையாதோ ஓல
செந்தூர பூ மேல தென்பாண்டி காத்தாட
மந்தாரப் பூந்தோட்டம் சந்தோஷக் கூத்தாட
மாராப்பூ சேல மயிலாடும் சோல
மச்சான பாத்து ஹோ வரையாதோ ஓல

ADA GUNDOORU GONDURAA - CHINNAVAR - MANO KSC

குண்ட்டூரு கோங்குரா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
மணக்கும் மலை ஜவ்வாதுதான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாஸுதானடி... மயிலே

அட....குண்ட்டூரு கோங்குரா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா..ஹா ...ஹோய்.... ஹோய்

ஆத்துல தெப்பம் கண் பார்த்ததும் வெப்பம்
அதுதான் என் காயகல்பம்
மாப்புள்ள மப்பும் பெண் பார்வையில் உப்பும்
இவதான் புது கோயில் சிற்பம்
ஆத்து மேட்டில் போட்ட போடு
பூத்து காய்க்கும் ஏல காடு
பாத்து பாத்து நோட்டம் போடு
பதுங்கி பதுங்கி கூட்டம் போடு
எட்டி பாத்தேன் தட்டிப் பாத்தேன்
ஏ...ஒட்டிப் பாத்தேன் அப்போதும் போதல
தட்டோட பாயாசம்

குண்ட்டூரு கோங்குரா கண்ணாலே ஏங்குரா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா
மணக்கும் மல ஜவ்வாதுதான்
அத மறுத்தா ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாஸுதான் அடி.... மயிலே

வாங்கினேன் லட்டு நீ வாங்கணும் பட்டு
வருவேன் ஒரு வாக்கப்பட்டு
பாடணும் மெட்டு புதுப் பாட்டையும் கட்டு
படிப்பேன் ஒரு மாலையிட்டு
ஏத்தப்பாட்டு பாடும்போது ஏக்கம் மேல ஏறுது
பாட்டுக்கேட்டு கூடும்போது பாரம் மேலும் சேருது
மொட்டுத்தானே சிட்டுத்தானே
தொட்டுத்தானே தோளோட சேர்கணும்
சொட்டாத தேந்தானே

அடி....குண்ட்டூரு கோங்குரா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா..ஹா ...ஹோய்.... ஹோய்
மணக்கும் மலை ஜவ்வாதுதான்
மறுத்தா அது ஒவ்வாதுதான்
இனிக்கும் சுட்ட முட்டாசுதான்
இடிச்சா இடி பட்டாஸுதானடி...... மயிலே

அட....குண்ட்டூரு கோங்குரா கண்டாலே ரேங்குறா
கும்மாளம் கும்ப மேளா
சீண்டாம சீண்டுறா நோண்டாம நோண்டுறா
நோயானேன் ரொம்ப நாளா..ஹா ...ஹா ஹா

HEY U U COME WITH ME - ANANTH - SPB

ஆனந்த் ஆனந்த் ஆனந்த்

Hey UUU come to me
Hey UUU dance wid me
Hey UUU listen to me
Hey UUU sing wid me
மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனித்திடும் கனவுகள்
ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்

Hey UU come to me
Hey UU dance wid me
Hey UU listen to me
Hey UU join wid me

கொடியென மெலிந்தது இடையென தெரிந்தது
கொடியை  மேவி மலர்கள் ஆட
குளிர்ந்த நேரம் பிறந்தது
கொடியென மெலிந்தது இடையென தெரிந்தது
கொடியை மேவி  மலர்கள் ஆட
குளிர்ந்த நேரம் பிறந்தது
பருவ மேகம் கவிதை பாடும்
மழையைப் பொழியும் பருவ மேகம்
மனதில் விழுந்து கவிதை பாடும்
மழையைப் பொழியும் பருவ மேகம்
மனதில் விழுந்து கவிதை பாடும்
மறுபடி மறுபடி மயக்கமே ...ஹே
மதனும் ரதியும் இணைந்து எழுத

Hey UU listen to me
Hey UU sing wid me
Hey UU come to me
Hey UU dance wid me
மலரும் மொட்டுக்கள் பழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனிக்கும் கனவுகள்
ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்

Hey UU come to me
Hey UU dance wid me
wid me wid me wid me

மனம் ஒரு மலரிடம் புகுந்தது புகலிடம்
நினைவு யாவும் இனிமை ஆகும்
நிதமும் இன்பம் வலம் வரும்
மனம் ஒரு மலரிடம் புகுந்தது புகலிடம்
நினைவு யாவும் இனிமை ஆகும்
நிதமும் இன்பம் வலம் வரும்
மனது யாவும் உனது மோஹம்
உனது நினைவில் புதிய வேகம்
மனது முழுதும் உனது மோஹம்
உனது நினைவில் புதிய வேகம்
உறவினில் கலந்தது  இனிக்குதே
ஹே...
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்க

Hey UU come to me
Hey UU dance wid me
Hey UU listen to me
Heyy UU sing wid me
மலரும் மொட்டுக்கள் மழகும் மெட்டுக்கள்
இளமை கட்டுக்குள் இணைந்து தட்டுங்கள்
இரவினில் இனித்திடும் கனவுகள்
ஹே இதயம் முழுதும் உனது நினைவுகள்

Hey UU listen to me
Hey UU join wid me
Heyy UU sing wid me
Hey UU listen to me
Heyy UU sing wid me

Thursday, September 29, 2016

O NAAN ENNANNU SOLLUVEN - AAYUDHA POOJAI - SPB SP SHYLAJAA


FILM : AAYUTHA POOJAI
SINGER: SPB SP SHYLAJAA
LYRICS: VAALI
MUSIC: VIDHYA SAAGAR

ஓ நா என்னன்னு சொல்லுவேன்
என்ன ஏது எப்போ எங்கே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஓ ஹோ நா எப்படித்தான் சொல்லுவேன்
ஒன்ணோ ரெண்டோ ஏதோ கொஞ்சம் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
இடுப்பு மடிப்புல மடிப்புல மச்சம்
உதட்டு வெடிப்புல வெடிப்புல மச்சம்
முதுகு பரப்புல பரப்புல மச்சம்
இன்னமும் இருக்குது மிச்சம்
ஓ நா என்னன்னு சொல்லுவேன்
என்ன ஏது எப்போ எங்கே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஓ ஹோ நா எப்படித்தான் சொல்லுவேன்
ஒன்ணோ ரெண்டோ ஏதோ கொஞ்சம் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

டீ கடைய கட்டி காக்குறயே இந்த பூக்கடைய கொஞ்சம் பாரு
மூக்கிருக்கு ரெண்டு முழி இருக்கு இது தேக்குலதான் செஞ்ச தேரு
டீ கடைய கட்டி காக்குறயே இந்த பூக்கடைய கொஞ்சம் பாரு
மூக்கிருக்கு ரெண்டு முழி இருக்கு இது தேக்குலதான் செஞ்ச தேரு
என்னன்னவோ ஆயாச்சு எங்கெங்கேயோ போயாச்சு
ஏதோ ஒரு நோயாச்சு ஒன்ன நெனச்சு
அதன் பேரு காதல் நோய்தான் அது கேக்கும் பட்டு பாய்தான்
அத வாங்கி நீயும் போடு படுத்தாதே ரொம்ப பாடு

ஓ நா என்னன்னு சொல்லுவேன்
என்ன ஏது எப்போ எங்கே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஓ ஹோ நா எப்படித்தான் சொல்லுவேன்
ஒன்ணோ ரெண்டோ ஏதோ கொஞ்சம் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
இடுப்பு மடிப்புல மடிப்புல மச்சம்
உதட்டு வெடிப்புல வெடிப்புல மச்சம்
முதுகு பரப்புல பரப்புல மச்சம்
இன்னமும் இருக்குது மிச்சம்

பூனையைத்தான் வந்து கூப்பிடுது பசும்பால் இருக்கும் இந்த பான
தூண்டியத்தான் என்ன போடச்சொல்லி என்ன தூண்டுறியே சின்ன மீன
ஹ ஹ ஹ ஹ
பூனையைத்தான் வந்து கூப்பிடுது பசும்பால் இருக்கும் இந்த பான
தூண்டியத்தான் என்ன போடச்சொல்லி என்ன தூண்டுறியே சின்ன மீன
சுத்தி வறேன் செக்காட்டம் நிக்கறியே மக்காட்டம்
எம்மனச மத்தாட்டம் ஏன்யா கடஞ்சே
இனிமேல தூக்கம் ஏது இது போல தாக்கும்போது
நீதாண்டி ஈர நாத்து நான் தாண்டி ஊத காத்து

ஓ நா என்னன்னு சொல்லுவேன்
என்ன ஏது எப்போ எங்கே சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
ஓ ஹோ நா எப்படித்தான் சொல்லுவேன்
ஒன்ணோ ரெண்டோ ஏதோ கொஞ்சம் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
அழகில் அசத்துற அசத்துற மச்சம்
ஒடம்ப கொதிச்சிட கொதிச்சிட வச்சான்
இரண்டு மனசயும் மனசையும் தெச்சான்
என்ன நீ எடுதுக்க எடுதுக்க மொத்தம்














Wednesday, September 28, 2016

KANGAL ENGEY NENJAMUM ANGEY - KARNAN - SUSEELAA




FILM : KARNAM
MUSIC: VISWANAATHAN RAAMAMOORTHY
LYRICS: KANNADAASAN
SINGER: P . SUSEELAA


கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே மேனியும் இங்கே
காவலின்றி வந்தன இங்கே ஆஆ ஆ

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்
அனல் கொண்டு வெடிக்கும்
மலர் போன்ற  இதழின்று பனி  கண்டு துடிக்கும்
துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம் ஆஅ.ஆ ஆ

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே

இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன்
குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன் ஆஅ.ஆ ஆ

கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
கண்டபோதே சென்றன அங்கே
கண்கள் எங்கே..

ORU VAANAVIL POLE EN VAAZHVILE - KAATRINILE VARUM GEETHAM - JC SJ


FILM : KAATRINILE VARUM GEEDHAM
MUSIC: ILAIYARAAJAA
SINGERS: SJ JC
LYRICS: KANNADAASAN

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்
ஒரு வானவில்

வளர் கூந்தலின் மணம் சுகம்
இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில்
புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை மனம் கொள்ள
வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல்
களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான்
கவிதைகள் பாடவா

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

உனக்காகவே கனிந்தது
மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது
கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ
இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ
இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே
இது ஒரு காவியம்

ஒரு வானவில் போலே
என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய்
என் உயிரிலே நீ கலந்தாய்

MAANIKKA SILAIYE MANMADHA KALAIYE - KAADHAL OOIVADHILLAI - SPB SJ




FILM: KAADHAL OOIVADHILLAI
SINGERS: SPB SJ
MUSIC: ILAIYARAAJA

 மாணிக்க சிலையே மன்மத கலையே
மனசுக்குள் அடிக்கிது அலையே
ஆ .. ஆ ஹா
ஏன் இந்த தினவு ஆனந்த கனவு
எதற்கோ துடிக்கிது இமையே
தேன்குடம் சிந்திய ஈரம்
தேடுகிறேன் இதழ் ஓரம்
தேன்குடம் சிந்திய ஈரம்
தேடுகிறேன் இதழ் ஓரம்
தலையில் இருந்து விருந்து
தலைவா தினமும் அருந்து

மாணிக்க சிலையே மன்மத கலையே
மனசுக்குள் அடிக்கிது அலையே

காதல் என்பது கோயில்தான்
கண்களே தீபங்கள்
பெண்மை என்பது தெய்வம்தான்
முத்தமே வேதங்கள்
யார் வேண்டும் ல ல ல  நீ வேண்டும்
ல ல ல ஏன் வேண்டும்
இதழ்களில் வழிகிற தேன் வேண்டும்
இளங்கொடி குலுங்கிடும்
மார்கழி மாதங்கள் கண்களில் உள்ளது
சித்திரை ஏனடி நெஞ்சுக்குள்
உன் விழி பார்க்கவும் உன் விரல் தீண்டவும்
நித்திரை போனது கண்ணுக்குள்
போனது போகட்டும் ஆனது ஆகட்டும்
பூங்கொடியே என்னை கட்டிக்கொள்

மாணிக்க சிலை நான் மன்மத கலை நான்
மனசுக்குள் அடிக்கிது அலைதான்
ஏன் இந்த தினவு ஆனந்த கனவு
எதற்கோ துடிக்கிது இமைதான்
தேன்குடம் சிந்திய ஈரம்
தேடுகிறேன் இதழ் ஓரம்
தேன்குடம் சிந்திய ஈரம்
தேடுகிறேன் இதழ் ஓரம்
தலையில் இருந்து விருந்து
தருவாள் தினமும் கொழுந்து

மாணிக்க சிலை நான் மன்மத கலை நான்
மனசுக்குள் அடிக்கிது அலைதான்

வானம் என்பது நம் வீதி
வெண்ணிலவு நம் வீடு
இரவில் தினமும் சுகம் இருக்கு
விண்மீன்கள் விடிவிளக்கு
ஏன் கனவு ல ல ல ல தேன் நிலவு
ல ல ல ல ஏன் கனவு
கனவுகள் பலிகட்டும் தேன் நிலவு
ஆனந்த மழை இது
அந்தி சிவக்கவும் நெஞ்சு துடித்தவள்
சிந்து படிப்பது இப்போது
சிந்து படித்தவள் முந்தி விரித்திட
தந்தி அடிப்பது எப்போது
மேளம் அடித்தொரு தாலி கொடுத்தபின்
நாலும் நடக்கணும் அப்போது

மாணிக்க சிலையே மன்மத கலையே
மனசுக்குள் அடிக்கிது அலையே
ஆ .. ஆ ஹா
ஏன் இந்த தினவு ஆனந்த கனவு
எதற்கோ துடிக்கிது இமையே
தேன்குடம் சிந்திய ஈரம்
தேடுகிறேன் இதழ் ஓரம்
தேன்குடம் சிந்திய ஈரம்
தேடுகிறேன் இதழ் ஓரம்
தலையில் இருந்து விருந்து
தலைவா தினமும் அருந்து

மாணிக்க சிலையே மன்மத கலையே
மனசுக்குள் அடிக்கிது அலையே
ஆ ஆ ஆ ஆ ஆ
ஏன் இந்த தினவு ஆனந்த கனவு
எதற்கோ துடிக்கிது இமையே







Monday, September 12, 2016

PANIYUM NAANE MALARUM NEEYE - PANIMALAR



படம்: பனிமலர்
குரல் : எஸ்.பி.பி. , ஜென்சி
இசை: சங்கர் கனேஷ்
பாடல்: முத்துலிங்கம்


பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச் சந்தங்கள் சிந்தட்டும்


பனியும் நீயே மலரும் நானே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச்  சந்தங்கள் சிந்தட்டும்



சித்திரச் சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
ஹே கற்பனைத் தேரில் அற்புத வானில்
சொர்க்கமும் போய்  வருவோம் வருவோம் வருவோம்


மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப்  போல இன்பம் பொங்கட்டும்
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம்  தரும் உன் வார்த்தை தாலாட்டு
சந்தனம் பூப்போல் சங்கதி சேர்க்க
காவியம் பல தோன்றும் தோன்றும் தோன்றும்

பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச்  சந்தங்கள் சிந்தட்டும்

Thursday, September 8, 2016

MARATHA VACHAVAN THANNI OOTHUVAAN - PANAKKARAN





படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
குரல்: இளையராஜா
 பாடல்: இளையராஜா

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்
ஏ  மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவனோ
அவனே சுமப்பான்...
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்,
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்...


மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்,
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்...

படைத்தவனின் துணையிருக்க
அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க
வருத்தமிங்கே உனக்கெதற்கு...(2)

உன்னை நல்ல ஆளாக்க
உத்தமனைப் போலாக்க
எண்ணியவன் யாரென்று
கண்டுகொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை
போற்றும் நாள் வரும்...
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்,
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்...


மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்...


உதவியின்றி தவிப்பவர்க்கு
உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு
உணவு தர நீ படிப்பாய்...(2)

புத்தியுள்ள உனக்கெல்லாம்
புத்தகத்துப் படிப்பென்ன
சக்தியுள்ள உனக்கெல்லாம்
சத்தியத்தில் தவிப்பென்ன
காத்து இருப்பது எத்தனை பேரோ
உன்னிடம் தோற்பதற்கு...
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்,
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்...

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்,
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்...

ஏ  மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவனோ
அவனே சுமப்பான்...
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்,
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்...

Monday, September 5, 2016

MELAM KOTTA NERAM VARUM - LAKSHMI



படம்: லட்சுமி
குரல்: B.S.சசிரேகா
இசை: இளையராஜா
பாடல்: ஆலங்குடி சோமு

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து
மாலையிட போறவன கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே
இது உண்மையடி

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சலசலக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சிச் சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்
புது சுகமிருக்கும்

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்


Sunday, September 4, 2016

KALYANA MALAI - PUDHU PUDHU ARTHANGAL



படம்: புதுப்புது அர்த்தங்கள்
இசை: இளையராஜா
குரல்: எஸ்.பி.பி.
பாடல்: வாலி

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே...

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
ஆவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும்போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்...

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே