படம்: வருஷம் 16 இசை: இளையராஜா குரல்: KJ ஜேசுதாஸ் பாடல்: வாலி பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான் படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான் நாந்தான் அதன் ராகம் தாளமும் கேட்பேன் தினம் காலை மாலையும் கோலம் அதன் ஜாலம் இங்கு ஓராயிரம் (பழமுதிர்..)
தூரத்தில் போகின்ற மேகங்களே தூறல்கள் போடுங்கள் பூமியிலே வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களேன் ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும் பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும் ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே (பழமுதிர்..)
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல் நாளும் வளர்ந்திடும் நினைவுகளால் நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள் பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி சிந்தை இனித்திட உறவுகள் மேவி பிள்ளைகள் பேணி வளர்த்தது இங்கே மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட (பழமுதிர்..)
கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளமேனி உன் வசமோ
(கண்ணாலே)
உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
மெய்வண்ணம் கைவண்ணம் தேடும்
உடல் மேலுக்கும் கீழுக்கும் ஆடும்
என் நெஞ்சும் உன் நெஞ்சும் கூடும்
சுகம் என்னென்று பெண்ணின்று பாடும்
சித்தரித்த பெண்ணழகு
செண்டு கட்டும் முன்னழகு
சிக்கவைக்கும் கண்ணழகும்
பொல்லாதது..
வெற்றி உன்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
தங்க மகள் துள்ளி வந்தாள்
முத்து நகை அள்ளித் தந்தாள்
கார்கூந்தல் மாணிக்கப்பந்தல்
இது கண்ணல்ல எண்ணத்தின் வாசல்
உன் தேகம் என் காதல் நாவல்
பக்கம் ஒவ்வொன்றும் வாசிக்க ஆவல்
அச்சடித்த புத்தகத்தை
அட்டைப்பட சித்திரத்தை
இச்சைப்படி தொட்டுப்படி
இன்றாவது....
வெற்றி என்னைத் தேடி வரும் நன்னாளிது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாளிது
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
புத்தாண்டு வாழ்த்துகள்
எல்லோரும் பாடுங்கள்
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது நினைவு வந்தது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளும் உள்ளது
நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது திருடிக் கொண்டது
காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது
நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது திருடிக் கொண்டது
இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது இப்போது நடப்பதுதான் உனக்கும் கூட புரிந்தது கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது கடலாளம் சிறியதம்மா பெண் மனது பெரியது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு
இந்த பூமியின் இன்ப தேவதை
அன்பு ராகம் நீயேதான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்
காதல் தீபம் நீயேதான்
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு
தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா
தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா
எனது கை வீணை ராகங்களே
என் உயிரே உன் வார்த்தைகளே
பாடுவது என் மனது
ஆடுவது உன் மனது
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு
மணக்கோலம் நீ காணும் நன்நாள் எது
மாப்பிள்ளை ஊர்கோல பொன்நாள் எது
மணக்கோலம் நீ காணும் நன்நாள் எது
மாப்பிள்ளை ஊர்கோல பொன்நாள் எது
குங்குமச்சாந்து கோலம் இட்டு
நீ வரும் காலம் நேரம் எது
வாழியவே ஓவியங்கள்
ஏழை நெஞ்சின் காவியங்கள்
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையைக் கண்டதுண்டு
FILM : SAAMI SONNA SARITHAAN
SINGERS: SPB SWARNALATHA
MUSIC : DEVA
பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன் என் ஜன்னல் வழியாக எந்தன் ஜன்னல் வழியாக
பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன் என் ஜன்னல் வழியாக எந்தன் ஜன்னல் வழியாக என் வீட்டு தோட்டத்து ரோஸா உன் பாட்டை பாடுது வா வா பௌர்ணமியோ புது மார்கழியோ பாட வந்தேன் இவள் தேவதையோ
பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன் என் ஜன்னல் வழியாக எந்தன் ஜன்னல் வழியாக
காலங்கள் கறைந்து விழ மோகங்கள் நிறைந்து எழ கனவுகளில் மனம் முழுதும் காவியம் பாட ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஏடெந்தன் இளைய உடல் எழுதுங்கள் புதிய மடல் எழுதையிலே ரசித்திருக்கும் ஏந்திழை தேகம் வளர்ந்தது வாலிப கனவுகளே வழிந்தது ஆசையின் நினைவுகளே வளர்பிறையே தொடர் கதையே வா இனி நீ இன்றி நான் இல்லையே
பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன் என் ஜன்னல் வழியாக எந்தன் ஜன்னல் வழியாக ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பூ வாழை மாவிலையும் பொன் மஞ்சள் தோரணமும் ஆடி வரும் நேரம் எது தேடிய மாது ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஹாஹா...தனியறையில் ஆனந்தம் புது முறையில் அனுபவிப்போம் அதை வளர்ப்போம் ஆயிரம் ஆண்டு பலப்பல பிறவியின் பயனல்லவா இணைத்தது ஆண்டவன் செயலல்லவா இரு உடலில் ஒரு உயிரே இது ஒரு அதிசய கணக்கலாவா
பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன் என் ஜன்னல் வழியாக எந்தன் ஜன்னல் வழியாக என் வீட்டு தோட்டத்து ரோஸா உன் பாட்டை பாடுது வா வா பௌர்ணமியோ புது மார்கழியோ பாட வந்தேன் இவள் தேவதையோ
பார்த்தேன் சிரித்தேன் எடுத்தேன் கொடுத்தேன் என் ஜன்னல் வழியாக எந்தன் ஜன்னல் வழியா..............................க
பக்கம் வர வெட்கப்பட்டால் நடக்குமா ஆஹா...பருவத்தின் நாடகம் கசக்குமா பகலென்ன இரவென்ன நமக்குள்ளே ..ஆஹா தாலாட்டு நீ இன்று மாப்புள்ளே ஹே ஹே ஆஹா ஹா ஹா ஹா ஹே ஹே லலலல் லா லா
ஏக்கம் வரும் தூக்கம் கெடும் லவ் மீ யூ சேலை தொடும் வேளை வரும் ஐ லவ் யூ ஏக்கம் வரும் தூக்கம் கெடும் யூ... சேலை தொடும் வேளை வரும் ஐ ஐ பொருங்க ...கடும் குளிருங்க போதுங்க...இன்னும் வேணுங்க புதுசுங்க...இள மனசுங்க பயமுங்க...அது சுகமுங்க அழகிய பதுமை அவசர நிலமை அறிவேனையா......
காளை மனம் நாளை வரை தாங்காது நொ நொ நொ நொ பாவை மனம் தேவைகளை சொல்லாது ஹ ஹ ஹ ஹ காளை மனம் நாளை வரை நொ நொ நொ நொ பாவை மனம் தேவைகளை நெருக்கமா...அது நடக்குமா நடுக்கமா...கொடி பொருக்குமா கொடுக்கவா.....நான் தடுக்கவா முடிக்கவா...அதை ரசிக்கவா இயற்கையின் மடியில் இளமையின் பிடியில் இளைப்பாறவா
அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே
அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே
அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா ஆ ஆ ஆ ஆ
பன்னீர் ஆறு பாயட்டும் அங்கே அன்னம் ஆடட்டும்
இங்கே உந்தன் ராஜசபையில் எங்கே அந்த மாய கலைகள்
முல்லை பூத்த காடொன்று முன்னால் தேனின் கூடொன்று
கண்டால் அந்த பாதை சிறிது உண்டால் தோன்றும் போதை பெரிது
மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
செவ்வந்தி கொத்தாட சிந்தாமல் முத்தாட
ஜாடை தந்தாயோ
அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலட்ட வா ஹா ஹா
நிலா நீந்தும் வானத்தில் உலா வந்த மேகத்தில்
கண்ணே மாலை மஞ்சம் இடவோ
கையால் ரேகை போட வரவோ
ஒரே ராகம் பாடுங்கள் ஒரே தாளம் போடுங்கள்
தொட்டால் ராஜ போதை தருமோ
சொன்னால் மேனி வாடி விடுமோ
வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
கையோடு கையாக கல்யாண பெண்ணாக வந்தேன் இப்போதே
அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே
அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலட்ட வா ஹா ஹா
