படம்: வருஷம் 16
இசை: இளையராஜா
குரல்: KJ ஜேசுதாஸ்
பாடல்: வாலி
பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்
படைத்தவன் படைத்தான் அதற்காகத்தான்
நாந்தான் அதன் ராகம் தாளமும்
கேட்பேன் தினம் காலை மாலையும்
கோலம் அதன் ஜாலம்
இங்கு ஓராயிரம்
(பழமுதிர்..)
தூரத்தில் போகின்ற மேகங்களே
தூறல்கள் போடுங்கள் பூமியிலே
வேர்க்கொண்ட பூஞ்சோலை நீர்க்கொண்டு ஆட
ஏரியில் மீன்கொத்தும் நாரைகளே
இறகுகள் எனக்கில்லை தாருங்களேன்
ஊர் விட்டு ஊர் சென்று காவியம் பாட
பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்
பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்
ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே
(பழமுதிர்..)
பந்தங்கள் யாவும் தொடர்கதை போல்
நாளும் வளர்ந்திடும் நினைவுகளால்
நூலிழை போல் இங்கு நெருங்கிய இதயங்கள்
பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நாள்
தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
சிந்தை இனித்திட உறவுகள் மேவி
பிள்ளைகள் பேணி வளர்த்தது இங்கே
மண்ணில் இதைவிட சொர்க்கமெங்கே
நேசங்கள் பாசங்கள் பிரிவதில்லை
என்றும் வானத்தில் விரிசல்கள் விழுவதில்லை
இலக்கியம் போல் எங்கள் குடும்பமும் விளங்க
இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திளைத்திட
(பழமுதிர்..)
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
மனது கொஞ்சம் உறங்கும் போது கனவு வந்தது
அது மலர்ந்த போது உன்னை பற்றி நினைவு வந்தது
நினைவு வந்தது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
மின்னாமல் வந்த மேகம் கடலைத் திருடிக் கொண்டது
மேகம் தந்த மழையினையோ பூமி திருடி கொண்டது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
பெண்ணாக பிறந்த பேர்கள் உள்ளம் திருடிக் கொள்வது
இந்நாளில் மட்டும் அல்ல எந்நாளும் உள்ளது
நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது
திருடிக் கொண்டது
காக்கை போல் இருந்த ஒன்று குயிலைப் போல வந்தது
கண்ணாளன் தலையில் ஏறிக் கூடு கட்டி கொண்டது
பொல்லாத உவமை உன்னை காக்கை என்று சொல்வது
என் பொன்னான பச்சைக் கிளி என்னைத் தேடி வந்தது
நிலவு வந்து வந்ததே திருடிக் கொண்டது
திருடிக் கொண்டது
இந்நேரம் சொன்ன கதை எனக்கு மட்டும் தெரிந்தது
இப்போது நடப்பதுதான் உனக்கும் கூட புரிந்தது
கண்ணாலே சொல்வது தான் காதலிலே புதியது
கடலாளம் சிறியதம்மா பெண் மனது பெரியது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது
நீலக்கண்ணன் உன்னழகை திருடிக் கொண்டது
நிலவு வந்து வானத்தையே திருடிக் கொண்டது