Friday, November 4, 2016

ANDHIMALLI SENDAADA ANDHI VIZHI VANDAADA - NAAN NANDRI SOLVEN - SPB PS


 FILM : NAAN NANDRI SOLVEN
MUSIC: SHYAM
SINGERS: SPB PS
LYRICS: PULAMAI PITHTHAN

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா  ஆ ஆ ஆ ஆ

பன்னீர் ஆறு பாயட்டும் அங்கே அன்னம் ஆடட்டும்
இங்கே உந்தன் ராஜசபையில் எங்கே அந்த மாய கலைகள்
முல்லை பூத்த காடொன்று முன்னால் தேனின் கூடொன்று
கண்டால் அந்த பாதை சிறிது உண்டால் தோன்றும் போதை பெரிது
மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
மோக வண்ண ராகம் அங்கு பாடி வந்ததோ
பாடி வந்த நாதம் அங்கு தேடி வந்ததோ
செவ்வந்தி கொத்தாட சிந்தாமல் முத்தாட
ஜாடை தந்தாயோ

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலட்ட வா ஹா ஹா

நிலா நீந்தும் வானத்தில் உலா வந்த மேகத்தில்
கண்ணே மாலை மஞ்சம் இடவோ
கையால் ரேகை போட வரவோ
ஒரே ராகம் பாடுங்கள் ஒரே தாளம் போடுங்கள்
தொட்டால் ராஜ போதை தருமோ
சொன்னால் மேனி வாடி விடுமோ
வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
வாலிபத்தின் நாடகத்தை ஆட அழைக்கும்
வாடை வந்த வேளை கொஞ்சம் வாடி இருக்கும்
கையோடு கையாக கல்யாண பெண்ணாக வந்தேன் இப்போதே

அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
என்ன சொல்ல வந்தாயோ வா வா வா வா
மஞ்சளிட்ட பெண்மானை மையலிட்ட அம்மானை
நெஞ்சிலிட்டு தாலட்ட வா வா வா வா
வைகை கையோடு மங்கை மெய்யோடு
காதல் நெஞ்சோடு கங்கை நீராடு
ஆனந்த துறைமுகம் இதுவே
அந்திமல்லி செண்டாட அந்தி விழி வண்டாட
நெஞ்சிலிட்டு தாலட்ட வா ஹா ஹா






Tuesday, November 1, 2016

EN RAGANGAL - MUDHAL IRAVU



படம்: முதல் இரவு
இசை: இளையராஜா
குரல்: எஸ்.ஜானகி
பாடல்: கண்ணதாசன்

என் ராகங்கள் இன்று
எல்லாம் பாடல்களே
இவள் தாளங்கள்
சம காலங்கள் (என்)

பூஜைக்கேற்ற பூவெல்லாம்
எந்தன் கோலங்கள்
இலைகளே பேசுங்களேன்
என் எண்ணங்களை
மின்னல்களை தேராக்குவேன்
கல்யாண ஊர்வலம் கொண்டாட (என்)

மாலை சூடும் நேரங்கள்
மஞ்சள் வானங்கள்
காதல் மகள் ராதை தந்தாள்
என் மாங்கல்யம்
கண்ணன் தரும் பொன்னூஞ்சலில்
அம்மாடி அம்மாடி நான் ஆட (என்)

அச்சம் நாணம் வெட்கங்கள்
இன்றே ஓடுங்கள்
அத்தானிடம் பேசுங்களேன்
என் ஆசைகளை
கட்டில் வரும் தொட்டில் வரும்
கண்ணான பிள்ளைக்குத் தாலாட்ட (என்)