Thursday, December 29, 2016

PAZHAMUDHIR CHOLAI ENAKKAGA THAAN - VARUSHAM 16



படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
குரல்: KJ ஜேசுதாஸ்
பாடல்: வாலி


பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம் 
இங்கு ஓராயிரம்
(பழமுதிர்..)

தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர்..)

பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்த்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்..)

KANNALE KADHAL KAVIDHAI - ATHMA



படம்: ஆத்மா
இசை: இளையராஜா
குரல்: ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
பாடல்: வாலி

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதைத் தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
(கண்ணாலே)
கடற்கரைதனில் நீயும் நானும் உலவும்பொழுது
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது
இங்கு பாய்வது புதுவெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே
குளிர்வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன் துணையிலே
இளமேனி உன் வசமோ
(கண்ணாலே)
உனக்கென மணிவாசல் போலே மனதைத் திறந்தேன்
மனதிற்குள் ஒரு ஊஞ்சல் ஆடி உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவைக் கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவைக் கண்டு
நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ
(கண்ணாலே)