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம் குளிர் மேகங்கள் பனி காலங்கள் பெற வேண்டும் சுகங்களே எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
பூஞ்சோலையில் பூந்தென்றலில் பொன்மேனி நடமாடுது என் நெஞ்சம் தடுமாறுது தோளோடு நான் சாய்ந்தாடவா சொல்லாத சுவை கூறவா சூடான கதை சொல்லவா பொன்மாலை நேரம் தேனானது பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது சொர்கத்தைக் கண்டேனம்மா எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
தாயாகினேன் தாலாட்டினேன் கண்ணா என் ராஜாங்கமே நீதான் என் ஆதாரமே மணிப்பிள்ளைகள் மான் குட்டிகள் உறவாடும் தெய்வங்களே ஒளி வீசும் தீபங்களே வாடாத முல்லை பூ மேனியே தேடாமல் வந்த செல்வங்களே என் ஜீவன் உன்னோடுதான்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன் அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம் குளிர் மேகங்கள் பனி காலங்கள் பெற வேண்டும் சுகங்களே எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
கன்னம் செவக்குது எண்ணம் தவிக்கிது உன்ன நெனைக்கயிலே இதமா என்ன அணைக்கயிலே கண்ணு சிமிட்டுது என்ன வெரட்டுது மெல்ல சிரிக்கையிலே நீதான் என்ன ரசிக்கையிலே உள்ளம் சிலிர்க்குது மின்னி சொலிக்கிது கட்டிப்புடிக்கயிலே நெசமா கைய புடிக்கயிலே இது அணச்சாலும் கொறயாது அழிச்சாலும் மறையாது சொல்ல தெரிஞ்சிருந்தும் அத நான் சொல்ல முடியலையே
பட்டு கழுத்துல முத்து தெரியுது பொண்ணு சிரிக்கையிலே அழகு கண்ண பறிக்கயிலே தொட்டு தழுவுன்னு சொல்லி அழைக்கிது இந்த மனசினிலே ரெண்டும் சின்ன வயசினிலே விட்டு விலகுன்னு வெட்க்கம் தடுக்குது போக முடியலையே எனக்கு ஏதும் புரியலையே நான் பாய் போட்டுப் படுத்தாலும் பாலாக குடிச்சாலும் தூக்கம் புடிக்கலையே எனக்கு ஏதும் ருசிக்கலையே
வருவாய் கண்ணா நீராட
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
ஹரே க்ருஷ்ணா
ஸ்ருங்காரம் என்றென்றும் ஸ்ரீக்ருஷ்ணபாவம்
ஸ்ரீக்ருஷ்ணன் துணைதானே ராதாவின் யோகம்
ஸ்ரீக்ருஷ்ணன் துணைதானே ராதாவின் யோகம்
விழி வானம் கருநீலம் திருமேனி
அழகான புது நீலம்
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ஸ்ருங்காரம் என்றென்றும் ஸ்ரீக்ருஷ்ண ரசபாவம்
ஸ்ரீக்ருஷ்ணன் துணைதானே ராதாவின் புதுயோகம்
ஹரே...க்ருஷ்ணா.......ஆ ஆ ஆ ஆ ஆ
வில்லேந்தும் வீரம் ராமாவதாரம்
கலைவடிவம் இசை வடிவம்
மாதவனே கண்ணா அவதாரா லீலா
ரச லீலா ஸ்ரீபாலா கோபாலா ஸ்ரீலோலா
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
வில்லேந்தும் தனி வீரம் ராமா உன் அவதாரம்
கலைவடிவம் இசை வடிவம்
மாதவனே மாயவனே ஹரே க்ருஷ்ணா
ரபபபப... ரபபாப்.. ப்பாஆ... பாஅ... பா
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
ஹரே க்ருஷ்ணா
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா?
வேலிக்கு மேலொருவன் வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தர்ம தரிசனத்தை தேடுகின்றான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?
கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததென்று கூறு கண்ணே
நமது வேதம் தனை மறந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...
கேள்வியின் நாயகியே - இந்தக்
கேள்விக்கு பதிலேதம்மா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்
பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...
19/10/2016- நடிகை ஸ்ரீவித்யா
அவர்களின் நினைவு தின சிறப்புப் பதிவு
இயக்குநர் சிகரம் K.பாலசந்தரின் இயக்கத்தில், கண்ணதாசன் வரிகளில் அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இலைமறை காய்மறை அர்த்தங்கள் பொதிந்த வரிகளுடன் கதாநாயகி பாடும் பாடல் இது.
அழகான கண்ணழகி ஸ்ரீவித்யா அவர்களுக்காகவும், வாணி ஜெயராம்
அவர்களின் குரலுக்காவே நிறைய முறை கேட்க வைக்கும், கேட்டு பாருங்களேன்.
