படம்: தெய்வம்
குரல்: மதுரை சோமசுந்தரம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ...ஆஆ...ஆஆ.
தேவர் வணங்கும் மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா
Mani Vijayaraghavan writes:
One Song Wonder
சங்கீதமே ஆஸ்தி & குஸ்தி
சுவாமிமலை ( மருதமலை?) மாமணியே
மதுரை சோமு ( 1919-1989) என்றாலே அவரது மருதமலை மாமணியே பாடலே நினைவுக்கு வரும். ஆனால் அதற்குமுன் அவர் திரைக்கு வந்தும் வராத நான்கு பாடல்களையும் வெளிவந்தும் அவ்வளவாகக் கேட்டிராத ஒரு திரைப்படலையும் பாடியிருக்கிறார்.


முதலில் கற்றது எம் எஸ் சுக்கு கற்பித்த சுந்தரேச பட்டர் என்பவரிடம். இவர் மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யருடைய சீடர். பின்னர் பிரபல வித்வான் சித்தூர் சுப்ரமணியப் பிள்ளை அவர்களிடம் கற்றார் பலதெலுங்கு பாடல்களையும் அட்சர சுத்தமாகப் பாடதெரிந்தும் தமிழ்பாடல்களைப் படுவதிலேதான் ஆர்வம் காட்டினார் அவரது சொந்தப் பாடல்கள் மதுரை மீனாட்சி RTP பலலவியும் என்னகவி பாடினாலும் (நீலமணி ராகம்)பாடல் போன்றவை பிரபலம்.
சிறுவயதில் அவர் ஒரு ராக்கோழி என்றுகூட கிண்டல் செய்திருக்கிறோம் எப்போதும் இரவு எட்டுமணிக்குமேல் துவங்கி நள்ளிரவு வரைகூட பாடுவார் வயலின் மிருதங்கம்தவிர கஞ்சிரா மோர்சிங் கொன்னக்கோல் என மேடை நிறைந்த கச்சேரிகளாகதான் படுவார். அவர் கால் படாத பிரபல கோவில்களே இல்லை..பாடல்களின் நடுவே திடீர் திடீரென்று ராமா ராமா என பெரியகுரலில் சொல்வது அவரது பாணி கச்சேரியில் நடுவில் யாராவது எழுந்து போக முயற்சித்தால் அவ்வளவுதான் நீங்க கேட்ட பாட்டத்தான் அடுத்ததா பாடப்போறேன் உட்காருங்க என அதட்டுவார் VIP கள் பாதியில் எழுந்தபோது திடீரென்று மங்களம் பாடி முடித்து நோகடிததுமுண்டு.
முதல் திரைப்பட அனுபவம்?

இன்னொரு காரணம் என்னவெனில் அவரால் 78 RPMஇசைத் தட்டுகேற்றவாறு மூன்றரை நிமிடத்தில் பாடி முடிக்கமுடியவில்லை பாட துவங்கினால் அவரையே அவரால் அடக்கமுடியாமல் தனையறியாமல் கூடுதல் சங்கதிகளைப் பாடியதால் நேரம் கடந்து சரிவராமல் போய்விட்டதென்றும் கூறுவர். இதெல்லாம் அறிந்தும் அவரது முருகன் பாடல்களில் மயங்கிய சாண்டோ சின்னப்பாதேவர் குன்னக்குடியின் இசையில் தயாரித்த தெய்வம் (1969)படத்தில் சூப்பர் ஹிட் மருதமலை மாமணியே பாடலை பாடவைத்தார்.
அதற்கு சோமு அவர்களையே நடிக்கவும் வைத்தார் எந்த ஜென்மத்திலும் அதனை அவர்போலவே வேறொருவர் பாடவே முடியாது ஆனாலும் என்ன? அவருக்கு சினிமாப் பாடல்கள் பாடி சம்பாதிப்பதில் அவ்வளவாக நாட்டமில்லை. (நேரககட்டுப்பாட்டுக்கும் அவருக்கும் வெகுதூரமாயிற்றே Cinema is not his cup of tea…! ) எளியவாழ்வையே வாழ்ந்து கொடுப்பதை வாங்கிக்கொண்டு நிறைவாகப் பாடுவதே அவர் வழி வெகுநாள் கழித்து சஷ்டி விரதம் என்ற திரைப்படத்தில். 'நம்பிக்கை வைத்திருந்து நாளும் நினைத்திருந்து கும்பட்டால் காத்தருளும் குமரனின் குடமுழுக்கு'' எனும் (முற்காலத்தில் தன்னிடம் அடிவாங்கிய ) கவிஞர் வாலி அவர்கள் இயற்றிய பாடலைப் பாடியிருந்தார் .
மூன்று மறக்க முடியா நிகழ்வுகள்
1 இன்று உச்சத்தில் இருக்கும் ஒரு நகைச்சுவைக் HERO நடிகரின் தாத்தா அக்காலத்தில் ஒரு பிரபல நாதஸ்வர வித்வான். அவர் ஒருமுறை திரு சோமு கச்சேரி மிருதங்க தனியாவர்த்தனத்தின் போது எழுந்துபோவதைப் பார்த்ததும் கோபம் கொண்டு கச்சேரிக்கு மங்களம் பாடிவிட்டார் (அந்த எனது மிருதங்க நண்பர் /நான் சின்னப்பையன்தானே போகட்டுமே என்றபோது அதெல்லாம் தவறு சிறிய வித்வானானாலும் மரியாதை தேவை யாராக இருந்தாலும் எதிர்பார்ப்பேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறினாராம்) .
2 எனது நண்பர் கூறியது ஒரு திருக்காட்டுப்பள்ளி கிராமக் கச்சேரியின்போது அவருக்கு அப்போது இளைஞராயிருந்த கவிஞர் வாலி தம்பூராபோட்டுக்கொண்டே மேடையில் தூங்கிவிழுந்துவிட்டார் ஒரே பலத்த குஸ்தி அறைவிட்டார் சோமு அவர்கள். எதிர்பாராமல் அடிவாங்கிய வாலிக்கு பொறி கலங்கிவிட்டதாம் .அதனை அப்போ கேட்டபோது நான் நம்பவில்லை (பின்னர் வேறு ஒரு சம்பவத்தை நேரில்காணும்வரை)
3 1980 இல் நான் ஆர்வத்துடன் போயிருந்த ஒரு விருது நிகழ்ச்சியில் அவருக்கு மிருதங்கம் வாசித்தவர் தொடர்ந்து தப்புத்தாளம் வாசித்தபோது ஒரு பொளேர் விட்டார் பார்க்கவேண்டும் அதற்காக துளிக்கூட வருந்தாமல் /ஒவ்வொரு கச்சேரியும் ஒரு கோதாதான். .குஸ்தின்னு வந்துவிட்டால் அப்பனாவது பிள்ளையாவது என்றாரே/ பார்க்கவேண்டும் அந்த அறை அரங்கத்தில் ஆங்காங்கே உட்கார்ந்து தனது இஷ்டத்துக்கு தப்புத்தாளம் போட்டுக்கொண்டு ரசித்த ஒவ்வொருவருக்கும் கொடுத்தது போலிருந்தது (நல்லவேளை அப்போது எனக்கு தாளமே போடத்தெரியாது) அப்போதுதான் நண்பர் சொன்ன கவிஞர் வாலி அடிவாங்கிய நிகழ்ச்சியை நம்பமுடிந்தது.
அவர் விட்டுச் சென்ற இசை எங்கும என்றும் வாழும்
மருதமலை மாமணியே அருள்வாய் !
https://www.youtube.com/watch?v=82qfhI7uZf0
https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1356722614359461/
No comments:
Post a Comment