Friday, January 16, 2026
MAAPILLAIKKU MAAMAN MANASU - NETRIKANN
Sunday, January 11, 2026
PAARADI KANNE KONJAM - VALLAVANUKU VALLAVAN
படம்: வல்லவனுக்கு வல்லவன்
பாடல்: கண்ணதாசன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன், சுசீலா, டி.எம்.எஸ்
இசை: வேதா
பாரடி கண்ணே கொஞ்சம்
பைத்தியமானது நெஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம் (பாரடி)
பைத்தியமே கொஞ்சம் நில்லு
வைத்தியரிடம் போய் சொல்லு
நெருங்காதே இது முள்ளு
தருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே)
அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்து பெண்ணா ஓ
அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்து பெண்ணா
உடையைப் பார்த்தவுடன் மனசு பாதி கெட்டு
இடையைப் பார்த்தவுடன் இருந்த மீதி கெட்டு .. மீதி கெட்டு
மனிதனான என்னை மடையனாக்கி விட்டு
மறைத்து மூடி விட்டு முறைத்துப் பார்ப்பதென்ன.. பார்ப்பதென்ன
உதட்டின் மீது ரெண்டு பழத்தை ஆடவிட்டு
உலக இன்பந்தன்னை உருகி ஓடவிட்டு.. ஓடவிட்டு
துடிக்கும் ஏழை நெஞ்சை நெஞ்சை
அடக்கித் தூங்க விட்டு
நடிப்பதென்ன.. கொஞ்சம் நடந்து வாடி சிட்டு
அடி வாடி என் சிட்டு
அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்து பெண்ணா ஓ
அடடா இது என்ன கண்ணா நீ
அந்தர லோகத்து பெண்ணா
அந்தர லோகத்து பெண்ணா வா வா
அந்தர லோகத்து பெண்ணா
அழகுக்கு ஏனடி வஞ்சம் அடி
அழகுக்கு ஏனடி வஞ்சம்
அடைந்து விட்டோமடி தஞ்சம்
தேடுதடி மலர் மஞ்சம்
சிரிப்புக்கு என்னடி பஞ்சம் ஹேய் (பாரடி)
ஆசையை பாரடி தங்கம்- இவர்
அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ
அழகிலே அ னா சிங்கம்
அறுபதாக இவர் அழகு தோன்றுதடி.. தோன்றுதடி
இருபதாக இவர் மனது மாறுதடி.. மாறுதடி
ஒருவராக வர வீரம் இல்லையடி.. இல்லையடி
இருவராக வந்து ஏய்க்கப் பார்க்குதடி.. பார்க்குதடி
ஆண்களாக இவர் தோன்றவில்லையடி.. இல்லையடி
ஆசைக்கேற்றபடி ஆளு இல்லையடி.. ஆளு இல்லையடி
பெண்கள் கையில் தினம் பூசை வாங்குவதை
பெருமையாக கருதும் வீரரடி
ஆசையை பாரடி தங்கம்- இவர்
அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ
ஆசையை பாரடி தங்கம்- இவர்
அழகிலே அ னா சிங்கம் ஹோ ஹோ
மாப்பிள்ளை ராஜா நில்லு
என் வார்த்தைக்கு பதில் சொல்லு
நெருங்காதே இது முள்ளு
தருவதை வாங்கிக் கொள்ளு (பைத்தியமே) (பாரடி)