Sunday, July 31, 2016

INRU VANDHA SONDHAMA - CHITHRANGI 1964



படம்: சித்ராங்கி
குரல்: TMS, பி.சுசீலா
இசை: வேதா
பாடல்: வாலி / கு.மா.பாலசுப்ரமணியம்



இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே

வெண்ணையை அள்ளி உண்டு
வேங்குழல் ஊதி நின்று
கண்ணனாக நீ இருந்த காலத்திலே
என்னையே கொள்ளை கொண்ட
புன்னகை வீசி நின்ற
கன்னிகை ராதையாக
தேடி வந்தாய்
குயில் இசையும்
குழல் இசையும்
குழைந்திடும் வேளையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது


இன்று வந்த சொந்தமா


கணையாழி கையில் தந்து
துஷ்யந்தனாக வந்து
காதல் மணம் புரிந்த காலத்திலே
மானோடு நீ வளர்ந்து
சகுந்தலையாய்  இருந்து
மாறாத அன்பு கொண்டு
மாலையிட்டாய்.
குளிர் நிலவும் மலர் மணமும்
குலாவிடும் சோலையிலே
அன்பில் மிதந்து தன்னை மறந்து
அகம் மகிழ்ந்தாடியது

இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து வரும் இன்பமே

இன்று வந்த சொந்தமா....


இன்று வந்த சொந்தமா  என்ற சித்ராங்கி திரைப்படப் பாடல் 2 ஹிந்தி பாடல்களின் கலவை.. மிக அழகாக இரண்டையும் இணைத்திருப்பார் வேதா.. பல்லவி 'யே நயி நயி' என்ற பாக்கட் மார் படத்துப் பாடலில் இருந்தும், சரணங்களை 'நா தும் ஹமே ஜானோ ' என்ற பாத் ஏக் ராத் கி என்ற படத்துப் பாடலில் இருந்தும் எடுத்து இணைத்திருப்பார்.. இரண்டும் தேவ் ஆனந்த் படங்கள்..
https://www.youtube.com/watch?v=6jVdfGM6Kss

https://www.youtube.com/watch?v=hGOkuBTtBu0

தமிழ்த் திரை இசையின் பிதா மகர்கள் - 11 - வேதா
முழுப் பெயர் வேதாசலம். வேதாவின் பெற்றோர்கள் தென் ஆப்பிரிக்காவில் இருந்தார்கள். இந்தியாவிலேயே தன மாமாவின் வீட்டில் தங்கிப் படித்து வந்தார் வேதா. சிறுவயதிலேயே இசையின் மீது ஈடுபாடு உண்டாயிற்று. வேதாவின் மாமாவிற்கு இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அவர் வேதாவிற்கு கர்நாடக சங்கீதம் சொல்லிக் கொடுத்தார்.
ஒரு நாள் ப்ரொபஸர் காப்ரியல் அவர்களின் இசை நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அவரது இசையினால் பெரிதும் கவரப்பட்ட வேதா, தானும் ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்று உறுதி பூண்டார். தன்னை காப்ரியலிடம் அறிமுகப் படுத்திக்கொண்டு அவரிடம் ஹிந்துதானி இசை பயில ஆரம்பித்தார். ஏற்கெனவே வேதாவிற்கு பங்கஜ் மல்லிக், சைகல் போன்றோரின் பாடல்களில் மிகுந்த ஈடுபாடு உண்டு.
அந்நாளில் வெங்கடாசலம் என்பவரதுவீட்டில் கலைஞர்கள் ஒன்று கூடி இசை நிகழ்ச்சிகள் நடத்துவது வ ழக்கம். இது போன்ற ஒரு நிகழ்ச்சியில் வெங்கடாச்சலத்தின் நண்பரான இசை அமைப்பாளர் சி பாண்டுரங்கனை வேதா சந்தித்தார். அவருடன் சில காலம் பணி புரிந்தார். போதிய அளவு வாய்ப்புகளும் வருமானமும் இல்லாமல் போகவே அவரிடமிருந்து விலகினார். நடிகை வைஜயந்திமாலா நடத்திவந்த நாடகக் குழுவில் சில காலம் ஹார்மோனியம் வாசித்து வந்தார்.
50களில் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீராம். அவர் மூலம் சிங்களப் படத் தயாரிப்பாளர்களான ஜெயமனே சகோதரர்களின் அறிமுகம் வேதாவிற்கு கிடைத்தது. "மாறும் விதி என்ற சிங்களப் படத்திற்கு வேதா இசை அமைத்தார். அந்தப் படம் வேதாவின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது.
அந்தப் படம் மகத்தான வெற்றி கண்டது. பின்னர் ஜெயமனே சகோதரர்கள் தயாரித்த பத்து படங்களுக்கு வரிசையாக வேதான் இசை அமைப்பாளர். இதில் ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழா கண்டது.
வேதாவிற்கு தமிழில் வந்த முதல் வாய்ப்பு, ஜூபிலி ஃபிலிம்ஸின் "மர்ம வீரன்". இதுவும் நடிகர் ஸ்ரீராமின் உதவியால் வந்த வாய்ப்பு ஆகும். இப்படத்தில் ஸ்ரீராமும் வைஜயந்திமாலாவும் இணைந்து நடித்திருந்தனர். இப்படத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றன. சந்திரபாபுவும் ஒரு பாடல் பாடியுள்ளார்.
அடுத்து எஸ் எஸ் ராஜேந்திரன், பண்டரிபாய், டி ஆர் ராமச்சந்திரன், பாலாஜி, எஸ் வி ரங்காராவ், தேவிகா ஆகியோர் நடித்த அன்பு எங்கே படத்திற்கு இசை அமைத்தார் வேதா. இதில் சிங்கள பைலா பாணியில் இவர் இசையமைத்த "டிங்கிரி டிங்காலே மீனாக்ஷி டிங்கிரி டிங்காலே என்ற பாடல் மிகவும் புகழ் பெற்றது. இதே படத்தில் கவ்வாலி பாணியில் "நயா தௌர்" என்ற படத்தில் இடம் பெற்ற பிரபல ஹிந்திப் பாடலான "ரேஷ்மி சல்வார் குர்தா ஜாலி கா" என்ற பாடலின் மெட்டில் "அமிர்த யோகம் வெள்ளிக்கிழமை கண்ணாளா" என்ற பாடலும் பெருத்த வரவேற்பை பெற்றது.
அடுத்து நடிகர் ஸ்ரீராம் ஜெமினி சாவித்திரி இவர்களை வைத்து தயாரித்த "மணமாலை" படத்திற்கு இசையமைத்தார் வேதா. இப்படத்தின் P B ஸ்ரீனிவாஸ் குரலில் "நெஞ்சம் அலைமோதவே, கண்ணும் குளமாகவே கொஞ்சும் கண்ணைப் பிரிந்தே போகிறாள், ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள்போகிறாள்" என்ற பாடல் மிகவும் பிரபலம்.
அடுத்து "மின்னல் வீரன்" என்ற படம். ஏ எல் நாராயணன் கதை வசனம் எழுதி நான்கு பாடல்களையும் எழுதியிருந்தார். சில தோல்விப் படங்களின் பாடல்களும் காணாது போய்விடுவதுபோல் இப்படத்தின் பாடல்களும் காணாது போயின. "கனியே, கண்ணான செல்வமே, தாலேலோ" என்று P B ஸ்ரீனிவாஸ் பாடிய பாடலும் அது போல காணாது ,போய்விட்டது. "காலையிலே வலைஎடுத்து கால் வாயிற்று கஞ்சிக்காக நாள் நாள் முழுதும் பாடுபடும் தொழிலாளி" என்ற பாடலும் அவ்வாறேதான். கரைமேல் பிறக்க வைத்தான் என்பது போல் இதுவும் ஒரு மீனவப் பாடல்தான். இன்னொரு பாடல் "கண்ணோடு கண்ணினை நோக்கின்" என்ற ஜெயலக்ஷ்மி (ராதா) பாடும் பாடல். சுத்தமான கரகரப்பிரியா இராகத்தில் அமைந்தது. ஏ எல் நாராயணின் இலக்கிய மணம் மிக்க வரிகளுக்கு ஏற்றதொரு இசையை வழங்கியிருந்தார் வேதா
(நான் இவ்வளவு விரிவாக எழுதவற்கு காரணம், வேதா என்றாலே ஹிந்திப் பட மெட்டுக்களை காப்பி அடிப்பவர் என்ற ஒரு கருத்து நிலவுவதுதான். அவர் தயாரிப்பாளர்களின் நிர்ப்பந்தால்தான் அவ்வாறு செய்ய நேர்ந்தது - குறிப்பாக மாடர்ன் தியேட்டார்ஸ் சுந்தரம். வேதா அனைத்து இசை வடிவங்களிலும் தேர்ச்சி பெற்றவர்.)
வேதாவின் CLASSICAL பரிமாணத்தை காட்ட வந்த படம் பார்த்திபன் கனவு. கல்கி அவர்களின் சரித்திர நவீனத்திற்கு உயிரோட்டம் அளிப்பதுபோல் அமைந்தது வேதாவின் இசை. "கண்ணாலே நான் கண்ட கணமே (மருதகாசி), பழகும் தமிழே பார்த்திபன் மகனே (கவியரசர்) இதயவானின் உதய நிலவே (விந்தன்), போன்ற மனதை மயக்கும் மெல்லிசைப் பாடல்கள் , பின்பு அந்தி மயங்குதடி என்று கல்யாணி ராகத்தில் பாரம்பரிய இசை (எம் எல் வசந்தகுமாரி) என்று ஒரு இசை விருந்தே படைத்திருப்பார் வேதா. அந்தி மயங்குதடியில் இராகத்தின் விலாசங்களைக் காட்ட சிதார் சதிராடும். இதய வானின் பாடலில் வயலின்களின் மேற்கத்திய தாக்கத்தை நாம் உணரலாம். இப்படத்தின் பாடல்கள் சாகாவரம் பெற்றவை.
1963ல் வேதாவிற்கு மாடர்ன் தியேட்டர்ஸின் அறிமுகம்அறிமுகம் கிடைத்தது. மனோரமா கதாநாயகியாக நடித்த கொஞ்சும் குமரி என்ற படத்திற்கு இசையமைத்தார். ஏசுதாஸ் முதல் முதலில் பாடிய படம் இதுதான், "ஆசை வந்த பின்னே, அருகில் வந்த கண்ணே" என்ற பாடலை பாடினர் (எஸ் பாலசந்தர் இசையில் பொம்மை படத்தில் இவர் பாடிய நீயும் பொம்மை 1964 ஆம் வெளி வந்தது)
அடுத்து இவர் இசை அமைத்த படம் "பாசமும் நேசமும்" என்ற ஜெமினிகணேசன், சரோஜா தேவி நடித்த படம், ஹிந்திப் படம் அனாரி யின்யின் தழுவல் இது.
அடுத்து வீராங்கனை, சித்ராங்கி படங்களுக்கு இசையமைத்தார். வீராங்கனையில் ஜேசுதாசிற்கு மூன்று பாடல்கள்.இதில் "நீலவண்ணக் கண்களிரண்டில்" என்ற பாடல் இன்றும் பிரபலம். சித்ராங்கி படத்தில் "நெஞ்சினிலே நினைவு முகம்" "இன்று வந்த சொந்தமா" போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பாடல்கள் பிரபலமானாலும் படங்கள் வெற்றியடைந்தால்தான் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியும். சில படங்கள் வெற்றி பெறாததால் இவர் மாடர்ன் தியேட்டர்சுக்கு ஹிந்திப் படங்களின் ரீமேக்குக்கு போய்விட்டார். இவர் ஹிநதிப் பாடல்களைத் தழுவி மெட்டமைத்தாலும் பாடல்வரிகள் ஏனோ தானோ என்று இல்லாமல் பார்த்துக் கொண்டார். இவரது பாடல்கள் அனைத்தும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியர்கள் எழுதியதாகவே இருந்தது,உதாரணம் கண்ணதாசன். (நூறு முறை பிறந்தாலும்).
இந்த ஹிந்திப் பாடல் வரிசைப் படங்கள் வருமுன் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படம் அம்மா எங்கே (1964) அதில் "பாப்பா பாப்பாபாப்பா கதை கேளு" என்று காக்கா நரியின் கதையை அழகான ஆங்கில மெட்டில் நமக்கு அளித்திருந்தார் வேதா
அடுத்து சரசா பி ஏ என்றொரு படம். P B ஸ்ரீனிவாசின் குரலில் "இரவின் மடியில் உலகம் உறங்கும்" என்று நிமதியின்மையை மௌனமாகப் பொழியும் பாடல். பானுமதி பாடும் "மனதில் மனதை வைத்த பினாலே" என்ற பாடல்பாடல் எடுத்த எடுப்பிலேயே மனத்தைக் கவர்ந்துகவர்ந்து விடுகிறது.
வல்லவன் வரிசை: ஹிந்தியில் வந்த உஸ்தாத் படங்கள் மாடர்ன் தியேட்டர்ஸில் வல்லவன் வரிசை என்றானது.
"நூறு முறை பிறந்தாலும் நூறு முறை இறந்தாலும்
உனைப் பிரிந்து ஒரு நாளும் போவதில்லை"
"சௌ பார் ஜனம் லேங்கே, சௌ பார் ஃபனா ஹோங்கே" என்ற வரிகளை தமிழில் கவியரசர் இவ்வாறு எழுதினார். இந்தப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது, இந்தப் பாடல் மட்டுமல்ல, இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரு வெற்றியைப் பெற்றன. "மனம் என்னும் மேலே" "பாரடி கண்ணே கொஞ்சம்" என்ற கவ்வாலி வகைப் பாடல், "கண்டாலும் கண்டேனே உன் போலே" "நெஞ்சுக்கு நிம்மதி"ஆகிய பாடல்கள்.
அடுத்து வல்லவன் ஒருவன். "பளிங்கினால் ஒரு மாளிகை" "தொட்டு தொட்டுப் பாடவா" "காவிரிக் கரையின் தோட்டத்திலே" ஆகிய பாடல்கள் பெரும் வெற்றி. - வேதா கவியரசர் கூட்டணி நன்முத்துகளை அளித்தது.
அடுத்து நானே வருவேன் - இதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஹிந்தியில் "ரிம் ஜிம் ரிம் ஜிம்" என்று வந்ததை கவியரசர், சிறிதும் யோசிக்காமல், இங்கும் அங்கும் என்று அதைப் போன்றே ஒலிக்குமாறு எழுதினார். ஒரு திகில் பாடலான இது பெரும் வெற்றி ,பெற்றது. இப்படத்தின் மற்ற பாடல்களும் பிரபலம். "உன் வேதனையில் என் கண்ணிரண்டும் மயங்குவதேன் கண்ணா" இசையும், பாடல் .வரிகளும் மிகவும் அற்புதம்.
அடுத்து எதிரிகள், ஜாக்கிரதை - நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
காதலித்தால் போதுமா - கொஞ்சம் நில்லடி என் கண்ணே
சி ஐ டி சங்கர் - நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன
ஜஸ்டிஸ் விஸ்வநாதன் - இது நீரோடு செல்கின்ற ஓடம், சிலை ,கைகள் உண்டு, கண்வழியே கண்வழியே போனது கிளியே
என்று வெற்றிப் பாடல்கள் தந்தார்.
நேரமும் தக்க சுதந்திரமும் இருந்தால் அட்டகாசமான துள்ளல் பாடல்களை தன்னாலும் அளிக்க முடியும் என்று இவர் நிரூபித்த படம் அதே கண்கள். இந்தப் படத்தில் "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வராண்டி" "லவ், லவ் எத்தனை அழகு இருபது வயதினிலே" என்று கலக்கல் பாடல்கள் தந்தார். இது ஒரு மர்மங்கள் நிறைந்த திகில் படம். அதற்கேற்ப "வா அருகில் வா, தா உயிரைத் தா" என்றொரு பாடலும் வடித்தார்.
சின்னஞ்சிறு உலகம் என்றொரு படம், நாகேஷ் கதாநாயகன். "இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்" "ஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு" என்ற பாடல்களை அளித்தார். சினிமாவை கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்ட "நான்கு கில்லாடிகள்" படத்தில், செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்" என்றொரு மெலடி, நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னதி என்றொரு அமைதிப் பாடல் ஆகியவற்றை வழங்கினார்.
காப்பி அடிப்பதற்கென்றே ஒரு இசையமைப்பாளர் என்ற பெயர் வேதாவிற்கு ஏற்ப்பட்டது துர்பாக்கியமே. ஆனால் அதையும் ஒரு கடமையாக செய்து வந்தார். இவரது திறமைக்கு பார்த்திபன் கனவு ஒன்றே போதும். ஹிந்திப் படங்களின் பாடல்களை தமிழில் வெற்றிகரமாக உலவ விடுவதில் தான் வல்லவனுக்கு வல்லவன் என்று காட்டினார். "ஓராயிரம் பார்வையிலே" "நாணத்தாலே கண்கள் மின்ன மின்ன" பாடல்கள் இரவல் மெட்டுக்கள் போன்றா தோன்றுகின்றன?
இவர் இசையமைத்த கடைசிப் படம் "ஜஸ்டிஸ் விஸ்வநாத்" 1971.
மிக இளவயதிலேயே மரணமடைந்தார். ஆனாலும் அவர் விட்டுச்சென்ற பாடல்கள் இன்றளவும் நம் மனதை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன
(நன்றி: திரு வாமனன் அவர்கள்)

Thursday, July 28, 2016

NAANOORU POOKKAL MERUGETRUM MANGAI - URAVUGAL ENDRUM VAAZHGHA - SPB


FILM: URAVUGAL ENDRUM VAAZHGHA
SINGER: SPB
MUSIC: SHANKAR GANESH

 நாநூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே
நாநூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே
சிங்கார வீணை சிரிக்கின்ற கோலம்
சங்கீதம் போலே சுகமான தேகம்
நாநூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே

இடை மின்னல் கோடு நடை அன்னபேடு
இடை மின்னல் கோடு நடை அன்னபேடு
கிளி கொஞ்சும் கூடு
நெஞ்சில் ஏதோ செய்கின்றாள்
மணித்தென்றல் ஆடக்கூடாதோ ஹா
என் மனம் என்னும் மேடை போதாதோ

நாநூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே

பழச்சாறு கிண்ணம்  பளிச்சென்று மின்னும்
பனிக்கால மேகம் என்னை பார்க்கக்கூடாதோ
மலர் பட்டு பாதம் நோகாதோ
என் மடி தொட்டு சாயக்கூடாதோ

நாநூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே

மது சிந்தும் கண்கள் ஒளி சிந்தும் திங்கள்
மது சிந்தும் கண்கள் ஒளி சிந்தும் திங்கள்
இவள்போல பெண்கள் இங்கே கோடியில் ஒன்றல்லோ
மனக்கோயில் கொள்ளக்கூடாதோ
ஓர் புதுப்பாடம் சொல்ல கூடாதோ

நாநூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே
சிங்கார வீணை சிரிக்கின்ற கோலம்
சங்கீதம் போலே சுகமான தேகம்
நாநூறு பூக்கள் மெருகேற்றும் மங்கை
ரதிதேவி தங்கை வரவேண்டும் இங்கே

Wednesday, July 27, 2016

THANEERILE MEEN AZHUDHAAL - MYTHILI ENNAI KAADHALI - SPB



FILM - MYTHILI ENNAI KAADHALI 
SINGER - SPB
MUSIC- TR
LYRICS- TR

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

முள் மீது விழுந்தபடி
முகாரி பாடும் கிளி
முள் மீது விழுந்தபடி
முகாரி பாடும் கிளி

கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை
கண் துடைப்பாரில்லை
கை கொடுப்பாரில்லை
உன்னைப் புரிந்தோரில்லை
உள்ளம் அறிந்தோரில்லை

தண்ணீரிலே மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யாரறிவார்
தனிமையிலே நீயழுதால்
உன் மனதை யாரறிவார்

மனமே மனமே மனமே மனமே



Friday, July 22, 2016

ILAKKANAM MAARUDHO ILAKKIYAM AANADHO - NIZHAL NIJAMAGIRADHU

Ganapathi Subramanian WRITES:


Ilakkanam maarutho (இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ)…………………….

Movie name Nizhal Nijamahirathu
Lyrics Kannadasan
Sung by SPB and Vani Jairam
Directed by K. Balachander
Based on Pamman' s Novel Adimakal
Starring Kamal Haasan, Sumithra ,Sobha ,Sarath Babu and Hanumanthu
Music by M. S. Viswanathan

This is one of the excellent songs in which all participants MSV, Kannadasan , SPB and Vani Jairam have contributed their share fairly.

The Raga “Saranga” associated with this has added the value of Melody here.
This can be quoted as Kannadasan’s one of the best pieces due to the following reasons:
1. The song covers the story of the movie in toto in a crisp manner..
2. Grammar is made of rules while literature may skip the structure to bring happiness . The song repeatedly indicates various events linked to the movie where “இலக்கணம்” wins over “இலக்கியம் “..( இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ)

3. Each Paragraph depicts the story attached to the characters played by Kamal , Sumitra, Shoba and Hanumanthu

4. The choice of each word by Kannadasan is made out of intelligent composition.
In the para of
“என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை
விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ”
Though Kamal and Sumithra love each other , the sudden development made Sumitra doubt Kamal. Though Sumitra did not lose confidence on Kamal’s character , the negative thought on Kamal existed.
“கரை “ and “கறை” were the words used by Kannadasan to denote “ Solution” and “dirt “ in different context.
She did not like to find fault.. For that , Kannadasan was using the word “ஏனோ “ showing doubtfulness.
Since the doubt is a temporary one , he has used the word “ திரை “ while she says that it is not “அணை” which is of highly permanent nature.
She also expects her “திரை “ to be cleared (விலக்கி) and also she wants a reason or explanation ( விளக்கி )for that.

5. Kannadasan is an ardent devotee in the midst of Tamil speaking atheist poets in those era.
The helplessness of the actress Shoba is expressed in the following lines
“தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை “
The solution for Shoba’s helplessness is possible through only divine intervention. This is expressed in following lines by expressing faith in Supreme power and exhibition of confidence in the words of Lord Krishna’s Bhagwat Geetha.
“தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை………..”

6. Kannadasan continues his flamboyance by quoting the greatness of divine support for the needy person Hanumanthu who is a deaf person .But Shoba feels that this deaf person assumes the position of GOD for saving her. Godhood is normally felt (நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம் )
only but it is visibly realized in this case (நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்).
Moreover , theory of rebirth is flashed by Kannadasan , since the relationship looks like a miracle . Hence the objectivity is missing here and Previous lifetime must only be the reason for such miraculous relationship. Again , Kannadasan has proved himself a king in the choice of following words:
“நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம் “
Humble Saluatations to Kannadasan once again here..

7. SPB and Vani Jairam sang so nicely and made this song very melodious.
The lyrics are are under :

இலக்கணம் மாறுதோ…ஓ ஓ ஓ ஓஓ
இலக்கணம் மாறுதோ இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம் (இலக்கணம்)

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏன் இந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ (இலக்கணம்)

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்ட போதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விலக்கி வைப்பாயோ

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை………..

மணி ஓசை என்ன இடி ஓசை என்ன
எது வந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏனிந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம்

ஆ ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆ (இலக்கணம்)

https://www.youtube.com/watch?v=dnRb4kqhHQY


https://www.facebook.com/groups/1018417744856618/permalink/1279023048796085/

Sunday, July 17, 2016

ONRODU ONRAANOM - ANBUKKU NAAN ADIMAI



படம்: அன்புக்கு நான் அடிமை
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா
பாடல்: பஞ்சு அருணாச்சலம்

லலாலா லலாலா லலாலா
லலாலா லலாலா லலாலா

ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்றும்  உன்னோடு வாழ்வேன்


பூவும் கொண்டேன் மஞ்சள் கொண்டேன்
காதலின் தீபம் ஏற்றி வைத்தேன்
காவல் தந்தான் கருணையும் தந்தான்
கைகளில் மாலை சூடி நின்றான்
பார்வைகள் சேரும் பாசமும் பொங்கும்
பூந்தமிழாலே வாழ்த்தினான்
என் எண்ணம்.. பொன்வண்ணம்
இன்பம் எங்கெங்கும்
ததம்தம்தம்  ததம்தம்

ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு

காலம் யாவும் கவிதைகள் சொல்லி
கைகளில் ஆடி வாழ்ந்திடுவேன்
காணும் யாவும் இனிமைகள் சொல்ல 
கண்ணொடு  கண்ணாய் சேர்ந்திருப்பேன்
நல்வரம் வேண்டும் நன்மைகள் வேண்டும்
நல்மனதோடு கேட்கிறேன்
என் உள்ளம் உன் இல்லம்
இன்பம் எங்கெங்கும்
ததம்தம்தம்  ததம்தம்

ஒன்றோடு ஒன்றானோம் அன்போடு
கொண்டாடும் இன்பங்கள் நெஞ்சோடு
என் கண்ணான கண்ணா
பண்பாடி வந்தேன்
வாழ்வென்றும்  உன்னோடு வாழ்வேன் 

Friday, July 15, 2016

NENJUKKUL POO MANJANGAL - SATTAI ILLADHA BAMBARAM


படம்: சாட்டை இல்லாத பம்பரம் 
இசை: இளையராஜா 
குரல்: மலேசியா வாசுதேவன், ஜானகி 
பாடல்:வைரமுத்து 

பப பாப்பா பப பாப்பா பப பாபா 

நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டேனே காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
சுவீட்  ஹீரோ.. ஹீரோ.. பபபபா..
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 

கோடை நிலவாகி விளையாடும் அழகே
காதல் உயிராகும் இனி நானுன்  அருகே
கையோடு பொன்மாலை
எல்லாமே உன் லீலை
நாளும் உல்லாச ராகமிட்டு
பாடும் என்னோடு ஆசைச் சிட்டு
காதல் சங்கீதம்
காதில் கள்ளூறும்
பபபபா..

பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டாளே  காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்ரீதேவி .. தேவி பபபபபபா..
பப பாப்பா பப பாப்பா பப பாப்பா


பாவை இரவோடை  இனி நாளும் கனவே
தோளில் கிளை  தேடும் கிளி நீ தான் அழகே
எந்நாளும் சந்தோஷம்
என் வாழ்வில் பொன் தீபம்
கோடி எண்ணங்கள் தூது விட்டு
ஜாதிப் பூ அள்ளி மாலை கட்டு
மேலும் தொடாதே
என் தோளில் விழாதே
பபபப பா..

பப பாப்பா பப பாப்பா பப பாப்பா 
நெஞ்சுக்குள் பூ மஞ்சங்கள் நீ இட்ட நேரம் 
கண்ணில் இட்டாளே  காதல் கட்டளை
கன்னம் எங்கெங்கும் ஆசை முத்திரை
ஸ்ரீதேவி .. ஹீரோ  பபபபபபா..
பப பாப்பா பப பாப்பா பபபாபா பபா
பப பாப்பா பப பாப்பா பபபாபா பாபா பாபா  



APPAADI PAPPAALIDHAAN - THAIYALKKAARAN - SPB SJ



FILM: THAIYALKKAARAN
SINGERS: SPB SJ
MUSIC: SPB
LYRICS: VAALI

 அப்பாடி பப்பாளிதான்
என் பூவுடம்பு விக்காத தக்காளிதான்
என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்
வாசனப்பூ நான் வாங்கி வச்சுவிட்டா என்னாகும்
ராசனப்போல் கை ராசி உன் உடம்பு பொன்னாகும்
எனக்காக இங்கேதான் காச்சிருக்கிற சாத்துகுடியே
முத்து இப்போதும் எப்போதும் தரும் தூத்துக்குடியே

அப்பாடி பப்பாளிதான்
உன் பூவுடம்பு விக்காத தக்காளிதான்
உன் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்

ரொம்ப நாளா ராங்கி பண்ணி என்னாச்சு கிட்டாப்புதான்
ஆக மொத்தம் உங்க சுத்தம் பத்தாத மத்தாப்புத்தான்
சட்டி ரொம்ப சுட்டதுன்னு விட்டாச்சு சந்நியாசம்தான்
பட்டதெல்லாம் போதுமம்மா வந்தாச்சு சம்சாரம்தான்
இவதான் புதுசு இளசோ இளசு தட்டாத மத்தாளம்தான்
ஒன்னதான் நெனச்சா ஒடனே அணச்சா கொட்டாதோ குத்தாலம்தான்
எனக்காக இங்கேதான் காச்சிருக்கிற சாத்துகுடியே
முத்து இப்போதும் எப்போதும் தரும் தூத்துக்குடியே

அப்பாடி பப்பாளிதான்
என் பூவுடம்பு விக்காத தக்காளிதான்
என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்

ஊத காத்து மோதபாத்து ஊதாப்பூ முத்தம் இடும்
பாக்க பாக்க நெஞ்சு வேக்க உன்மேல பித்தம் வரும்
பாறமேல மேளம்போல நீர்வீழ்ச்சி தாளம் இடும்
பாக்க பாக்க நெஞ்சு மேல உன் ஆச கோலம் இடும்
இனிமேல் எதுக்கு நமக்குள் வழக்கு அச்சாரம் வச்சா என்ன
என்னத்தான் புடிச்சு துணியா நெனச்சு நெஞ்சோடு தெச்சா என்ன
ஹா எனக்காக நீயும்தான் போட்டதென்னவோ சொக்கு பொடியே
நீ முத்தாட காட்டட்டா ஒரு பச்சக்கொடியே

அப்பாடி பப்பாளிதான்
உன் பூவுடம்பு விக்காத தக்காளிதான்
உன் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்
வாசனப்பூ நீ வாங்கி வச்சுவிட்டா என்னாகும்
ராசனப்போல் கை ராசி என் உடம்பு பொன்னாகும்
எனக்காக இங்கேதான் காச்சிருக்கிற சாத்துகுடியே
முத்து இப்போதும் எப்போதும் தரும் தூத்துக்குடியே

அப்பாடி பப்பாளிதான்
என் பூவுடம்பு விக்காத தக்காளிதான்
என் பொன் உதடு தித்திக்கும் ரஸ்தாளிதான்













VAI VAI KAI VAI VAITHAAL VAIGAI - THAIYALKKAARAN - SPB KSC



FILM: THAIYALKKAARAN
SINGERS: SPB KSC
MUSIC: SPB
LYRICS: VAALI

வை வை கை வை வைதால் வைகை
நீராட்டம் நானாடுவேன்
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
மை மை கண்மை வைக்கும் பெண்மை
தோளோடு நான் கூடுவேன்
அஹா ஒஹோ ஹே ஹே
ஓணம் வரும் வண்ண வாழ்வும் வரும்
அன்று பூத்தாலி ஞான் சூடணும்
ஆலப்புழை தந்த அம்முக்குட்டி
சின்ன சித்தாடை புத்தாடை கொண்டாடும் தங்ககட்டி

வை வை கை வை வைதால் வைகை
நீராட்டம் நானாடுவேன்
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
மை மை கண்மை வைக்கும் பெண்மை
தோளோடு நான் கூடுவேன்

ஆதி அந்தங்கள் பாதி பார்த்தேனே
மீதி எப்போது கண்ணே
தேதி வைக்காமல் தாலி கட்டாமல்
பாக்க கூடாதோ பெண்ணே
பூஜை செய்யாமல் பொங்கல் வைக்காமல்
அம்மன் தேரோட்டம் ஏது
கோயில் மேளங்கள் கேட்கும் காலத்தில்
காதல் வேதங்கள் ஓது
அடி இந்த மனது அவசரப்படுது
சொன்னாலும் கேட்க்காது வயது
ஆனாலும் உன் வேகம் தாங்காது என் தேகம்
ஆடை போட்டு மூடுது

வை வை கை வை வைதால் வைகை
நீராட்டம் நானாடுவேன்
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
மை மை கண்மை வைக்கும் பெண்மை
தோளோடு நான் கூடுவேன்

முண்டு ஞான் கட்ட என்னை நீ கட்ட
உண்டு உல்லாச மார்கம்
சுக்கு வெள்ளம்தான் இந்த உள்ளம்தான்
கொண்ட தாகங்கள் தீர்க்கும்
நாயர் பெண்தானே எந்தன் கண்தானே
நாளை கல்யாண கோலம்
பள்ளி கூடத்தில் அர்த்த ஜாமத்தில்
கேளு சந்தோஷ பாடம்
தொட தொட சுகமா தொடந்தது வருமா
பூமாலை நீ போடு மாமா
ஓயாமல் அம்மாடி நாள்தோறும் கச்சேரி
நானும் நீயும் கேட்க்கலாம்

வை வை கை வை வைதால் வைகை
நீராட்டம் நானாடுவேன்
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
மை மை கண்மை வைக்கும் பெண்மை
தோளோடு நான் கூடுவேன்
அஹா ஒஹோ ஹே ஹே
ஓணம் வரும் வண்ண வாழ்வும் வரும்
அன்று பூத்தாலி ஞான் சூடணும்
ஆலப்புழை தந்த அம்முக்குட்டி
சின்ன சித்தாடை புத்தாடை கொண்டாடும் தங்ககட்டி

வை வை கை வை வைதால் வைகை
நீராட்டம் நானாடுவேன்
ஹ்ம் ம்ம் ம்ம் ம்ம்
மை மை கண்மை வைக்கும் பெண்மை
தோளோடு நான் கூடுவேன்
ஆஹ் ம் ம்ம் ஹே







Friday, July 8, 2016

SENDHOORA POOVE - 16 VAYADHINILE (BIT) - S.JANAKI




செந்தூரப்  பூவே செந்தூரப்  பூவே
ஜில்லென்ற காற்றே
என் மன்னன் இங்கே என் மன்னன் இங்கே
வாழ்த்தொன்று பாடாயோ
செந்தூரப் பூவே

VAZHI THEDI VIZI VAADI - OORU VITTU OORU VANDHU - K.S. CHITHRA





http://mp3.mobitamilan.net/files/Star_Hits/Ramarajan_Songs/Ooru_Vittu_Ooru_Vanthu_(1990)(isaitamil.in)/Vazhi_Thedi_Vizhi_Vaangi(www.isaitamil.in).mp3

 FILM: OORU VITTU OORU VANDHU
SINGER: K.S. CHITHRA
MUSIC: ILAIYARAAJAA

 வழி தேடி விழி வாடி
வழி தேடி விழி வாடி
இவள் வாழும் பூங்கொடி
வழி தேடி விழி வாடி
வழி தேடி விழி வாடி
இவள் வாழும் பூங்கொடி
ஒரு காதல் பைங்கிளி
மறந்தாள் தன்மொழி
தேவன் தேவி போல
இணைந்தால் நிம்மதி
ஜீவன் ஜீவனோடு
கலந்தாடும் சன்னதி
வழி தேடி விழி வாடி
இவள் வாழும் பூங்கொடி
வழி தேடி விழி வாடி
இவள் வாழும் பூங்கொடி

YAARADHU ENDRA MANNAVAA - KAADHAL OVIYAM - S. JANAKI

நாதம் என் ஜீவனே பாடலின் ஒரு தொகையறா


யாரது என்ற என் மன்னவா
என் முகவரி உனக்கு சொல்லவா
உன் இசையில் அமுதம் குடித்தவள்
அதை இரவில் நினைத்து துடித்தவள்
உன் கவியில் கனவு கலைந்தவள்
அதில் கற்பூரம்போல் கரைந்தவள்
உன் பந்தம் ராக பந்தம்
உந்தன் சந்தம் தந்த சொந்தம்

https://youtu.be/nGiNWhwJEdU?t=20m

@20.00

Thursday, July 7, 2016

MINMINIKKU KANNIL ORU MINNAL VANDHADHU - SIGAPPU ROJAKKAL - MVD SJ


FILM: SIGAPPU ROJAKKAL
SINGER : MVD SJ
LYRICS: KANNADAASAN
MUSIC: IR

 இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா அழகு கண்ணா
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே

இந்த மங்கை இவள் இன்ப கங்கை
எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல்
இந்த கடல் பல கங்கை நதி
வந்து சொந்தம் கொண்டாடும் இடம்
என்னுடல் உனக்கென்று சமர்ப்‌பணம்
அடி என்னடி உனக்கின்று அவசரம்

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
அடி கண்ணே அழகுப் பெண்ணே
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா
இன்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன்  என் ஆசை ராஜா
மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்
இனி தடையென்ன அருகினில் இருக்கிறேன்

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா அழகு கண்ணா
காதல் ராஜாங்கப் பறவை தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என்கையிலே
இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

MANNAN KOORAI SELAI MANJAM PAARKUM MAALAI - SIRICHCHAALAI - CHITHRA


FILM: SIRAICHCHAALAI
SINGER: CHITHRA
MUSIC: ILAIYARAAJAA
LYRICS: ARIVUMATHI

 மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில்
என்னுயிரில் மின்னல் தானோ
இனி பூ மழையும் கொஞ்சும் தேனோ
இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும் நான் தானா
நல் முத்தே வா வா ஓஹோ
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

சிந்தூர பொட்டிட்டேன் ஒளி
பொன் வளை  கையிலணிந்தேன்
ரெண்டுக்கும் மெத்தை மேல் சிந்த ஆசை
சாமத்தில் பூஜைக்கு உயிர்திரியில்  விளக்கு கொளுத்தி
நான் வைப்பேன் எனம் மன்னன் பேரைச் சொல்லி
பிள்ளைச் செல்வம் நூறென்று
சொல்லி ஊரும் மெச்சும் தான்
நித்தம் பள்ளி பாடங்களும்
கலைகள் பலவும் தருவேன் நான்
நாளும் பொழுதும் உள்ளம் இளைத்தேன்
என்னைத் தேடி வா
முல்லைக் கொடியும் முள்ளை அள்ளித் தூவும்
முன்பே நீ வள்ளல் போல் கண்ணா வா

மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

பட்டாடை மேல் எல்லாம் என் மன்னவன் வாசனை உண்டு
நாள் தோறும் நான் வைப்பேன் பொன் விளக்கேற்றி
பூ தூங்கும் மஞ்சத்தில் முகம் வேர்க்கையில்  தாவணி வீசி
இனி நாள் தோறும் தாலாட்டும் தாயும் நான் தான்
தீயில் தீரும் மோகங்கள் நீரில் தீரா தாகங்கள்
கப்பல் கற்பனை வேகம் போய் இன்றே அவருடன் வந்திடுமா
உன் வழி பார்க்கும் கன்னியின் இரு விழி
ஓய்வும் கொள்ளட்டும்
முத்தம் பதித்தவன் நெஞ்சில் நானே
மெத்தை இடும் நாள் தான் தாகங்கள் பூச்சூடும்

மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ
கண்ணன் வந்து நேரில் என்னைச் சேரும் நாளில்
என்னுயிரில் மின்னல் தானோ
இனி பூ மழையும் கொஞ்சும் தேனோ
இள மாப்பிள்ளைக்கு புதுப் பொண்ணும் நான் தானா
நல் முத்தே வா வா ஓஹோ
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
சிறைக் கதவுகள் தான் தாழ் திறவாதோ

VIZHIYUM VIZHIYUM - SADHURANGAM - HARINI MADHU BALAKRISHNAN


FILM: SADHURANGAM
MUSIC: VIDHYA SAAGAR
LYRICS: ARIVUMATHI
SINGERS: HARINI MADHU BAALAKRISHNAN

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
ஆதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்
உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்
விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது
உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்
கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்

உயிர் அணுக்கள் கூடி  நின்று ஓசை
இன்றி கிள்ளும்
ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை
இங்கு துள்ளும்
இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா
இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா
இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு
ஆதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு


SIRU PON MANI ASAIYUM ADHIL - KALLUKKUL EERAM - IR SJ


FILM: KALLUKKUL EERAM
SINGERS: ILAIYARAAJAA SJ
MUSIC: IR
LYRICS: GANGAI AMARAN

 சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

நதியும் முழு மதியும்
இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும்
இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்


Monday, July 4, 2016

EN THALAIVI IRUKKUM IDAM THEDUNGAL - MALLIGAI MOHINI


படம்: மல்லிகை மோகினி
இசை: ஜி.கே.வெங்கடேஷ் 
குரல்: எஸ்.பி.பி.
பாடல்: புலமைப்பித்தன் 

என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள் 
ஆத்மாவின் தாகங்கள் 
பாரென்று  சொல்லுங்கள் 
மேகங்களே இங்கு வாருங்களேன்

ஏழு ஜென்மமும் தொடர்ந்து வரும் சொந்தமோ 
நான்கு நாளிலே மறந்து விடும் பந்தமோ 
ஏனிந்த மாற்றங்கள் 
கேட்டிங்கு வாருங்கள் 
மேகங்களே இங்கு வாருங்களேன்

காதல் நெஞ்சினில் நினைவிழந்து போனதோ 
பார்க்கும் கண்களில் திரை விழுந்து போனதோ 
தூங்காத கண்ணிங்கே 
நான் தேடும் பெண்ணெங்கே 
மேகங்களே இங்கு வாருங்களேன்

காதல் என்பதோர் கவியெழுதி பாடினேன் 
காலம் வந்தது கதை முடிந்து போகிறேன் 
நாளைக்கு சந்திப்போம் 
ஆகாய சொர்கத்தில் 
மேகங்களே இங்கு வாருங்களேன்

Sunday, July 3, 2016

ETTADUKKU MAALIGAIYIL - PAADHA KAANIKKAI



படம் : பாத காணிக்கை
குரல் : பி.சுசீலா
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
பாடல்: கண்ணதாசன்


எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி

தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி - கண்ணில்
நீரோட விட்டானடி - கண்ணில்
நீரோட விட்டானடி

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி