Friday, January 16, 2026

MAAPILLAIKKU MAAMAN MANASU - NETRIKANN


படம்: நெற்றிக்கண் 
பாடல்: கண்ணதாசன் 
இசை: இளையராஜா 
குரல்: மலேஷியா வாசுதேவன், பி. சுசீலா 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி 
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற 


மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 

நடந்த வரை வயசுக்கு பொருத்தமில்லை  
நடக்கும் கதை மனசுக்கு அமைதி இல்லை 
விதைத்த விதை முளைத்தது மாறவில்லை 
விதைத்து விட்டுத் துடிப்பதில் லாபமில்லை 
தசரதா புரிந்ததா 
ஹரிகதா தெரிந்ததா 
எனக்கும் உனக்கும்  
புரிந்தவரையில் புரியட்டும் 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 

கற்றவர்கள் எழுதிய கவிதையிலும் 
மற்றவர்கள் குறைகளைக் காண்பதுண்டு 
குற்றமெனச் சொன்னது சொன்னதுதான் 
நெற்றிக் கண்ணைத்  திறந்தவன் கண்டதுதான் 
சிவனிடம் துணிந்தவன் 
எவனிடம் அஞ்சுவான் 
உலகம் முழுதும் 
அறிந்த கதைக்கு விளக்கமா?

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 
புதிய ஒரு ஜோடி பொருத்தம் பல கோடி 
பருவ வயது கடந்த பிறகும் துடிக்கிற 

மாப்பிள்ளைக்கு மாமன் மனசு 
மாமனுக்கோ காமன் மனசு 



Sunday, January 11, 2026

PAARADI KANNE KONJAM - VALLAVANUKU VALLAVAN



படம்: வல்லவனுக்கு வல்லவன்

பாடல்: கண்ணதாசன்

குரல்: சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, டி.எம்.எஸ்

இசை: வேதா



பாரடி கண்ணே கொஞ்சம் 

பைத்தியமானது நெஞ்சம்

தேடுதடி மலர் மஞ்சம்

சிரிப்புக்கு என்னடி பஞ்சம் (பாரடி)


பைத்தியமே கொஞ்சம் நில்லு

வைத்தியரிடம் போய் சொல்லு

நெருங்காதே இது முள்ளு

தருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே)


அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா ஓ

அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா


உடையைப் பார்த்தவுடன் மனசு  பாதி கெட்டு

இடையைப் பார்த்தவுடன் இருந்த மீதி கெட்டு .. மீதி கெட்டு

மனிதனான என்னை மடையனாக்கி விட்டு

மறைத்து மூடி விட்டு முறைத்துப் பார்ப்பதென்ன.. பார்ப்பதென்ன

உதட்டின் மீது ரெண்டு பழத்தை ஆடவிட்டு

உலக இன்பந்தன்னை உருகி ஓடவிட்டு.. ஓடவிட்டு

துடிக்கும் ஏழை நெஞ்சை நெஞ்சை 

அடக்கித் தூங்க விட்டு

நடிப்பதென்ன.. கொஞ்சம் நடந்து வாடி சிட்டு

அடி வாடி என் சிட்டு


அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா ஓ

அடடா இது என்ன கண்ணா நீ

அந்தர லோகத்து பெண்ணா

அந்தர லோகத்து பெண்ணா வா வா 

அந்தர லோகத்து பெண்ணா


அழகுக்கு ஏனடி வஞ்சம் அடி

அழகுக்கு ஏனடி வஞ்சம்

அடைந்து விட்டோமடி தஞ்சம்

தேடுதடி மலர் மஞ்சம்

சிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹேய் (பாரடி)


ஆசையை பாரடி தங்கம்- இவர்

அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ

அழகிலே அ னா சிங்கம் 


அறுபதாக இவர் அழகு தோன்றுதடி.. தோன்றுதடி

இருபதாக இவர் மனது மாறுதடி.. மாறுதடி

ஒருவராக வர வீரம் இல்லையடி.. இல்லையடி

இருவராக வந்து ஏய்க்கப் பார்க்குதடி.. பார்க்குதடி

ஆண்களாக இவர் தோன்றவில்லையடி.. இல்லையடி

ஆசைக்கேற்றபடி ஆளு இல்லையடி.. ஆளு இல்லையடி

பெண்கள் கையில் தினம் பூசை வாங்குவதை

பெருமையாக கருதும் வீரரடி


ஆசையை பாரடி தங்கம்- இவர்

அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ

ஆசையை பாரடி தங்கம்- இவர்

அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ


மாப்பிள்ளை ராஜா நில்லு

என் வார்த்தைக்கு பதில் சொல்லு

நெருங்காதே இது முள்ளு

தருவதை வாங்கிக்  கொள்ளு (பைத்தியமே) (பாரடி)

Thursday, December 25, 2025

VAANIL VAAZHUM DEVATHAI - URUVANGAL MARALAM


படம்: உருவங்கள் மாறலாம்
பாடல்: ரகு 
குரல்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் 
இசை: எஸ்.வி. ரமணன் 

வானில் வாழும் தேவதை 
என் நேரில் வந்தாளோ 
வானில் வாழும் தேவதை 
என் நேரில் வந்தாளோ 
வானம்பாடி கானம் பாடி 
காதல் சுவையைத் தந்தாளோ 

வானில் வாழும் தேவதை 
என் நேரில் வந்தாளோ..


ஈரவிழியின் ஓர அசைவில் 
இன்பம் ஒரு கோடி 
ஈரவிழியின் ஓர அசைவில் 
இன்பம் ஒரு கோடி 
அவள் மேனி நெளிவில் 
சுழலும் நதியின் அலைகள் கவிபாடி ஹா..

இசைக்கும் கீதம் உதய ராகம் 
இரவில் உருவாகும் 
இசைக்கும் கீதம் உதய ராகம் 
இரவில் உருவாகும் 
உன் அசைவில் தோன்றும் புதிய தாளம் 
என்னுள் சதிராடும்..

நான் தொட்டதும் போதுமா 
என் ஆசைகள் நிறைவேறுமா..

வானில் வாழும் தேவதை 
என் நேரில் வந்தாளோ 


இளமை இதழின் இனிய மதுவை 
பருக வரும் வண்டு 
இளமை இதழின் இனிய மதுவை 
பருக வரும் வண்டு
அதன் வளமை கண்டு 
மயங்கி நின்று மறந்த கதையுண்டு..

கடலின் நடுவில்  தாகம் வந்தால் தீர வழியேது - இந்த 
உடலின் மீது மோகம் பிறந்தால்  மீள வழியேது..

நீ  தொட்டதும் போதுமா 
என் ஆசைகள் நிறைவேறுமா..

வானில் வாழும் தேவன்  
எந்தன்  நேரில் வந்தானோ  
வானம்பாடி கானம் பாடி 
காதல் சுவையைத் தந்தானோ 

வானில் வாழும் தேவதை 
எந்தன்  நேரில் வந்தாளோ



Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : S. V. Ramanan

Lyrics by : Raghu

Male : Vaanil vaazhum dhevadhai
En neril vandhaalo
Vaanil vaazhum dhevadhai
En neril vandhaalo
Vaanam paadi gaanam paadi
Kaadhal suvaiyai thandhaalo

Male : Vaanil vaazhum dhevadhai
En neril vandhaalo

Male : Eera vizhiyin ora asaivil
Inbam oru kodi
Eera vizhiyin ora asaivil
Inbam oru kodi
Aval maeni nelivil suzhalum nadhiyin
Alaigal kavi paadi haa


Female : Isaikkum geetham udhaya raagam
Iravil uruvaagum

Female : Isaikkum geetham udhaya raagam
Iravil uruvaagum
Un asaivil thondrum pudhiya thaalam
Ennul sadhiraadum

Male : Naan thottadhum… podhumo…
En aasaigal… niraivaerumaa…

Male : Vaanil vaazhum dhevadhai
En neril vandhaalo

Female : Ilamai idhazhin iniya madhuvai
Paruga varum vandu
Ilamai idhazhin iniya madhuvai
Paruga varum vandu
Adhan valamai kandu mayanghi nindru
Marandha kadhai undu

Male : Kadalin naduvil dhaagam vandhaal
Theera vazhi yaedhu
Kadalin naduvil dhaagam vandhaal
Theera vazhi yaedhu
Indha udalin meedhu mogam pirandhaal
Meela vazhi yaedhu

Female : Nee thottadhum… podhumo…
En aasaigal… niraivaerumaa…

Female : Vaanil vaazhum dhevan
Endhan neril vandhaano
Vaanam paadi gaanam paadi
Kaadhal suvaiyai thandhaalo

Male : Vaanil vaazhum dhevadhai…
Endhan… neril vandhaalo…

Wednesday, June 18, 2025

ENNAI THEDI KADHAL ENRA VARTHAI ANUPPU - KADHALIKKA NERAMILLAI SERIAL

 


படம் :  காதலிக்க நேரமில்லை தொலைக்காட்சி தொடர் 
பாடல் :  தேன்மொழி தாஸ் 
குரல் :  சங்கீதா ராஜேஸ்வரன் 
இசை :  விஜய் ஆண்டனி 


என்னைத்தேடி காதல் என்ற  வார்த்தை அனுப்பு 
உன்னைத்தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்தியனுப்பு . . ஹோ . .

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்  
உன்னிடத்தில் கொண்டுவர  தெரியவில்லை 
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் 
சொல்லியனுப்பு . . ஹோ . .

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் 
மரங்கள்  கூட நடப்பது போல நினைத்துக்கொள்கிறேன் 
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்  
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்..

என்னைத்தேடி காதல் என்ற  வார்த்தை அனுப்பு 
உன்னைத்தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்தியனுப்பு . . ஹோ . .

பஜரே ரே மானஸ ஸ்ரீ ரகுவீரம்..
பஜரே ரே மானஸ..

யாரோ உன் காதலில் வாழ்வது யாரோ 
உன் கனவினில் நிறைவது யாரோ 
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ 
ஏனோ என் இரவுகள் நீள்வது ஏனோ 
ஒரு பகலென சுடுவது ஏனோ 
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ 
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு 
காதலிக்க அங்கு நேரமில்லையா . .
இலையைப்  போலென் இதயம் தவறி விழுதே.. 

என்னைத்தேடி காதல் என்ற  வார்த்தை அனுப்பு 
உன்னைத்தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்தியனுப்பு . . ஹோ . .


பஜரே ரே மானஸ ஸ்ரீ ரகுவீரம்..
பஜரே ரே மானஸ..


காதல் ஒரு இலையுதிர்க்  காலமாய் மாறும் 
என் நினைவுகள் சருகுகள் ஆகும் 
அந்த நேரத்தில் மழையென வாராயோ 
ஏதோ ஒரு பறவையின் வடிவினில் கூட 
ஒரு சாலையில் எதிர்ப்படுவாயா 
உன் காதலை சிறகென தாராயா 
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு 
காதலிக்க அங்கு நேரமில்லையா . .
நினைக்கும் போதென்  நிழலும் ஏனோ சுடுதே . .

என்னைத்தேடி காதல் என்ற  வார்த்தை அனுப்பு 
உன்னைத்தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன் 
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் 
செய்தியனுப்பு . . ஹோ . .

என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்  
உன்னிடத்தில் கொண்டுவர  தெரியவில்லை 
காதலதை சொல்லுகின்ற வழி தெரிந்தால் 
சொல்லியனுப்பு . . ஹோ . .

பூக்கள் உதிரும் சாலை வழியே பேசி செல்கிறேன் 
மரங்கள்  கூட நடப்பது போலே  நினைத்துக்கொள்கிறேன் 
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து மழையில் விடுகிறேன்  
கனவில் மட்டும் காதல் செய்து இரவைக் கொல்கிறேன்..







Saturday, March 2, 2024

KAVIDHAI ARANGERUM NERAM - ANDHA EZHU NAATKAL



படம்: அந்த ஏழு நாட்கள்

பாடல்: குருவிக்கரம்பை சண்முகம்

குரல்: ஜெயச்சந்திரன், ஜானகி

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

ச ச க

நி ச ப நி
ச ச
ச ச
ம க
நி ச ப நி
ச ச
நி ச
ச ச ச ச ப
ப த ம
ம ம
க ம க க ம
க ம நி ப
க ரி ச நி

சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமநாவில் வாழு
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர்கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர்கணைகள் பரிமாறும் தேகம்

கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு?!
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு!
மனம் கங்கை நதியான உவமை
இனி எங்கே இமைமூடும் நிலைமை?!

கவிதை அரங்கேறும் நேரம்
மலர்கணைகள் பரிமாறும் தேகம்

நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர்கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்


இந்த ஹிட் பாட்டெல்லாம் இவர் எழுதியதா? யாரும் அறியாத பிரபல கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்!
சினிமா உலகில் நமக்குத் தெரிந்த வரை பாடலாசிரியர்கள் என்றால் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய், தாமரை என்று குறிப்பிட்ட சிலரின் லிஸ்ட் மனதில் இருக்கிறது. ஆனால் சில பாடல்களைக் கேட்கும் போது இந்தப் பாட்டை எழுதியது யார் என்று தேடத் தோன்றும். அவ்வாறு பல ஹிட் பாடல்களை எழுதி கடைசிவரை கொண்டாடப்படாத பாடலாசிரியர்தான் குருவிக்கரம்பை சண்முகம்.
எத்தனையோ நடிகர்களையும், சினிமா தொழில்நுட்ப வல்லுநர்களையும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய திரைக்கதை பிதாமகன் பாக்யராஜ்தான் குருவிக்கரம்பை சண்முகத்தை சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.
தஞ்சை மாவட்டம் குருவிக்கரம்பை என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர் சண்முகம். இளம் வயதிலேயே இவருக்கு கவிதை எழுதும் ஆற்றல் கைக்கு வந்தது. பாரதிதாசன் மீது அளவு கடந்த பற்றுக் கொண்டிருந்த சண்முகம், அவரது மாணவர்களுள் ஒருவராக இருந்து கவிப்புலமையை மேம்படுத்தினார்.
1968 ஆம் ஆண்டு நடந்த உலகத்தமிழ் மாநாட்டு கவிதைப் போட்டியில் பங்கேற்று, ‘புகாரில் ஒருநாள்’ என்ற கவிதைக்கு முதல்பரிசு பெற்று, தமிழறிஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஆரம்பத்தில் மரபுக்கவிதை, பின்னர் புதுக்கவிதை என பயணம் மாறிய கவிஞர்களுள் இவரும் ஒருவர். இவரது படைப்புகளில் ‘நினைவுச் சின்னம்’, ‘பாட்டுப் பறவை’, ‘ஒரு குயிலின் குரல்’, ‘செந்நெல் வயல்கள்’, ‘குருவிக்கரம்பை சண்முகம் கவிதைகள்’, ‘பூத்த வெள்ளி’, ‘கவிதை அரங்கேறும் நேரம்’, ‘விரல் விளக்குகள்’ ஆகியவை பரிசுகளையும் பலரது பாராட்டுகளையும் அள்ளி வந்தன.
சென்னை பச்சையப்பா கல்லூரியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த சண்முகத்தை ஒரு கவியரங்கில் இவரின் புலமையைப் பார்த்து வியந்த இயக்குநர் கே.பாக்யராஜ் தனது அந்த 7 நாட்கள் திரைப்படத்தில் முதன்முதலாக வாய்ப்புக் கொடுத்தார். ‘அந்த 7 நாட்கள்’ படத்துக்காக ஒரு டூயட் ட்யூன் கவிஞரிடம் கொடுக்கப்பட்டது. தனது கவிதைத் தொகுப்பின் தலைப்பான ‘கவிதை அரங்கேறும் நேரம்’ என்று வார்த்தைகளை அடுக்கி, ‘மலர்க்கணைகள் பரிமாறும் தேகம்……’ என ஒரு மணி நேரத்துக்குள் எழுதி முடித்தார்.
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கட்டிப்பிடித்துப் பாராட்டி, கவிஞரைப் பெருமைப்படுத்தினார். எழுதிய முதல் பாடலே மிகப்பெரும் புகழைப் பெற்றதில் மெய்சிலிர்த்துப் போனார் சண்முகம். போகுமிடங்களில் எல்லாம் ‘அந்தப் பாட்டை எழுதியது நீங்கள் தானே?’ என்று கேட்டு, ரசிகர்கள் உற்சாகப்படுத்தினார்கள். ஜெயச்சந்திரன் – ஜானகி குரலில் ஒலித்த அந்தப் பாடல் உலகத்தமிழ் திரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
அதன்பின் பாக்யராஜ் நடித்த பல படங்களில் பாடலாசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் வரிகளில் உருவான சில ஹிட் பாடல்கள் : ‘டார்லிங் டார்லிங் டார்லிங்‘ படத்தில் இடம்பெற்ற ‘ஓ நெஞ்சே நீ தான் பாடும் கீதங்கள்…’ ‘கன்னிராசி’ படத்தில் இளையராஜா இசையில் இவர் எழுதி, மலேசியா வாசுதேவனும் வாணி ஜெயராமும் பாடிய ‘சுகராகமே சுகபோகமே…’ ‘ஆண்பாவம்’ படத்தில் சண்முகம் எழுதிய ‘குயிலே குயிலே பூங்குயிலே…’ 'எங்க சின்ன ராசா’ படத்தில் ‘மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்…’ போன்ற பல ஹிட் பாடல்களை இயற்றி சண்முகம் இயற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

THARAI MEL PIRAKKA VAITHAAN - PADAGOTTI


படம் : படகோட்டி

பாடல் : வாலி

குரல் : T.M.சௌந்தரராஜன்

இசை : விஸ்வநாதன் & ராமமூர்த்தி


உலகத்தின் தூக்கம் கலையாதோ ஓ..
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ ஓ..
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஓ ..
ஒரு நாள் பொழுதும் புலராதோ ஓ..


தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான்..

கட்டிய மனைவி தொட்டிலில் பிள்ளை
உறவை கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை


தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்


கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவைத் தவிர
துணையாய் வருபவர் யாரோ
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார்
ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளார்ப்பவர் உயிரை
ஊரார் நினைப்பது சுலபம்
ஊரார் நினைப்பது சுலபம்


தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான்
கரைமேல் இருக்க வைத்தான் பெண்களை
கண்ணீரில் குளிக்க வைத்தான்

தரைமேல் பிறக்க வைத்தான்..


Sunday, November 20, 2022

KATTODU KUZHAL AADA AADA - PERIYA IDATHU PENN

படம்: பெரிய இடதுப்பெண் 

பாடல்: கட்டோடு குழலாட ஆட 

குரல்: சுசீலா, LR ஈஸ்வரி, TMS 

இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி 

கட்டோடு குழல் ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட பொட்டோடு நகை ஆட ஆட கொண்டாடும் மயிலே ஆடு
கட்டோடு ... பாவாடை காத்தோடு ஆட ஆட பருவங்கள் பந்தாட ஆட ஆட காலோடு கால் பின்னி ஆட ஆட கள்ளுண்ட வண்டாக ஆடு
கட்டோடு .... முதிராத நெல் ஆட ஆட முளைக்காத சொல் ஆட ஆட உதிராத மலர் ஆட ஆட சதிர்ஆடு தமிழே நீ ஆடு
கட்டோடு ... தென்னை மரத் தோப்பாக
தேவாரப் பாட்டாக புன்னை மரம் பூச்சொரிய சின்னவளே நீ ஆடு கண்டாங்கி முன் ஆட
கன்னி மனம் பின் ஆட கண்டு கண்டு நான் ஆட செண்டாக நீ ஆடு
கட்டோடு .... பச்சரிசி பல் ஆட
பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட
வட்டமிட்டு நீ ஆடு வள்ளி மனம் நீராட
தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நான் ஆட சொந்தமே நீ ஆடு
கட்டோடு .....


"கட்டோடு குழல் ஆட" காலத்தை வென்ற அழகான பாடல்..!
எவருக்கும் தெரியாமல் தமிழன்னை பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணதாசனை !
அந்த விசாலமான அறையின் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தாள் அவள்.
எம்.எஸ்.விஸ்வநாதனும் கண்ணதாசனை பார்த்துக் கொண்டிருந்தார்.
'பெரிய இடத்துப் பெண்' படத்திற்கான பாடல் எழுதும் வேளை அது.
இயற்கை எழில் கொஞ்சும் ஆற்றங்கரையில், இரு இளம் பெண்களோடு இணைந்து ஆடிப்பாடி வருகிறார் எம்ஜிஆர்.
இதுதான் காட்சியமைப்பு.
கண்ணதாசன் கண்களை மூடியபடி சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அவர் கண்களுக்குள்
தேவாரம், திருவாசகம்,
சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி, கம்ப ராமாயணம், திருக்குறள்... அத்தனையும் ஓடி வந்து அழகாக நடனம் ஆடின.
எதை எடுப்பது, எதை விடுப்பது ? எதுவும் புரியவில்லை கண்ணதாசனுக்கு.
கண் திறந்து பார்த்தார் கண்ணதாசன். அந்த அறைக்குள் அமர்ந்திருந்து,
தன்னையே இடைவிடாமல் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் தமிழன்னையின் தரிசனத்தை கண்டு கொண்டார்.
கண் மூடி, கை கூப்பி வணங்கினார் தமிழன்னையை !
"தாயே, தமிழே ! நான் படித்த ஆயிரக்கணக்கான இலக்கியங்களில், இந்த இடத்துக்கு பொருத்தமான வரிகள் எவை தாயே ?
எடுத்துச் சொல் அன்னையே,
வேண்டிக் கொள்கிறேன் உன்னையே !"
புன்னகைத்தாள் தமிழன்னை!
பொருத்தமான வரிகளை பொங்கி வரச் செய்தாள் கண்ணதாசன் உள்ளத்தில் !
மாணிக்க வாசகர் எழுதிய வரிகள், கண்ணதாசன் மனதுக்குள் வந்து ஆடின.
மாணிக்கவாசகர் மதுரை வீதியில் நடந்து போய்க் கொண்டு இருக்கிறார். அங்கங்கே பெண்கள் மர நிழல்களில், முற்றங்களில், ஊஞ்சல்களில், அமர்ந்த வாறும், நின்றவாறும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அங்கே சில மங்கையர் வண்ணக் கோலப் பொடி இடிக்கிறார்கள். அப்படி தாள லயத்தோடு உலக்கையை
இடிக்கும்போது அவர்கள் பாடும் பாடல் இது :
"முத்தணி கொங்கைகள் ஆட ஆட
மொய்குழல் வண்டினம் ஆட ஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப்
பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆட ஆட
அத்தன் கருணை யொ டாட ஆட
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே"
ஆஹா, ஆஹா !
தேனினும் இனிய இந்த தித்திக்கும் தமிழை தேடி எடுத்து தனக்குத் தந்த தமிழன்னையை நோக்கி மகிழ்வுடன் புன்னகை செய்தார், கரம் கூப்பி வணங்கினார் கண்ணதாசன்.
அப்புறம் என்ன ?
எம்.எஸ்.விஸ்வநாதனை நோக்கி சொன்னார் கண்ணதாசன். "விச்சு, இது சரியா இருக்குமா பாரு."
"சொல்லுங்க கவிஞரே!"
"கட்டோடு குழலாட ஆட ஆட
கண்ணென்ற மீனாட ஆட ஆட
கொத்தோடு நகையாட ஆட ஆட
கொண்டாடும் மயிலே நீ ஆடு!"
"ஆஹா" என்றார் எம்.எஸ்.வி.
கண்ணதாசன் தொடர்ந்தார் :
"பாவாடை காற்றோடு ஆட ஆட
பருவங்கள் பந்தாட ஆட ஆட
காலோடு கால்பின்னி ஆட ஆட
கள்ளுண்ட வண்டாக நீ ஆடு!"
பொங்கி வரும் பூரிப்பில் கண்ணதாசனை கட்டி அணைத்துக் கொண்டார் எம்.எஸ்.வி.
காலத்தை வெல்லப் போகும் ஒரு பாடல் அந்த அறைக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகிக் கொண்டிருக்க,
வந்த தன் வேலை முடிந்ததென எவருக்கும் தெரியாமல் அங்கிருந்து எழுந்து சென்றாள் தமிழன்னை.
அவள் சென்ற திசை நோக்கி கை கூப்பி தொழுதார் கண்ணதாசன் :
“வட்டிக் கணக்கே
வாழ்வென் றமைந்திருந்த
செட்டி மகனுக்கும்
சீர்கொடுத்த சீமாட்டி!
தோண்டுகின்ற போதெல்லாம்
சுரக்கின்ற செந்தமிழே
வேண்டுகின்ற போதெல்லாம்
விளைகின்ற நித்திலமே
உன்னைத் தவிர
உலகில்எனைக் காக்க
பொன்னோ பொருளோ
போற்றிவைக்க வில்லையம்மா!
என்னைக் கரையேற்று
ஏழை வணங்குகின்றேன்!”
நானும் வணங்குகின்றேன்
கண்ணதாசனை !
தமிழ்த்தாயின் தனிப் பெரும் தவப் புதல்வனை !
இணையத்தில் படித்த
அருமையான
பதிவு!
"பெரிய இடத்து பெண்" படத்தில் மெல்லிசை மன்னர்கள் எம். எஸ். வி... ராமமூர்த்தி அவர்கள் இசையில், சுசீலா அம்மாவும், ஈஸ்வரி அம்மாவும், டி. எம். எஸ் அவர்களும் மிக
இனிமையாக
பாடியிருக்கும் இந்த பாடல், பாடலின் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழல் இசையுடன் ஆஹா! அருமை!

