Friday, September 30, 2016

MAASARU PONNE VARUGA - DHEVAR MAGAN

படம்: தேவர் மகன்
இசை: இளையராஜா
குரல்: மின்மினி, ஸ்வர்ணலதா குழுவினர்
பாடல்: வாலி

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன்  தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென நீல விழியும்
பிறைனுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியென தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

நீர் வானம் நிலம் காற்று நெருப்பான ஐம்பூதம்
உனதாணை தனை ஏற்று பணியாற்றுதே
பார் போற்றும் தேவாரம் ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே உன் பதம் போற்றுதே
திரிசூலம் கரமேந்தும்  மாகாளி உமையே
கருமாரி மகமாயி காப்பாற்று எமையே
பாவம் விலகும் வினை அகலும் உனை துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும் சூலி என ஆதி என
அடியவர் தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக
மாதவன்  தங்காய் வருக
மணிரதம் அதில் உலவ வாசலில் இங்கே வருக
கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென நீல விழியும்
பிறைனுதலும் விளங்கிடும் எழில்
நீலியென சூலியென தமிழ் மறை தொழும்

மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த ஈசனின் பங்கே வருக

2 comments:

  1. இணையில்லா வரிகள் பாடலைக் கேட்கும் பொழுது கண்களில் நீர் சொரிகின்றது. தேவியின் புகழ் மனதைப் பரவசப்படுத்துகிறது. ஈசனின் பங்கே வருக என்ற வரி இந்து மதம் ஆணையும் பெண்ணையும் சரிபாதியாக பார்க்கும் பார்வையை எடுத்தியம்புகிறது. அருமை அருமை நன்றி

    ReplyDelete
  2. கேட்டதும் மெய் மறந்து போனேன். இந்து மதம் பெண்களை எப்படிப் பாராட்டுகிறது என்பது வியக்க வைக்கிறது.
    சிலப்பதிகாரத்தில் மாசறு பொன்னே என்று கோவலன் கண்ணகியைப் போற்றுவதை - திரு வாலி அவர்களும் இளையராஜா அவர்களும் தெள்ளு தமிழிலும் துள்ளல் இசையிலும் இனிமையாக உருவாக்கித் தந்திருக்கிறார்கள்!

    ReplyDelete