படம்: மாரியம்மன் திருவிழா
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா
பாடல்: கண்ணதாசன்
தங்கக் குடத்துக்கு பொட்டும் இட்டேன்
தாமரைப் பூவுக்கு மையும் இட்டேன்
விழி மொட்டுக்குள்ளே எழுந்த முத்துக்களோ
அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ (தங்கக்)
சந்தனம் சேற்றினில் வீழ்ந்தாலும்
சந்தனம் வாசம் போவதில்லை
சொல்பவர் சொல்லட்டும் ஆயிரமே
தோகையின் வாழ்வில் ஓர் மனமே
நான் வேங்கட நாயகி அலமேலு
என்னிடம் தவறேது - கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ (தங்கக்)
தந்தைக்குத் தான் இந்த முந்தானை
தந்தை கொடுத்தான் செந்தேனை
தாயறிந்தே வரும் பிள்ளையடா
தாரம் தரம் கெட்டதில்லையடா
நன்றாய் அறிந்தவள் மாரியம்மா
அவளின்றி காரியமா - கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ (தங்கக்)
தேவகி கொண்டது சிறை வாசம்
கண்ணன் பிறந்ததும் தீர்ந்தடா
சீதை புரிந்தது வனவாசம்
திருமகன் வந்ததும் மறைந்ததடா
நெருப்பினையே அவள் சாட்சி வைத்தாள்
நானே நெருப்பல்லவோ - கண்ணே
ஆனந்த வீணையே தாலேலோ
எந்தன் அற்புத ராகமே தாலேலோ (தங்கக்)
No comments:
Post a Comment