Thursday, October 27, 2016

ENGEYO YETHO PAATONDRU KETTEN - NADHIYAI THEDI VANDHA KADAL - SPB PS


FILM: NATHIYAI THEDI VANDHA KADAL
SINGERS: SPB PS
MUSIC: IR
LYRICS: KANNADAASAN 




எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள் பனி காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

பூஞ்சோலையில் பூந்தென்றலில் பொன்மேனி நடமாடுது
என் நெஞ்சம் தடுமாறுது
தோளோடு நான் சாய்ந்தாடவா சொல்லாத சுவை கூறவா
சூடான கதை சொல்லவா
பொன்மாலை நேரம் தேனானது பூ மஞ்சள் மேனி ஏன் வாடுது
சொர்கத்தைக் கண்டேனம்மா
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

தாயாகினேன் தாலாட்டினேன் கண்ணா என் ராஜாங்கமே
நீதான் என் ஆதாரமே
மணிப்பிள்ளைகள் மான் குட்டிகள் உறவாடும் தெய்வங்களே
ஒளி வீசும் தீபங்களே
வாடாத முல்லை பூ மேனியே தேடாமல் வந்த செல்வங்களே
என் ஜீவன் உன்னோடுதான்

எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்
அங்கே வா நீயும் ஆனந்தம் காண்போம்
குளிர் மேகங்கள் பனி காலங்கள்
பெற வேண்டும் சுகங்களே
எங்கேயோ ஏதோ பாட்டொன்று கேட்டேன்

THENNA MARATHTHULA THENDRALADIKKITHU - LAKSHMI - IR PS


FILM: LAKSHMI
SINGER: ILAIYARAAJAA SUSEELA
MUSIC: ILAIYARAAJAA
LYRIVS: AALANGUDI SOMU

தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே
நான் தெனந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே....அடியே உன்ன நெனைக்கயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே

கன்னம் செவக்குது எண்ணம் தவிக்கிது
உன்ன நெனைக்கயிலே இதமா என்ன அணைக்கயிலே
கண்ணு சிமிட்டுது என்ன வெரட்டுது மெல்ல சிரிக்கையிலே
நீதான் என்ன ரசிக்கையிலே
உள்ளம் சிலிர்க்குது மின்னி சொலிக்கிது கட்டிப்புடிக்கயிலே
நெசமா கைய புடிக்கயிலே
இது அணச்சாலும் கொறயாது அழிச்சாலும் மறையாது
சொல்ல தெரிஞ்சிருந்தும் அத நான் சொல்ல முடியலையே

தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
கிளியே புன்னவனக்குயிலே
நான் தெனந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே....அடியே உன்ன நெனைக்கயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
கிளியே புன்னவனக்குயிலே

பட்டு கழுத்துல முத்து தெரியுது பொண்ணு சிரிக்கையிலே
அழகு கண்ண பறிக்கயிலே
தொட்டு தழுவுன்னு சொல்லி அழைக்கிது இந்த மனசினிலே
ரெண்டும் சின்ன வயசினிலே
விட்டு விலகுன்னு வெட்க்கம் தடுக்குது
போக முடியலையே எனக்கு ஏதும் புரியலையே
நான் பாய் போட்டுப் படுத்தாலும் பாலாக குடிச்சாலும்
தூக்கம் புடிக்கலையே எனக்கு ஏதும் ருசிக்கலையே

தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே

சின்னஞ்சிருசுக கொஞ்சிக்குலவுது அந்திப்பொழுதினிலே
ஊஞ்சல் ஆல விழுதினிலே
கன்னி வயசுல பொண்ணு சிரிக்கிது என்ன சுகம் அதிலே
நெனச்சு ஏங்கி தவிப்பதிலே
இன்ப நெனப்புல வெந்து தவிக்கிது பட்ட பகலினிலே
கொளுத்தும் உச்சி வெயிலினிலே
இது தானாக ஆறாது தழுவாம தீராது
ஒண்ணும் புரியலியே புரிஞ்சும் சொல்ல தெரியலையே

தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே
நான் தெனந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே....அடியே உன்ன நெனைக்கயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
கிளியே புன்னவனக்குயிலே
நான் தெனந்தோறும் ரசிச்சாலும் தெகட்டாது பசிக்காது
சின்னமணிக்குயிலே....கிளியே உன்ன நெனைக்கயிலே
தென்ன மரத்துல தென்றலடிக்கிது நந்தவனக்கிளியே
அடியே புன்னவனக்குயிலே

Friday, October 21, 2016

VARUVAAI KANNA NEERAADA - PATTAKKATHTHI BAIRAVAN - SPB PS



FILM: PATTAKATHTHI BAIRAVAN
MUSIC:ILAIYARAAJAA
LYRICS: KANNADAASAN
SINGERS: SPB PS

வருவாய் கண்ணா நீராட
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக

வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
ஹரே க்ருஷ்ணா

ஸ்ருங்காரம் என்றென்றும் ஸ்ரீக்ருஷ்ணபாவம்
ஸ்ரீக்ருஷ்ணன் துணைதானே ராதாவின் யோகம்
ஸ்ரீக்ருஷ்ணன் துணைதானே ராதாவின் யோகம்
விழி வானம் கருநீலம் திருமேனி
அழகான புது நீலம்
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ஸ்ருங்காரம் என்றென்றும் ஸ்ரீக்ருஷ்ண ரசபாவம்
ஸ்ரீக்ருஷ்ணன் துணைதானே ராதாவின் புதுயோகம்
ஹரே...க்ருஷ்ணா.......ஆ ஆ ஆ ஆ ஆ

வில்லேந்தும் வீரம் ராமாவதாரம்
கலைவடிவம் இசை வடிவம்
மாதவனே கண்ணா அவதாரா லீலா
ரச லீலா ஸ்ரீபாலா கோபாலா ஸ்ரீலோலா

வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட

வில்லேந்தும் தனி வீரம் ராமா உன் அவதாரம்
கலைவடிவம் இசை வடிவம்
மாதவனே மாயவனே ஹரே க்ருஷ்ணா
ரபபபப... ரபபாப்.. ப்பாஆ... பாஅ... பா
வருவாய் கண்ணா நீராட
யமுனா நதியில் விளையாட
ராதை இங்கே உனக்காக
கீதை சொல்வாய் எனக்காக
ஹரே க்ருஷ்ணா

Wednesday, October 19, 2016

KELVIYIN NAYAGANE - ABOORVA RAGANGAL



படம்: அபூர்வராகங்கள்
இசை: M.S.விஸ்வநாதன்
குரல் : வாணி ஜெயராம், பி.எஸ்.சசிரேகா
பாடல்: கவியரசு கண்ணதாசன்




கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?



பசுவிடம் கன்று வந்து பால் அருந்தும் - கன்று
பாலருந்தும் போதா காளை வரும்?
சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கம் - கொஞ்சம்
சிந்தை செய்தால் உனக்கு பிறக்கும் வெட்கம்
தாலிக்கு மேலுமொரு தாலி உண்டா?
வேலிக்கு மேலொருவன்  வேலி உண்டா?
கதை எப்படி? அதன் முடிவெப்படி?

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான் - மங்கை
தர்ம தரிசனத்தை தேடுகின்றான்
அலமேலு அவன் முகத்தை காண்பாளோ? மங்கை
அவனோடு திருமலைக்குச் செல்வாளோ?
செல்வாளோ? செல்வாளோ?

கேள்வியின் நாயகனே - இந்தக்
கேள்விக்கு பதிலேதய்யா?

ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்
பார்த்துக்கொண்டால்...அவை
ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?
இரு கண்ணும் ஒன்றாகச் சேர்ந்துவிட்டால் - அவை
இரண்டுக்கும் பார்வையிலே பேதமென்ன?
பேதம் மறைந்ததென்று கூறு  கண்ணே
நமது வேதம்  தனை மறந்து நடக்கும் முன்னே
கண்ணே உன் காலம் சென்ற கதை என்ன?
உன்னைக் காணப் பிழைத்திருந்தேன்
வேறு என்ன?
உடல் எப்படி?
முன்பு இருந்தாற்படி...
மனம் எப்படி?
நீ விரும்பும்படி...

