Tuesday, May 16, 2017

ORU KUNGUMA CHENKAMALAM - ARADHANAI



படம்: ஆராதனை
இசை: இளையராஜா
குரல்: SPB ஜானகி
பாடல்: வைரமுத்து

ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்


திருவாய் மலர்வாய் கருவாய் என் பாவாய்
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய்
சாம்பல் ருசிக்க தனியாவாய்
காயைப்  புசிக்கும் கனியாவாய்
பூவைக்கு நாங்கள்  பூ வைக்க வேண்டும்
பூலோகம் யாவும் பூக் கொய்ய வேண்டும்
மின்னலிலே ஒரு கயிறு எடு
மேகங்களால்  ஒரு  தூளியிடு
கதிரோ தளிரோ இள மகளது திருமுகம்


முதுமை ஒரு நாள் நமை வந்து தீண்டும்
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்
முடியைப்  பார்த்தால் முழு வெள்ளை
மடியில் தவழும் மகன் பிள்ளை
நீயேந்தி கொஞ்ச நான் கொஞ்சம் கெஞ்ச
பூப்போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச
பாயதனில்  நீ சாய்ந்திருக்க
பசியடங்கி நான் ஓய்ந்திருக்க
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி

குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
பசி தூண்டும் அமுதம்
தர வேண்டும் கமலம்
உன் கூந்தல் பூவனம்
ஒரு குங்குமச்  செங்கமலம்
இளமங்கையின் தங்கமுகம்
ஒரு குங்குமச்  செங்கமலம்

Monday, May 15, 2017

NILAVUKKU EN MEL ENNADI KOBAM - POLICEKARAN MAGAL



படம்: போலீஸ்காரன் மகள்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
குரல்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
பாடல்: கண்ணதாசன்

நிலவுக்கு என்மேல்
என்னடி கோபம்?
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல்
என்னடி கோபம்?
முள்ளாய் மாறியது

கனிமொழிக்கென்மேல்
என்னடி கோபம்?
கனலாய் காய்கிறது
உந்தன் கண்களுக்கென்மேல்
என்னடி கோபம்?
கணையாய் பாய்கிறது

குலுங்கும் முந்தானை
சிரிக்கும் அத்தானை
விரட்டுவதேனடியோ
உந்தன் கொடியிடை இன்று
படை கொண்டு வந்து
கொல்வதும் ஏனடியோ
திருமண நாளில்
மணவறை மீது
இருப்பவன் நான் தானே
என்னை ஒருமுறை பார்த்து
ஓரக்கண்ணாலே
சிரிப்பவள் நீதானே

சித்திரை நிலவே
அத்தையின் மகளே
சென்றதை மறந்துவிடு
உந்தன் பக்தியில் திளைக்கும்
அத்தான் எனக்கு
பாதையை திறந்து விடு

நிலவுக்கு என்மேல்
என்னடி கோபம்?
நெருப்பாய் எரிகிறது
இந்த மலருக்கு என்மேல்
என்னடி கோபம்?
முள்ளாய் மாறியது