Wednesday, August 31, 2022

RAGAM THALAM PALLAVI - THEERPUGAL THIRUTHAPADALAAM


படம்: தீர்ப்புகள் திருத்தப்படலாம்

பாடல்: குருவிக்கரம்பை சண்முகம் 

குரல்:எஸ் பி பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்

இசை: சங்கர் கணேஷ்

பெ : ல ல ல ல லலலா ல ல லா லா லாலாலலா
லாலல்லலலாலா லாலல்லலலாலா
லல்லா ல லல்லா ல லல்லா…

ஆ : ராகம் தாளம் பல்லவி..
அது காதல் பூபாளமே..
பெ : ராகம் தாளம் பல்லவி..
அது காதல் பூபாளமே..
ஆ : வானம் சிந்தும் நே..ரம்
ஆசை நெஞ்சில் மோ..தும்
பெ : பொங்கும் இந்நா..ளே
நம் பொன்னாள் ஆ அ ஆ அ..
ஆ : பொங்கும் இந்நாளே நம் பொன்னாள்…


ஆ : இதழ் தரும் மலரே.. பழ ரஸ
நதியே என் தேகம் தீக்கடலே…
பெ : கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கைக்  கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ளவா..
ஆ : இதழ் தரும் மலரே.. பழ ரஸ
நதியே என் தேகம் தீ..க்கடலே
பெ : கண்ணன் நெஞ்சின் தாகம்
கங்கைக்  கிண்ணம் தீர்க்கும்
உன் மோகம் மின் காற்று மெல்ல அள்ள..வா..
ஆ : தோகை நீதான் காமன் பாலம்
ஆவல் தீர்க்கும் தேவலோகம்
பெ : மாலைகள் சூடிக்  கொள்ளும்
தேதி பார்க்கட்டும்

ஆ : ரா..கம் தா..ளம் பல்லவி..
அது காதல் பூபா..ளமே…
பெ : வானம் சிந்தும் நே..ரம்
ஆசை நெஞ்சில் மோ..தும்
பொங்கும் இந்நாளே நம் பொன்னாள்
ஆ : ஆ அ ஆ அ.. பொங்கும்
இந்நாளே நம் பொன்னாள்



ஆ : வானும் மண்ணும்
தீபமேற்றி மாறும் நேரமிது….
வானும் மண்ணும்.. தீபமேற்றி
மா..றும் நேரமிது..
பெ : பாவை மேனி பூவைப்  போல..ஆகும் வேளையிது…
பாவை மேனி பூவைப்  போல.. ஆகும் வேளையிது…
ஆ : காலங்கள்.. மேளங்கள்
பெ : நேரங்கள்.. தாளங்கள்
ஆ : தேகங்கள்.. ராகங்கள்
பெ : கோலங்கள். போடுங்கள்

பெ : ரா..கம் தா..ளம் பல்லவி…
அது கா..தல் பூபா..ளமே …
ஆ : வா.னம் சிந்தும் நே..ரம்
பெ : ஆசை நெஞ்சில் மோதும்
ஆ : பொங்கும்
பெ : இந்நாளே
ஆ & பெ : நம் பொன்னாள் ஆ அ ஆ அ..

பொங்கும் இந்நாளே நம் பொன்னாள்
ல ல ல ல லலலா… ல ல லா லா லாலாலலா..
ல ல ல ல லலலா… ல ல லா லா லாலாலலா..