கேள்வியின் நாயகியே  - இந்தக்
கேள்விக்கு பதிலேதம்மா?
இல்லாத மேடையொன்றில்
எழுதாத நாடகத்தில்
எல்லோரும் நடிக்கின்றோம் - நாமே
எல்லோரும் பார்க்கின்றோம்

பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்
பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா
பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்
பிரியத்துடன் பக்கத்திரு முருகா
திருமுருகா...திருமுருகா...


19/10/2016- நடிகை ஸ்ரீவித்யா
அவர்களின் நினைவு தின சிறப்புப்  பதிவு

இயக்குநர் சிகரம் K.பாலசந்தரின் இயக்கத்தில், கண்ணதாசன் வரிகளில் அபூர்வராகங்கள் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது. இலைமறை காய்மறை அர்த்தங்கள் பொதிந்த வரிகளுடன் கதாநாயகி பாடும் பாடல் இது.
அழகான கண்ணழகி ஸ்ரீவித்யா அவர்களுக்காகவும், வாணி ஜெயராம்
அவர்களின் குரலுக்காவே நிறைய முறை கேட்க வைக்கும், கேட்டு பாருங்களேன்.


KAADHAL MAHARAANI KAVITHAI POO VIRITHTHAAL - KAADHAL PARISU - SPB SJ



FILM: KAADHAL PARISU
MUSIC: IR
SINGERS: SPB SJ

காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்
முத்துப்போல் சிரித்தாள்
மொட்டுப்போல் மலர்ந்தாள்
விழியால் இவள் கணை தொடுத்தாள்

இந்த காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தாள்

பூவை நீ பூமடல் பூவுடல் தேன் கடல்
தேன் கடலில் தினமே குளித்தால் மகிழ்வேன்
மான் விழி ஏங்குது மையலும் ஏறுது
பூங்கொடியை பனிபோல் மெதுவாய் தழுவு
கண்ணே உந்தன் கூந்தல் ஓரம்
கண்கள் மூடி தூங்கும் நேரம்
இன்பம் கோடி ஊஞ்சல் ஆடும்
உள்ளம் போகும் ஊர்வலம்
காதல் மகராணி கவிதை பூ விரித்தாள்

பஞ்சணை கூடத்தில் பால் நிலா காயுதே
நான் என்னையே மறந்தேன் கனவில் மிதந்தேன்
உன் முக தீபத்தில் ஓவியம் மின்னுதே
உன் அழகால் இரவை பகலாய் அறிந்தேன்
மண்ணில் உள்ள இன்பம் யாவும்
இங்கே இன்று நாமும் காண்போம்
அன்பே அந்த தேவலோக சொர்கம் இங்கே தேடுவோம்

காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்
புது கவிதை பூ விரித்து
கனவில் தேன் தெளித்தான்
முத்துப்போல் எடுத்தான்
தொட்டுத்தான் அணைத்தான்
விழியால் இவன் கணை தொடுத்தான்

காதல் யுவராஜா கவிதை பூ விரித்தான்
புது கவிதை பூ விரித்து கனவில் தேன் தெளித்தாள்

NENACHADHELLAAM NADAKKAPPORA NERATHTHILE VAADI - URAVAADUM NENJAM - SPB SJ



FILM: URAVAADUM NENJAM
SINGERS: SPB SJ
MUSIC: IR

 ஏ.... நன்னானானா.. அரேரரே... தரரரே... ரரேரரேரா ரா

நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ

நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
இதுதானோ மோஹம் இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா நான்தானே ரோஜா

நெனச்சதெல்லாம் நடக்கப்போற நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா

செந்தாழம் பூக்கள் சிரிக்கின்ற நேரம்
செவ்வானில் மீன்கள் வருகின்ற நேரம்
தனியாக வந்தால் கதை நூறு சொல்வேன்
வாம்மா...ஹா..பக்க்கத்திலே வாம்மா..ஹும்ம்ஹும்
என் காதல் ராணி..நாந்தானே தேனீ
நெனச்சதெல்லாம் நடக்கப்போற  நேரத்திலே வாடி
என் காதல் ராணி..நாந்தானே தேனீ

இரவோடு நிலவு கதை பேசும்போது
உறவாடும் நெஞ்சம் விளையாட வேண்டும்
பொன்மேனி எங்கும் பூவாட வேண்டும்
வாய்ய்ய்யா.... அஹ்ஹான்.....பக்கத்திலே வ்வாய்ய்ய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா

நெனச்சதெல்லாம் நடக்கப்போற  நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா நான்தானே ரோஜா

பொல்லாத பருவம் துடிக்கின்ற வயசு
சொல்லாமல் என்னை அணைக்கின்ற சொகுசு
எல்லாமே புதுசு இனிக்கின்ற மனசு
வாய்ய்ய்யா.... அயொ.....பக்கத்திலே
ஹாஹான்
என் காதல் ராஜா நான்தானே ரோஜா
என் காதல் ராணி..நாந்தானே தேனீ




Tuesday, October 18, 2016

MARUDHAMALAI MAMANIYE - DEIVAM


படம்: தெய்வம்
குரல்: மதுரை சோமசுந்தரம்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை
அஆஆ.. ஆஆஆ.. மருத மலை மருத மலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
மணமிகு சந்தனம் அழகிய குங்குமம்
ஐயா உமது மங்கல மந்திரமே

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

தைப்பூச நன்னாளில்  தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..
தைப்பூச நன்னாளில் தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தய்யா ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
ஆ...ஆ ஆ ஆ....ஆ...ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்

அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா

சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்
சக்தித் திருமகன் முத்துக்குமரனை மறவேன் நான் மறவேன்
பக்திக் கடலென பக்திப் பெருகிட வருவேன் நான் வருவேன்

பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
பரமனின் திருமகனே அழகிய தமிழ்மகனே
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா
காண்பதெல்லாம் உனதுமுகம் அது ஆறுமுகம்
காலமெல்லாம் எனதுமனம் உருகுது முருகா

அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே
அதிபதியே குருபரனே அருள்நிதியே சரவணனே

பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு  கருணையில் எழுவது
பனியது மழையது நதியது கடலது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது
வருவாய் குகனே வேலய்யா
ஆஆ...ஆஆ...ஆஆ.
தேவர் வணங்கும் மருதமலை முருகா

மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் குலம் காக்கும் வேலய்யா ஐயா


Mani Vijayaraghavan writes:

One Song Wonder

சங்கீதமே ஆஸ்தி & குஸ்தி

சுவாமிமலை ( மருதமலை?) மாமணியே

மதுரை சோமு ( 1919-1989) என்றாலே அவரது மருதமலை மாமணியே பாடலே நினைவுக்கு வரும். ஆனால் அதற்குமுன் அவர் திரைக்கு வந்தும் வராத நான்கு பாடல்களையும் வெளிவந்தும் அவ்வளவாகக் கேட்டிராத ஒரு திரைப்படலையும் பாடியிருக்கிறார்.

தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் பிறந்தாலும் மதுரையில் வளர்ந்தவர். (பெற்றோர சச்சிதானந்தம் பிள்ளை- கமலாம்பாள்.) சகோதரர்கள் குஸ்தி பயின்றவர்கள் என்பதால் இவரும் அதனைப்பயின்றதால் குரல்வளமே பாதிக்கப்பட்டு பின்னர் பிரபல MPN சகோதரர்கள் நாதஸ்வர இசையோடு இசைந்துபாடி உரத்த குரல்வளத்தைப் பெற்றவர் கடைசிவரை இவரது பாடல்களை நாதஸ்வர பாணி பிர்க்காக்களே ஆக்கிரமித்திருந்தன.(இன்றும் அந்த பாணியை அவரது சிஷ்யை பிரபலமான பாடகி திருமதி அருணா சாயிராம் அவர்கள் பாடுவதைக் கேட்கலாம்) .



முதலில் கற்றது எம் எஸ் சுக்கு கற்பித்த சுந்தரேச பட்டர் என்பவரிடம். இவர் மருங்காபுரி கோபால கிருஷ்ணய்யருடைய சீடர். பின்னர் பிரபல வித்வான் சித்தூர் சுப்ரமணியப் பிள்ளை அவர்களிடம் கற்றார் பலதெலுங்கு பாடல்களையும் அட்சர சுத்தமாகப் பாடதெரிந்தும் தமிழ்பாடல்களைப் படுவதிலேதான் ஆர்வம் காட்டினார் அவரது சொந்தப் பாடல்கள் மதுரை மீனாட்சி RTP பலலவியும் என்னகவி பாடினாலும் (நீலமணி ராகம்)பாடல் போன்றவை பிரபலம்.

சிறுவயதில் அவர் ஒரு ராக்கோழி என்றுகூட கிண்டல் செய்திருக்கிறோம் எப்போதும் இரவு எட்டுமணிக்குமேல் துவங்கி நள்ளிரவு வரைகூட பாடுவார் வயலின் மிருதங்கம்தவிர கஞ்சிரா மோர்சிங் கொன்னக்கோல் என மேடை நிறைந்த கச்சேரிகளாகதான் படுவார். அவர் கால் படாத பிரபல கோவில்களே இல்லை..பாடல்களின் நடுவே திடீர் திடீரென்று ராமா ராமா என பெரியகுரலில் சொல்வது அவரது பாணி கச்சேரியில் நடுவில் யாராவது எழுந்து போக முயற்சித்தால் அவ்வளவுதான் நீங்க கேட்ட பாட்டத்தான் அடுத்ததா பாடப்போறேன் உட்காருங்க என அதட்டுவார் VIP கள் பாதியில் எழுந்தபோது திடீரென்று மங்களம் பாடி முடித்து நோகடிததுமுண்டு.

முதல் திரைப்பட அனுபவம்?

சம்பூர்ண இராமாயணம் எனும் படத்தில் இராவணன் கதா பாத்திரத்திற்கு 4 பாடல்கள் பாடி ஒலிப்பதிவும் செய்யபட்டன. ஆனால் இராவணன் பாத்திரத்தில் நடித்த டி.கே.பகவதிக்கு இவர் பாடிய வேகத்திற்கு வாயசைக்க இயலாத காரணத்தால் இயக்குனர் வீணைக் கொடியுடைய எனும் பாடலை சிதம்பரம் ஜெயராமன் பாடினால்தான் சரியாக இருக்கும் என விரும்பினார் .சோமுவை சிபாரிசு செய்திருந்த சிவாஜி கணேசன் வருத்ததுடன் இதனை சோமு அவர்களிடம் சொன்னபோது ஒண்ணு நான்பாடி ரெகார்டு பண்ணின எல்லாப்பாட்டும் படத்தில் வரணும் இல்லாவிடில் எல்லாவற்றையுமே நீக்கிவிடுங்கள் என அவ்வருக்கே உரிய சுயமரியாதை கலந்த கோபத்தில் கூறினாராம் இதனால் இவர் பாடியவை அப்படத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.என்று கூறுவர்.

இன்னொரு காரணம் என்னவெனில் அவரால் 78 RPMஇசைத் தட்டுகேற்றவாறு மூன்றரை நிமிடத்தில் பாடி முடிக்கமுடியவில்லை பாட துவங்கினால் அவரையே அவரால் அடக்கமுடியாமல் தனையறியாமல் கூடுதல் சங்கதிகளைப் பாடியதால் நேரம் கடந்து சரிவராமல் போய்விட்டதென்றும் கூறுவர். இதெல்லாம் அறிந்தும் அவரது முருகன் பாடல்களில் மயங்கிய சாண்டோ சின்னப்பாதேவர் குன்னக்குடியின் இசையில் தயாரித்த தெய்வம் (1969)படத்தில் சூப்பர் ஹிட் மருதமலை மாமணியே பாடலை பாடவைத்தார்.

அதற்கு சோமு அவர்களையே நடிக்கவும் வைத்தார் எந்த ஜென்மத்திலும் அதனை அவர்போலவே வேறொருவர் பாடவே முடியாது ஆனாலும் என்ன? அவருக்கு சினிமாப் பாடல்கள் பாடி சம்பாதிப்பதில் அவ்வளவாக நாட்டமில்லை. (நேரககட்டுப்பாட்டுக்கும் அவருக்கும் வெகுதூரமாயிற்றே Cinema is not his cup of tea…! ) எளியவாழ்வையே வாழ்ந்து கொடுப்பதை வாங்கிக்கொண்டு நிறைவாகப் பாடுவதே அவர் வழி வெகுநாள் கழித்து சஷ்டி விரதம் என்ற திரைப்படத்தில். 'நம்பிக்கை வைத்திருந்து நாளும் நினைத்திருந்து கும்பட்டால் காத்தருளும் குமரனின் குடமுழுக்கு'' எனும் (முற்காலத்தில் தன்னிடம் அடிவாங்கிய ) கவிஞர் வாலி அவர்கள் இயற்றிய பாடலைப் பாடியிருந்தார் .

மூன்று மறக்க முடியா நிகழ்வுகள்

1 இன்று உச்சத்தில் இருக்கும் ஒரு நகைச்சுவைக் HERO நடிகரின் தாத்தா அக்காலத்தில் ஒரு பிரபல நாதஸ்வர வித்வான். அவர் ஒருமுறை திரு சோமு கச்சேரி மிருதங்க தனியாவர்த்தனத்தின் போது எழுந்துபோவதைப் பார்த்ததும் கோபம் கொண்டு கச்சேரிக்கு மங்களம் பாடிவிட்டார் (அந்த எனது மிருதங்க நண்பர் /நான் சின்னப்பையன்தானே போகட்டுமே என்றபோது அதெல்லாம் தவறு சிறிய வித்வானானாலும் மரியாதை தேவை யாராக இருந்தாலும் எதிர்பார்ப்பேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறினாராம்) .

2 எனது நண்பர் கூறியது ஒரு திருக்காட்டுப்பள்ளி கிராமக் கச்சேரியின்போது அவருக்கு அப்போது இளைஞராயிருந்த கவிஞர் வாலி தம்பூராபோட்டுக்கொண்டே மேடையில் தூங்கிவிழுந்துவிட்டார் ஒரே பலத்த குஸ்தி அறைவிட்டார் சோமு அவர்கள். எதிர்பாராமல் அடிவாங்கிய வாலிக்கு பொறி கலங்கிவிட்டதாம் .அதனை அப்போ கேட்டபோது நான் நம்பவில்லை (பின்னர் வேறு ஒரு சம்பவத்தை நேரில்காணும்வரை)

3 1980 இல் நான் ஆர்வத்துடன் போயிருந்த ஒரு விருது நிகழ்ச்சியில் அவருக்கு மிருதங்கம் வாசித்தவர் தொடர்ந்து தப்புத்தாளம் வாசித்தபோது ஒரு பொளேர் விட்டார் பார்க்கவேண்டும் அதற்காக துளிக்கூட வருந்தாமல் /ஒவ்வொரு கச்சேரியும் ஒரு கோதாதான். .குஸ்தின்னு வந்துவிட்டால் அப்பனாவது பிள்ளையாவது என்றாரே/ பார்க்கவேண்டும் அந்த அறை அரங்கத்தில் ஆங்காங்கே உட்கார்ந்து தனது இஷ்டத்துக்கு தப்புத்தாளம் போட்டுக்கொண்டு ரசித்த ஒவ்வொருவருக்கும் கொடுத்தது போலிருந்தது (நல்லவேளை அப்போது எனக்கு தாளமே போடத்தெரியாது) அப்போதுதான் நண்பர் சொன்ன கவிஞர் வாலி அடிவாங்கிய நிகழ்ச்சியை நம்பமுடிந்தது.

அவர் விட்டுச் சென்ற இசை எங்கும என்றும் வாழும்
மருதமலை மாமணியே அருள்வாய் !

https://www.youtube.com/watch?v=82qfhI7uZf0


https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1356722614359461/

Sunday, October 16, 2016

THOOKAM UN KANGALAI THAZHUVATTUME - AALAYA MANI




படம் : ஆலயமணி
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்  : ஜானகி
பாடல் : கண்ணதாசன்

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே


காலையில் நான் ஓர் கனவு கண்டேன்
அதைக் கண்களில் இங்கே  எடுத்து வந்தேன்
எடுத்ததில் ஏதும் குறைந்துவிடாமல்
கொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலே… கண்களிலே … கண்களிலே…

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

மனமென்னும் மாளிகை திறந்திருக்க
மையிட்ட கண்கள் சிவந்திருக்க
இரு கரம் நீட்டி திருமுகம் காட்டி
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே…
தவழ்ந்துவந்தேன் நான் உன்னிடமே


தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்

ஜானகியம்மாவின்  ரெஸ்ட்
=================================

’சமையல்...சமையல்...சமையல்...! 77 ஆண்டுகள் முடிந்த பின்னர், இப்போதுதான் கடந்த ஆறு மாதங்களாக சமையல் கற்றுக் கொள்கிறேன். இதுநாள்வரை நான் சமையலறை பக்கம் சென்றது கூட இல்லை. அதனால் ஓய்வு நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் சமையல் கற்றுக் கொண்டிருக்கிறேன். வீட்டுக்கு வரும் ரசிகர்களுடன் பேசி மகிழ்வேன். காலையில் சின்ன வாக்கிங். மாலையில் 5 மணி முதல் 11 மணி வரை டி.வி. சீரியல்கள் பார்ப்பேன். அருமையாக, மகிழ்ச்சியாகச் செல்கிறது வாழ்க்கை.’

என்கிறார் பின்னணிப் பாடகர் எஸ். ஜானகி அவர்கள் ஜன்னல் மாதமிருமுறை இதழ் (அக். 01-14) பேட்டியில். கற்றுக் கொள்வதற்கு வயதும் இல்லை; ஓய்வு கொண்ட பிறகும் வாழ்வில் உற்சாகத்திற்குக் குறையும் இல்லை ஜானகியம்மாவிடம்.

மற்றொரு முக்கிய பகுதி இங்கே...

‘தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே..’ங்கிற பாடல் பாடுவதற்காகத் தயாரான நேரம் ஜலதோஷம் பிடித்துக் கொண்டது. டாக்டரிடம் அழைத்துச் சென்றார் என் கணவர். டாக்டர் கொடுத்த ‘ஆஸ்பிரின்’ எனக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியது. ரெகார்டிங் தியேட்டரின் நுழைந்தபோதே கண்கள் வீங்கி விட்டன. நாக்கு குளறியது. ஆனாலும், ஒரே டேக்கில் பாட்டு ஓகே. அப்படியே என் கணவர் என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அன்று கொஞ்சம் தவறியிருந்தால், இன்று ஜானகி பேசிக் கொண்டிருக்க மாட்டாள்.’

என்று படிக்கும்போதே நமக்கு நெகிழ்கிறது.

முத்தாய்ப்பான நம் கன்னத்தில் ‘சப்பக்’ என அறையும் வரிகள்...

‘குரல் வளத்தை மட்டுமே பார்த்த பலருக்கு, உடல் நலக் குறைவால் நான் பட்ட அவஸ்தைகள் தெரியவே தெரியாது.’

நன்றி: பக்கம் 66, ஜன்னல் (அக். 1-14) இதழ்.

https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1333840609980995/

Tuesday, October 11, 2016

ULLAM URUGUDHAYYA - ANDAVAN PICHI




உள்ளம் உருகுதய்யா...

உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா

பாடிப் பரவசமாய் - உன்னையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேறி - முருகா
ஓடி வருவாயப்பா

பாசம் அகன்றதய்யா - பந்த
பாசம் அகன்றதய்யா - உந்தன்மேல்
நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே - எந்தன்
ஈனம் மறைந்ததப்பா

ஆறுத் திருமுகமும் - உன் அருளை
வாரி வழங்குதய்யா
வீரமிகுந்தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா

கண்கண்ட தெய்வமய்யா - நீ இந்தக்
கலியுக வரதனய்யா
பாவி என்றிகழாமல் - எனக்குன்
பதமலர் தருவாயப்பா

உள்ளம் உருகுதய்யா - முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே - எனக்குள்
ஆசை பெருகுதப்பா

******************************************************************

“உள்ளம் உருகுதய்யா ..!”

-டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு ,
 உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.
 ஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும் , அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட .... இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.

 பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்..எஸ்.! வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன் , அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”

பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். ! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்... முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.
டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி..இங்கே வாப்பா..”

 வந்தான்.

பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.
 எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.
“பரவாயில்லை.முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல , அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.

 பழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.

அதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது , மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..!

எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு..!

 ஆனால் ... எந்த ஊரிலும் , யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.
 .
 பல வருஷங்கள் கடந்த பின் .. தற்செயலாக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.
 கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் ... அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .
காரணம் .. அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல் :
 “உள்ளம் உருகுதடா...”

உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க , எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார் டி.எம்.எஸ்.
அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் ..'‘ஆண்டவன் பிச்சி’’ !

 யார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ ?
 டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது... நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.

அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண்.
 பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி .
 பள்ளிக்கு செல்லாதவள் .படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.

 ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம் , வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.. முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.

இறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.
அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது , அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ... காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து , பிரசாதமும் கொடுத்து .. “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப ...அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’..

 சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு.
 .
 அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ ..!

 அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.
சரி ... இநதப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ?

டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?

# இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில்  எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை.
 கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.

“பாசம் அகன்றதய்யா - பந்த
 பாசம் அகன்றதய்யா
 உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
 ஈசன் திருமகனே
 எந்தன் ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா !”


இவர்தான் அந்தப் பாடலை எழுதிய ஆண்டவன் பிச்சி அம்மாள்

Saturday, October 1, 2016

THAVIKIDHU THAYANGUDHU ORU MANADHU - NADHIYAI THEDI VANDH AKADAL - JC SPS

தவிக்குது தயங்குது ஒரு மனது
தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
தவிக்குது தயங்குது ஒரு மனது

ஏதோ ஒன்று நெஞ்சிலே
எழுந்ததென்ன உன்னிலே
எங்கோ சென்ற கண்ணிலே
ஏக்கம் என்ன பெண்ணிலே
மலர்ந்திடாத ஆசையே
மலருகின்ற நேரமே
எண்ணிய சுகம் என்னுடன் வரும்
லாலல லலா லாலல லலா
கனியிதழ் சுவைதனில் காதல் நீராடு
தவிக்குது தயங்குது ஒரு மனது

பொங்கும் ஆசை ஆற்றிலே
நனைந்ததெந்தன் உள்ளமே
எங்கும் இன்ப வெள்ளமே
எழுந்து பாய்ந்து செல்லுமே
தோன்றுகின்ற தாகமே
தொடருகின்ற காலமே
பார்ப்பதில் சுகம் பலவித ரகம்
லாலல லலா லாலல லலா
பசிக்கொரு உணவென பாவை நீ வாவா
தவிக்குது தயங்குது ஒரு மனது

கங்கை கொண்ட சோழனின்
கனவில் வந்த தேவியே
மங்கை எந்தன் வாழ்விலே
மன்னன் நீயும் பாதியே
சிலையை போன்ற தோற்றமே
தினமும் என்னை வாட்டுமே
இன்னிசை சுகம் இன்பத்தை தரும்
லாலல லலா லாலல லலா
இரவிலும் பகலிலும் மீட்ட நீ வாவா

தவிக்குது தயங்குது ஒரு மனது
தினம் தினம் தூங்காமலே
ஒரு சுகம் காணாமலே
அது தொடர்ந்து எனை படர்ந்து
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது
ஏதோ சொல்கின்றது
மனம் எங்கோ செல்கின்றது