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் புது கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள் முத்துப்போல் சிரித்தாள் மொட்டுப்போல் மலர்ந்தாள் விழியால் இவள் கணை தொடுத்தாள்
இந்த காதல் மகராணி கவிதை பூ விரித்தாள் புது கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்
பூவை நீ பூமடல் பூவுடல் தேன் கடல் தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன் மான் விழி ஏங்குது மையலும் ஏறுது பூங்கொடியை பனிபோல் மெதுவாய் தழுவு கண்ணே உந்தன் கூந்தல் ஓரம் கண்கள் மூடி தூங்கும் நேரம் இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும் உள்ளம் போகும் ஊர்வலம் காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே நான் என்னையே மறந்தேன் கனவில் மிதந்தேன் உன் முக தீபத்தில் ஓவியம் மின்னுதே உன் அழகால் இரவை பகலாய் அறிந்தேன் மண்ணில் உள்ள இன்பம் யாவும் இங்கே இன்று நாமும் காண்போம் அன்பே அந்த தேவலோக சொர்கம் இங்கே தேடுவோம்
காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான் புது கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தான் முத்துப்போல் எடுத்தான் தொட்டுத்தான் அணைத்தான் விழியால் இவன் கணை தொடுத்தான்
காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான் புது கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்
நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
இதுதானோ மோஹம் இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா நான்தானே ரோஜா
நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா
செந்தாழம் பூக்கள் சிரிக்கின்ற நேரம்
செவ்வானில் மீன்கள் வருகின்ற நேரம்
தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்
வாம்மா...ஹா..பக்க்கத்திலே வாம்மா..ஹும்ம்ஹும்
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
இரவோடு நிலவு கதை பேசும்போது
உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும்
பொன்மேனி எங்கும் பூவாட வேண்டும்
வாய்ய்ய்யா.... அஹ்ஹான்.....பக்கத்திலே வ்வாய்ய்ய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா
நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா
பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு
சொல்லாமல் என்னை அணைக்கின்ற சொகுசு
எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு
வாய்ய்ய்யா.... அயொ.....பக்கத்திலே
ஹாஹான்
என் காதல் ராஜா நான்தானே ரோஜா
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
மதுரை சோமு ( 1919-1989) என்றாலே அவரது மருதமலை மாமணியே பாடலே நினைவுக்கு வரும். ஆனால் அதற்குமுன் அவர் திரைக்கு வந்தும் வராத நான்கு பாடல்களையும் வெளிவந்தும் அவ்வளவாகக் கேட்டிராத ஒரு திரைப்படலையும் பாடியிருக்கிறார்.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் பிறந்தாலும் மதுரையில் வளர்ந்தவர். (பெற்றோர சச்சிதானந்தம் பிள்ளை- கமலாம்பாள்.) சகோதரர்கள் குஸ்தி பயின்றவர்கள் என்பதால் இவரும் அதனைப்பயின்றதால் குரல்வளமே பாதிக்கப்பட்டு பின்னர் பிரபல MPN சகோதரர்கள் நாதஸ்வர இசையோடு இசைந்துபாடி உரத்த குரல்வளத்தைப் பெற்றவர் கடைசிவரை இவரது பாடல்களை நாதஸ்வர பாணி பிர்க்காக்களே ஆக்கிரமித்திருந்தன.(இன்றும் அந்த பாணியை அவரது சிஷ்யை பிரபலமான பாடகி திருமதி அருணா சாயிராம் அவர்கள் பாடுவதைக் கேட்கலாம்) .
முதலில் கற்றது எம் எஸ் சுக்கு கற்பித்த சுந்தரேச பட்டர் என்பவரிடம். இவர் மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யருடைய சீடர். பின்னர் பிரபல வித்வான் சித்தூர் சுப்ரமணியப் பிள்ளை அவர்களிடம் கற்றார் பலதெலுங்கு பாடல்களையும் அட்சர சுத்தமாகப் பாடதெரிந்தும் தமிழ்பாடல்களைப் படுவதிலேதான் ஆர்வம் காட்டினார் அவரது சொந்தப் பாடல்கள் மதுரை மீனாட்சி RTP பலலவியும் என்னகவி பாடினாலும் (நீலமணி ராகம்)பாடல் போன்றவை பிரபலம்.
சிறுவயதில் அவர் ஒரு ராக்கோழி என்றுகூட கிண்டல் செய்திருக்கிறோம் எப்போதும் இரவு எட்டுமணிக்குமேல் துவங்கி நள்ளிரவு வரைகூட பாடுவார் வயலின் மிருதங்கம்தவிர கஞ்சிரா மோர்சிங் கொன்னக்கோல் என மேடை நிறைந்த கச்சேரிகளாகதான் படுவார். அவர் கால் படாத பிரபல கோவில்களே இல்லை..பாடல்களின் நடுவே திடீர் திடீரென்று ராமா ராமா என பெரியகுரலில் சொல்வது அவரது பாணி கச்சேரியில் நடுவில் யாராவது எழுந்து போக முயற்சித்தால் அவ்வளவுதான் நீங்க கேட்ட பாட்டத்தான் அடுத்ததா பாடப்போறேன் உட்காருங்க என அதட்டுவார் VIP கள் பாதியில் எழுந்தபோது திடீரென்று மங்களம் பாடி முடித்து நோகடிததுமுண்டு.
முதல் திரைப்பட அனுபவம்?
சம்பூர்ண இராமாயணம் எனும் படத்தில் இராவணன் கதா பாத்திரத்திற்கு 4 பாடல்கள் பாடி ஒலிப்பதிவும் செய்யபட்டன. ஆனால் இராவணன் பாத்திரத்தில் நடித்த டி.கே.பகவதிக்கு இவர் பாடிய வேகத்திற்கு வாயசைக்க இயலாத காரணத்தால் இயக்குனர் வீணைக் கொடியுடைய எனும் பாடலை சிதம்பரம் ஜெயராமன் பாடினால்தான் சரியாக இருக்கும் என விரும்பினார் .சோமுவை சிபாரிசு செய்திருந்த சிவாஜி கணேசன் வருத்ததுடன் இதனை சோமு அவர்களிடம் சொன்னபோது ஒண்ணு நான்பாடி ரெகார்டு பண்ணின எல்லாப்பாட்டும் படத்தில் வரணும் இல்லாவிடில் எல்லாவற்றையுமே நீக்கிவிடுங்கள் என அவ்வருக்கே உரிய சுயமரியாதை கலந்த கோபத்தில் கூறினாராம் இதனால் இவர் பாடியவை அப்படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.என்று கூறுவர்.
இன்னொரு காரணம் என்னவெனில் அவரால் 78 RPMஇசைத் தட்டுகேற்றவாறு மூன்றரை நிமிடத்தில் பாடி முடிக்கமுடியவில்லை பாட துவங்கினால் அவரையே அவரால் அடக்கமுடியாமல் தனையறியாமல் கூடுதல் சங்கதிகளைப் பாடியதால் நேரம் கடந்து சரிவராமல் போய்விட்டதென்றும் கூறுவர். இதெல்லாம் அறிந்தும் அவரது முருகன் பாடல்களில் மயங்கிய சாண்டோ சின்னப்பாதேவர் குன்னக்குடியின் இசையில் தயாரித்த தெய்வம் (1969)படத்தில் சூப்பர் ஹிட் மருதமலை மாமணியே பாடலை பாடவைத்தார்.
அதற்கு சோமு அவர்களையே நடிக்கவும் வைத்தார் எந்த ஜென்மத்திலும் அதனை அவர்போலவே வேறொருவர் பாடவே முடியாது ஆனாலும் என்ன? அவருக்கு சினிமாப் பாடல்கள் பாடி சம்பாதிப்பதில் அவ்வளவாக நாட்டமில்லை. (நேரககட்டுப்பாட்டுக்கும் அவருக்கும் வெகுதூரமாயிற்றே Cinema is not his cup of tea…! ) எளியவாழ்வையே வாழ்ந்து கொடுப்பதை வாங்கிக்கொண்டு நிறைவாகப் பாடுவதே அவர் வழி வெகுநாள் கழித்து சஷ்டி விரதம் என்ற திரைப்படத்தில். 'நம்பிக்கை வைத்திருந்து நாளும் நினைத்திருந்து கும்பட்டால் காத்தருளும் குமரனின் குடமுழுக்கு'' எனும் (முற்காலத்தில் தன்னிடம் அடிவாங்கிய ) கவிஞர் வாலி அவர்கள் இயற்றிய பாடலைப் பாடியிருந்தார் .
மூன்று மறக்க முடியா நிகழ்வுகள்
1 இன்று உச்சத்தில் இருக்கும் ஒரு நகைச்சுவைக் HERO நடிகரின் தாத்தா அக்காலத்தில் ஒரு பிரபல நாதஸ்வர வித்வான். அவர் ஒருமுறை திரு சோமு கச்சேரி மிருதங்க தனியாவர்த்தனத்தின் போது எழுந்துபோவதைப் பார்த்ததும் கோபம் கொண்டு கச்சேரிக்கு மங்களம் பாடிவிட்டார் (அந்த எனது மிருதங்க நண்பர் /நான் சின்னப்பையன்தானே போகட்டுமே என்றபோது அதெல்லாம் தவறு சிறிய வித்வானானாலும் மரியாதை தேவை யாராக இருந்தாலும் எதிர்பார்ப்பேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறினாராம்) .
2 எனது நண்பர் கூறியது ஒரு திருக்காட்டுப்பள்ளி கிராமக் கச்சேரியின்போது அவருக்கு அப்போது இளைஞராயிருந்த கவிஞர் வாலி தம்பூராபோட்டுக்கொண்டே மேடையில் தூங்கிவிழுந்துவிட்டார் ஒரே பலத்த குஸ்தி அறைவிட்டார் சோமு அவர்கள். எதிர்பாராமல் அடிவாங்கிய வாலிக்கு பொறி கலங்கிவிட்டதாம் .அதனை அப்போ கேட்டபோது நான் நம்பவில்லை (பின்னர் வேறு ஒரு சம்பவத்தை நேரில்காணும்வரை)
3 1980 இல் நான் ஆர்வத்துடன் போயிருந்த ஒரு விருது நிகழ்ச்சியில் அவருக்கு மிருதங்கம் வாசித்தவர் தொடர்ந்து தப்புத்தாளம் வாசித்தபோது ஒரு பொளேர் விட்டார் பார்க்கவேண்டும் அதற்காக துளிக்கூட வருந்தாமல் /ஒவ்வொரு கச்சேரியும் ஒரு கோதாதான். .குஸ்தின்னு வந்துவிட்டால் அப்பனாவது பிள்ளையாவது என்றாரே/ பார்க்கவேண்டும் அந்த அறை அரங்கத்தில் ஆங்காங்கே உட்கார்ந்து தனது இஷ்டத்துக்கு தப்புத்தாளம் போட்டுக்கொண்டு ரசித்த ஒவ்வொருவருக்கும் கொடுத்தது போலிருந்தது (நல்லவேளை அப்போது எனக்கு தாளமே போடத்தெரியாது) அப்போதுதான் நண்பர் சொன்ன கவிஞர் வாலி அடிவாங்கிய நிகழ்ச்சியை நம்பமுடிந்தது.
அவர் விட்டுச் சென்ற இசை எங்கும என்றும் வாழும்
மருதமலை மாமணியே அருள்வாய் !
படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல் : ஜானகி
பாடல் : கண்ணதாசன்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதைக் கண்களில் இங்கே எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலே… கண்களிலே … கண்களிலே…
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
’சமையல்...சமையல்...சமையல்...! 77 ஆண்டுகள் முடிந்த பின்னர், இப்போதுதான் கடந்த ஆறு மாதங்களாக சமையல் கற்றுக் கொள்கிறேன். இதுநாள்வரை நான் சமையலறை பக்கம் சென்றது கூட இல்லை. அதனால் ஓய்வு நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சமையல் கற்றுக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வரும் ரசிகர்களுடன் பேசி மகிழ்வேன். காலையில் சின்ன வாக்கிங். மாலையில் 5 மணி முதல் 11 மணி வரை டி.வி. சீரியல்கள் பார்ப்பேன். அருமையாக, மகிழ்ச்சியாகச் செல்கிறது வாழ்க்கை.’
என்கிறார் பின்னணிப் பாடகர் எஸ். ஜானகி அவர்கள் ஜன்னல் மாதமிருமுறை இதழ் (அக். 01-14) பேட்டியில். கற்றுக் கொள்வதற்கு வயதும் இல்லை; ஓய்வு கொண்ட பிறகும் வாழ்வில் உற்சாகத்திற்குக் குறையும் இல்லை ஜானகியம்மாவிடம்.
மற்றொரு முக்கிய பகுதி இங்கே...
‘தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே..’ங்கிற பாடல் பாடுவதற்காகத் தயாரான நேரம் ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. டாக்டரிடம் அழைத்துச் சென்றார் என் கணவர். டாக்டர் கொடுத்த ‘ஆஸ்பிரின்’ எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. ரெகார்டிங் தியேட்டரின் நுழைந்தபோதே கண்கள் வீங்கி விட்டன. நாக்கு குளறியது. ஆனாலும், ஒரே டேக்கில் பாட்டு ஓகே. அப்படியே என் கணவர் என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அன்று கொஞ்சம் தவறியிருந்தால், இன்று ஜானகி பேசிக் கொண்டிருக்க மாட்டாள்.’
என்று படிக்கும்போதே நமக்கு நெகிழ்கிறது.
முத்தாய்ப்பான நம் கன்னத்தில் ‘சப்பக்’ என அறையும் வரிகள்...
‘குரல் வளத்தை மட்டுமே பார்த்த பலருக்கு, உடல் நலக் குறைவால் நான் பட்ட அவஸ்தைகள் தெரியவே தெரியாது.’
-டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு ,
உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
ஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும் , அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட .... இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.
பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்..எஸ்.! வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன் , அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”
பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். ! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்... முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.
டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி..இங்கே வாப்பா..”
வந்தான்.
பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.
எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.
“பரவாயில்லை.முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல , அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.
பழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.
அதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது , மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..!
எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு..!
ஆனால் ... எந்த ஊரிலும் , யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.
.
பல வருஷங்கள் கடந்த பின் .. தற்செயலாக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.
கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் ... அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .
காரணம் .. அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் :
“உள்ளம் உருகுதடா...”
உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க , எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார் டி.எம்.எஸ்.
அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் ..'‘ஆண்டவன் பிச்சி’’ !
யார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ ?
டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது... நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.
அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண்.
பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி .
பள்ளிக்கு செல்லாதவள் .படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.
ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம் , வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.. முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.
இறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.
அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது , அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ... காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து , பிரசாதமும் கொடுத்து .. “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப ...அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’..
சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.
.
அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ ..!
அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.
சரி ... இநதப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ?
டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?
# இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில் எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை.
கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.
தவிக்குது தயங்குது ஒரு மனது தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம் காணாமலே அது தொடர்ந்து எனை படர்ந்து ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது தவிக்குது தயங்குது ஒரு மனது
ஏதோ ஒன்று நெஞ்சிலே எழுந்ததென்ன உன்னிலே எங்கோ சென்ற கண்ணிலே ஏக்கம் என்ன பெண்ணிலே மலர்ந்திடாத ஆசையே மலருகின்ற நேரமே எண்ணிய சுகம் என்னுடன் வரும் லாலல லலா லாலல லலா கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு தவிக்குது தயங்குது ஒரு மனது
பொங்கும் ஆசை ஆற்றிலே நனைந்ததெந்தன் உள்ளமே எங்கும் இன்ப வெள்ளமே எழுந்து பாய்ந்து செல்லுமே தோன்றுகின்ற தாகமே தொடருகின்ற காலமே பார்ப்பதில் சுகம் பலவித ரகம் லாலல லலா லாலல லலா பசிக்கொரு உணவென பாவை நீ வாவா தவிக்குது தயங்குது ஒரு மனது
கங்கை கொண்ட சோழனின் கனவில் வந்த தேவியே மங்கை எந்தன் வாழ்விலே மன்னன் நீயும் பாதியே சிலையை போன்ற தோற்றமே தினமும் என்னை வாட்டுமே இன்னிசை சுகம் இன்பத்தை தரும் லாலல லலா லாலல லலா இரவிலும் பகலிலும் மீட்ட நீ வாவா
தவிக்குது தயங்குது ஒரு மனது தினம் தினம் தூங்காமலே ஒரு சுகம் காணாமலே அது தொடர்ந்து எனை படர்ந்து ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது ஏதோ சொல்கின்றது மனம் எங்கோ செல்கின்றது
FILM: SAADHANAI
SINGERS: SPB SJ
MUSIC: IR
LYRICS: VAIRAMUTHTHU
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ அ ஆஅ ஆ
ஆஅ ஆஅ ஆஅ ஆ
ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்
ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
போகமே என் யோகமே என் காதல் ராகமே
கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே
பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே
பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே
மண்ணில் சொர்கம் வந்ததே
மார்பில் சாய்ந்து கொண்டதே
சிந்தாத முத்துக்கள் செவ்வாயில் சிந்தக்கண்டேன்.. ஓ
வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
மன்னவன் கண் மூடினால் என் வானில் ராத்திரி
மங்கையே உன் பார்வைதான் என் வானில் வைகறை
இன்பம் என்னும் வேதனை இன்று பார்க்கிறேன்
நானும் கொஞ்சம் சோதனை போட்டுப் பார்க்கிறேன்
காற்று வந்து தீண்டுமோ கற்பு என்ன ஆகுமோ
பூங்காற்றும் தீண்டாமல் நீ என்னை கட்டிக்கொள்வாய்..ஓ
வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
காண ஏங்கினேன் நாளும் வாடினேன்
ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி
நெஞ்சில் சூடி இன்பம் கோடி
படம்: தேவர் மகன்
இசை: இளையராஜா
குரல்: மின்மினி, ஸ்வர்ணலதா குழுவினர்
பாடல்: வாலி
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென நீல விழியும்
பிறைனுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியென தமிழ் மறை தொழும்
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
உனதாணை தனை ஏற்று பணியாற்றுதே
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
திரிசூலம் கரமேந்தும் மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எமையே
பாவம் விலகும் வினை அகலும் உனை துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும் சூலி என ஆதி என
அடியவர் தொழும்
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென நீல விழியும்
பிறைனுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியென தமிழ் மறை தொழும்
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சு காத்து கெடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி..ஹோய்
ஹே ஹே ஹே ஹே
தந்தனனனன்னா தானே தனா தந்தனா தனனா
தந்தனனனன்னா தானே தனா தந்தனா தனனா
தந்தனா தந்த தந்தனா
மானே என் மல்லிகையே மருத மரிக்கொழுந்தே
தேனே திணைக்கருதே திருநாளு தேரழகே
உன்ன நெனைக்கயிலே என்ன மறந்தேனடி
பொன்னே பொன்மயிலே எண்ணம் தவிக்குதடி
சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போன புள்ளே
சோளம் வெளஞ்சு காத்து கெடக்கு சோடிக்கிளி இங்கே இருக்கு
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்குமப் பொட்டழகி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு தங்கமே கட்டழகி
எனக்கு நல்லதொரு பதில சொல்லு குங்கும பொட்டழகி..ஹோய்
மாரியம்மன் கோயிலிலே மாறாம கைப் பிடிக்க
நாளும் ஒண்ணு பாத்து வந்தேன் நல்ல நேரம் கேட்டு வந்தேன்
அம்மன் மனசிருந்தா அருள் வந்து சேருமடி
கண்ணே கருங்குயிலே நல்ல காலம் பொறந்ததடி
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சலாடுதோ தினம் உறங்காமல் வாடுதே நிஜம் நிழலாகிப்போனதே ஓ..நெஞ்சமே பூங்காற்றிலே பதில் கொடு
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சலாடுதோ
எங்கே சென்றபோதும் மனம் போல வாழ்க வாழ்க ஏழை நெஞ்சின் பாடல் உனை சேர வேண்டும் வாழ்க ஏழை எந்தன் பேராம் சோகம் எந்தன் ஊராம் ஊரை பார்த்து போகிறேன் அனாதயாகப் போகிறேன்
என் உள்ளம் என்றும் உன்னை பாடுமே
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சலாடுதோ
காலம் செய்த கோலம் கனவாகிப்போன சிந்தம் பாவம் என்ன செய்தேன் பனியாகிப்போன பந்தம் பாசம் வைத்த நெஞ்சம் கானும் யாவும் துன்பம் ஊமை நெஞ்சில் ஆசைகள் ஓடம் போல ஆடுதே வராத சோகம் வந்து சேர்ந்ததே
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சலாடுதோ தினம் உறங்காமல் வாடுதே நிஜம் நிழலாகிப்போனதே ஓ..நெஞ்சமே பூங்காற்றிலே பதில் கொடு
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சலாடுதோ
I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE I WANT TO TELL U SOMETHING ITS A LOVE STORY ITS A TRU STORY I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE
பூ ஒன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது பூ ஒன்று பூஜைக்கென்று கொடியினில் பிறந்தது பூமாலை போல வாழ கனவினை வளர்த்தது புதிய பூபாளம் கேட்டது பூவும் கண்கொண்டு பார்த்தது இனிய தேவார பாடலும் இணைந்து காற்றோடு பாடுது தான் அறியாத பொழுதினில் பூவும் வழி மாறிப்போனது
I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE HEYY I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE ITS A LOVE STORY ITS A TRU STORY I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE
நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் நீ எந்தன் நிழல் என்று நினைத்தது மனதுதான் ஆனந்தம் மலரும் என்று தவித்தது கனவுதான் எனது மனம் இன்று தனிமையில் உனது உறவென்னும் இனிமையில் புதிய சங்கீதம் படிக்குதே வெளியில் சொல்லாமல் துடிக்குதே நான் அறியாத உணர்வுகள் நீ எனதென்று உணர்த்துதே
I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE HEYY I WANT TO TELL U SOMETHING ITS A LOVE STORY ITS A TRU STORY I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE I WANT TO TELL U SOMETHING WAIT A MINUTE
ஹேய்ய் யே யே ஏய்
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற அடி
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே
ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச யம்மா
ஓ...ஈச்சம் ஓல பாய் விரிச்சு எளனி வெட்டி தண்ணிகுடிச்சு
கூச்சம் விட்டு கை அணச்சு நாம்பேச நீ பேச அம்மா
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
................
மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேத்தா என்ன
அக்கா பெத்த சொக்கா பொண்ணு மச்சாங் கொஞ்சும் மத்தாப்பூவு
ஹெய் திக்க தின்னதின்ன தைத
தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசங்குற
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே
ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த
போடவேணும் பூச்சரத்த
கண்ணாலம் கச்சேரி யெப்போ
அ அ அ ஆ
ஹான்..... ஊத வேணும் பீப்பி.. பீப்பி... பீப்பி..
டும்.. டும் ...டும்... டும்.. பீப்பி.. பீப்பி.. பீப்பி...
கண்ணாலம் கச்சேரி யெப்போ
நேரங்காலம் நல்லாருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
நேரங்காலம் நல்லா..ருக்கு நீயிலாட்டி டல்லாருக்கு
வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல
சதக்க்... சக்குனக்க... னக்க.... னக்கஜன
ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே
அடி நானே ஆண்குயிலே லேய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
யம்மம்மோய்
யம்மா யம்மா யம்மா யம்மா
மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
ஆளுமாகி நாளாச்சுதா அழகு மேனி நூலாச்சுதா
கொண்ட வச்ச சேவல் வந்தா
கொக்கரிச்சு கொஞ்ச வந்தா
கொகொக்கோ... கொக்க்கோ
முட்ட வெக்கும் பெட்ட கோழி
முட்டாதையா மயக்கத்த கொடுக்குற
ஆடி மாசம்... யெ... யெ.... யே...
ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க
நாந்தான் மாங்குயிலே
ஹேய்... ஹேய்.... ஹேய்
அட நீ தான் ஆண்குயிலே
அடி காஞ்ச மாடு நல்ல கம்ப்ப்புலதான்
வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான்
பொடவயும் பறக்குற
ஆடி மாச காத்தடிக்க
வாடி கொஞ்சம் சேத்தணைக்க
மானே மாங்குயிலே யே யே யே
அடி நானே ஆண்குயிலே யே
மானே... மாங்குயிலே
அடி.... நானே ஆண்குயிலே
குயிலே ..குயிலே... யே.... யே
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
நினைவு வந்தது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளும் உள்ளது
நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது
திருடிக் கொண்டது
காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது
கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது
பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது
என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது
நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது
திருடிக் கொண்டது
இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது
இப்போது நடப்பதுதான் உனக்கும் கூட புரிந்தது
கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது
கடலாளம் சிறியதம்மா பெண் மனது பெரியது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது