படம் : வாழ்வு என் பக்கம்
குரல் : கே.ஜே. யேசுதாஸ், சசிரேகா
இசை : மெல்லிசை மன்னர்
பாடல்: கண்ணதாசன்
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக்கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று
நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒருவகை மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
(வீணை பேசும்)
காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதைக் கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
(வீணை பேசும்)
Class song. Look at the melody by MSV & lyrics by Kannadasan. Dasettan in his youth with melodious humming by sasirekha.Memories fly back to 1976.
ReplyDeleteஇசைக்கு மொழி ஏது? தென்றல் வருடும் சுகம் பாடகர் குரலில்
ReplyDelete