படம்: பெரிய இடத்து பெண்
பாடல்: கண்ணதாசன்
குரல்: TMS , சுசீலா
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா..
அம்பிகாபதி கண்ட நிலா
அமராவதியைத் தின்ற நிலா
கம்பன் பாடிய வெள்ளி நிலா
கவியில் ஆடிய பிள்ளை நிலா
காதல் ரோமியோ கண்ட நிலா
கன்னி ஜூலியட் வென்ற நிலா
பாவை லைலா பார்த்த நிலா
பாலைவனத்தின் வண்ண நிலா
நாடு தோறும் வந்த நிலா
நாகரீகம் பார்த்த நிலா
பார்த்து பார்த்து சலித்த நிலா
பாதி தேய்ந்தது வெள்ளை நிலா
அன்று வந்ததும் இதே நிலா
இன்று வந்ததும் அதே நிலா
என்றும் உள்ளது ஒரே நிலா
இருவர் கண்ணுக்கும் ஒரே நிலா..
No comments:
Post a Comment