Monday, September 12, 2016

PANIYUM NAANE MALARUM NEEYE - PANIMALAR



படம்: பனிமலர்
குரல் : எஸ்.பி.பி. , ஜென்சி
இசை: சங்கர் கனேஷ்
பாடல்: முத்துலிங்கம்


பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச் சந்தங்கள் சிந்தட்டும்


பனியும் நீயே மலரும் நானே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச்  சந்தங்கள் சிந்தட்டும்



சித்திரச் சோலை செந்தேன் வாழை
சிந்தையில் ஆடும் காதல் தோகை
மன்னவன் மார்பில் மாலை ஆகட்டும்
மணம் தரும் என் தேகம் உன்னோடு
தினம் தினம் நீ காதல் நீராடு
ஹே கற்பனைத் தேரில் அற்புத வானில்
சொர்க்கமும் போய்  வருவோம் வருவோம் வருவோம்


மங்கல மங்கை ரதியின் தங்கை
சங்கமமாக வந்தாள் இங்கே
கங்கையைப்  போல இன்பம் பொங்கட்டும்
சுகம் தரும் உன் பார்வை பூங்காற்று
இதம்  தரும் உன் வார்த்தை தாலாட்டு
சந்தனம் பூப்போல் சங்கதி சேர்க்க
காவியம் பல தோன்றும் தோன்றும் தோன்றும்

பனியும் நானே மலரும் நீயே
பருவராகம் பாடுவோம்
தித்திக்கும் முத்தங்கள்
சந்திக்கும் கன்னங்கள்
செந்தமிழ்ச்  சந்தங்கள் சிந்தட்டும்

Thursday, September 8, 2016

MARATHA VACHAVAN THANNI OOTHUVAAN - PANAKKARAN





படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
குரல்: இளையராஜா
 பாடல்: இளையராஜா

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்
ஏ  மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவனோ
அவனே சுமப்பான்...
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்,
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்...


மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்,
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்...

படைத்தவனின் துணையிருக்க
அடுத்தவனின் துணை எதற்கு
இதயத்திலே துணிவிருக்க
வருத்தமிங்கே உனக்கெதற்கு...(2)

உன்னை நல்ல ஆளாக்க
உத்தமனைப் போலாக்க
எண்ணியவன் யாரென்று
கண்டுகொள்ள யாருண்டு
ஊரெல்லாம் உந்தன் பேரை
போற்றும் நாள் வரும்...
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்,
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்...


மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்...


உதவியின்றி தவிப்பவர்க்கு
உதவிடவே நீ படிப்பாய்
உணவு இன்றி துடிப்பவர்க்கு
உணவு தர நீ படிப்பாய்...(2)

புத்தியுள்ள உனக்கெல்லாம்
புத்தகத்துப் படிப்பென்ன
சக்தியுள்ள உனக்கெல்லாம்
சத்தியத்தில் தவிப்பென்ன
காத்து இருப்பது எத்தனை பேரோ
உன்னிடம் தோற்பதற்கு...
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்,
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்...

மரத்த வெச்சவன்
தண்ணி ஊத்துவான்,
மனசப் பார்த்து தான்
வாழ்வ மாத்துவான்...

ஏ  மனமே கலங்காதே
வீணாக வருந்தாதே
பாரங்கள் எல்லாமே
படைத்தவன் எவனோ
அவனே சுமப்பான்...
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்,
ஓம் ஷாந்தி ஓம், ஓம் ஷாந்தி ஓம்...